வந்தார், சென்றார்தமிழகத்தில் பாஜகவினரால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றநிகழ்ச்சிகள் பெரும் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன.

ஆனால் பல்வேறு பிரச்சனைகளில் தமிழகத்திற்கு தொடர் துரோகம் இழைத்து வரும் மத்திய பாஜக அரசை எதிர்த்து சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்ட முழக்கமான ‘மோடியே திரும்பிப்போ’ என்பது உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.


இந்தநிலைக்கு கரணம் கூட பாஜகத்தான்.
முதலில் அரசு விழாவுக்கு வருவதால் வெறும் கறுப்புக்கொடி மட்டும் என்றிருந்த தமிழகத்தை பாஜக தகவல் தொழில் நுட்ப அணி சீண்டியது.
ஒருநாள் முன்னதாகவே #Madurai Thanks Modi என்ற தலைப்பு முதலில்.பின் #Tamilnadu welcome Modi என்ற தலைப்பையும் வலைத்தளங்களில் பரப்பின மோடி வருவதற்கு முதல்நாள் மாலைதான் எதிர்ப்பு #Go Back Modi இடுகையிடப்பட்டு மோடி மதுரையில் கால் வைக்கையில் அது உலக அளவில் முன்னிலையாகி விட்டது.
அதற்கு முழுக்கரணமும் பாஜகத்தான்.

#மதுரை நன்றியும்   இருந்தது. அதுவும் அதன் இடுகையிடப்பட்ட இடம் தமிழ்நாட்டில் அல்ல.மகாராஷ்டிராவில்.இத்தகவலை டுவிட்டர் ட்ரென்டிங் அறிவிப்பு காட்டிக்கொடுத்து பாஜகவை அசிங்கப்படுத்தி விட்டது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவும், பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் ஞாயிறன்று மோடி வந்திருந்தார்.
எய்ம்ஸ் அடிக்கல் நாட்டுவிழா மிகச் சுருக்கமாகமுடிந்துவிட்டது.

அண்மையில்தான் பிரதமர் மோடி, தமிழ் தனக்கு மிகவும் பிடித்தமான மொழி என்று சொல்லியிருந்தார்.
ஆனால் இந்த அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை.

இதுகுறித்து பிரதமர் மோடி கவலைப்படவுமில்லை.
அடுத்து நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி மத்திய அரசின் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 47 லட்சம் கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 இந்த கழிவறைகள் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குழு அமைத்தால் நல்லது. வழக்கம்போல தூய்மை இந்தியா திட்டத்தைத்தான் தன்னுடைய பிரதானமான சாதனையாக மோடி எடுத்துரைத்துள்ளார்.

ஆனால் தூய்மைஇந்தியா திட்டத்திற்கு செய்யப்பட்ட விளம்பரத்தில்பாதியளவுகூட இந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை என்பதுதான் உண்மை.


ஏழை,எளியவர்கள் மேம்பாட்டிற்கு எண்ணற்றதிட்டங்களை செயல்படுத்தி வருவதாக மோடிகூறியுள்ளார். அதிலும் குறிப்பாக 35 ஆயிரம்கிலோமீட்டர் அளவிற்கு தேசிய நெடுஞ்சாலைத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும்விமான சேவை மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

 ஏழ்மையை ஒழிப்பதல்ல; மோடி அரசின் நோக்கம் ஏழைகளையே ஒழிப்பதுதான்.

இவரதுநான்கரை ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
 விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில பெரு முதலாளிகள் மேலும் மேலும் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர் பீற்றிக் கொள்ளும் எட்டு வழிச்சாலை போன்றதிட்டங்களும் கூட விவசாயிகளின் நிலத்தைப் பறித்து கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்கான போக்குவரத்தை மேம்படுத்தவே மேற்கொள்ளப்படுகிறது என்பது மக்களுக்குத் தெரியாத ஒன்றல்ல.

அண்மையில் காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களைத் தாக்கிய கஜா புயல் நிவாரண நிதியாக மிக சொற்பத் தொகையே மத்திய பாஜக அரசுஒதுக்கியது.
ஆனால் தற்போது புதிய பாம்பன்திட்டம் வரப்போவதாக மோடி கூறியிருக்கிறார்.

அத்துடன் பாதுகாப்புத் தளவாடம், பொறியியல் உற்பத்தி என பல தொழிற்சாலைகள் அலை அலையாக தமிழகத்தை நோக்கி வந்துகொண்டேயிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

  பாஜக அரசு தமிழ் நாட்டுக்கு ஒதுக்கும் திட்டங்களை எண்ணினால் பயமாகத்தான் இருக்கிறது.
மீத்தேன்,சாகர்மாலா,கதிரமங்கலம் ,நெடுவாசல்,குளச்சல்,சேலம் எட்டுவழி என விவசாய நிலங்களை நாசம் விளைவித்து தமிழ்நாட்டின் நிலங்கள்,நிலத்தடி நீர்,சுற்றுச் சூ ழலை கெடுக்கும் திட்டங்கள்தான் வருகின்றன.
ஏற்கனவே வந்து நாசம் விளைவிக்கும் ஸ்டெர்லைட் அகற்றவே படாத பாடுபடும் தமிழக்க் மக்கள் இன்னும் அலை அலையாக வரும் திட்டங்களை எண்ணி "விடாது கருப்பு" பயத்தில் உறைந்து போயுள்ளனர்.
கேட்டால் இவை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வர எண்ணிய திட்டங்கள்,நாங்கள் செயல்படுத்துகிறோம் என்கிறார் மோடி.
காங்கிரஸ் இப்படிப்பட்ட காரியங்களை எண்ணியதால்தானே தோல்வியில் அரசை இழந்து மோடி பிரதமரானார்.
காங்கிரசின் தவறுகளை கலையாமல் ,அதே திட்டங்களை கடுமையாக கொண்டுவர பாஜக எதற்கு ஆட்சிக்கு வரவேண்டும்?காங்கிரசே ஆண்டிருக்கலாமே?

கடந்தநான்கரை ஆண்டுகாலமாக தமிழகத்தை வஞ்சிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்த மோடி அரசுகடைசி நேரத்தில் போடும் வாய்ப்பந்தல் நிழல்தராது என்பதை தமிழக மக்கள் புரிந்தே வைத்திருக்கிறார்கள்.

மோடிக்கு தமிழக மக்கள் கறுப்புக்கொடி காட்டுவதையும்,#மோடியே திரும்பிப்போ என்பதையும் கண்டு கொதித்து எழுந்து திட்டித்தீர்க்கும் தமிழிசை,பொன்னார,எச்ச.ராஜா போன்றோர் அதற்குப்பதிலாக  தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் ,அழிக்கும் திட்டங்களை மக்கள் எதிர்ப்பையும் மீறி கார்பரேட்களுக்கு ஆதரவாக செயல்படுத்தும் மோடி,அமித்ஷாவை ஆலோசனைகளை சொல்லி வழிபடுத்தலாமே .
அதன்முலம் தாமரையை மலரவைக்க முயலாமே.

இன்று மதம் பிடித்து பாஜகவை ஆதரிப்பவர்களே கூட மோடி அரசின் தொடர்ந்த தமிழகம் மீதான தாக்குதலைக்கண்டு ஒதுங்கியிருக்கிறார்களே ,அது தமிழிசை பாஜக கும்பலுக்கு தெரியவில்லையா?

திருந்த வேண்டியது தமிழகம் அல்ல.பாஜக ,ஆர்.எஸ்.எஸ்,கவிக்கும்பல்தான்.
அதுவரை
# மோடியே திரும்பிப் போ தான்.
ஆட்சி ஆரம்பித்தபோது  நான்கு ஆண்டுக்கு முன்னர் மோடி,ஜம்முவில் திறந்து வைத்த பெயர்ப்பலகை.
இன்றையநிலை இதுதான் .
இதே  திட்டத்திற்குத்தான் ஆட்சி காலியாகும் போது மோடி மதுரையில்  திறந்து வைத்துள்ளார்.
 ====================================================

ன்று,
ஜனவரி-28.
அலெக்சாண்டர்

உலக  தொழுநோய் தினம்

அர்மேனியா ராணுவ தினம்

 அலெக்சாண்டர் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1821)

சென்னையில் முதன் முதலாக தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது(1882)

இந்திய அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா பிறந்த தினம்(1925)

====================================================
 இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு