சனி, 5 ஜனவரி, 2019

இந்திய மழலை சாதனை?


ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் முக்கிய ஆய்வறிக்கை ஒன்றை 2018 டிசம்பரில் வெளியிட்டது.

அதன்படி, 2019ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தில் மட்டும் உலகம் முழுவதும் 3,95,000க்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 70,000 குழந்தைகள் பிறக்கும் என்று கணிக்கப்பட்டது.

அக்கணிப்பை சரியாக்கும் வகையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3,95,072 குழந்தைகள் பிறந்துள்ளன.


 இந்தியாவில் மட்டும் 69 ஆயிரத்து 944 குழந்தைகள் பிறந்து சாதனை படைத்துள்ளனர்.

 2018 ஆண்டை போல் இந்தாண்டும் புத்தாண்டு பிரசவத்தில் இந்தியாவே முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது.

மொத்த எண்னிக்கை 3,95,072ல்  பாதிக்கும் மேலான குழந்தைகளை  இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகள் மட்டுமே பெற்றுதள்ளியுள்ளன.

இந்தியாவில் 69,944 குழந்தைகளும்,
 சீனாவில் 44,940,
நைஜீரியாவில் 25,685,
 பாகிஸ்தானில் 15,112,
 இந்தோனேசியாவில் 13,256,
அமெரிக்காவில் 11,086,
காங்கோ குடியரசில் 10,053,
 வங்கதேசத்தில் 8,428
குழந்தைகள் பிறந்துள்ளதாக பதிவுகள் உள்ளன.

சரியாக 12.01 மணியானவுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் மட்டும் 168 குழந்தைகள் பிறந்துள்ளன. இச்சாதனையில் உலகில் இந்தியா உட்பட  வளர்ச்சியடையாத நாடுகளில் 90% பிரசவங்கள் நிகழ்வதாக கூறப்பட்டுள்ளது.

 அதில் 20 லட்சம் குழந்தைகள் பிறந்த  நாளிலேயே  இறந்து விடலாம் என்றும் கணிக்கப்பட்ள்ளன ..

 26 லட்சம் குழந்தைகள் ஒரு வாரத்திற்குள் இறந்துவிடலாம் எனவும் கணித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த இறப்புகளுக்குக் காரணம் ஊட்டச் சத்து இல்லாததும் ,
சரியான மருத்துவம் தரப்படாமையும்தான் காரணம் என குறைப்படுகிறது.

எப்படியோ சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் புதிய இந்தியா பிறந்த உலகளவில் சாதனைப்படைத்துள்ளது.

இதுவும் மோடியின் பாஜக ஆட்சி சாதனைப்பட்டியலில் சேரத்தானே செய்யும்.

=====================================================


ன்று,
ஜனவரி -05.

நாசிக் கட்சி அமைக்கப்பட்டது(1918)

பண்பலை வானொலி முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது(1940)

டெய்லி மெயில்,கடல் தாண்டி சென்ற முதல் செய்தி தாளானது(1944)

====================================================
 சபரிமலை உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் மாதவிடாய் ஏற்பட வாய்ப்புள்ள 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைந்துள்ளதாக, கோயிலுக்குள் பெண்கள் நுழைய எதிர்ப்புத் தெரிவிப்பவர்களால் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

ஆனால் உண்மை வேறு ?
சமீபத்திய போராட்டங்கள் அனைத்திலும் இதுவரை சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைவது முதல் முறை என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சில ஊடகங்களும் மாதவிடாய் வயதில் உள்ள பெண்கள் நுழைவது இது வரலாற்றிலேயே முதல் முறை என்று செய்தி வெளியிட்டுள்ளன. இது உண்மை இல்லை.

1990ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19ஆம் தேதி வெளியான ஜன்மபூமி மலையாள நாளிதழில், தேவசம் போர்டின் ஆணையராக இருந்த சந்திரிகா என்பவரின் பேரக்குழந்தைக்கு முதல்முறை உணவூட்டும் நிகழ்வில், அக்குழந்தையின் தாயான சந்திரிகாவின் மகள் இருக்கும் படம் வெளியானது.

இதையடுத்து பெண்கள் நுழைய தாங்கள் ஆதரவளிக்கவில்லை என 2016இல் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு எதிராக எஸ் .மகேந்திரன் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை மற்றும் மலையாளப் புத்தாண்டு நாளான விஷூ ஆகிய சமயங்களில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை செல்ல அனுமதிக்கப்படாவிட்டாலும், மாதாந்திர பூஜைகளுக்காக கோயில் திறக்கப்பட்ட சமயங்களில், கோயில் நிர்வாகத்தால், எந்த வயது வேறுபாடும் இல்லாமல் பெண்கள் அனுமதிக்கப்பட்டதும்,சிறப்பு வழிபாடுகளுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு வயது வேறுபாடின்றி பெண்களை சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் வழி பட விட்டதும் தெரியவந்துள்ளது.அதற்கு ஆதாரமாக தேவசம் வாரியம் பணம் பெற்ற ரசீதுகள் உள்ளதும் .
 அந்த வழக்கு விசாரணையில் தெரியவந்தது.
அதன்பின்னரே நீதிமன்றம் பெண்களை அனுமதிக்க ஆணைபிறப்பித்துள்ளது.
   அய்யப்பன் பெயரால் ஆர்.எஸ்.எஸ்,சங்கிகள்,பாஜகவினரால் தாக்கப்பட்ட பேருந்துகள் ஊர்வலம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
-      
மோடி,ரிசர்வ்வங்கி சக்திகாந்ததாஸ் பொருளாதார அறிவு ........?