மோடிஅரசு அனுமதிக்கு முதல்நாள்


காவிரியின் குறுக்கே இனியொரு அணை கட்டக்கூடாது என்ற விதியை மீறி, மிகப்பெரிய அணையை மேகேதட்டு என்ற இடத்தில் கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

மத்திய அரசு அனுமதிக்கு முதல்நாள் ஒரு முக்கியமான சந்திப்பு நடந்திருக்கிறது.
கர்நாடக அரசியலில் சண்டைக்கோழிகள் என்றும் இரு துருங்கள் என்றும் கூறப்படும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமாரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் சந்தித்து 1 மணிநேரம் பேசியிருக்கிறார்கள்.
 கன்னட  நாளிதழ்களில் இந்தச் செய்தி துருவங்கள் சந்தித்தன என்று வெளியானது. 

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்தே மேகதாது அணை கட்ட மத்திய பாஜக அரசு ஒப்புதல் வழங்கியது என்று அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கிவிட வேண்டும் என்பதில் மத்திய பாஜக அரசு குறியாக இருக்கிறது. 


அம்பானி, அதானி, வேதாந்தா குழுமங்களின் வேட்டைக்காடாக டெல்டா மாவட்டங்களை மாற்றி, இந்த மாவட்ட மக்களை நிலமற்றவர்களாக்கி விரட்ட மறைமுகமாக சதி திட்டம் தீட்டப்படுகிறது என்று இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

காவிரி நீர் பங்கீடுக்கா காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசு ஆடிய நாடகமே அதற்கு சாட்சியாக இருந்தது.

 ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் நடத்திய தொடர் போராட்டத்துக்கு எந்த ரியாக்‌ஷனும் கொடுக்காமல் காலந்தள்ளிய மோடி அரசு, எதிர்ப்பையும் மீறி வேதாந்தா குழுமத்திற்கு ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்க அனுமதி வழங்கியது.

இப்போது கஜா புயலால் கடலோர மாவட்டங்கள் தரைமட்டமாகியுள்ள நிலையில், அந்த மாவட்டங்களில் நிவாரணப் பணிகளும் மந்தகதியில் நடைக்கிறது.

 சிலை வைக்க 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தவர்கள், 6 மாவட்ட பேரழிவை சீரமைக்க 353 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில்தான் காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் வகையில் மேகதாது அணைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ்,பாஜக மற்றும் அனைத்துக்கட்சிகளும் ஒரே அணியில் திரள்கிறது.

 அங்கு பாஜக அரசு இல்லையென்றாலும், காங்கிரஸ், மஜத கூட்டணி அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

ஆனால், தமிழகத்திலோ  பாஜகவும்,மோடி தயவில் ஆட்சி,அதிகாரத்தில் உட்கார்ந்திருக்கும் எடப்பாடி அதிமுகவும்   ஒட்டு மொத்த மக்கள் எதிர்ப்பு உணர்வை திசைமாற்றி  சிதறடிக்ககிறன.

 தமிழகம் ஒன்று திரண்டு போராடினால் மட்டுமே மேகதாது அணை அபாயத்தைத் தடுத்து, டெல்டா மாவட்ட விவசாயத்தை பாதுகாக்க முடியும்.

“கர்நாடகா பகுதியில் விளைநிலங்களின் பரப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், டெல்டா மாவட்டங்களில் முன்பு 25 லட்சம் ஏக்கராக இருந்த விளைநிலப் பரப்பு, இப்போது 15 லட்சம் ஏக்கராக சரிந்துள்ளது” என்கிறார் திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவில்லை என்பதால், கர்நாடகாவில் இருக்கிற ஆதரவை தக்கவைப்பதற்காக மத்திய மோடி அரசு மிகப்பெரிய சதித்திட்டத்தை தீட்டுகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இந்நிலையில் அவசரமாகக் கூட்டப்பட்ட தமிழக சட்டமன்றக்கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மானம்:

 "தமிழக சட்டசபையில் ஏற்கனவே 2014 டிச- 5 மற்றும், 2015 மார்ச், 27ல், 'கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்டக் கூடாது' என்று, ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்களை கருத்தில் கொள்ளாமலும், 'காவிரி படுகையின் கீழ் உள்ள மாநிலங்களின் அனுமதி பெறாமல், எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது' என்ற, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி, கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான, ஆரம்ப கட்ட பணிகளை துவக்கி உள்ளது. 
 
இதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 
அதற்கு, கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம்.
 
 மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதியை திரும்ப பெறுவதற்கு, மத்திய நீர்வள அமைச்சகம், உடனடியாக உத்தரவிட வேண்டும். 
 
காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில், கர்நாடக அரசோ அல்லது அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ, தமிழகத்தின் அனுமதியின்றி, எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று, கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட வேண்டும். "
                                                                                                                                               -இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
 ===================================================
ன்று,
டிசம்பர்-07.
இந்திய கொடி நாள்
ஈரான் மாணவர் தினம்

சீனக் குடியரசின் அரசு, நான்கிங் நகரில் இருந்து தாய்வானுக்கு மாறியது(1949)
 இஸ்ரேல் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டது(1988)

                                                   இந்திய கொடி நாள்

 இந்திய கப்பற்படை, விமானப்படை, தரைப்படை வீரர்களின் நலனுக்காக, இந்திய மக்களிடம் நிதி திரட்டும் கொடி நாளாக, ஒவ்வொரு ஆண்டும், டிச., 7ல் கடைப்பிடிக்கப்படுகிறது.


 இந்த தினத்தில், சிறிய அளவிலான கொடியை வினியோகித்து, மக்களிடம் நிதி திரட்டப்படுகிறது.

ராணுவத்தினரின் நலன் காப்பது குறித்து ஆலோசிக்க, ராணுவ அமைச்சகத்தின் சார்பில், 1949 ஆக., 28ம் தேதி, ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி, அண்டை நாடுகளுடன் போரில் ஈடுபடும், இந்திய ராணுவ வீரருக்கு காயம் ஏற்பட்டால், அவர்களுக்கு உதவுதல், போரில் உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்தல், ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய, மூன்று நோக்கங்களை செயல்படுத்த, ஆண்டுதோறும் ஒரு நாளை, கொடி நாளாக அனுசரிக்கலாம் என, முடிவு செய்து
டிச., 7 கொடி நாளாக அறிவிக்கப்பட்டது .

=====================================================
                  குரங்குளோடு மாயாஜாலம் .குரங்குகளின் எதிர்வினை.
நீங்களே சொந்தமாக வாட்ஸ் அப் ஸ்டிக்கர் தயாரிக்கலாம்.
வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் ஸ்டிக்கர் அம்சத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தது. ஏற்கனவே புகைப்படங்களுடன், ஜிஃப் மற்றும் எமோஜி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்த நிலையில் ஸ்டிக்கர் வசதி சேர்க்கப்பட்டது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் ஸ்டிக்கர் வசதி வழங்கப்படுகிறது.

ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு சில ஸ்டிக்கர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், கூகுள் பிளேவில் கிடைக்கும் மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர்களையும் டவுன்லோடு செய்து பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் தங்களது புகைப்படங்களையும் ஸ்டிக்கர்களாக பயன்படுத்த முடியும். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். 

முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் 2.18 அல்லது அதற்கும் அதிக வெர்ஷன் கொண்டிருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். ஒருவேளை இல்லாதபட்சத்தில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

இனி உங்களுக்கு பயன்படுத்த வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்ய வேண்டும்.
தேர்வு செய்த புகைப்படங்களை PNG ஃபார்மேட்டிற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு செய்யும் போது புகைப்படத்தின் பின்னணியில் எதுவும் இருக்கக் கூடாது. 

ஸ்மார்ட்போனில் இவ்வாறு செய்ய கூகுள் பிளே ஸ்டோர் சென்று பேக்கிரவுன்டு இரேசர் (Background Eraser) செயலிகளை பயன்படுத்தலாம். 

இனி நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்ய வேண்டும். பேக்கிரவுன்டை அழிக்க ஆட்டோ, மேஜிக் அல்லது மேனுவல் டூல் பயன்படுத்தலாம்.
 
புகைப்படம் ஸ்டிக்கர் போன்று காட்சியளிக்க ஏதுவாக கிராப் செய்ய வேண்டும். புகைப்படத்தை PNG வடிவில் சேவ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் உங்களது புகைப்படம் ஸ்டிக்கர் போன்று மாறிவிடும். 

இதேபோன்று குறைந்த பட்சம் மூன்று ஸ்டிக்கர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்களில் குறைந்தபட்சம் மூன்று புகைப்படங்கள் இருக்க வேண்டும்.

இனி பிளேஸ்டோர் சென்று ‘Personal Stickers for WhatsApp’ செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த செயலி நீங்கள் உருவாக்கிய ஸ்டிக்கர்களை தானாக தேடி பயன்படுத்திக் கொள்ளும்.

செயலியில் உள்ள ‘Add’ பட்டனை கிளிக் செய்து மீண்டும் ‘Add’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

இவ்வாறு செய்ததும், சாட் விண்டோ திறந்து, ஸ்மைலி ஐகானை கிளிக் செய்ய வேண்டும். ஜிஃப் ஆப்ஷனுக்கு அருகில் இருக்கும் ஸ்டிக்கர்ஸ் ஐகானை கிளிக் செய்து, நீங்கள் உருவாக்கிய போட்டோ ஸ்டிக்கரை கிளிக் செய்து அனுப்பலாம். 

நீங்கள் உருவாக்கிய ஸ்டிக்கர்கள் உங்களது ஸ்டிக்கர் வங்கியில் பாதுகாப்பாக சேமிக்கப்படும்.
அதை தேவையான காலங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
 
உத்தரப்பிரதேச மாநிலம், பஹ்ரைச் தொகுதி எம்.பி.யான சாவித்திரி பாய்பூலே, பாஜக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
 
“மத்திய பாஜக அரசாங்கமானது, பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மை மக்கள் மற்றும் மத சிறுபான்மையினரின் வரலாற்றை அழித்திட முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
மக்களுக்கு செலவிடாமல்,கர்ப்பரேட்களுக்கு சலுகைகளை செய்வதும்,தேவையில்லாமல் சிலைகளை அமைப்பதிலும், கோவில்களைக் கட்டுவதிலும் மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக்  கொண்டிருக்கிறது.
 
பாஜக,ஆர்எஸ்எஸ்,விஸ்வ ஹிந்து பரிஷத்,சான் பரிவார் வகையறாக்கள் 1992-ஆம்ஆண்டு சூழ்நிலையை மீண்டும் உருவாக்கிடவும், சமுதாயத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்தவும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். 
 
எனவே, இவற்றைக் கண்டிக்கும் விதத்தில் பாபர் மசூதி இடிப்பு தினம் மற்றும் அம்பேத்கர் நினைவுதினமான டிசம்பர் 6-இல் நான் பாஜக-விலிருந்துராஜினாமா செய்கிறேன்” என்று சாவித்திரி பாய் பூலே, ராஜினாமாவுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
சாவித்திரி பாய்பூலே
 
 
“பாபர் மசூதி இடிப்புச் சம்பவமானதுமுஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் பிற் படுத்தப்பட்டவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி விட்டது. வளர்ச்சியைக் கட்டமைப்பதற்குப் பதிலாக அவர்கள் இந்து-முஸ்லிம் இடையே வெறுப்பைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். 
இந்து - முஸ்லிம் மக்களிடையே நிலவிவந்த சகோதரத்துவத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.பாஜக-வானது சமூகத்தை மதரீதியாகப் பிரித்தாள முயல்கிறது; அம்பேத்கர்உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தையும், அதன்கீழ் தலித்துகளுக்கு ஏற் படுத்தப்பட்டுள்ள இடஒதுக்கீடுகளையும் அழித்து ஒழித்திட நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது” என்றும் பூலே தெரிவித்துள்ளார்.
 
“இந்த நாட்டுக்குத் தேவை அரசமைப்புச் சட்டம் தானேயொழிய, கோவில்அல்ல” என்று கூறியுள்ள சாவித்திரி பாய்,“பாஜக-வினர் மனுஸ்மிருதி அடிப்படையில் நாட்டை ஆள முயற்சிக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டியுள்ளார். 
 
 அத்துடன், “அரசமைப்புச்சட்டத்தை அமல்படுத்தக்கோரியும், தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக டிசம்பர் 23 முதல் பிரச்சாரத்தில் ஈடுபடப் போகிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சாவித்திரிபாய் புலே 2012-இல் பாஜக எம்எல்ஏ-ஆகவும், பின்னர் 2014-இல் எம்பி-யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தற்போது புத்தமதத்தில் இணைந்துள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 தமிழக மருத்துவத் துறை டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக் கழகத்திற்கான துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது. அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசிதழில்  அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பாணையில் பதவிக்கான மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி்த் தேதியாக கடந்த 30 ஆம் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பாணையில், விண்ணப்பித்துள்ளவர்களின் தகுதி, அனுபவம், நிர்வாக திறமை ஆகியவற்றின் அடிப்படையில் துணை வேந்தரை தேர்வுக்குழு தேர்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கான தகுதிகளாக மருத்துவ பணியில் 20 ஆண்டுகள் அனுபவமும், 10 வருடம் மருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ பல்கலைக்கழகத்தின் அறிவிப்பாணையைத் தொடர்ந்து இதுவரை வெளி மாநிலங்களை சேர்ந்த 3 பேர்கள் உட்பட 41பேர்கள்  விண்ணப்பித்துள்ளார்கள்.

இந்த பட்டியலில்  சவுந்தரராஜன்  உள்ளார். இவர் தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கணவராகவும் உள்ளார்.

நீங்கள் நினைப்பது சரிதான் பல்கலைக்கழகங்களை காவி மயமாக்கும் மோடி அரசின் தேர்வாக சவுந்தராஜன் தமிழிசைதான் இருக்க வாய்ப்பு அதிகம்தான் .
===================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?