இரண்டுமடங்கு அதிகரிப்பு,





இந்தியர்களின் குடும்பக் கடன் ஒரே ஆண்டில் இரண்டுமடங்கு அதிகரித்துள்ளது
 இந்தியமக்கள் தங்கள் குடும்பத்தின் அவசரத் தேவைகளுக்காக வாங்கிய குடும்பக் கடன்,2016-17ஆம் ஆண்டில் ரூ. 3 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக இருந்தது. 
2017-18ஆம்ஆண்டில் ரூ. 6 லட்சத்து 74 ஆயிரம் கோடியாக உயர்ந் துள்ளது.
 ஒரே ஆண்டில் மட்டும் சுமார் 1.8 மடங்கு கடன் அதிகரித்துள்ளது.

 கடந்த 5 ஆண்டுகளைக் கணக்கில் கொண்டால், 13 சதவிகிதம் கடன் அதிகரித்துள்ளது. 

                                                                                                    ‘தி எகனாமிக் டைம்ஸ்’ 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதுவும் ஒரு நச்சுத் திட்டம்தான்.

மோடி அரசின் மிகவும் நஞ்சு சார்ந்த திட்டங்களில் ஒன்றாக பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம் அமைந்திருக்கிறது.
இதன் நோக்கம், விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் அளிப்பது என்று சொல்லப்படுகிறது.

அதாவது, பருவநிலை மாற்றங்கள் காரணமாக, பேரிடர் போன்று தடுக்கமுடியாத காரணங்களால் பயிர் விளைச்சலில் தோல்வி ஏற்பட்டால், பின்னர் அப்பயிரை விளைவித்த விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய சேதத்திற்காக இழப்பீடு வழங்கப்படும் என்பதாகும்.

ஆனால், மோடி அரசாங்கம் செய்திருப்பது என்ன தெரியுமா?
 பயிர் விளைச்சலில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும்போது, அதிலிருந்தும் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுத்திருப்பதாகும்.
இது தொடர்பான பல அதிர்ச்சிகரமான விவரங்கள் வெளியாகிவுள்ளன.

 2016 சம்பா, 2017-18 குறுவை மற்றும் 2017 சம்பா பருவங்களில் 18 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வசூலித்துள்ள தொகை ரூ.42,114 கோடியாகும்.

 இதில் விவசாயிகள் பங்களிப்பு ரூ. 7,255 கோடி அல்லது 17 சதவீதம். 
மீதமுள்ள ரூ.34,859கோடி அல்லது சுமார் 83 சதவீதம் அரசாங்கத்தின்பங்காகும். 
அதை மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் சமமாகப் பகிர்ந்து கொள்கின்றன. 

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடாகஇதுவரை 32,912 கோடி ரூபாய் கொடுத்திருக்கின்றன. 
அதாவது பயிர்காப்பீட்டு நிறுவங்களுக்கு லபமாகக் கிடைத்திருக்கும் தொகை என்பது ரூ. 8,713 கோடியாகும். 


அரசாங்கம் அளித்துள்ள விவரங்களின்படி, இந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சுமார்21 சதவீதத் தொகையை தங்கள் பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொண்டிருக்கின்றன.

 இந்தப் பணம் அவதிக்குள்ளாகியிருக்கிற விவசாயிகள் பிரிமியமாகக் கொடுத்த பணம்அல்லது அரசாங்கத்தின் பணமாகும்.

அரசாங்கத்தின் பணம் என்பதும் மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம்தான்.
 பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம் என்பது விவசாயிகள் பாடுபட்டு ஈட்டும் பணத்தை மட்டுமல்ல, அரசாங்கத்தின் நிதியையும் மிக எளிதாக உறிஞ்சக்கூடிய ஒரு சதி என்பது இப்போது நன்கு தெரியத் தொடங்கிவிட்டது.

பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம் அமல்படுத்தத் துவங்கியதிலிருந்தே, பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு இழப்பீடுகளை வழங்குவதில் மிகவும் காலதாமதம் ஆகிறது என்று ஏராளமான முறையீடுகள் வந்திருக்கின்றன.
3 முதல் 4 மாதங்கள் தாமதம் என்பது பொதுவாக இருக்கிறது.

பயிர் இழப்புக்குள்ளான விவசாயிகளுக்கு இது மிகப்பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
ஊழலின் உறைவிடமான பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.

இதற்கு மாற்றாக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சமயங்களில் அரசாங்கங்களே முன்வந்து அவர்களைக் கைதூக்கிவிடக்கூடிய விதத்தில், ஓர் இழப்பீட்டு முறை கொண்டுவரப்பட வேண்டும்.
அல்லது தனியார் காப்பீடு நிறுவங்களின் இருந்து அணைத்து காப்பீடுகளையும் எல்.ஐ.சி.யிடமே ஒப்படைக்க வேண்டும்.
மக்கள் பணம் கோடிகளில் அம்பானிக்கு செல்லாமல் மக்களின் பொது நிறுவனத்துக்கே கிடைக்கட்டும்.

=====================================================

ன்று,
ஜனவரி-30.

உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

இந்திய தியாகிகள் தினம்

 ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது(1964)


பாகிஸ்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது(1972)

=====================================================
 ரபேல் விமானம் .
 பராமரிக்க வசதி இந்தியாவில் இல்லை...
பிரான்ஸ் நாட்டின் ‘டஸ் ஸால்ட்’ நிறுவனத்திடம் இருந்துரூ. 59 ஆயிரம் கோடி மதிப்பில்36 ‘ரபேல் ரக’ போர் விமானங் களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் மத்திய பாஜக முறைகேடு செய்துள்ளதாக குற்றச் சாட்டுக்கள் இருந்து வருகின்றன.
முந்தைய ஒப்பந்தத்தில், மொத்தம் 126 ரபேல் ரக விமானங்களை வாங்க முடிவு செய்யப் பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை திடீரென 36 ஆக குறைக்கப்பட்டது;

அவையும் பறக்கும் நிலையிலேயே பெற்றுக்கொள்வதற்கு ஒப்புக் கொள்ளப் பட்டது;

காங்கிரஸ் ஆட்சியில் 526 கோடி ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த ரபேல் ரக விமானத்திற்கு, 1670 கோடி ரூபாயைஅள்ளி இறைத்தது;
கூட்டு நிறுவனமாக ‘எச்ஏஎல்’ இருந்த இடத்தில் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ சேர்க்கப்பட்டது ஆகியவை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளில் ஒன்றுக்குக் கூட மோடி அரசுஇதுவரை பதிலளிக்கவில்லை.

ராணுவக் கட்டுமான நிறுவனங்களின் சங்கத் தலைவர்கள்
இதனிடையே, ஒப்பந்தப்படி டஸ்ஸால்ட் நிறுவனம் ‘ரபேல்’ விமானங்களை தயாரித்து வழங்கினாலும், அவற்றை வைத்துப் பராமரிப்பதற்கான வசதியைக் கூடமோடி அரசு இன்னும் ஏற்படுத்தவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவக் கட்டுமானநிறுவனங்களின் சங்கத் தலைவர்ப்ரவீன் மகானா தில்லியில் திங்களன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த உண்மைகளைப் போட்டு உடைத்துள் ளார்.

“ரபேல் போர் விமானங்களைப் பாதுகாப்பதற்கான ஹேங்கர்ஸ் (Hangers)எனப்படும் சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் 2 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யவேண்டும். ஆனால் அந்தத் தொகையை இன்னும் ஒதுக்கவில்லை.
 ரபேல் விமானங்கள் முதற் கட்டமாக வரும் செப்டம்பர் மாதம்இந்தியாவுக்கு வர இருக்கின்றன.
இதற்காக, அம்பாலா, ஹாசிமராஆகிய இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து வருகிறோம்.
ஆனால், கடந்த ஏழெட்டு மாதங்களாக இந்தப் பணிகள் மிகவும் தொய்வடைந்துள்ளன.


இன்னும் சொல்லப் போனால் இரண்டு மாதங்களாக ரபேல் விமானங்களுக்கான பராமரிப்பு உள்கட்டமைப்புப் பணிகள் நிதியின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.
நாங்கள் இந்தப் பணிகளை வங்கிக் கடன் மூலமாகத் தான் செய்து வருகிறோம்.

ஆனால்இப்போது வங்கிகளும் கடன் கொடுக்க மறுத்து வருகின்றன” என்று மகானா வேதனை தெரிவித்துள்ளார்.

“ரபேல் விமானத்துக்கான பராமரிப்பு உள்கட்டமைப்பு மட்டுமல்ல, ராணுவக் கட்டுமானங்களும் நடைபெறவில்லை. எல்லைச்சுவர்கள், ஏவுகணைக் கொட்டகைகள், ராணுவ ஹெலிகாப்டர்கள், விமானங்களுக்கான ஓடுபாதைகள் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணியில், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராணுவக் கட்டுமானப் பிரிவில் 20 ஆயிரம் காண்ட்ராக்டர்களும், 50 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

 மத்திய அரசுநிதி ஒதுக்காததால் இந்தப் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார், ராணுவக் கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் துணைத் தலைவர் அசிசுல்லா கான்.“கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன்னரே பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நிதிப்பற்றாக்குறை பற்றி வலியுறுத்தினோம்.

 அதன்பின்வெறும் 250 கோடி ரூபாய் ஒதுக்கினார்கள்.
ஆனால், அது ராணுவத்தின் தெற்கு கமாண்ட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. மீண்டும் ஜனவரி மாதம் 250 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதுவும், நாடாளுமன்றத்தில் எழுந்தவிவாதத்தைத் தொடர்ந்து ‘இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட்’டுக்கு வழங்கப்பட்டு விட்டது” என்றும் குறிப்பிட்டுள் ளார்.

“ரபேல் விமானங்களைப் பராமரிப்பதற்கான உள்கட்டமைப்புப் பணிகள் வரும் ஏப்ரல், மே மாதத் துக்குள் முடிக்கப்பட வேண்டும். ஆனால் இப்போது வரை 40 முதல் 50 சதவிகித பணிகள்தான் முடிந்திருக்கின்றன” என்று கூறும் கட்டுமான நிறுவனங்களின் சங்கத் தலைவர் மஹானா, “இன்னும் 15 நாட்களுக்குள் போதிய நிதி ஒதுக்கவில்லை என்றால் ராணுவக் கட்டுமானத் துறையினர் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட வேண்டிய நிலை ஏற்படும்” என்றும் எச்சரித் துள்ளார்.

இந்திய பாதுகாப்புத்துறையினரையும் போராட்டத்தில் தள்ளிய பெருமை மோடி அரசுக்கே சொந்தம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?