இம்முறை எங்களை ஏமாற்ற முடியாது

2019ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் விவசாயிகளின் வாக்கை பெற வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு நான்கு அம்ச திட்டத்தை அறிவித்துள்ளார். 

அதன் விபரம்:
1.பயிரிடுவதற்கு ஆகும் செலவை குறைத்தல்,
2.விவசாயிகளுக்கு அவர்களது பயிர்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்தல்,
3.அறுவடைக்கு பிறகு ஏற்படும் இழப்பை குறைத்தல்,
4.விவசாய பொருட்களை விற்பதற்கு கூடுதல் மையங்களை உருவாக்குதல்,
பயிரிட ஆகும் செலவை குறைத்தல்
முதலில் விவசாயம் செய்வதற்கான பணிகளை துவங்க வேண்டுமென்றால் உழவடை மற்றும் விதை, உரம்உள்ளிட்டவைகளில் உழவடை விவசாயியே செய்தாலும் விதை, உரம் விவசாயிகளின் கைகளில் இல்லை. 

எனவே, பன்னாட்டு கம்பெனிகள், இந்திய கம்பெனிகள் விற்பனை செய்யும் விதை, உரங்களை வாங்க வேண்டும்.ஆனால் அதன் விலை மிக அதிக அளவில் தற்போதுஉள்ளது. 
இதனை கட்டுப்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுத்தால் தான் பயிரிட ஆகும் செலவை குறைக்கமுடியும். ஆனால் உரத்தின் விலையை கம்பெனிகளேதீர்மானிக்கலாம் என்று மத்திய அரசு தாரைவார்த்துவிட்டது. இந்நிலையில் எப்படி பயிரிடும் செலவை குறைக்கமுடியும் என்கிற கேள்வி எழுகிறது. 


விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பதுகட்டுபடியான விலையை தீர்மானிக்கின்ற எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த முடியாது என்றுமத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் 20.02.2017ல் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 
பின்னர் எப்படி உரியவிலை கிடைப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்தபோகிறது என்பதை பிரதமர் விளக்க வேண்டும்.

அறுவடைக்கு முன்பே விவசாயிகள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இயற்கை இடர்பாடுகள் மற்றும் கடன் பிரச்சனைகள். இந்த சூழ்நிலையில் அறுவடைக்கு பின்னர்ஏற்படும் இழப்பை குறைப்பதற்கு நரேந்திர மோடிஎன்ன திட்டம் வைத்துள்ளார் என்பதை விவசாயிகளுக்கு விளக்க வேண்டும்.

விவசாய பொருட்களை தற்போது விவசாயிகள் களத்துமேட்டிலேயே விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். அரசின் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் கொண்டு போனால் அதில் அறுபத்தி எட்டு காரணங்களை சொல்லிதிருப்பி அனுப்புகின்றனர். 
உதாரணம் ஏராளம் உள்ளது.
ஏற்கனவே இருக்கும் விற்பதற்கான மையங்கள் எப்படிச்செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை விவசாயிகள் நன்கு அறிவார்கள். ஆனால் நாட்டின் பிரதமர் இந்த விற்பனை மையங்களை எப்படி உருவாக்குவார்? யார்பொருட்களை வாங்குவார்கள்? 
எத்தகைய பொருட்களை வாங்குவார்கள்?

 உதாரணமாக காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் உற்பத்தி செய்கிறார்கள். தற்போது தனியார் கமிஷன் மண்டிகள் மூலம் வாங்கி செல்லுகின்ற நிலை இருக்கிறது. இதில் விவசாயிகள் ஏராளமான இழப்புகளை சந்தித்து வருகிறார்கள். 
எனவே, எத்தகைய முறையில் விற்பனை மையங்கள் உருவாக்க போகிறார் என்பதை பிரதமர் விளக்க வேண்டும். சற்றுபின்னோக்கி பார்த்தால் கடந்த நான்கரைஆண்டுகளில் விவசாயிகள் எப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்து வந்துள்ளனர் என்பதை பார்க்க முடியும்.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரத்தின் போது, நரேந்திரமோடி அவர்கள் விவசாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கினார். 
அதில்முக்கியமானது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உற்பத்தி செய்ய ஆகும் மொத்த செலவுடன்கூடுதலாக 50 சதவீதம் சேர்த்து விலை தீர்மானிக்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு முழுமையாக கிடைக்க நடவடிக்கை, கடன் தள்ளுபடி உள்ளிட்டவைகளை நான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறினார். 
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்டன. 
என்ன செய்துள்ளார் என்பதை பார்ப்போம்.நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். 
எனவே விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் விவசாயிகள் காதல் வலையில்சிக்கி தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்கிறார்.

விலைவாசி உயர்வு ஏன் ஏற்படுகிறது என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு மத்திய நிதி மந்திரி கிராமப்புறங்களில் உள்ள மக்கள் நூறு நாள் வேலை திட்டத்தில்ஈடுபடுவதால் அந்த வருவாய் மூலம் மக்கள் பொருட்களைவாங்கி மொத்தமாக சேமித்து வைத்துக் கொள்கிறார்கள். எனவே விலைவாசி உயர்கிறது என்று தெரிவிக்கிறார். இதை என்னவென்பது?


உரம், பூச்சி மருந்து, விதை உள்ளிட்டவைகளின் விலை1990-91க்கு பின் விரைவாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 

உதாரணத்திற்கு உரம் விலையை பார்த்தால் 2009ஆம்ஆண்டின்படி டிஏபி 50 கிலோ மூட்டை 486 ரூபாய்மட்டுமே.
 ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்ட பின்உரம் விலை உயர்வு ஏற்பட்டது.
 டி.ஏ.பி. விலை 1095ரூபாய். தற்போது அதன் விலை 1450 ரூபாய்
 யூரியா விலைஜி.எஸ்.டி.க்கு முன்பு 50 கிலோ மூட்டை 284 ரூபாய், ஜி.எஸ்.டிக்கு பின் அதன்விலை 295ரூபாய், 
தற்போது யூரியாவிலை 266.50 ரூபாய். ஆனால் 5 கிலோ குறைக்கப்பட்டு45 கிலோ மூட்டையாக விற்பனைக்கு வந்துள்ளது.


தமிழகத்தில் நெல் சாகுபடி 20 லட்சத்து 60 ஆயிரம்ஹெக்டேர்.
 சிறுதானியம் 25 லட்சத்து 42 ஆயிரம் ஹெக்டேர்சோளம் 3 லட்சத்து, 17 ஆயிரம் ஹெக்டேர், 
கேழ்வரகு 1லட்சத்து 25 ஆயிரம் ஹெக்டேர்,
 நிலக்கடலை 3 லட்சத்து 86 ஆயிரம் ஹெக்டேர், எள் 43 ஆயிரம் ஹெக்டேர்,
சூரியகாந்தி 50 ஆயிரம் ஹெக்டேர், 
ஆண்டுக்கு சுமார் 55லட்சம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் நடைபெறுகிறது.
 பி.டி.பருத்தி விதைகள் மத்திய அரசு விலைதீர்மானிக்கிறது. 

2017-18ம் ஆண்டில் 450 கிராம் பி.டி. பருத்தி விதை பாக்கெட் ரூ.800 ஆனால் மற்ற விதைகளை வெளிமார்க்கெட்டில் வாங்குகின்ற போது அதிகப்படியான விலை கொடுத்து விதைகளை வாங்க வேண்டியுள்ளது. 
பன்னாட்டு கம்பெனிகள் ஏராளமான விதைகளை விற்பனை செய்து வருகின்றன. மோசமானவிதைகளை விற்பனை செய்கின்ற போக்கும் உள்ளது. விதையை வாங்கி விதைத்தபின் முளைப்பது கிடையாது மற்றும் பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு உள்ளாகின்ற விதைகளை விற்பனை செய்கின்றனர். 

அவ்வாறு செய்தால் பூச்சி மருந்தும் விற்பனை அதிகஅளவில் செய்ய முடியும் என்று திட்டமிட்டே விதைகளைஉருவாக்குகிறார்கள். 
இதனை தடுப்பதற்கு மத்தியஅரசின்தலையீடு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
பூச்சி மருந்து விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.இதனால் விவசாயிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். 

பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை பூச்சிக் கொல்லி மருந்துக்கு சிறு, குறு விவசாயிகள் செலவு செய்ய வேண்டியுள்ளது.
விவசாயம் செய்து உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு கட்டுபடியான விலை இல்லை. விவசாயம்செய்திட கடன் வசதி இல்லாததால் வெளியில் கடன் வாங்கி சிக்கிக் கொள்கின்ற நிலையே உள்ளது. 

மேலும்இயற்கை இடர்பாடுகள், வெள்ளம், வறட்சி, புயல் உள்ளிட்டவைகளால் ஏராளமான பாதிப்புகளை சந்தித்து வருகின்ற விவசாயிகள் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொள்கின்ற போக்கு கடந்த ஐந்தாண்டு காலத்தில் அதிகரித்துள்ளது.
மத்திய அரசு நெல், பருப்பு, எண்ணெய் வித்துக்கள்உட்பட சில பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கிறது.
 2017இல் மோடி அரசு அறிவித்தகுறைந்த பட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.,) கிடைக்காமல் நாடு முழுவதும் விவசாயிகள் 3 லட்சம் கோடி ரூபாயைஇழந்துள்ளார்கள்.
 அறிவித்த விலையும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.

 சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த முடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். 

இவர்கள் 2022இல் விவசாயிகளின் வருவாயில் 2 மடங்கு ஆக்குவோம் என்று 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக, மோடி அரசு நாடகமாடுகிறது. 

பிரதமரின் கோஷம் இந்த தேர்தலில் எடுபடாது விவசாயிகள் எப்பொழுதும் ஏமாந்து கொண்டு இருக்க மாட்டார்கள்.

 எனவே இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்குபாடம் புகட்ட விவசாயிகள் தயாராக இருக்கிறார்கள். 

 மோடி அவர்களே! இம்முறை எங்களை ஏமாற்ற முடியாது!!
                                                                                                                                                               -கே.பி.பெருமாள்

கட்டுரையாளர் : தமிழ்நாடு விவசாயிகள்
சங்க மாநிலப் பொருளாளர்
================================================================

பிரான்ஸ் மஞ்சள் சட்டை

போராட்டம் ஏன் ?
பிரான்ஸ் கார்களின் முக்கிய எரிபொருளான டீசலின் விலை, ஒரு லிட்டருக்கு சராசரியாக 1.24 யூரோ முதல் 1.53 யூரோ வரை உயர்ந்து, கடந்த 12 மாதங்களில் 23 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதே இந்த போராட்டத்துக்கு காரணம்.

2000களின் தொடக்கத்திலிருந்து எரிபொருள் விலை இத்தனை உயர்வை காண்பது இதுவே முதல்முறை.
உலகளவில் எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதால், எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் மீதான வரியை மக்ரோங் அரசு உயர்த்தியுள்ளது. 
இது 2019ஆம் ஆண்டு மேலும் உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான முதலீடுகளுக்கு நிதி தேவைப்படுவதால் எரிபொருள் மீது அதிகப்படியான வரி விதிக்கப்படுவதாக மக்ரோங் தெரிவித்தார்.

அது என்ன `மஞ்சள் சட்டை ` இயக்கம்?
பிரான்ஸில் கார்கள் பழுதாகிபோனால் பயன்படுத்துவதற்கு வைத்திருக்கப்படும் பாதுகாப்பு கருவிகளுடன் ஓட்டுநர்கள் மஞ்சள் ஜாக்கெட்டுகளையும் வைத்திருக்க வேண்டும்.

சிவப்பு நிறத்தில் முக்கோண வடிவ தடுப்பு, வண்டி சாலையில் பழுதடைந்தால் வைக்கப்படுவதை போல் ஓட்டுநர்கள் இந்த மஞ்சள் ஜாக்கெட்டுகளை அணிந்திருக்க வேண்டும். இது தொலைதூரத்தில் வருபவர்களுக்கு தெளிவாக தெரியக்கூடிய மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மஞ்சள் ஜாக்கெட்டுகளை அணிய தவறினால் அபராதம் விதிக்கப்படும் .

அதற்கான சட்டம் 2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

பெட்ரோல் விலை உயர்வால் கார்களை நிறுத்திவைப்பதாக அரசுக்கு அறிவிக்கவே அந்த மஞ்சள் சட்டையை போராட்டக்காரர்கள் அணிந்து கொள்கிறார்கள்.

போராட்டத்துக்குப்பணிந்து இன்று பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருளுக்கான வரி விதிப்பை இடைநிறுத்துவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது. 

இந்தியாவில் மோடி அரசுக்கு இது பாடம் கற்றுக்கொடுக்கும் என்றாலும் 5மாநிலத்தேர்தலைக்கருத்தில் கொண்டு மோடி தினசரி பெட்ரோல்விலையை பைசாக்களில் குறைத்து வருகிறார்.


92 ரூபாயை தோட்ட பெட்ரோல் இன்று 79 ரூபாய்.
தேர்தல்கள் முடிவுக்குபிபின்னர்தான் இந்திய மக்களுக்கு ஆப்பு இருக்கிறது.

பாஜக வென்றாலும்,தோற்றாலும் ஆப்பு கண்டிப்பாக உண்டு.

-----------------------------------------------------------------------------------------------------------------
 காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தவறியதாக் டெல்லி அரசுக்கு 25 கோடி அபராதம்! -  
                                                                                      - பசுமைத் தீர்ப்பாயம்.
மோடிக்கு வேண்டாதவர்கள் மீது மட்டும்தான் பசுமைதிர்ப்பாயம் நடவடிக்கைகள் எடுக்கும்.டெல்லி அரசு மீது நடவடிக்கை.
ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் தினசரி செய்யும் மரண காற்று மாசுக்கு மோடியின் எடுபிடி அரசு கண்துடைப்பு நடவடிக்கை எடுத்தாலே  இயற்கை நீதிக்கு விரோதமாம்.

என்னடா உங்கள் (அ) நீதி.
=====================================================
ன்று,

டிசம்பர்-05.


தாய்லாந்து தேசிய தினம் மற்றும் தந்தையர் தினம்.




உலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி பிறந்த தினம்(1901)





 தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா இறந்த தினம் (2013)
=====================================================
       மதவெறியைத்தூண்டி அப்பாவிகள் வாக்குகளைப்பெற மட்டுமே இந்து மதம் தேவை பாஜகவுக்கு.
 பாஜக தலைவரான அமித்ஷா, இந்து மதத்தின்ஸ்வஸ்திகா குறியீட்டை காலுக்குக் கீழே போட்டு,ஷூ காலுடன் மிதித்து அவமதித்திருப்பது, தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. 
இதுதொடர்பான புகைப்படமும் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுதான்  உண்மையான புகைப்படம்.
இதனை அமித்ஷாவே அவரது முகநூல் பக்கத்தில்வெளியிட்டுள்ளார் என்றும் ஆல்ட் நியூஸ் உறுதி செய்துள்ளது.
 கடந்த டிசம்பர்1-ஆம் தேதி ராஜஸ்தானின் பலோத்ரா பொதுக்கூட்டத்தில்தான் ஸ்வஸ்திகா குறியீடு அவமதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆல்ட் நியூஸ் தெரிவித்துள்ளது.
பிரச்சனை கிளப்பியதையடுத்து, அமித்ஷா இந்த புகைப்படத்தை தற்போது நீக்கியுள்ளார்.பின் பாஜகவுக்கே உரிய போட்டோஷாப் செய்து வெளியிட்டுள்ளார்.
 




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?