வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

பக்கோடா கருகிடுச்சு ?


 


நாட்டின் வேலைவாய்ப்பு பிரச்னை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள, தேசிய கணக் கெடுப்பு விபரங்களின்படி, கடந்த, 45 ஆண்டுகளில் இல்லாத வகையில், வேலை வாய்ப்பின்மையின் அளவு, 6.1 சதவீதம் என்ற உயர த்தை அடைந்துள்ளது.

 தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் சார்பில், வேலைவாய்ப்பு பிரச்னை தொடர்பான புள்ளி விபரங்கள், ஆண்டு தோறும் வெளியிடப் படும்.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பின், 2017 ஜூலை முதல், 2018 ஜூன் வரையிலான காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விபரங்களை, இந்த அமைப்பு தாக்கல் செய்துள்ளது.
இதற்கு, தேசிய புள்ளியியல் ஆணையமும், ஒப்புதல் அளித்துள்ளது.

மோடி அரசின் வேலைவாய்ப்பை பெருக்கி விட்டோம் என்ற தொடர்  பொய்களுக்கு எதிராக இந்த அறிக்கை இருந்ததால் பாஜக அரசு இந்த வேலைவாய்ப்பு அறிக்கையை ஓரங்கட்டி வைத்து விட்டது.


ஆனால் ஆய்வு குழுவில் இருந்த இரண்டு உறுப்பினர்கள்  இந்த அறிக்கையை மத்திய அரசு வெளியிடவில்லை.இந்த அறிக்கையே நுண்ணியமாக எடுக்கப்படவில்லை.
எடுத்திருந்தால் வேலைவாய்ப்பின்மை பூதத்தின் உண்மையான உயரத்தைக்காணலாம்.நாட்டின் எதிர்காலத்தைப்பத்திக்கு இந்த அறிக்கையை கணக்கில் எடுத்துக்கொண்டு தீர்வு காணாமல் குப்பையில் போடுவது போல் மத்திய அரசு வைத்துள்ளது தவறு.' என, குற்றம்சாட்டி புள்ளியியல் ஆணையத்தில் இருந்து விளக்கியுள்ளனர்.

அதன் பின்னர்தான் இந்த செய்தி உச்சம் பெற்று  வேலை வாய்ப்பு தொடர்பான இந்த அறிக்கை ஆங்கில நாளிதழ் ஒன்றில்  வெளியாகிள்ளது.

அந்த அறிக்கையின் சுருக்கம்.

"தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலக அறிக்கையின்படி, கடந்த, 45 ஆண்டு களில் இல்லாத வகையில், வேலைவாய்ப்பின்மை யின் அளவு, மிகவும் உச்சமாக, 6.1 சதவீதத்தை எட்டியுள்ளது.

 கடந்த, 2011 - 12ல் இது, 2.2 சதவீதமாக இருந்தது.
கிராமப் பகுதிகளில், 15 - 29 வயதுக்குட்பட் டோரில், வேலைவாய்ப்பு இல்லாத ஆண்களின்எண்ணிக்கை, 2011 - 12ல், 5 சதவீதமாக இருந்தது;
இது, 2017 - 18ல், 17.4 சதவீதமாக உயர்ந்துஉள்ளது.
கிராமங்களில், இளம் பெண்களில், வேலை வாய்ப்பு இல்லா தோரின் எண்ணிக்கை, 2011 - 12ம் ஆண்டில், 4.8 சதவீதமாக இருந்தது;
இது, 2017 - 18ம் ஆண்டில், 13.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நகர் பகுதிகளில், 2017 - 18ல், வேலைவாய்ப்பு இல்லாத ஆண்களின் எண்ணிக்கை, 18.7 சதவீதமாகவும், பெண்களின் எண்ணிக்கை, 27.2 சதவீதமாகவும் உள்ளது."
என்பதுதான்.

, 'நிடி ஆயோக்'கின் துணை தலைவர், ராஜீவ் குமார்  ''ஊட கங்களில் வந்திருக்கும் இந்த அறிக்கை இறுதியானது இல்லை; இது வரைவு அறிக்கை தான்.இறுதி அறிக்கையில் இத்தரவுகள் குறைய வாய்ப்புள்ளது.அல்லது அதிகரிக்கவும் செய்யலாம் '' என தெரிவித்துள்ளார்.
பக்கோடா கருகிடுச்சு ?
'ஆண்டுக்கு, இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம்' என மோடி ஆட்சிக்கு வருகையில் உறுதி அளித்தார்.
அவ்வப்போது பக்கோடா தயாரித்தல் போன்ற வேலைவாய்ப்புகளையும் அறிவித்தார்.
ஆனால் அதை நம் இந்திய மக்கள் கடை பிடித்தார்களா?அல்லது புதிய தொழில் நுணுக்கம் தெரியாமல் பக்கோடாக்கள் கருகி முதலுக்கே மோசமாகி விட்டதா என்று தெரியவில்லை.குருமூர்த்தி,தமிழிசை அல்லது பொன்னார் ஆகியோரே இதற்கு பதில் சொல்ல முடியும்.
 தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் நரேந்திர மோடியின் ஐந்து ஆண்டு கால ஆட்சிக்கான மதிப்பெண்களாகும்.

அந்த அறிக்கையிலேயே 'மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு,சீரற்ற ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்றவைகளின் எதிர்விளைவுதான் இந்த வேலைவாய்ப்பின்மை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அதனாலதான் மோடி அரசு இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்தாமல் பத்திரமாக  வைத்திருந்தது .தேர்தல் வரும் நேரமல்லவா?

பணமதிப்பிழப்பின் காரணமாக பல சிறு தொழில்கள் மூடப்பட்டதுதான் கடந்த, 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.
அது நாடு முழுவதும், 6.5 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பறித்துள்ளது .

இது தேசிய பேரிடர் போன்று செயல்பட வேண்டிய ஒன்று.
வேலைவாய்ப்பின்மைதான் நாட்டில் இளைஞ்சர்களை தவறாக வழி நடத்தும் காரணமாக அமையும் அபாயத்தை 90% கொண்டது.
மத்திய அரசும்,ஆள்வோர்களும் விளம்பரங்களுக்கு செலவிடும் தொகையில் பாதியை செலவிட்டிருந்தாலே பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி இருக்கலாம்.

அரசுத்துறைகளை அம்பானி,அதனை போன்ற கார்பரேட்களுக்கு விற்றன் காரணமாக அங்கு உருவாக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் முடங்கிப்போனது.

குறிப்பாக பல்லாயிரம் கோடிகள் புழங்கும் ரபேல் போர் விமானத்தை அரசு துறை H A L க்கு கொடுக்காமல் மோடி தனது நண்பர் அம்பானிக்கு தரை வர்த்ததால் H A Lதனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க மத்திய அரசை அணுக வேண்டியிருந்தது.

அதுவும் அரசின் உதவி கேட்டல்ல.தனக்கு மத்திய அரசு தராமல் வைத்துள்ள கோடிக்கணக்கான பாக்கித் தொகையைக் கேட்டுதான்.
 H A Lக்கு பலகோடிகள் பாக்கி வைத்திருந்த நிர்மலா சீதாராமன் நிர்வகிக்கும் பாதுகாப்புத்துறைதான் ஆரம்பித்து 15 நாட்களே ஆன அம்பானி கணக்கில்  3000கோடிகளை ரபேல் விமானம் வரும் முன்னே  விமானம்பராமரிப்புக்காக முன்பணமாக செலுத்தி சாதனைப்படைத்துள்ளது.
 
====================================================

ன்று,
பிப்ரவரி-01.

 ஆசியாவின் முதலாவது தபால் மெயில் கோச், கண்டியில் ஆரம்பமாகியது(1832)

டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பமானது(1864)

உலகின் மிகப் பெரிய ரயில்நிலையம் நியூயார்க்கில் திறக்கப்பட்டது(1913)

தமிழ் நாடகத்துறை முன்னோடி பம்மல் சம்பந்த முதலியார் இறந்த தினம்(1964)
====================================================

“பிரதமர் நேர்மையாக இருந்தால் மோசடியாளர்கள் யாரும் நாட்டை விட்டு ஓடமாட்டார்கள்” அருண் ஜெட்லி 

உண்மையை சொல்ல தைரியம் வேண்டும்.நீங்கள் நிதின் காட்காரி  போலவே தைரியமானவர்தான்.