தயாராகட்டும் இந்தியா.


 போருக்கல்ல ...,
தேர்தலுக்கு.!
போர் போர்னு நாடு முழுக்க பரபரப்பா இருக்குல்ல, இந்த நிலை யாருக்காக உருவாக்கப்பட்டதுன்னு தெரிஞ்சிக்கனுமா?.

இப்போ இருக்குற இந்த பரபரப்பான நிலைமையை கொஞ்சம் மைனஸ் பண்ணிட்டு நாட்டை பார்ப்போம். இப்போ நாடு முழுக்க என்ன பேசுபொருளாய் இருந்திருக்கும்?
மக்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருந்திருப்பார்கள்?
ஊடகங்களில் எதைப் பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கும்?


* 2 வாரத்துக்கு முன்னாடி பெரிய விவாதமாக இருந்த ரபேல் ஊழல் இப்போ என்ன ஆச்சுன்னு தெரியல.
*மகாராஷ்டிராவில் மிகப் பெரிய பேரணியை விவசாயிகள் நடத்தியிருக்கிறார்கள். அதைப் பற்றிய எந்த செய்தியும் இல்ல.
*நீட் தேர்வு கொண்டுவந்து அனிதாவைக் கொன்ற பிறகு, இப்போது 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு வைக்கப் போறோம்னு சொல்லியிருக்கானுங்க. எந்த விவாதமும் நடக்கல.
*ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உயர்நீதிமன்றத்தில் அகர்வால்காரன் மேல்முறையீடு பண்ணியிருக்கான். 15 பேரின் கொலைக்கு யார் பதில் சொல்லப் போறாங்கன்னு தெரியல.

*வருசத்துக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவேன்னு வாக்குறுதி கொடுத்த மோடி வருசத்துக்கு ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்பு கூட உருவாக்கல. இன்னும் சொல்லப்போனா பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மூலமா 2 கோடி பேர் வேலை இழந்திருக்காங்க.

*வேலைவாய்ப்பை பற்றிய புள்ளி விவரங்களை வெளியிடக் கூடாது என பாஜக அரசு அழுத்தம் கொடுத்ததால், தேசிய புள்ளியியல் கமிஷனின் அதிகாரிகள் இரண்டு பேர் தங்கள் பதவியையே ராஜினாமா செய்துள்ளனர். பேசுபொருளாகவில்லை.

*நாட்டின் பொருளாதாரம் பல பத்தாண்டுகளில் இல்லாத மிக மோசமான சரிவை சந்தித்திருக்கிறது. 5 லட்சத்திற்கும் அதிகமான சிறிய நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.
*16,000 கோடி நிவாரணம் கேட்ட கஜா புயலுக்கு 1000 கோடி கூட வந்து சேரல. டெல்டா மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளது.

*இந்த வாரத்தில் 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தூக்கிச் செல்லப்பட்டுள்ளனர். பரபரப்புகளுக்கு மத்தியில் பேசுவதற்கு நேரமில்லை.
*விமான நிலையங்களும், துறைமுகங்களும் அதானிக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன.
 வெளியில் தெரியவே இல்லை.

*இந்தியாவின் பாதுகாப்புத் துறை LEMOA, COMCASA ஒப்பந்தங்களின் மூலம் அமெரிக்காவிற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இந்திய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

*20 லட்சத்திற்கும் அதிகமான பழங்குடிகளை இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றும் படலம் துவங்கியுள்ளது.
இன்னும் இன்னும் ஏராளம் இருக்கிறது.
இதைப் பற்றியெல்லாம் நம்மால் இன்று பேச முடியவில்லை.
 இவற்றைப் பற்றிய விவாதங்கள் எதுவும் ஊடகங்களில் இல்லை.

இவற்றைப் பற்றி நாம் பேசாமல் இருப்பதால் யாருக்கு லாபம்?
யாருக்கு நன்மை?

இதை சிந்தித்தோமென்றால் போதும், இந்த போர் பதற்றம் ஏன் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைப் போல எல்லைக்கு அப்பால் இருந்து ஏவப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களை சகித்துக் கொள்ள முடியாது என்ற செய்தியை வீரியமான முறையில் அளிக்கும் நோக்கத்துடன் வான்வழி தாக்குதல், பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது நடத்தப்பட்டது.

ஆனால் அத்தாக்குதல், பயங்கரவாத முகாமை அழிப்பதில் எந்தளவுக்கு வெற்றிபெற்றது என்பது தொடர்பான விபரங்கள் இன்னும் நிறுவப்படவில்லை.

பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் வெற்றி என அரசுத் தரப்பில் கூறப்படுவது என்பது “ஊகமே” என்று பிரபல சர்வதேச பாதுகாப்புத்துறை கண்காணிப்பு ஊடக நிறுவனமான ஜேன்ஸ் குழுமம் தெரிவித்திருக்கிறது.

எனினும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லைகளைத் தாண்டி பாகிஸ்தானின் எல்லைக்குள் வெகுதூரம் சென்று இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க ராணுவத் தலையீடே ஆகும்.
மறுநாள் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டி வந்து வான்வழியாக பாகிஸ்தான் பதிலடியில் ஈடுபட்டது என்பது, இந்திய விமானப்படை வீரர்களின் அடுத்த வான்வழி பதிலடிக்கு இட்டுச் சென்றது.
இந்த மோதலில் இருதரப்புமே தலா ஒருபோருக்கல்ல ...,தேர்தலுக்கு.! விமானத்தை இழந்தன. இதில் வீழ்த்தப்பட்ட மிக் 21 ரக விமானத்தின் விமானியான இந்திய வீரர் விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் தரப்பினரால் சிறைப்பிடித்து கொண்டு செல்லப்பட்டார்.

 இந்த மோதலின்போது இரு தரப்பிலும் துப்பாக்கி சண்டையும் நடந்துள்ளது; இதன் காரணமாக எல்லைப் பகுதியில் ரஜவுரி மற்றும் பூஞ்ச் பிரிவுகளிலும் அதையொட்டியுள்ள கிராமங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படியாக இரு நாடுகளிடையே அடுத்தடுத்து விரைவாக ராணுவ அளவிலான பதற்றம் ஏற்பட்டது.
இது ஒரு ஆபத்தான நிலைமையாகும்.
இத்தகைய மோதல் போக்கினை தவிர்த்து, பதற்றத்தை தணிக்க தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.புல்வாமா பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக உலகின் பெரிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அரங்கில் ராஜீய ரீதியாக இந்தியா முன்வைத்தது. புல்வாமா தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் வன்மையாகக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது.
அந்தத் தீர்மானத்தில், இத்தாக்குதலுக்கு காரணம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புதான் என்று பெயர் குறிப்பிட்டு பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.

 இத்தகைய பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களும் அதை ஊக்குவிப்பவர்களும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் வலியுறுத்துகிறது.
 பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்கான செயல்பாடுகளை அனைத்து நாடுகளும் உறுதியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
தற்போது இந்தியா, அரசியல் அரங்கில் ராஜீய ரீதியான முயற்சிகளை தொடரவேண்டியது அவசியமாகிறது.

குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் இதர பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டிற்கு அழுத்தம் தருவதற்கான ராஜீய முயற்சிகளை இந்தியா அரசியல் அரங்கில் செய்ய வேண்டியது அவசியம்.
புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பங்கு என்ன என்பது தொடர்பாகவும் அதன் இதர நடவடிக்கைகள் தொடர்பாகவும் பாகிஸ்தானுக்கு இந்தியா விரிவான விபரங்களை ஏற்கெனவே அளித்திருக்கிறது.


கடந்த வாரம் இதே தலையங்கப் பகுதியில், புல்வாமா தாக்குதல் மற்றும் 40 வீரர்களின் தியாகம் ஆகியவற்றை இந்தியாவின் ஆளுங்கட்சி தனது தேர்தல் ஆதாயங்களுக்காக பயன்படுத்த முயற்சிக்கக்கூடாது என்று சுட்டிக்காட்டியிருந்தோம்.
 இந்நிலையில் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பான கேந்திரமான இலக்குகளை நிறைவேற்றுவதற்கு ராணுவ நடவடிக்கை பலன் தருமா என்பது சந்தேகத்திற்குரியதுதான் எனவும் சுட்டிக்காட்டியிருந்தோம்.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரது நடவடிக்கைகள், புல்வாமா தியாகிகளின் பெயரால் பதிலடி கொடுப்பது, பழிவாங்குவது என்பதை கட்டமைப்பதாகவே இருந்தன; அரசியல் ஆதாயம் பெறும் பொருட்டு மக்களிடையே உணர்வலைகளை தூண்டிவிடுவதை நோக்கியே இருந்தன; இந்நிலையில் எல்லை தாண்டி வான்வழி தாக்குதல் நடத்திய பிறகும் கூட, இது பாஜக அரசு ஆட்சியில் இருப்பதால் மட்டுமே சாத்தியமானது என்று அமித்ஷா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்.
One serves the country, another only his party. The difference 


பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டம், மதவாத - தேசியவெறி அடிப்படையிலான போர்வெறியை தூண்டுவதில் முனைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான தொலைக்காட்சி ஊடகங்களும் பதிலடி என்றும் பழிவாங்கல் என்றும் ராணுவ நடவடிக்கை வேண்டும் என்றும் பேசி வருகின்றன.
 பிப்ரவரி 26 - 27 தேதிகளில் இடம்பெற்ற நடவடிக்கை மற்றும் எதிர் நடவடிக்கை ஆகிய சம்பவங்கள் ஒரு போருக்கு இட்டுச்செல்லும் அளவிற்கான பதற்றத்தை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தின என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரில் மோடி அரசின் அடிப்படையான தோல்வியே அங்கு வன்முறையும் பயங்கரவாதமும் தொடர்வதற்கான வேர் ஆகும். காஷ்மீர் பிரச்சனையில் ஒரு தீர்வினை எட்டும் பொருட்டு எந்தவொரு அரசியல் நடைமுறையையும், அரசியல் முன்முயற்சியையும் கடந்த ஐந்தாண்டு காலத்தில் மோடி அரசு மேற்கொள்ளவில்லை.
மாறாக, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 35ஏ உள்ளிட்ட உணர்ச்சிகரமான பிரச்சனைகளை தூண்டிவிட்டு மதவாத உணர்வுகளுக்கு தீனி போடுகிற நாசகர வேலையையே பாஜக செய்திருக்கிறது.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மிக மிகக் கடுமையான முறையில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களும் வன்முறைகளும் ஏற்கெனவே உள்ள நிலைமையை மேலும் மோசமானதாக மாற்றியிருக்கிறது.
மோடி அரசாங்கமும், பாரதிய ஜனதா கட்சியும் தங்களது அரசியல் விளையாட்டில் காஷ்மீரி மக்களை பகடைக்காய்களாக உருட்டுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பதற்றத்தை தணிக்க மோடி அரசு உடனடியாக தேவையான நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இயல்புநிலையை கொண்டுவர வேண்டும்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது குறுகிய அரசியல் நலன்களுக்கு சேவை செய்வதாக இருக்கக்கூடாது.

 நாடு மிகப்பிரம்மாண்டமான ஜனநாயகப்பூர்வமான செயல்பாடாம் மக்களவைத் தேர்தலை நோக்கி தயாராகட்டும்.போருக்கல்ல .
=====================================================

ன்று,
மார்ச்-01.

தென்கொரியா விடுதலை தினம்


 ரியோ டி ஜெனிரோ நகரம் அமைக்கப்பட்டது(1565)


எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்(1910)


மு.க.ஸ்டாலின் பிறந்த தினம்(1953)


ஸ்பெயினில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது(2002)
=====================================================
அபிநந்தன் விடுவிப்பு. 
பாகிஸ்தான் தரப்பினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தன், வெள்ளி யன்று விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையிலும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை களைத் துவக்குவதற்கான முதல் நடவடிக்கையாகவும் அபிநந்தன் விடுவிப்பு அமையும் என்றும் இம்ரான்கான் கூறியுள்ளார்.
அபிநந்தன்
புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே வான்வழி மோதல் போக்கு மற்றும் பதற்றச்சூழல் கடந்த இரண்டுநாட்களாக நிலவியது.

 மோத லின்போது இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் தரப்பு சிறைப்பிடித்துச் சென்றது. இதையடுத்து போர் பதற்றத்தை நோக்கி நடவடிக்கைகள் சென்றன.

 ஆளும் பாஜக- இந்த ஒட்டுமொத்த பிரச்சனையையும் தனது அரசியல் லாபத்திற்கு பயன்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கி யது. இதை எதிர்க்கட்சிகள் கடுமை யாக எதிர்த்தன.


 அதேவேளை பயங்கரவாதிகளுக்கு எதிராக துணிச்சலுடன் நடவடிக்கை மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர்களின் செயலை பாராட்டின. மேலும் பாகிஸ்தான் தரப்பால் சிறைப்பிடிக்கப்பட்ட கமாண்டர்அபிநந்தனை உடனடியாக மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் அதற்கு போர் தீர்வல்ல என்றும் நாடு முழுவதும் குரல்கள் வலுத்தன.

இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு, அபிநந்தனை உடனடியாக விடுவிப்பது என்ற மிக முக்கியமான முடிவினை எடுத்துள்ளது.வியாழனன்று பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டம் நடை பெற்றது.

 கூட்டத்திற்கு முன்னதாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமதுகுரேஷியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.


பின்னர் நாடாளுமன்றத்தில் பேசிய இம்ரான்கான், பாகிஸ்தான் தரப்பால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி விங்கமாண்டர் அபிநந்தன், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையிலும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை துவக்குவதற்கான முதல் நடவடிக்கை யாகவும் வெள்ளியன்று விடுவிக்கப் படுவார் என்று அறிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் இடை யிலான பதற்றச் சூழலை தணிக்கும்பொருட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச்சு வார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் இம்ரான்கான் கூறினார்.

 இதுதொடர்பாக நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவதற்கு நேற்றைய தினம்(புதன்) முயற்சி செய்ததாகவும் அதற்கு வாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை என்றும் இம்ரான்கான் கூறினார்.

முன்னதாக இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியபாதுகாப்பு படையினரின் உணர்வு களை பாதுகாக்கும் பொருட்டு ஒரே முகமாக எதிரியுடன் போராடவேண்டும் என்று கூறியிருந்தார்.

நாடு முழுவதும் 15ஆயிரம் இடங்களில் பாஜக ஊழியர்களை ஒரே நேரத்தில் காணொலிக் காட்சி மூலம் சந்திக்கும் நிகழ்ச்சியை வியாழனன்று பிரதமர் மோடி நடத்தினார்.

அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என்ற குரல் ஒலித்துக் கொண்டிருந்த நேரத்தில் தேர்தல் பணிகளுக்கு தமது கட்சியினரை தயார்ப்படுத்தும் நோக்கத்துடனும், அவர்களிடையே ராணுவத்தினரின் தியாகத்தை முன்னிறுத்தி உணர்வலைகளை வெறியாக மாற்றும் நோக்கத்துட னும் இந்நிகழ்ச்சி நடந்தது என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “எதிரி(நாடு) நம்மை அழிக்க முயற்சிக்கிறது.
 அதற்காக பயங்கரவாதத் தாக்குதலை நடத்து கிறது.
 நமது வளர்ச்சியை தடுக்க விரும்புகிறார்கள், நாம் ஒரே குரலில் போராடி வெல்வோம்” என்று கூறினார்.

லாகூர் தேசியக்கல்லூரியில் 1923இல் எடுக்கப்பட்ட புகைப்படம்.நிற்பவர்களில் வலமிருந்து நான்காவது இருப்பவர் புரட்சித் தலைவர் பகத் சிங்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 வாய் திறவா நிர்மலா!
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், எப்போது பார்த்தாலும், ‘பிரதமர் மோடியின் அருமை பெருமைகள்’ என்று எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்.
தன் கையில் இருக்கும் பாதுகாப்புத்துறையைத் தவிர, மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் சுகாதாரத்துறைக்கு உட்பட்ட நீட் தேர்வு, நிதித்துறைக்கு உட்பட்ட பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, பட்ஜெட் சலுகைகள் என்று- அடுத்தவர்களின் துறையைப் பற்றியே அதிகம் பேசுவார்.

 தனது துறையைக் கண்டுகொள்ள மாட்டார்.
புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், பதிலுக்கு விமானப்படைகள் மூலம் எல்லையில் பயங்கரவாத முகாம்கள் அழிப்பு, இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டது; எல்லையில் போர்ப்பதற்றம்; ரயில் நிலையங்கள் மூடல்; விமானங்கள் பறக்கக் கட்டுப்பாடு என்று அடுத்தடுத்து பரபரப்பான சூழல்களை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது.
அனைத்துமே ராணுவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.

இதனால், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற வகையில், நிர்மலா சீதாராமன் தனது துறையைப் பற்றி பேசியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.ஆனால் இப்போதும்கூட அவர் எதுவும் பேசாமல் இருப்பது சர்ச்சையாகி உள்ளது.
 புல்வாமா தாக்குதல் துவங்கி இப்போதுவரை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருவார்த்தை கூட, வாயைத் திறந்து பேசவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.


விமானி அபிநந்தன் எங்கே இருக்கிறார்?
என்பதை விட, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எங்கே இருக்கிறார்?
என்பதுதான் யாருக்கும் தெரியாத விஷயம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“இருநாடுகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல்களில், ஒரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் அதிக முக்கியத்துவம் பெறுவார்கள். பேட்டி அளிப்பார்கள்.
 அனைத்து நாடுகளிலும் இதுதான் நடைமுறை.
ஆனால், புல்வாமா தாக்குதலில் துவங்கி, அபிநந்தன் கைது செய்யப்பட்டது வரை, அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை.
போர் பதற்றம் குறித்து, இந்திய விமானி கடத்தப்பட்டது குறித்து வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
செய்தியாளர்களை சந்திப்பது மட்டுமல்ல, ஒரு அறிக்கை கூட அவர் சார்பில் இதுவரை வெளியாகவில்லை.
ரபேல் விவகாரம் எழுந்தபோது நிர்மலா சீதாராமன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்; முக்கியமாக, ரபேலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மத்திய அரசுக்கு சாதகமாக வந்தபோது, எல்லையற்ற மகிழ்ச்சியில் ஒரே நாளில் 2 முறைக்கும் மேல் செய்தியாளர்களை சந்தித்தார்;

அன்றைக்கு மட்டும் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 20 முறைக்கும் மேல் பாஜக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது.
அதேநேரம், பாகிஸ்தான் - இந்தியா இடையே ராணுவ முஸ்தீபுகள் அதிகரித்து வரும் தற்போதைய நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மவுனம் காத்து வருவது ஏன்?
இந்த முக்கிய நேரத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நடத்திய கூட்டம் இதுவரை ஒன்றே ஒன்றுதான்.
 மற்றபடி பிரதமர் மோடி தலைமையிலேயே அனைத்துக் கூட்டங்களும் நடந்துள்ளன.ராணுவம் தொடர்பான பேட்டிகள் அனைத்தையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்தான் வழங்குகிறார்.
 சம்பந்தமே இல்லாமல் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாகிஸ்தானுக்கு சவால் விட்டு பேட்டி அளிக்கிறார் என்றால், நிர்மலா சீதாராமன் என்ன ஆனார்?
 ஏன் அவர் மவுனமாக இருக்கிறார்?”
என்று அடுக்கடுக்கான கேள்விகள்  எழும்பியுள்ளன.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?