எட்டு ஆண்டுகள்.....,
"உங்கள் மனம் கவர்ந்த "சுரன் "என்றெல்லாம் சொல்லமாட்டேன்.
நீங்கள் இதுவரை தொடர்ந்து படித்து வந்த எனலாம்.
அதுவும் தொடர்ந்துபடிப்பவர்கள் எண்ணிக்கை எப்படியும் 100க்கு குறைவிருக்காது என்பது உறுதி.
காரணம்.30 நாட்களுக்கு மேலேயே இடுகைகள் ஒன்று கூட எனது சுய பணிகள் காரணமாக இடாவிட்டாலும்,நானே நாட்கணக்கில் வலைப்பக்கம் வராமல் இருந்தாலும் ,
மீண்டும் இடுகை இட வருகையில் தினமும் 150 க்கு குறைவில்லாமல் ,மொத்த நாட்களில் சராசரி 200 பேர்கள் தினமும் "சுரன் "பக்கம் சொடுக்கி வந்து (ஏமாந்து?)போனதை காணமுடிந்தது.
அதற்கெல்லாம் நன்றிகள்.!
தைத்தமிழர் திருநாள்,தமிழ்ப்புத்தாண்டில் தனது முதல் இடுகையுடன் பயணிப்பதை ஆரம்பித்த உங்கள் "சுரன்"
தற்போது தனது பயணத்தின் எட்டை கடந்துள்ளது.ஒன்பதாவது வது ஆண்டை எட்டியுள்ளது .
வருகைதந்தோர் எண்ணிக்கை 12,80,000.
இது உங்களால் மட்டுமே இயன்றது.
அதற்கு எனது நன்றிகள் என்று மட்டுமே எழுத்தால் கூற முடிகிறது.மனதால் ...?
என்றும் அன்புடன்,
-சீ .அ.சுகுமாரன்.