வெள்ளி, 21 டிசம்பர், 2018

மோ(ச)டி வரி?

 மோடி அரசின் மக்களிடம்‘தூய்மை இந்தியா’  ரூ.4390 கோடி வரி மோசடி ?.
மோடி அரசு ‘தூய்மை இந்தியா’ பெயரில் வரி ஒன்றை விதித்தது. ஜிஎஸ்டி வந்தபிறகு, அந்த வரியை ரத்து செய்து விட்டதாக அறிவித்தது. 

ஆனால், ஜிஎஸ்டி வந்த பிறகும், ஓராண்டுக்கு மேலாக, மோடி அரசு ரூ. 4 ஆயிரத்து 390 கோடி அளவிற்கு ‘தூய்மை இந்தியா’ பெயரால் வரி வசூலித்து மோசடி செய்திருப்பது தகவல் உரிமை சட்டம் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசானது, கடந்த 2015-ஆம் நவம்பர் 15-ஆம் தேதி சேவை வரியை 14 சதவிகிதத்திலிருந்து 14.05 சதவிகிதமாக உயர்த்தியது.

உயர்த்தப்பட்ட 0.5 சதவிகிதம் வரி, ‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்காக பயன்படுத்தப்படும்; கழிப்பறை கட்டும் திட்டங்கள் மற்றும் திட - திரவக் கழிவுகள் அகற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தது.
அதனடிப்படையில் 2015-16 நிதியாண்டில் ரூ. 3 ஆயிரத்து 901 கோடியும்,

 2016-17-இல் ரூ. 12 ஆயிரத்து 306 கோடியும் மோடி அரசுக்கு ‘தூய்மை இந்தியா’ திட்ட வரி வசூலாக கிடைத்தது.

அதுதான் குப்பைகளை நீக்கம் வரி என்று தமிழகம் முழுக்க வீட்டு தீர்வையுடன் கட்டாயமாக நகராட்சிகள் பிடுங்கிக்கொள்ளவாது.

ஆனால், 2017 ஜூலையில், நாடு முழுவதும் பொதுவான சரக்கு மற்றும் சேவை வரி (ழுளுகூ) கொண்டுவரப்பட்டதால், சரக்கு மற்றும் சேவை வரியுடன் இணைக்கப்பட்டிருந்த 0.5 சதவிகித ‘தூய்மை இந்தியா’ வரி, இனி வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. 

மத்திய அமைச்சர் சிவ பிரசாத் சுக்லா, இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலேயே அறிக்கை ஒன்றைப் பிறப்பித்தார்.

ஆனால், ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்ட பின்பும், 2017-18 நிதியாண்டில் 4 ஆயிரத்து 242 கோடியும், 2018-இல் செப்டம்பர் 30 வரை 149 கோடியும் ‘தூய்மை இந்தியா’ பெயரால் வரி வசூலிக்கப்பட்டு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

‘தூய்மை இந்தியா’ திட்ட வரி வசூல் தொடர்பாக, இணையதள செய்தி நிறுவனமான ‘தி வயர்’, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டிருந்தது.

அதற்கு அளிக்கப்பட்ட பதிலில்தான் மேற்கண்ட மோசடிகள் அம்பலமாகியுள்ளன.

மேலும், இவ்வாறு கிடைத்த பணத்தில், 2015-16இல் 2400 கோடி ரூபாயும், 2016-17இல் 10 ஆயிரத்து 272 கோடி ரூபாயும், 2017-18-இல் 3400 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாகவும் மோடி அரசு கணக்கு காட்டியுள்ளது.
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
 மோடி உண்மையாகவே எம்.ஏ. பட்டதாரி தானா?
பிரதமர் நரேந்திர மோடி,குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்தவர் என்றுபாஜகவினர் கூறி வருகின்றனர். ஆனால், இப்போதுவரை அது மர்மமாகவே உள்ளது.
 மோடியும் வெளிப்படையாக இதுபற்றி பேசியதில்லை.

இந்நிலையில், பிரதமர் மோடி எம்.ஏ. படித்ததாக கூறும் காலத்தில், அவர்குறிப்பிட்டுள்ள பாடப்பிரிவுகள், குஜராத் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படவே இல்லை என்று ஜெயந்திபாய் படேல் என்ற முன்னாள்பேராசிரியர் ஒருவர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

குறிப்பாக, எம்.ஏ. முதன் மைப் பாடத்திற்கு அடுத்ததாக, மோடி தேர்ந்தெடுத்த இரண்டாவது பாடப்பிரிவு விஷயத்தில் முரண்கள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கம், உரையாடல்கள் எதிலும் மோடி கலந்துகொள்ளவில்லை என்பதுடன், வகுப் பில் உரிய வருகைப் பதிவும்அவருக்கு இல்லை என்றுஜெயந்திபாய் படேல் சந்தேகங்களைப் பட்டிலிட்டுள் ளார்.

பிரதமர் மோடி, தில்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ.படித்தார் என்று கூறப்படுவதிலும் சர்ச்சைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக் கது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ரபேல் வழக்கிலும் முறைகேடு?
ரபேல் ஊழல் வழக்குவிசாரணையில், உச்ச நீதிமன்றம் சரியான முறையைக் கையாளவில்லை என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஜே. செலமேஸ்வர் கூறியுள்ளார்.

ரபேல் விமான ஒப்பந்தத் தில் முறைகேடுகள் நடந்துள் ளதாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன.
தலைமை நீதிபதிரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, இந்த வழக்குகளைவிசாரித்து தீர்ப்பளித்தது.
நீதிபதி ஜே. செலமேஸ்வர்


அப்போது, மத்திய அரசு தாக் கல் செய்த உறுதிமொழிக் கடிதங்கள் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ‘நடைமுறைகளின்படியே ஒப்பந் தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், அத்துடன், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்றும் கூறிவிட் டது.

இது எதிர்க்கட்சிகள் மத்தியில் தொடர் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஜே. செலமேஸ்வரும், இவ்விஷயத்தில் கருத்து கூறியுள்ளார்.

 “ரபேல் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அதுகுறித்து அதிகம் நான் பேசமுடியாது. எனினும், ரபேல்போன்ற வழக்கில் சீலிடப் பட்ட உறை விஷயத்தை கையில் எடுத்திருக்க மாட்டேன்.
அது நீதித்துறையில் சரியான விஷயம் அல்ல.
 மூடப்பட்ட உறை அல்லது கேமிரா விசாரணை நமது இந்திய நீதித் துறையில் கிடையாது.
அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே இம்மாதிரியான நடைமுறை ஏற்றுக்கொள்ளப்படும்”
- என்று செலமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
=====================================================

ன்று,
டிசம்பர்-21.
உலகின் முதல் குறுக்கெழுத்துப் போட்டி நியூயார்க் வேர்ல்ட் பத்திரிக்கையில் வெளியானது(1913)
 உலகின் முதல் தேசிய பூங்காவாக  நார்வேயின் ராண்டன் பூங்கா அறிவிக்கப்பட்டது(1962)
சந்திரனுக்கு மனிதனை ஏற்றிச்சென்ற விண்கலமான அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது(1968)
பெத்லகேம் நகரம், இஸ்ரேலிடம் இருந்து பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்கப்பட்டது(1995)
=====================================================
 குளிரில் நடுங்கும் கடவுள்?
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது.
தில்லியில், 6.2 டிகிரிசெல்சியஸ் அளவிற்கு குளிர் வாட்டி வருகிறது.
மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை.

இந்நிலையில், மனிதருக்கு குளிரடித்தால் ஸ்வெட்டர் போட்டுக்கொள்கிறோம்; அப்படியிருக்கும் போது, கடவுள் களுக்கும் குளிரடிக்கும்தானே..

 என்று ‘அதிகமாக யோசித்த’ வடமாநில மக்கள், விநாயகர் சிலைகளை சூடாக வைத்திருக்க, ஸ்வெட்டரை போர்த்தி விட்டுள்ளனர்.

புனேயில் புகழ்பெற்ற சரஸ்பாக் கணபதி கோயிலில் உள்ள சித்தி விநாயகர் சிலைக்கு, ஸ்வெட்டரும், கம்பளிகுல்லாவும் போட்டு விடப்பட்டுள்ளது.

 இந்த கோயிலுள்ள தேவனேஷ்வர், பார்வதி உள்ளிட்ட கடவுளர் சிலைகளுக்கும் கம்பளி போட்டு விடப்பட் டுள்ளது.

கடந்த கோடைக்காலத்தில், கடவுள் சிலைகளுக்கு வியர்க்கிறது என்றுகூறி ஏ.சி. பொருத்தப்பட்ட சம்பவங்களும் வடமாநிலங்களில் அரங்கேறின என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கைலாய மலையில் பனி சுழ்ந்த சிகரங்களில்தான் சிவன் குடும்பம் வாழ்வதாக படங்களில் காட்டுகிறார்கள் .
அது உண்மையில்லையா ?

உலகை படைத்த கடவுள்களுக்கே வியர்வை,குளிர் வியாதிகள் வருகின்றன என்றால் அவர்கள் என்னவகையில் கடவுள்.?
அந்த வகையில் தமிழ்நாடு எவ்வளவோ பரவியில்லை.
பெரியார் பரப்புரை அவர்களை கடவுள்கள் சிலைகள் கற்களாலானது என்று உணர்ந்த பகுத்தறிவு உள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி" முன் அறிவிப்பில்லாமல் ஏற்படும் மின்வெட்டுக்கு, தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

முன் அறிவிப்பில்லாமல் 1 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டால் 50 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்.

அதுவே மின்வெட்டு இரண்டு மணிநேரத்தைத் தாண்டினால், இழப்பீடு தொகை 100 ரூபாயாக இழப்பீடு வழங்கப்படும்.

முதல் இரண்டு மணி நேரத்துக்கு 50 ரூபாயும் அதையடுத்து நீடிக்கும் ஒவ்வொரு மணி நேர மின்வெட்டுக்கு 100 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும்.

  அதிகபட்சமாக 5,000 வரை இழப்பீடுத்தொகை வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார் .

தமிழக பாஜக- அதிமுக  அரசு என்ன சொல்லப்போகிறதோ?
------------------------------------------------------------------------------------------------------------------------------------