இது உண்மையா?

மம்தாவின்   குயுக்தி? 
 கவனத்தை ஈர்ப்பது அரசியலுக்குத் தேவையான ஒரு உத்தி எனில், எதிரேயிருப்பவர் மீது விழும் வெளிச்சத்தை லாவகமாக மறைக்கும் வித்தையும் மிக முக்கியமானது தான்.
காலம்காலமாகத் தொடரும் கட்சி மோதல்களுக்கு நடுவே, இப்படி ஒன்று மற்றொன்றின் கவனத்தைக் குலைப்பதும் அழிப்பதும் நிகழ்ந்தே வருகிறது.

அந்த வகையில்தான் மம்தாவின் சமீபத்திய போராட்டம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
 இது உண்மையா?

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என்ற நிலையே சுதந்திரமடைந்த காலகட்டம் முதல் 2010ஆம் ஆண்டு வரை நீடித்து வந்தது.
 அந்த நிலையை மாற்றியமைத்தவர் தற்போதைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. 1970களில் காங்கிரஸ் கட்சியில் இளம்பெண்ணான தன்னை இணைத்துக்கொண்ட மம்தா, 1997இல் அகில இந்திய திருணமூல் காங்கிரஸ் கட்சியை நிறுவினார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார்.
தெஹல்கா பத்திரிகை நடத்திய ‘ஆபரேஷன் வெஸ்ட் எண்ட்’ எனும் முயற்சியினால், பாஜகவைச் சேர்ந்த பங்காரு லட்சுமணன் உட்படப் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதன் எதிரொலியாகக் கூட்டணியில் இருந்து பிரிந்து வந்தார் மம்தா. அதன்பின் காங்கிரஸ் கட்சியோடு இணைந்திருந்தவர், மீண்டும் பாஜக பக்கம் வந்தார்.
அதன்பின் மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தார்.

2009 மக்களவைத் தேர்தலில் திருணமூல் காங்கிரஸுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வரை இந்த நிலை தொடர்ந்தது. 2004 தேர்தலில் 1 இடம் மட்டுமே பெற்ற அக்கட்சி, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு 19 இடங்களைப் பிடித்தது. திருணமூல் காங்கிரஸின் எழுச்சியை வெளிப்படையாக்கியது அந்த தேர்தல் முடிவு. 2011 சட்டமன்றத் தேர்தலில் 184 தொகுதிகளைக் கைப்பற்றி மம்தா பானர்ஜி முதலமைச்சர் ஆனார் என்பதெல்லாம் வெறும் தகவல்கள் மட்டுமே.
2016இல் தேர்தல் நடைபெற்ற 294 தொகுதிகளில் 211இல் வெற்றி பெற்றது திருணமூல் காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் 44, மார்க்சிஸ்ட் 28, பாஜக 6 இடங்களைப் பிடித்தன. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை திருணமூல் 44.91 சதவிகிதமும் காங்கிரஸ் கட்சி 12.25 சதவிகிதமும், பாஜக 10.16 சதவிகிதமும் பெற்றன.
3 முதல் 6 சதவிகித வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருந்தன இக்கட்சிகள். அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 26.36. ஐந்தாண்டுகளில் இக்கட்சி 10.9 சதவிகித வாக்குகளை இழந்திருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் வாக்குச் சரிவை அப்படியே திருணமூல் காங்கிரஸும், பாஜகவும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டன.
இந்த புள்ளியை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
இது தான், கடந்த ஆண்டு மேற்குவங்கத்தில் நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தல் களேபரங்களுக்கும் காரணமானது. வேட்பாளர் போட்டி இல்லாமல் தேர்வு பெற்றது போக மீதமுள்ள இடங்களிலும் தங்களைப் போட்டியிடாமல் திருணமூல் தொண்டர்கள்

தடுத்ததாகப் புகார் தெரிவித்தனர் பாஜகவினர். அப்படி ஏதும் நடக்கவில்லையே என்றது திருணமூல் கட்சி. கொல்கத்தா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்றபிறகும் கூட, உள்ளாட்சித் தேர்தலில் திருணமூலின் ஆதிக்கத்தைப் பாஜகவினால் குறைக்க முடியவில்லை.
ஆனாலும், உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது அக்கட்சி. காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்டும் மூன்றாவது, நான்காவது இடங்களுக்குத் தள்ளப்பட்டன. பாஜக, திருணமூல் தொண்டர்கள் ஊடகங்களில் நிரம்பி வழிய, வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர் மற்ற கட்சியினர்.

நேரடியாகச் சொல்ல வேண்டுமென்றால், திருணமூல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே பாஜகவின் செல்வாக்கு மேற்கு வங்கத்தில் அதிகமாகி வருகிறது. எமர்ஜென்சிக்குப் பிறகு காங்கிரஸ் வசமிருந்த ஆட்சியைத் தங்கள் கைகளுக்குக் கொண்டுவந்தது மார்க்சிஸ்ட் கட்சி. அதன்பின்னர் ஜோதிபாசுவே நிரந்தர முதல்வர் எனும் நிலை 2001 வரை தொடர்ந்தது.


அதன்பின் வந்த 10 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தின் அரசியல் சூழல் மிகமோசமானதாகவே மற்ற மாநிலத்தினரால் பார்க்கப்பட்டது.
 நந்திகிராம் போராட்டமானது வேறொரு பார்வையை மார்க்சிஸ்ட் ஆட்சி மீது செலுத்தியது. இந்த காலகட்டத்தில் இருந்த மார்க்சிஸ்ட் வெர்சஸ் காங்கிரஸ் நிலைமையை, வெறும் ஐந்தே ஆண்டுகளில் திருணமூல் வெர்சஸ் பாஜக என்றாக்கிவிட்டார் மம்தா.
இதனை உருவாக்குவதற்கு வழி வகுத்தது சாரதா சிட்பண்ட் ஊழல் குற்றச்சாட்டு தான்.

2006ஆம் ஆண்டு 239 தனியார் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து உருவாக்கிய சாரதா சிட்பண்ட் நிறுவனம் சுமார் 17 லட்சம் பேரிடம் இருந்து 4,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. 2013ஆம் ஆண்டு மூடப்பட்ட இந்நிறுவனமானது, மேற்கு வங்கத்தின் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், இடைத்தரகர்கள் என்று நீண்டு வங்கதேசத்தில் இருந்த சில இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் வரை, இதில் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது.
இதேபோல ரோஸ்வேலி ஊழல் குற்றச்சாட்டிலும் திருணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்புபடுத்தப்பட்டது.
இதனை அம்பலப்படுத்தும் வேலையைப் பாய்ந்து பரபரத்துச் செய்தது மேற்கு வங்க பாஜக. அப்போது திருணமூல் கட்சியில் அங்கம் வகித்த முகுல் ராய், ஹேமந்த சர்மா போன்ற முக்கியத் தலைகள் இப்போது பாஜகவில் ஐக்கியமாகிவிட்டன. அத்துடன் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் வலுவிழந்துவிட்டன. இந்த இரு வழக்குகளையும் விசாரித்த மாநில அரசின் சிறப்பு விசாரணைக் குழுவுக்குத் தலைவராக இருந்தவர் தற்போதைய கொல்கத்தா நகர ஆணையர் ராஜிவ் குமார்.

சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சாரதா சிட்பண்ட் குறித்து மேடைப்போர்களே தொடர்ந்துவந்த நிலையில், கடந்த பிப்ரவரி 3ஆம் தேதியன்று மத்திய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தார் மம்தா பானர்ஜி.
கொல்கத்தா ஆணையர் ராஜிவ்குமாரை மாநில அரசின் அனுமதியின்றி சிபிஐ அதிகாரிகள் எவ்வாறு விசாரணைக்கு அழைத்துச் செல்லலாம் என்று கோபப்பட்டார்.
இந்திய அரசியலமைப்பைக் காப்போம் என்ற பெயரில் தர்ணா நடத்தினார். தேசிய மாநாட்டுக் கட்சியின் முன்னாள் தலைவர் பரூக் அப்துல்லா தொடங்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரை பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.


 மூன்று நாட்கள் தொடர்ந்த மம்தாவின் போராட்டத்தைப் பழரசம் கொடுத்து முடித்து வைத்தவர் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு. இடைப்பட்ட நாட்களில் தர்ணாவில் ஈடுபட்டவாறே துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது, கோப்புகளை சரிபார்ப்பது என்று போராட்டக்களத்தையே திறந்தவெளி அலுவலகமாக்கினார் மம்தா. இதனால் கிடைத்த பயன், தேசிய அளவில் ஊடகங்களில் மம்தாவின் முகம் திரும்பத் திரும்ப மக்கள் மனதில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்த வரியை அடித்தளமாக வைத்தே, சிபிஐக்கு எதிரான மம்தாவின் போராட்டம் திட்டமிட்ட சதிச்செயல் என்று குற்றம்சாட்டியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
 பிப்ரவரி 4ஆம் தேதி அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், 5 ஆண்டுகளாக சாரதா ஊழல் பற்றிப் பேசிவந்த பாஜக இப்போது நடவடிக்கையில் இறங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பியது.
 திருணமூலும் பாஜகவும் இணைந்து இந்த வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டியது. அது மட்டுமல்லாமல், பிப்ரவரி 3ஆம் தேதியன்று கொல்கத்தா படை அணிவகுப்பு மைதானத்தில் நடந்த இடதுசாரிக் கட்சிகளின் பேரணியை இருட்டடிப்பு செய்யவே மம்தா சிபிஐக்கு எதிரான போராட்ட நாடகத்தை நடத்தினார் என்று குற்றம்சாட்டியது.
இதனை வெளிப்படையாகச் செய்தியாளர்களிடம் முன்வைத்தார் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி.

மம்தாவின் போராட்டத்தை வரவேற்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூட, ஒரு வார்த்தை எக்ஸ்ட்ராவாக பேசவில்லை.
அடுத்த நாளே, டெல்லியில் சீதாராம் யெச்சூரியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் ராகுல். அந்த சந்திப்புக்குப் பிறகு, மேற்குவங்கத்தில் உள்ள அரசியல் மற்றும் சமூக நிலைமை குறித்துப் பேசினோம் என்றார் யெச்சூரி.

மம்தா – பாஜக மோதலைப் பூதாகரப்படுத்துவதனால் காங்கிரஸும் மார்க்சிஸ்டும் அடையப்போகும் இழப்புகள் பற்றியும் இருவரும் பேசியிருக்கக் கூடும்.
அல்லது 2016 சட்டமன்றத் தேர்தல் போலல்லாமல் இம்முறை மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்டும் காங்கிரஸும் இணைந்து போட்டியிடுவது குறித்து ஆலோசித்திருக்கலாம்.

அரசியலில் எதுவும் ஆச்சர்யமில்லை தனித்துக் காட்டிக்கொள்வதன் மூலமாக பாஜகவும் திருணமூலும் நேருக்கு நேர் நிற்கும் பாவனையைத் தொடர்ந்து வருகின்றன. அதனை எதிர்கொள்ள, தங்கள் கொள்கையைக் கைவிட்டு மேற்கு வங்கத்திலும் கூட மார்க்சிஸ்ட்டும் காங்கிரஸும் ஓரணியில் இணையலாம்.
இதுவரையில் நிகழாத ஒன்று என்ற அடிப்படையில், அது மேற்குவங்க மக்கள் மத்தியில் இரு கட்சிகளின் மீதான கவனத்தை அதிகப்படுத்தலாம்.

சிபிஐக்கு எதிரான மம்தாவின் போராட்டம் யுக்தியா குயுக்தியா என்று விவாதிப்பவர்கள், இடதுசாரி பேரணி குறித்த செய்திகள் ஊடகங்களில் முக்கியத்துவம் பெறாதது ஏன் என்ற கேள்விக்கும் தாராளமாகப் பதில் தேடலாம்!
 -உதய் பாடகலிங்கம்
நன்றி:மின்னம்பலம்.      

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
kanagaraj @cpmkanagaraj
யாரந்த தேசத்துரோகி? ஊழல் நடந்தா அபராதம் விதிக்கப்படும் என்கிற ஷரத்தை ரஃபேல் ஒப்பந்தத்திலிருந்து நீக்கியது தேசதுரோகமில்லையா?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
  ’’மாலத்தீவு மற்றும் கன்னியாகுமரி கடல் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.


 இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 14-ம் தேதி வரையிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.


காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வை பொறுத்து மழை வலுப்பெறுமா?

என்பது தெரியவரும்.

                                                                                                                     -சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்.
====================================================
ன்று,
பிப்ரவரி-11.

ஜப்பான் ஒரே நாடாக உருவானது(கிமு 660)

கமரூன் இளைஞர் தினம்

பொஸ்னியா விடுதலை தினம்


நார்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது(1814)

====================================================



 
'எவனோ திருப்பூரை குட்டி ஜப்பான்னு சொல்லியிருக்கான்... அந்தாளும் ஏதோ வெளிநாடுன்னு நினைச்சி பொட்டி படுக்கைலாம் எடுத்துட்டு வந்துருக்கான்...,
வந்த பெறகுதான் கருப்புக்கொடியை பார்த்து தமிழ்நாடுன்னு தெரிஞ்சு கட்சிக்காரங்களை திட்டிட்டு போயிருக்கான்."
தாமரைய  நம்பி செருப்ப வீசி மக்கள்கிட்டே தர்ம அடி வாங்கினதுதான் அந்த பொம்பளைக்கு மிச்சம்."

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?