இதுதான் தேசபக்தி?

"ராணுவ நடவடிக்கையில் பங்காற்றியவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாது" என்பது பொது மரபு.அதன் மூலம் அவர்களின் த்யானிமனித வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் எதிரிகளால் வரலாம் என்பதால்.

ஆனால் (இந்திய) மோடி அரசு படத்துடன் விபரங்களை வெளியிடுகிறது.

இந்திய ராணுவ நடவடிக்கைகளை மோடி, பாஜகவுக்கு வாக்கு சேகரிக்க பயன் படுத்துவதால் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு,நலனில் அரசுக்கு அக்கறை இல்லை.மோடியின் ஒரே நோக்கம் வரும் தேர்தல் அதற்கு தேச பக்தியை தட்டி எழுப்பி அதை வாக்குகளாக பாஜகவுக்கு வரவைப்பது மட்டும்தான்.
அதைத்தான் மாலன்,கே.அசோகன்,வைத்திய நாதன் உட்பட்ட ஊடக காவிகள்,விலைபோன நடுநிலை நக்கி ஊடகங்கள் செக்கின்ற்ன.

இதோ மாலன் இடுகை.

ஒரு அரசின் நலன்,பாதுகாப்புத்தொடர்பான,தாக்குதல் தொடர்பான ரகசியத்தை பாஜக நலன் கருதி வெளியிடுகிறார்.
இந்தியாடுடே தமிழ்ப்பதிப்பின் ஆசிரியராக இருந்தவருக்கு எந்த செய்தியை வெளியிடலாம்.கூடாது என்று தெரியாதா என்ன?
இதுதான் சங்கிகள் பேசும் தேசபக்தி?
முன்பு மாலனாக இருந்தவர் "மாலன் நாராயணனாக "மாறியதன் பின் விஜய பாரதம்,பசுத்தாய் ஆசிரியர் அளவுக்கு போய்விட்டார் .

டிவிட்டரில் போடுவதன் மூலம் எதிரிகள் எச்சரிக்கையடைவார்கள் என்ற பகுத்தறிவு கிடையாதா இவருக்கு.

ராணுவ வீரர்கள் எப்படியும் போகட்டும் அவர்கள் ரத்தத்தில் பிரதம நாற்காலியை மோடிக்கு அமைக்க வேண்டும் என்பதே இவர்கள் திட்டம்.
 
இந்தியாடுடே ஆசிரியராக இருந்த மாலன் கொஞ்சம்,கொஞ்சமாக விஜயபாரதம் ஆசிரியராக மாறுவதைப்பார்க்க வேதனையாக இருக்கிறது.பேசாமல் எந்திரன் 3.0 கதை எழுதப்போகலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 யாருக்கு டிராய் சேவை செய்கிறது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ , ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும், ரிலையன்சின் ‘ஜியோ’ நிறுவனத்திற்கு மட்டும் சலுகைகளை அள்ளி வீசுவதாகவும் வோடாபோன் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான வோடாபோன்), நீண்டகாலமாக இந்திய தொலைத்தொடர்புத் துறையில் இருந்து வருகிறது.
ஆனால், 2016-இல் ரிலையன்ஸ் ஜியோ வந்தபின், வோடாபோன் வர்த்தக ரீதியாக பாதிப்பைச் சந்தித்தது. இழப்பைச் சமாளிக்க ஐடியா நிறுவனத்துடனும் இணைந்து பார்த்தது.

ஆயினும் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இதற்கு டிராய் அமைப்பும், ஜியோ நிறுவனமுமே காரணம் என்றும் வோடாபோன் தற்போது புலம்பித் தவிக்கிறது.
நிக் ரீட்

“இந்தியாவில் வோடபோன் நிறுவனம் கடும் நஷ்டத்தைச் சந்தித்ததால், நாங்கள் ஐடியா நிறுவனத்துடன் இணைந்தோம்.
ஆனால், எங்களுக்கு இன்னும் நஷ்டம் தொடர்கிறது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’, நாங்கள் கேட்கும் எந்த சலுகையையும் அளிக்காமல் வஞ்சிக்கிறது.

அதேநேரம் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு மட்டும் சலுகைகளை அள்ளித் தருகிறது. டிராய் அளிக்கும் சலுகைகளால், ஜியோ நிறுவனம் மட்டுமே பலனடைந்து வருகிறது” என்று வோடபோன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நிக் ரீட் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியே, ‘ஜியோ’ விளம்பரத் தூதுவரான கொடுமை 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தங்களுக்கு எந்த அளவிற்கு ஆட்சியாளர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் இதைச் செய்தது.

 தனியார் நிறுவனமான ஜியோவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே, நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-லின் 4ஜி சேவைக்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் இருக்கிறது.
இதை எதிர்த்து, பிஎஸ்என்எல் ஊழியர்கள் கடந்த வாரம் மாபெரும் போராட்டங்களையும் நடத்தினர்.

தற்போது, தனியார் நிறுவனமான ‘வோடாபோன்’ நிறுவனமும் ஆட்சியாளர்கள் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளது.
இதனிடையே, வோடாபோன் குற்றச்சாட்டுக்கு டிராய் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் ஜியோவுக்கு சலுகை அளிப்பது உண்மைதான் என்று மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது.

அதாவது, நாட்டில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகைகள் அளிக்கத் தீர்மானித்துள்ளோம்; அந்த அடிப்படையிலேயே 3ஜி, 4ஜி சேவைகள் அளிக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகளை நிறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

டிராயின் புதிய சேனலுக்கு கட்டணம் என்றதிட்டத்தின் மூலம் ஏற்கனவே கோடிகளில் குளித்துவரும் தொலைக்காட்சி நிறுவங்களுக்கு மேலும் பண மழைக்கொட்டும் திட்டமாகத்தான் உள்ளது.
விலைவாசிகளில் நலிந்துவரும் அவர்களின் கசபையில் இருந்துதான் அவை கொள்ளையிட்டப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
விமான நிலைய ஏலத்திலும் மோடி அரசின் ஊழல்

விமான நிலையங்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பொறுப்பை தனியாரிடம் விட மத்தியஅரசு முடிவெடுத்துள்ள நிலையில் முதல்கட்டமாக 6 விமான நிலையங்களையும் அதானி நிறுவனம் பெற்றுள்ளது.

திருவனந்தபுரம், அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர், கவுகாத்தி ஆகிய விமான நிலையங்களே அவை. மத்தியில்மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தபின்னர் அதானி குழுமத்தின் வளர்ச்சி பலமடங்கு அதிகரித்துள்ளது.
நிலம், நீர், காற்று, நெருப்பு என எதையும் அந்தகுழுமம் விட்டுவைக்கவில்லை.
 மோடி ஆசியுடன் அனைத்தையும் வளைத்து வருகிறது.

நாட்டின் கிழக்கு, மேற்கு கடலோரப் பகுதிகளில் 10 துறைமுகங்கள் மற்றும் முனையங்களை அதானி துறைமுக நிறுவனம் நடத்தி வருகிறது.
 ஏற்கனவே மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் பல துறைமுகங்கள் அதானிகுழுமம் வசம் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் கமுதிஅருகே செங்கப்படை கிராமத்தில் விவசாயிகளிடமிருந்து கட்டாயப்படுத்தி பறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சூரிய மின்சக்தி உற்பத்திக்காக அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த சூரிய சக்தி தகடுகளை கழுவுவதற்காக ராட்சத மோட்டர் அமைத்து நிலத்தடி நீரை சூறையாடி வருகிறது. இதனால் பல கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இப்படி குறுகிய காலத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ள அதானி குழுமத்தின் வசம் ஆறு விமான நிலையங்களின் பராமரிப்பு மற்றும் நிர்வகிக்கும் பொறுப்பை மோடி அரசு ஒப்படைத்துள்ளது பல்வேறு ஐயப்பாடுகளை எழுப்பியுள்ளது.
விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தின் முதல்கட்டமாகதில்லி, மும்பை விமான நிலையங்கள் முறையேஜிஎம்ஆர், ஜிவிகே என இருபெரும் தனியார் நிறுவனங்களிடம் முந்தைய காங்கிரஸ் அரசு ஒப்படைத்தது.
இரண்டாவது கட்டமாக நடத்தப்பட்ட ஏலத்தில் அதானி குழுமம் ஆறு விமான நிலையங்களையும் வசப்படுத்தியிருப்பது பலவிதமான ஐயப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.
 அரசின் தனியார்மய முடிவை மற்ற மாநில அரசுகள் எதிர்க்காத நிலையில் கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசு துணிச்சலாக தட்டிக்கேட்டுள்ளது.

விமான நிலையங்களை பராமரித்த அனுபவம் அதானி குழுமத்திற்குஇல்லை என்று முதலமைச்சர் பினராயி விஜயன்கூறியுள்ளார்.
மேலும் இந்த ஏலத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாகவும் ஒரே நிறுவனம் மட்டும் ஆறு விமானநிலையங்களை பெற்றது எப்படி என்றும் அவர் வினவியுள்ளார்.

 ஒப்பந்தப்புள்ளி என்ற முறையில் இதில் ஊழல் நடந்திருப்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொச்சிசர்வதேச விமான நிலையத்தை மாநில அரசின்சிஐஏஎல் என்ற பொதுத்துறை நிறுவனம்தான் வெற்றிகரமாக பராமரித்து இயக்கி வருகிறது.
எனவே திருவனந்தபுரம் விமானநிலையத்தை மாநில அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற அம்மாநில அரசின் நியாயமான கோரிக்கையை மோடி அரசு ஏற்கவேண்டும்.

மேலும் மத்திய அரசின் தனியார்மய கொள்கைகளை எதிர்ப்பது தொழிற்சங்கங்களின் வேலை என்றில்லாமல் விமான நிலையங்களை பயன்படுத்தும் அனைவரும்  எதிர்க்க வேண்டும்.
===================================================
ன்று,
பிப்ரவரி-28.

இந்திய தேசிய அறிவியல் தினம்

 எகிப்தின் விடுதலையை பிரிட்டன்  அங்கீகரித்தது(1922)
 
வொலஸ் கரோதேர்ஸ் என்பவரால் நைலான் கண்டுபிடிக்கப்பட்டது(1935)


இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் இறந்த தினம்(1963)
 
முதல் வளைகுடா போர் முடிவு பெற்றது(1991)


===================================================
 ஓஎன்ஜிசி-யையும் சூறையாடிய மோடி!
நாட்டின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்(O N G C ), பல ஆயிரம் கோடி லாபமீட்டி வந்த நிறுவனமாகும். அரசுக்கு பல்லாயிரக்கணக்கானகோடிகள்  ரூபாய்களை ஈவுத்தொகையாக வழங்கி வந்த நிறுவனம் இது.

 ஆனால், மத்திய பாஜக ஆட்சியானது, கடந்த 4 ஆண்டு ஆண்டுகளில், அந்த நிறுவனத்தின் கைமுதலை முழுமையாக பறித்துக் கொண்டதுடன், ரூ. 25 ஆயிரம் கோடி கடனிலும் தள்ளி விட்டுள்ளது.
அதுவும் தினசரி பெட்ரோல் விலை,எரிவாயு விலை அரசால் உயர்த்தப்படும் நிலையில்,அம்பானி,அதானி எண்ணெய் நிறுவங்கள் கோடிகளை லாபமாக ஈட்டிவரும் நிலையில் பொதுத்துறை நிறுவனம் நட்டத்தில் இருக்கிறதென்றால் அதற்கு மோடி அரசுதான் காரணம்.

நாட்டு விடுதலைக்குப் பின், இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்புக்காக, ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, 1950 முதல் 1960 ஆண்டுகளில் அவை சிறப்பான வளர்ச்சி கண்டன.
ஆனால், நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஏனைய பொதுத் துறை நிறுவனங்களைப் போலவே, ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் சோதனைகள் ஆரம்பமாகின.
மத்தியில் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த காங்கிரசும், பாஜக-வும் தனியார்மயத்திற்கு கதவுகளைத் திறந்துவிட்டு, ஓஎன்ஜிசி நிறுவனத்தை பின்னடைவுக்குத் தள்ளினர்.

எண்ணெய் வயல்களை கண்டு பிடிப்பதற்காக, உலக வங்கியில் 450 மில்லியன் டாலர் அளவிற்கு கடன்பெறு மாறு, ஓஎன்ஜிசியையும், மற்றொரு அரசு நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட்-டையும் ஆட்சியாளர்கள் நிர்ப்பந்தம் செய்தனர்.
ஓஎன்ஜிசியும் கடனை வாங்கி, 28 எண்ணெய் வயல்களைக் கண்டு பிடித்தது. ஆனால், முக்கியமான அந்த 28 எண்ணெய் வயல்களையும் அப்படியே தனியாருக்குத் தாரை வார்த்தனர், மத்திய ஆட்சியாளர்கள்.எனினும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பால், ஓஎன்ஜிசி நிறுவனம் தனது வளர்ச்சியைத் தக்கவைத்து வந்தது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியில், ஓஎன்ஜிசி மட்டும் 70 சதவிகித பங்களிப்பை செய்து வந்தது.சகித்துக் கொள்ள முடியாத ஆட்சி யாளர்கள், ஓஎன்ஜிசி-யின் மூலதனத்தை சூறையாடும் வேலையில் இறங்கினர்.
அதன் தொடர்ச்சியாகவே, நரேந்திரமோடி தலைமையிலான கடந்த 4 ஆண்டுகால பாஜக ஆட்சியில், ஓஎன்ஜிசிகைமுதல் முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டு, கடனாளியாக்கப்பட்டுள்ளது.

2001-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018-இல் ஓஎன்ஜிசி-யின் கையிருப்பு, 90 சதவிகிதம் அளவிற்கு பறித்துக் கொள்ளப் பட்டிருக்கிறது. 2001-இல் ஓஎன்ஜிசி-யின் நிகரலாபம், 18 ஆயிரத்து 334 கோடி ரூபாய். எண்ணெய் நிறுவனங்களிலும் ஓஎன்ஜிசி-யே நாட்டின் முதல்பெரும் நிறுவனம். ஆனால், தற்போது மூன்றாவது இடத்திற்கு ஓஎன்ஜிசி தள்ளப்பட்டு உள்ளது.
விநியோகஸ்தர்களுக்கான எரிபொருள் மானியத்தை முன்பு மத்திய அரசு வழங்கிவந்தது.

ஆனால், தற்போது அந்த மானியத்தைத் தர மத்திய அரசு மறுத்துவிட்டதால், ஓஎன்ஜிசி தன் கையிருப்பிலிருந்தே வழங்கிக் கொண்டிருக்கிறது.

அதுதான் போகட்டும் என்றால், கடந்த 2018-இல் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் 51.11 சதவிகித பங்குகளை, வாங்கியே ஆக வேண்டும் என்று கூறி, ஓஎன்ஜிசி-யை ரூ. 35 ஆயிரம் கோடி கடன் வாங்கும் அளவிற்கு மோடி அரசு தள்ளியிருக்கிறது.
அண்மையில் ரிசர்வ் வங்கியை மிரட்டி அதன் கையிருப்பைக் கரைத்தது போல, ஒஎன்ஜிசி-யும் சூறையாடியிருக்கிறது.
தற்போது ஓஎன்ஜிசி-யை ரூ. 25 ஆயிரத்து 592 கோடி கடனில் தள்ளியிருக்கிறது.

நரேந்திர மோடி தனது ஆட்சியில், ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக் கூட வாழ வைக்கவில்லை; மாறாக, வேண்டுமென்றே அவற்றை குற்றுயிரும் குறையுயிருமாகவே ஆக்கியிருக்கிறார் என்பதற்கு, ரிசர்வ் வங்கி உட்பட நாட்டின் பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் வரிசையில் ஓஎன்ஜிசி-யும் ஒரு உதாரணமாகி இருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?