திங்கள், 18 பிப்ரவரி, 2019

தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா?

இக்கேள்வியைக் கேட்டது யாரோ ஒரு அரசியல்வாதி அல்ல. கேள்வியை  உயர்நீதிமன்ற மதுரை கிளை நிதிபதிதான் ஆதங்கத்தோடு எழுப்பியுள்ளார்.

இந்தக் கேள்வி தமிழக மக்கள் மத்தியில் அவ்வப்போது ஆதங்கமாக எழத்தான் செய்கிறது. ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வு முடிவின் அறிக்கையை 16 ஆண்டுகளான பின்பும் தாக்கல் செய்ய தாமதம் ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் அகழாய்வு நடத்தப்பட்டு தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நாட்டு அரசு அதை தூக்கி வைத்துக் கொண்டாடும்.
ஆனால் மத்திய தொல்லியல் துறையோ பாரபட்சமாக நடந்துகொள்கிறது.

இதுதொடர்பாக நீதிமன்றம்வெளியிட்ட உத்தரவுகளையும் மத்திய தொல்லியல்துறை மதிக்கவில்லை என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொல்லியல்துறையின் அனுமதியோடு 2004ஆம் ஆண்டு முதல் ஆதிச்சநல்லூரில் தொடர் ஆய்வுகள் நடத்தப் பட்டன.
நான்கு தொகுதிகளாக இருக்கும் இந்த ஆய்வறிக்கை திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூரில் தமிழர்களின் கடல் கடந்த வாணிபத் தொடர்புகள், திருமண முறைகள் பண்பாடு குறித்த முக்கியமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ஆதிச்சநல்லூர் நாகரிகம் சிந்துச் சமவெளி நாகரீகத்திற்கு முந்தையதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் அவதானிக்கின்றனர்.
மண்பாண்டங்கள், ஈட்டி, கோடாரி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
 இங்கு கிடைத்த பொருள்களின் காலத் தொன்மை குறித்து உரிய அறிவியல்பூர்வஆய்வுக்கு உட்படுத்தக்கூட மத்திய தொல்லியல் துறை தயாராக இல்லை.
கீழடி ஆய்வை மண்மூடி மறைக்க மோடி தலைமையிலான மத்திய பாஜக கூட்டணி மேற்கொண்ட சதிவேலைகள் ஒரு வரலாற்று சோகமாகும்.

அமர்நாத் ராமகிருஷ்ணன் என்ற அதிகாரியை மாற்றியது மட்டுமல்ல, அவரது ஆய்வு முடிவுகளை அறிக்கையாக எழுதக்கூட அனுமதிக்கவில்லை.

இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலேயே இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கிடைத்துக்கொண்டிருந்த நிலையில் மத்திய தொல்லியல்துறை இனி ஆய்வு செய்ய ஒன்று மில்லை என்று கூறி நடையைக் கட்டிவிட்டது.

இந்த விசயத்திலும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் துச்சமாக புறந்தள்ளப்பட்டன.
மறுபுறத்தில் மோடியின் குஜராத் மாநிலத்தில்மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் குறிப்பிடத் தக்க எதுவும் கிடைக்காத நிலையிலும் தொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒதுக்கப்படுகின்றன.

ஆதிச்சநல்லூர், பூம்புகார், கொடுமணல், கீழடி ,சிவகளை என தமிழக அகழாய்வு தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நிலையில்தான் உயர்நீதிமன்றம் வேதனையை வெளிப்படுத்தி யுள்ளது.

 தமிழர்களின் தொல் வரலாறு குறித்த சாட்சியங்கள் இந்தியாவுக்கே பெருமை என்று கருதும் மனநிலை மத்திய ஆட்சியாளர்களுக்கு வரும்போதுதான் ஆதிச்சநல்லூர்களின் உண்மை வரலாறு உலகுக்கு தெரியும்.
 கீழடி அகழ்வராய்ச்சி க்கான பட முடிவு
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
Prakash JP பெறுநர் facebook DMK

//முக்கியமான ட்விஸ்ட் கடைசில இருக்கு..//
எல்லையைக் காக்கிற ராணுவம் உங்க கையில் இருக்கு.
 எல்லைப் பாதுகாப்புப் படை உங்க கையில் இருக்கு..
 பாரதப் பிரதமர் அவர்களே... பின்னே எப்படி வெடிமருந்து தீவிரவாதிகள் கையில் கிடைக்குது?

பொருளாதார அதிகாரம் அரசாங்கத்திடம் இருக்கு...ரிசர்வ் பேங்க் உங்ககிட்டே இருக்கு பின்னே எப்படி தீவிரவாதிகள் கைக்குப் பணம் போகுதுன்னு உங்களால பார்க்க முடியாதா?

சகல அதிகாரங்களும் உங்ககிட்டேதான் இருக்கு..
 எந்த மாநிலமும் குறுக்க வர முடியாது.
 அப்புறமும் உங்களால் ஏன் தடுக்க முடியலே?

ராணுவம், பார்டர் செக்யூரிட்டி போர்ஸ், எல்லா அதிகாரங்களும் உங்ககிட்டேதான் இருக்கு. 
கம்யூனிகேஷன் சம்பந்தமான அனைத்து அதிகாரங்களும் உங்ககிட்டே தானே இருக்கு. 

யார் போன் பேசினாலும், யார் ஈமெயில் அனுப்பினாலும் அதையெல்லாம் புகுந்து பாக்கற அதிகாரம் உங்ககிட்டேதான் இருக்கு. தீவிரவாதிகள் மத்தியில் என்னென்ன மாதிரியான
கம்யூனிகேஷன் போயிட்டிருக்குன்னு உங்களால் பார்க்க முடியும்..
 அதை பார்க்க வழி இருந்தும் இதை ஏன் தடுக்கலே பிரதமர் அவர்களே...

திடீர் திருப்பம்.:
இவை தற்போது பிரதமர் மோடியைப்பார்த்து கேட்கப்பட்ட கேள்விகள் அல்ல.. 
இதெல்லாம் முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் 2013 ஆம் கேட்டகப்பட்டவை.. 
கேட்டவர் சாட்சாத் நம்ம மஹான் மோடிஜி அவர்கள்.
“நம்பள் கீ வந்தா ரத்தம் ஹே”...
-______
-வெங்கடேஷ் ஆறுமுகம்


====================================================
ன்று,
பிப்ரவரி-18.

  இந்தியாவின் முதலாவது  விமான அஞ்சல் சேவை அலகாபாத்தில் ஆரம்பமானது(1911)

 முதல் முறையாக ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது(1929)


காம்பியா விடுதலை தினம்(1965)


அணுகுண்டை கண்டுபிடித்த ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் இறந்த தினம்(1967)
 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதோடு, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது.
====================================================