தேர்தல் விதி

17ஆவது மக்களவைக்கான தேர்தல் நடை பெறும் நாள், வாக்குகள் எண்ணப்படும் நாள், தேர்தல் விதிமுறைகள் குறித்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஞாயிறன்று வெளியிட்டார்.


 “மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 8.43 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
1.5 கோடி வாக்காளர்கள் 18 முதல் 19 வயதுடையவர்கள்.


தேர்தல் முன்னேற்பாடு பணிகளுக்கள்  பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சென்று நிலையான செயல்முறையில் பணிகள் நடந்து வருகின்றன. தேர்தலைசுமுகமாக நடத்த முதலில் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினோம். மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம்.

எல்லா வாக்குச் சாவடிகளிலும் இம்முறை யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை அறிய ஒப்புகைச் சீட்டு அளிக்கப்படும். இம்முறை 90 கோடி வாக்காளர்கள் தகுதியானவர்கள்.

தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், தேர்தல் குறித்தவிழிப்புணர்வுக்காக வாக்காளர் வழிகாட்டி ஒவ்வொரு வீட்டுக்கும் தரப்படும் .
எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை தெளிவாகஅறிய வேட்பாளரின் புகைப்படம் ஒட்டிவைக்கப்படும்.
நாடு முழுவதும் தோராயமாக 10 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. கடந்த தேர்தலில் இவற்றின் எண்ணிக்கை 9 லட்சமாக இருந்தது. வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகளை மறைக்கக் கூடாது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஒலிப்பெருக்கிகளை கட்டாயமாகப்பயன்படுத்தக்கூடாது.
 கூகுள், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட அனைத்துதளங்களும், அரசியல் கட்சி விளம்பரங்களுக்கு சான்றிதழ்கொடுக்கப்படும் என கூறியுள்ளன.
அனைத்துதளங்களிலும் தேர்தல் விதிமுறைகள் மீறப்படு கிறதா என கண்காணிக்கப்படும்.

 ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கேரளா, மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், சிக்கிம், தெலுங்கானா, உத்தர்கண்ட், அந்தமான் நிகோபார், தாதர் - நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவுகள், தில்லி மற்றும் சண்டிகர் ஆகிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒருகட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது .

ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு மே மாதத்தோடு 6 மாதம் முடிவடையவுள்ள நிலையில், அறிவிப்பில் ஜம்மு-காஷ்மீர் சட்ட மன்றத் தேர்தல் தேதியும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்ஜம்மு-காஷ்மீருக்கு இப்போது தேர்தல் நடத்தப்படாது .

தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும். முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி, 7ஆம் கட்ட தேர்தல் மே 17ஆம் தேதி முடிவடையும்.
மே 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும்.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதி நாள் மார்ச் 25. தேர்தலில் விதிமுறைகள் மீறப்படுவது குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும்.
 எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும்
.
முதல் கட்ட வாக்குப்பதிவு - ஏப்ரல் 11
2ஆம் கட்ட வாக்குப்பதிவு- ஏப்ரல் 18
3ஆம் கட்ட வாக்குப்பதிவு- ஏப்ரல் 23
4ஆம் கட்ட வாக்குப்பதிவு- ஏப்ரல் 29
5ஆம் கட்ட வாக்குப்பதிவு- மே 6
6ஆம் கட்ட வாக்குப்பதிவு- மே 12
7ஆம் கட்ட வாக்குப்பதிவு- மே 19

தமிழகத்தில் இரண்டாம் கட்டத்தில் தேர்தல்
ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதி மக்கள் வாக்களிக்கிறார்கள்.
2ஆம் கட்ட தேர்தலில் 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கும்,
3ஆம் கட்ட தேர்தலில் 14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளுக்கும்,
4ஆம் கட்ட தேர்தலில் 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கும்,
5ஆம் கட்ட தேர்தலில் 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கும்,
6ஆம் கட்ட தேர்தலில் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கும்,
 7ஆம் கட்ட தேர்தலில் 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
எப்பெடியெல்லாம் பணத்தை கடத்துறாங்கப்பா?


தமிழகம் மற்றும் புதுச்சேரியைப் பொறுத்தவரையில் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கும் 2ஆம் கட்ட தேர்தலில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது."

தமிழகத்தில் இடைத்தேர்தல்
சென்னை, மார்ச் 10-மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு அறிவித்தார்.
17-ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி மே 6-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தில்லியில் அறிவித்தார்.
 மேலும், மக்களவைத் தேர்தலோடு காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

 இதையடுத்து, தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மக்களவைத் தேர்த லோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் என்றார்.
ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த 3 தொகுதிகள் தொடர்பான இடைத்தேர்தல் குறித்து அறிவிப்பு இல்லை என்றார்.

 அதன்படி, காலியாக உள்ள 21 தொகுதிகளில் பூந்தமல்லி, பெரம்பூர், திருப்பூர், சோழிங்கநல்லூர், குடியாத்தம், ஆம்பூர்,ஓசூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், நிலக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மானா மதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர்,பரமக்குடி, விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
 மக்களவைத் தேர்தல் நடைபெற வுள்ள அதே ஏப்ரல் 18-இல் இந்த இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
====================================================
ன்று,
மார்ச்-11.
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது(1861)
ஜாம்பியா இளைஞர் தினம்
ரஷ்ய தலைநகர் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவிற்கு மாறியது(1918)
பாகிஸ்தான் அணுஆயுத சோதனை நடத்தியது(1983)
====================================================
கனவுக் காவலாளியை மாற்றுவோம்!

இந்தியாவில் தொழில் வளர்ச்சி நிறைந்த மாநிலமாக தமிழகமும் திகழ்ந்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 சென்னைக்கு அருகிலுள்ள ஆந்திர மாநிலம் 8.3 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், தமிழகம் கடன் வலையில் சிக்கித் தவிக்கிறது. தமிழகத்தின் கடன் ரூ.4.5 லட்சம் கோடியாக உள்ளது. கடனுக்கு ஆண்டுதோறும் கட்டுகின்ற வட்டி 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு மோசமான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளியது எடப்பாடி பழனிச்சாமி அரசும், அதற்கு துணை நிற்கின்ற மத்திய மோடி அரசும்தான்.
மத்திய பாஜக அரசு அமல்படுத்திய பொருளாதாரக் கொள்கை ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கையை சிதைத்திருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்திருக்கிறது.

கடந்த 3 மாதத்தில் அது இன்னும் மோசமாகியுள்ளது. நாட்டில் துன்பப்படாத மக்களே இல்லை. வேலைவாய்ப்பு குறைந்துகொண்டே வருவதால் வேலையில்லாத வாலிபர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது.
விவசாயிகளின் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று அரசிடம் கூறினால், நிதி இல்லை என கைவிரிக்கும் மோடி அரசு, கடந்த 4 ஆண்டுகளில் பெருநிறுவனங்களின் வங்கிக் கடன் 3.5 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளது.

இதுவரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள வங்கிக் கடன் மட்டும் 15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ரபேல் விமானம் வாங்கியதில் மிகப் பெரிய ஊழல் நடந்திருக்கிறது.
 அதை இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.
 அவரையும் பாஜக அரசு மிரட்டுகிறது.

இந்திய ஜனநாயகத்தின் கோவில் என்று சொல்லக் கூடிய நாடாளுமன்றத்தில், மக்களவை கூட்டத்தை குறைந்த நாட்களே பாஜக ஆட்சியால் நடத்த முடிந்தது.
அந்த கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றது மிக மிக குறைந்த நேரமே. உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை, மக்கள் பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்ற நிலையை உருவாக்கியது பாஜக அரசு.

விவசாயிக்கு மோடி அரசு அறிவித்திருக்கும் வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் தலா 100 ரூபாய். 

அப்படியென்றால் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 3 ரூபாய். 3 ரூபாயை வைத்துக் கொண்டு ஒருவர் ஒரு நாளைக்கு வாழ முடியுமா? 

ஒரு தனியார் நிறுவன காவலாளி, அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் தினமும் கனவு கண்டதை கூறுவார்.
முதலாளியும் அந்த கதையை தினசரி கேட்டுக் கொண்டிருப்பார்.
ஒருநாள் முதலாளி அந்த காவலாளியை அழைத்து நீ சொன்ன கனவு கதை சிறப்பாக இருக்கிறது.

எனவே உனக்கு 5,000 ரூபாய் போனஸ் தருகிறேன் என்று கூறினார். கூடவே உன்னுடைய வேலையும் இன்றோடு முடிந்து விட்டது என்றார்.
 5 ஆயிரம் ரூபாய் போனஸ் கொடுத்துவிட்டு, வேலை இல்லை எனக் கூறுகிறீர்களே என காவலாளி கேட்பார்.

அதற்கு முதலாளி இந்த நிறுவனத்தை பாதுகாக்கத்தான் உன்னை காவலாளியாக நியமித்தோம். தினசரி நீ இரவிலே தூங்கி கனவு காண்பதற்காக அல்ல என்றார்.

அதுபோல் இந்தியாவை பாதுகாக்க மோடியை தேர்ந்தெடுத்தவர்கள் மக்கள். இந்த நாட்டை காவல் காக்காமல் கதைகளையும், கனவுகளையும் சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டு நாட்டை பாதுகாக்க முடியாத காவலாளி மோடியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
                                                                                                                                          -சீத்தாராம் யெச்சூரி .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?