வெளிச்சத்திற்கு வராத கூட்டாளி!


ரபேல் ஊழலை மூடி மறைக்க மோடி அரசு கடைசி முயற்சி!
 சிஏஜியும் சிக்கிக் கொண்டது.
"ரபேல் பேரத்தில் ரிலையன்ஸ் கம்பெனிக்கு ஆதரவாக நரேந்திர மோடி அரசு நடத்திய வரலாறு காணாத ஊழலை மறைக்கும் நோக்கத்துடன் மத்தியதலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி), அரசியல் சாசன அமைப்பு என்பதை மறைந்து முற்றிலும் அரசின் கைப்பாவை போல செயல்பட்டு, அரசுக்கு ஆதரவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் புதனன்று தாக்கல் செய்துள்ளது."

இந்த சிஏஜி அறிக்கையில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட11 பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அடங்கிய விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
முந்தைய அரசு2007ஆம் ஆண்டு 126 ரபேல் போர் விமானங்களைவாங்க போட்ட ஒப்பந்தத்தைக் காட்டிலும், 2016ஆம்ஆண்டு போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் 36 ரபேல்விமானங்களுக்கான செலவு 2.86 விழுக்காடு குறைவதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல முந்தைய ஒப்பந்தத்தைக் காட்டிலும் குறுகிய காலத்தில் போர் விமானங்களைப் பெறவும்புதிய ஒப்பந்தம் வழிவகை செய்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமையுடன் முடிவடைந்தது. பட்ஜெட் கூட்டத்தொடர் மட்டுமல்ல, நாட்டின் 16வது மக்களவை யின் கடைசிக் கூட்டமும் நிறைவு பெற்றது.
நிறைவுநாளான புதனன்று மக்களவையில், முறைப்படுத்தப்படாத சேமிப்பு திட்ட தடைச் சட்ட மசோதா மற்றும் ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவுச் சின்ன திருத்தச் சட்ட மசோதா ஆகியவை நிறைவேற்றப் பட்டன.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி உள்பட உறுப்பினர்கள் பிரியாவிடை அளித்து உரை யாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.கருணாகரன் உரையாற்றினார்.
சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிறைவுரையாற்றி 16வது மக்களவையை முடித்து வைத்தார்.

இதனிடையேதான் ரபேல் பேரம் தொடர்பான சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கை மோசடியானது என்பதை அறிந்த உடனே, இது போலியான அறிக்கை என்று கூறி எதிர்க்கட்சிகள் தரப்பில் மாநிலங்களவையில் நிலவிய கடுமையான அமளியால் நண்பகல் 1 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல மக்களவையும் காலையில் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சிகளின் அமளியால் மதியம் 12 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
இதன்பின்னர் நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அலுவலகத்தையும் துஷ்பிரயோகம் செய்யும் விதமாக முற்றிலும் தவறாக பயன்படுத்தி, முற்றிலும் குழப்பத்தையும் மோசடியையும் அரங்கேற்றும் நோக்கத்தையும் நிறைவேற்றும் விதமாக ஓர் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டித்துள்ளது.

நாட்டின் விமானப்படைக்கு மிக அதிக மூலதனத்துடன் விமானங்களை வாங்குவது தொடர்பாக, மத்திய அரசின் கணக்குத் தணிக்கைத் தலைவரால் பொதுத்தேர்தலுக்கு முன்பு, மக்களவையில் புதனன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

 இது, மேற்படி பேரம் தொடர்பான விடைகளை அளிப்பதற்குப் பதிலாக மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த அறிக்கையானது, இதில் சம்பந்தப் பட்டுள்ள ‘வெளிச்சத்திற்கு வராத கூட்டாளி’ தொடர்பான பிரச்சனையை கண்டுகொள்ளவே இல்லை.
இதில் ‘வெளிச்சத்திற்கு வராத கூட்டாளி’ ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம்தான்.
அதே போன்று இது தொடர்பாக முன்னதாக 108 போர் விமானங்களை உற்பத்தி செய்திட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தை கூட்டாண்மை நிறுவனம் என்ற இடத்தில் இருந்து எப்படி நீக்கப்பட்டது என்பது குறித்தும் எதுவும் கூறப்படவில்லை.
இது தொடர்பாக தனியே கையாளப்படும் என்று கதையளந்திருக்கிறார்கள்.

சிஏஜி-யின் அறிக்கையானது, 2016இல் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய ரபேல் ஒப்பந்தம் அதற்கு முந்தைய 2007இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தைவிட 2.86 சதவீதம் செலவினம் குறைவு என்று கூறுகிறது. 

 எனினும், 2007 ஒப்பந்தத்தில், 126 விமானங்களுக் கான வடிவம் மற்றும் வளர்ச்சி தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு செலவு செய்திட இந்தியஅரசாங்கம் ஒப்பந்தம் செய்திருந்தது. 

ஆனால், இதுதொடர்பாக அரசாங்கம் இதுநாள்வரையில் மேற்கொண்டுவந்த அனைத்து நெறிமுறைகளை யும் நடைமுறைகளையும் மோடி அரசாங்கமானது மீறியதுடன், எவ்விதமான காரணமுமின்றி 126 போர் விமானங்களை வாங்குவதற்குப் பதிலாக 36 விமானங்கள் என்று குறைத்தது.

 மேலும் ஒவ்வொரு விமானத்தின் விலையும் 41 சதவீதம் உயர்த்தப்பட்டது.

 மத்திய கணக்குத் தணிக்கைத் தலைவர், ஒரு தணிக்கையாளர் என்ற முறையில், இந்தப் பிரச்சனை குறித்து தன் கருத்துக்களைக் கூறியிருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்திடவில்லை.

புதிய ஒப்பந்தத்தில், வங்கி உத்தரவாதம் இல்லை என்பதை சிஏஜி ஒப்புக்கொண்டுள்ள அதேசமயத்தில், இது டசால்ட் ஏவியேசன் நிறு வனத்திற்குத்தான் ஆதாயமே தவிர, இந்திய அரசாங்கத்திற்குக் கிடையாது என்கிறார்.

இது தொடர்பாக இன்றைய தி இந்து நாளிதழ், இவ்வாறுவங்கி உத்தரவாதம் இல்லாததன் காரணமாக இந்திய அரசாங்கத்திற்கு சுமார் 574 மில்லியன்ஈரோக்கள் அளவிற்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்ப தாக இந்திய பேச்சுவார்த்தைக் குழு கணக்கிட்டி ருக்கிறது என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.

ரபேல் தொடர்பாக சிஏஜி அளித்துள்ள கணக்கு வழக்குகள் முழுமையான விவரங்களுடன் இல்லை.
 அறிக்கை, சதவீத அடிப்படையிலேயே அனைத்துகுறித்தும் பேசுகிறது.
 இது வெளிப்படைத்தன்மை யற்றதாக இருப்பதுடன், வழக்கமான தணிக்கை அறிக்கைக்கு விரோதமான ஒன்றாகவும் இருக்கிறது.

மோடி அரசாங்கத்தின் தரப்பில் அடிக்கடிமுன்வைக்கப்படும் வாதங்களில் ஒன்று, போர் விமானங்கள் உடனடியாகத் தேவைப்பட்டதாகவும், எனவே புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறுவதாகும்.
ஆனாலும் இந்த அறிக்கையானது இந்த 36 விமானங்களில் முதலில் 18 விமானங்கள் 36 மாதங்களுக்கும் 53 மாதங்களுக்கும் இடையே வரும் என்றும், மீதமுள்ளவை 67ஆவது மாத வாக்கில் வரும் என்றும் கூறுகிறது.

2007 ஒப்பந்தத்தில், மீதமுள்ள 108 போர் விமா னங்களை உற்பத்தி செய்வதற்கு, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு தொழில்நுட்பக் கூறுகளை மாற்றம் செய்வதற்கு வகை செய்யப்பட்டிருந்தது.

 ஆனால் மோடி அரசாங்கத்தால் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் இதற்கு வழியில்லை. 
இதன் காரணமாக, விமானங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்திருக்க வேண்டும். ஆனால் நடந்திருப்பதோ அதற்கு நேர்மாறாகும்.எனவே, மோடி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் அதிக விலை பிடிக்கக்கூடியதே யாகும். 
மேலும் இந்த ஒப்பந்தத்த்தில் ஊழல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வரிகளை மோடி அரசு நீக்கியுள்ளது.
இதுதான் மோடி யின் பாஜக ஊழலை ஒழிக்கும் முறை.
 

அதேபோல் அது இந்திய விமானப் படை கேட்டுக்கொண்டதற்கிணங்க அவசரமாகவும் விரைவாகவும் விமானங்களை வழங்கிடவும் இல்லை. எனவே, மோடி அரசாங்கத்தால் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் நம் நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்கு ஆபத்தை விளைவித்திருக் கிறது.

தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ளதுபடி, இந்திய பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்களால் அளிக்கப்பட்டுள்ள எட்டு பக்க அளவிலான கருத்துவேறுபாட்டுக் குறிப்புகள் குறித்து அரசாங்கத்தின் தரப்பில் பதிலளிக்கப்பட வேண்டியது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வலியுறுத்துகிறது.

மேலும், அரசாங்கமானது உச்சநீதிமன்றத்திற்கு அனைத்து விவரங்களையும் அளிக்காததுபோலவே, சிஏஜி-க்கும் அளிக்காமல் அவரையும் இருட்டிலேயே வைத்திருந்ததற்கான காரணத்தையும் விளக்கிட வேண்டும்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாகவும் இதில் சம்பந்தப்பட்டுள்ள கூட்டுக்களவாணி முதலாளித்துவம் தொடர்பாகவும் எழுந்துள்ள ஊழல் தொடர்பான எந்தவொரு கேள்விக்கும் சிஏஜி பதிலளிக்க வில்லை.
இதற்கான விடைகளை ஒரு பொருத்த மான சுயேச்சையான விசாரணை மன்றத்தால் மட்டுமே அளிக்கப்பட முடியும்.சிஏஜி அறிக்கையானது முழுமையாக குழப்பங் களுடன் இருக்கிறது.
மோடி அரசாங்கத்தின்கீழ் அரசமைப்புச் சட்ட நிறுவனங்களின் சுதந்திரமும் சுயாட்சியும் எந்த அளவிற்குத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு இந்த சிஏஜியின் அறிக்கை மற்றுமொரு சான்றாக அமைந்திருக்கிறது.
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
படேல் சிலைக்கு ரூ. 3 ஆயிரம் கோடி-
ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு ஒரு ரூபாய் கூட இல்லையா?
1919-ஆம் ஆண்டு, விடுதலைப் போராட்டத்தின்போது, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ளஜாலியன் வாலா பாக்-கில், சுமார்3 ஆயிரம் பேர், காக்கைக் குருவிகளைப் போல சுடப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் பலியானவர்கள் என்று பிரிட்டிஷ் அரசு தெரிவித்த கணக்கே, 379 பேர். இவர்கள் தவிர2 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர்.
இந்த கொத்துப் படுகொலையின்போது, “சுட்டேன்.. சுட்டேன்... குண்டு தீரும் வரை சுட்டேன்” என்றுபிரிட்டிஷ் அதிகாரி ஜெனரல் டயர்கொக்கரித்ததும், அந்த குண்டுகளுக்கு அஞ்சாமல் 3 ஆயிரம் பேர்நெஞ்சுரம் காட்டியதும், வரலாற் றில் என்றும் மறக்க முடியாத சம்பவமாகும்.

நாடு விடுதலை அடைந்ததற்குப்பிறகு, ஜாலியன் வாலா பாக்-கில் நினைவிடம் அமைக்கப்பட்டு, அங்கு 1919-ஆம் ஆண்டின் உயிர்த்தியாகத்தை விளக்கும் வகையில் சுமார் 52 நிமிட ஒளி - ஒலி காட்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில்தான், மோடி ஆட்சியில் அண்மையில் இந்த ஒலி-ஒளி காட்சி நிறுத்தப்பட்டு, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

மத்திய அரசு போதியநிதி ஒதுக்கீட்டை செய்யாததால், ஒலி- ஒளிக் காட்சி நிறுத்தப் பட்டுள்ளதாக செய்திகளும் வெளியாகியுள்ளன.இதனை தற்போது வெளிச்சத் திற்கு கொண்டுவந்துள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.ராஜேஷ், மோடி அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 “வல்லபாய் படேலுக்கு ரூ. 3 ஆயிரம் கோடியில் சிலை வைக்கும்மோடி அரசு, ஜாலியன் வாலாபாக்கில் உயிர் நீத்த 3 ஆயிரம் தியாகிகளுக்கு ஒரு ரூபாய் கூடவா செலவழிக்க முடியவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 பிரதமர் மோடி, போதிய நிதியை ஒதுக்கி, ஒலி - ஒளிக் காட்சிதொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

====================================================
ன்று,

பிப்ரவரி-14.


ஐ.பி.எம்., நிறுவனம் அமைக்கப்பட்டது(1924)


ஈ.என்.ஐ.ஏ.சி., என்ற முதல் தலைமுறை கணினி அறிமுகமானது(1946)


103வது தனிமமான லோரென்சியம் கண்டுபிடிக்கப்பட்டது(1961)


ஆஸ்திரேலிய பவுண்டிற்கு பதிலாக ஆஸ்திரேலிய டாலர் அறிமுகப்படுத்தப்பட்டது(1966)

 இயக்குனர் பாலுமகேந்திரா  நினைவுதினம் (2013).
====================================================
ஊழல் வளர்ச்சியின் நாயகன்...!

வளர்ச்சி நாயகன் என வர்ணிக்கப்பட்ட பிரதமர் மோடி, ஊழலை மட்டும் வளர்ச்சியடைய செய்வதில் புதிய மைல் கல்லை தொட்டிருக்கிறார்.
 இதுவரை இந்தியாவில் எந்த பிரதமரும் செய்யாத வகையில் ஊழல் விதிகளையே ஒழித்து ஊழல் வளர்ச்சியில் புதிய உச்சத்தை தொட வைத்த பெருமை அவரையே சாரும்.லலித் மோடி துவங்கி ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் வரை ஒவ்வொரு ஊழலும், ஒவ்வொரு ரகமானது.
அதன் வளர்ச்சி விகிதமும் அளக்க முடியாதது. பொதுத்துறை வங்கியில்ரூ. 30 ஆயிரம் கோடி கடன் வாங்கி, அதனை ரூ.5ஆயிரம் கோடியை கொண்டு அடைப்பது எப்படி என புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்தியதும்நம் பிரதமர் நரேந்திரமோடிதான்.
 ரிலையன்ஸ் குழுமத்தின் அலோக் டெக்ஸ்டைல் நிறுவனம் 15 வங்கிகளில் ரூ. 30ஆயிரம் கோடி கடன் பெற்றிருந்தது.
ஆனால்அதனை கட்டாமல் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக கூறி, 5 ஆயிரம் கோடி மட்டுமே கட்ட முடியும் என ஏமாற்ற முயன்றது. இதனைதேசிய நிறுவன சட்ட வாரியம் கடன் கொடுத்தவாங்கி அதிகாரிகளிடம் வாக்கெடுப்பிற்குவிட்டது.
ஓட்டெடுப்பில் 72 சதவிகித ஆதரவு மட்டுமே கிட்டியது. ஓட்டெடுப்பில் 75 சதவிகிதம் ஆதரவு இருந்தால் 5 ஆயிரம் கோடியைஏற்றுக் கொண்டு 30 கோடியை தள்ளுபடி செய்யலாம் என்பது விதி. இதனால் ஏமாற்றம் அடைந்தரிலையன்ஸ் நிறுவனம் மோடியின் உதவியை நாடியது.
இதனை தொடர்ந்து மோடி அரசு 72 சதவிகிதம் ஆதரவு தேவை என்ற விதியை , 66 சதவிகிதம் இருந்தாலே போதும் என்று விதியையே மாற்றி அமைத்தது.
 அதன் மூலம் அலோக் டெக்ஸ்டைல் நிறுவனம் மக்கள் பணம் ரூ. 25 ஆயிரம் கோடியை வாரி சுருட்டி விழுங்கியது.இப்படி ஊழல் செய்ய புதிய திசைவழியை உருவாக்கி ஊழல் வல்லுநர் என்ற பெருமையும் நம்பிரதமர் மோடிக்கே கிடைத்திருக்கிறது.
ஊழலுக்கு எந்த துறையும் விதிவிலக்கல்ல என்ற ரீதியில் ராணுவத்தையும் விட்டுவைக்கவில்லை.
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தனக்கு நெருங்கிய ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல் நிறுவனத்தை மோடி அரசு நிராகரித்தது.
அதற்காக 8 முக்கிய விதிகளை மாற்றியதோடு, அதிலிருந்த ஊழலுக்கு எதிரான விதியையும் நீக்கியிருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.
இந்த மோசடிமூலம் ரூ.30ஆயிரம் கோடி மக்கள் பணத்தை தூக்கி ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பிரதமர் கொடுத்திருக்கிறார். இப்படி கடந்த 5 ஆண்டுகளாக மோடி அரசு ஊழல்களை சட்டப்பூர்வமாக மாற்றி நிறுவனமயப்படுத்தியிருக்கிறது.
நீதிமன்றம் பல முறைதலையிட்ட போதும் லோக்பால் சட்டத்தை நடைமுறைப்படுத்த விடாமல் பாஜக அரசுபார்த்துக் கொண்டது. ஆட்சி நிறைவடையும் தருவாயில் மோடி வடிக்கும் போலிக்கண்ணீருக்கு இந்திய மக்கள் ஒரு போதும் மயங்கமாட்டார்கள்.
ஒரு வேளை லோக்பால் நியாயமான முறையில் அமலானால் முதல் குற்றவாளியாக மோடியே இருப்பார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?