நெஞ்சில் குத்தியது

ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக் குழு கூட்டம் சென்னை யில் நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்றுவரும் போரட்டம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
 அதுகுறித்து மு.அன்பரசு கூறியதாவது:
"அரசின் அடக்குமுறையை மீறி போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஜாக்டோ ஜியோ சார்பில் புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் எங்கள் போராட்டத் திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சித் தலைவர், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், மின்சாரவாரியம், போக்குவரத்து, சிஐடியு, தொமுச, எச்.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பள்ளி மாணவர்களின் தேர்வு நெருங்குவதால் எங்களின் கடமையை நிறைவேற்றும் வகையிலும்; மாண வர்கள், பெற்றோர்கள் நலனை கருத்தில் கொண்டும்,மற்றும்அனைத்துக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்றும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம்.

போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் பின் வாங்காமல், உடனடியாக தமிழக முதல்வர் அழைத்துப் பேசி சுமூகத் தீர்வை காண வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.
தமிழக முதல்வராக பதவியேற்ற பின்பு எடப்பாடி பழனிசாமி அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறை வேற்றுவதாக உறுதியளித்தார்.
ஆனால்ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? இதற்கு யார் முட்டுக்கட்டை யாக உள்ளார்கள்?
 தற்காலிக ஆசிரியர்நியமனம் அரசின் தவறான செயலாகும்.

9 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக எங்களுக்கே தெரியாமல் வைத்திருந்த வைப்புத்தொகை யானது ரிசர்வ் வங்கியில் உள்ளதாக செவ்வாயன்று இரவு அரசு அறிவித்தது.
இதுவே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி.
 வைப்புத் தொகையாக உள்ளரூ.25,000 கோடிக்கு பதிலாக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
போராட்டத்தை கைவிட்ட நாங்கள்முழுமனதுடன் பணிக்குத் திரும்ப வில்லை. காரணம் முன்பு இருந்த அரசு, ஊழியர்களின் நெஞ்சில் குத்தியது;
 ஆனால் இப்போது உள்ள அரசு சட்டத்துக்கு புறம்பாக பல நடவடிக்கைகளை எடுத்து எங்கள் முதுகில் குத்தியுள்ளது.
அதை மறக்க மாட்டோம்.

வரும் தேர்தலில் அதற்கான பதிலை அவர்கள் பெற்றே தீர்வார்கள்.முன்பு இருந்த இவர்களின் அரசு பாடம்கற்றப்பின்னர் அரசு ஊழியர்களிடம் நல்லமுறையில் நடந்து கொண்டது.

இப்போதைய ஆள்வோரின் எண்ணங்களையும் மீறி ஒரு அதிகார மய்யம்தான் ஆட்சி நடத்துகிறது அது ஆள்வோரின் விருப்பு,வெறுப்புகளை மீறி தன்னிச்சையாக செயல்படுகிறது என்பது இப்போராட்டத்தின் மூலம் அறிந்து கொண்டோம்.

நீதிமன்றம் கைது செய்யக்கூறி,பிணை வழங்க மறுக்கப்பட்ட ஒருவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தேடி (?) வந்த நிலையில் அந்த சிரிப்புநடிக்கரை காவல்துறை பாதுகாப்புடன் சுதந்திரமாக செயல்பட  நடமாட விட்டு மக்கள் மத்தியில் காவல்துறையை சிரிப்பு போலீசாக இழிவுபடுத்திய சக்தி எது என்று மக்களுக்குத் தெரியும்.

அதை மீறி முதல்வரே செயல்படமுடியாத போது ஊழியர்கள் எப்படி எதிர்த்து நிற்க முடியும்.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்ட குற்றவியல் மற்றும் நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும்.

மேலும் ஜாக்டோ -ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் மாநிலம் தழுவிய அளவில் ஊழியர்களை திரட்டிமீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது எனப் பேசுவது எப்படி குற்றமாகும்
என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி யெழுப்பியுள்ளனர்.
மேலும் ஸ்டெர் லைட்டுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதாகவும் கருத்து ரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தி ருந்தார்.
அதில், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் மக்கள் ஊர்வலம் நடத்தினர். அப்போதுகாவல்துறையினர் ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 14 பேர் உயிரிழந்த னர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ மற்றும் அருணா ஜெகதீஷ் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப்போராடியவர்கள் மீது காவல்துறை யினர் பொய் வழக்குகளை பதிவு செய்துதுன்புறுத்தி வருகின்றனர்.
இதனால் தூத்துக்குடி மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.
ஒரு மனிதன் தனது உரிமையைப் பெற போராடலாம் என சட்டம் கூறுகிறது.

ஆனால், தூத்துக்குடி வட்டா ரத்தில் கடந்த மூன்று மாதங்களாக பொதுகூட்டம், ஆர்ப்பாட்டம், விழிப்புணர்வுப் பேரணி உள்ளிட்ட எவற்றிற்கும் காவல்துறையினர் அனுமதி தருவதில்லை.
போராட்டம் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி கோருபவர்களை தேவையின்றி அலைக்கழிக்கின்றனர். அவர்கள் மீது போய் வழக்குகளை பதிவு செய்கின்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சிபிஐமற்றும் அருணா ஜெகதீஷ் ஆணை யத்திடம் சாட்சி கூறுபவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்கின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சிபிஐ, அருணா ஜெகதீஷ் ஆணையத்திடம் சாட்சி கூறிய சந்தோஷ் ராஜ் என்பவர் மீது காவல்துறையினர் பல பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

காவல்துறையினர் சட்டப்படி முறை யாக நடக்கவில்லை.
ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவோ,எதிர்ப்பாகவோ மனுக்கள்,ஆர்ப்பாட்டங்கள் ,விளம்பரங்கள் செய்யக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டுள்ளநிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை,மூட ஆதரவு தெரிவிப்பவர்களை காவல்துறை கைது செய்கிறது.கருப்புத்துணி விற்கிறவியாபாரிகளை மிரட்டுகிறது.
ஆனால் திறக்கோரி மனு கொடுக்கும் ஸ்டெர்லைட் கைக்கூலிகளிடம் மாவட்ட ஆட்சியர் மனு வாங்கிக்கொண்டு போட்டோவுக்கு நிற்கிறார்.
பத்திரிகைகளில் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்படுகிறது.

வாராவாரம் ஒவ்வொரு அமைப்பின் பெயரில் ஸ்டெர்லைட் மக்கள் பணியில் சிறப்பாக செயல்படுவதாகவும் ,அது மீண்டும் செயல்படவேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலையே தனது பெயரில்லாமல் விளம்பரம் நாளிதழ்களில் முதற்பக்கத்தில் வெளியிடுகிறது.
ஸ்டெர்லைட்  பணியாளர்கள் என்ற பெயரில் ஆர்ப்பாட்டங்களை துறைமுகப்பகுதியிலும்,ஆலை வாயிலிலும்,குடியிருப்பு முகப்பிலும் அடிக்கடி நடத்துகின்றனர்.
இதையெல்லாம் அனுமதித்து,பாதுகாப்பு அளிக்கும் காவல்துறையினர் ஸ்டெர்லைட் பற்றி எதிர்த்து டீக்கடைகளில் ஒருவர்  பேசினால் கூட யாராவது ஒரு கைக்கூலியிடம் பொய் குற்றசாட்டை வாங்கி அவரை கைது செய்கிறது.
கோவில் பகுதிகளில் விழாக்களில் காவல்துறையினரே சீருடையின்றி ஸ்டெர்லைட்  சமுதாயப்பணிகள் என்று கைப்பிரதி வழங்கினார்கள்.இன்னமும் வழங்கி வருகின்றனர்.
ஸ்டெர்லைட்டை மூடு என்று வியாபாரிகள் சங்கத்தினர் தங்கள் கடைகளில் ஒட்டியிருந்த துண்டு சுவரொட்டியை காவல்துறையினர் ஓட்ட,ஓட்ட வந்து கிழித்து சென்றனர்.
காவல்துறையினர் யாருக்காக?மக்கள் பாதுகாப்புக்கா,ஸ்டெர்லைட் ஆதரவுப்பேரவையா?
அவர்கள் சாப்பிடும் சம்பளம் வாங்கவது மக்கள் வரிப்பணத்தில் இருந்தா?அனில் அகர்வால் கொடுக்கும் ஸ்டெர்லைட் பணத்தில் இருந்தா?
அரசு கொள்கைக்கும் ,மாவட்ட ஆட்சியர் அறிக்கைக்கும் எதிராக வெளிப்படையாகவே ஸ்டெர்லைட் ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது.

தூத்துக்குடியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 24 மணி நேரமும் வழக்கறிஞர் குழு பணியில் இருக்க சட்ட உதவி மையத்தின் உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து, சட்டவிரோதமாக கைதுசெய்வதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு புதனன்று விசாரணைக்கு வந்தது.
 அப்போது, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.

அதனைப்பார்த்த நீதிபதிகள், கோபமடைந்தனர்.
 ‘‘காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்;
 ஒருதரப்பின ருக்கு சார்பாக செயல்படக்கூடாது; ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது எனப் பேசினால் அது குற்றமா?
 அப்படியெனில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டுமென கூறுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
 காவல்துறையின் அறிக்கையைப் பார்க்கும் போது ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக செயல்படுவது போல் தெரிகிறது;
 ஒருபுறம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் என்று அரசு கூறுகிறது;
மற்றொருபுறம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கருத்து தெரிவித்தால் கைது நடவடிக்கை;
இது என்ன நிலைபாடு?

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்வது ஏன்?’’ என சரமாரியாக கேள்வியெழுப்பினர்.

 மேலும், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக மைக்கேல் ஜூனியஸ், சந்தோஷ்ராஜ் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் நகல்களைத் தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

====================================================

ன்று,
ஜனவரி-31.
பக்தவத்சலம்

 யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையில் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது(1946)



அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதியான எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது(1958)


நவூறு விடுதலை தினம்(1968)


தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் இறந்த தினம்(1987)
====================================================

மோசடி நிறுவனத்திடம் ரூ.20கோடி பெற்ற பாஜக.
பொதுத்துறை வங்கிகளிடம் ரூ. 1 லட்சம் கோடி அளவிற்கு மோசடி செய்த திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திடம் (DHFL), பாஜக ரூ. 20 கோடி நன்கொடை பெற்றிருப்பதாக ‘கோப்ரா போஸ்ட் இணையதளம்’ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

டிஎச்எப்எல் என்ற நிறுவனம்,சில ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டுவசதிக்கு கடன் கொடுக்கும் நிறுவனமாக திடீரென உருவெடுத்தது.

 இந்த நிறுவனத்திடம்தான் பாஜக ரூ. 19 கோடியே 60 லட்சத்தை நன்கொடையாக பெற்றுள்ளதாக கோப்ரா போஸ்ட்ஆதாரங்களுடன் கூறியுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களிடம், முதலாளித்துவ அரசியல் கட்சிகள் லஞ்சம் பெறுவது வாடிக்கைதான் என்றாலும், டிஎச்எப்எல் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதுஇந்திய பொதுத்துறை வங்கிகளிடம் ரூ. 1 லட்சம் கோடி அளவிற்குமோசடி செய்த நிறுவனம் என்று கூறப்படுகிறது.

போலியான பல நிறுவனங்களை ஏற்படுத்தி, அதன் பெயர்களில் டிஎச்எப்எல் நிறுவனம், பொதுத்துறை வங்கிகளை சூறையாடி இருப்பதாகவும் புகார்கள் உள்ளன.


பொதுவாக எந்தவொரு நிறுவனத்திற்கும் வங்கிகள் கடன்வழங்கும்போது, சொத்து உத்தரவாதம் மட்டுமன்றி, கடன் பெறும் நிறுவனங்களிடம் தனிப்பட்ட உத்தரவாதமும் பெற வேண்டும் என்பதுவிதியாகும்.


 ஆனால், இதுபோன்றவிதிமுறைகளை எல்லாம் மீறி டிஎச்எப்எல் நிறுவனத்திற்கு கடன் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இதனால், கொடுத்த கடனை இந்திய வங்கிகளால் திருப்பிப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள் ளதாகவும் கூறியுள்ள கோப்ரா போஸ்ட்,

இவ்வாறு ரூ. 1 லட்சம்கோடியை சூறையாடிய நிறுவனத்திடம் பாஜக ரூ. 19 கோடியே60 லட்சத்தை நன்கொடையாக பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள் ளது.

மேலும், டிஎச்எப்எல் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆர்கே டெவலப்பர்ஸ் நிறுவனத்திடமும், ரூ. 9 கோடியே 93 லட் சத்தை பாஜக நன்கொடையாக பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாஜகவை அசாமிலும் விடாது கருப்பு.
அசாமில், 3 வயது குழந்தையின் கறுப்புச்சட்டையை, போலீசார் கட்டாயப்படுத்தி, கழற்ற வைத்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அசாமில் பாஜக ஆட்சி நடக்கிறது. 
முதல்வராக சர்பானந்த சோனாவால் இருக்கிறார்.


அவர் அடிக்கல்நாட்டு விழா ஒன்றில் பங்கேற்றபோது, அந்தவிழாவிற்கு, ஒரு தாய் தனது 3 வயதுகுழந்தையுடன் வந்துள்ளார்.

ஆனால்,அந்த குழந்தை கறுப்புச் சட்டையில் இருப்பதைப் பார்த்த போலீசார், குழந்தையின் சட்டையைக் கட்டாயப்படுத்தி கழற்றச்செய்துள்ளனர்.

இதனால் அந்த தாய், மிகுந்த மனவருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 “பாதுகாப்பு காவலர் என் மகனை உள்ளே விடஅனுமதிக்கவில்லை, காரணம் அவன் கறுப்புச் சட்டை அணிந்திருந்தானாம்” என்றுகுழந்தையின் தாயார் ஆவேசப்பட்டுள்ளார்.

அசாம் காவல்துறையினரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

அவர்கள் என்ன செய்வார்கள்.
சென்னையில் மோடிக்கு நடந்தது இந்தியா முழுக்க பாஜகவை பயத்தில் தள்ளியுள்ளது தெரிகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?