சனி, 2 மார்ச், 2019

போலிகள்!!

இந்திய ,பாகிஸ்தான் மக்களின் தேசப்பக்தியைத்தூண்டி குளிர்காய நினைக்கும் அரசியல்வாதிகளின் இந்த போர்த்தாக்குதல் செய்திகளில் புகுந்து விளையாடி அதை தேர்தலில் வாக்குகளைக்குவிக்கும் கருவியாக்கப்பார்க்கிறார்கள்.
பத்தாண்டு பழையப் புகைப்படங்களை,காணொளிகளை  இன்றைய தாக்குதல் படங்களாகப் பகிர்ந்து தேவையற்றப் பதட்டத்தை உருவாக்கி அதில் பதவி சுகம் காண எண்ணும் "ஐ சப்போர்ட் அமித்ஷா" என்ற பாஜக,மதவாத சக்திகளைக் கண்டு அவர்கள் ஆசையை குழிதோண்டி புதைக்க வேண்டியது இந்திய மக்க(வாக்காளர்)ளின் கையில்தான் உள்ளது.


"இனி இந்தியாவின் அப்பாவி மக்களுக்கு, ராணுவ தொழிலாளர்களுக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு மோடியே பொறுப்பேற்க வேண்டும்.
மிகப் பெரிய சீரழிவினை எதிர்நோக்கியிருக்கிறோம் நாம்.

"இப்படிப்பட்ட தாக்குதல்கள் பல ஆண்டுகளில் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளன. அவை ரகசியமாக வைக்கப்பட வேண்டும். ராணுவ ஆபரேசன்கள் கொண்டாட்டத்திற்கானவை அல்ல"  இதைச் சொன்னவர் யாரோ ஒரு AntiBJP-யோ, AntiIndian-னோ அல்ல.

இந்தியாவின் முன்னாள் ராணுவ கமாண்டர் டி.கே.சப்ரு.
 தனது பதவி வெறிக்காக நரேந்திர மோடி என்கிற நபரும், பாஜக என்கிற கட்சியும் துவக்கி வைத்த போர்வெறி இப்போது அப்பாவி மக்களையும், ராணுவ தொழிலாளர்களையும் பலிகொள்ள ஆரம்பித்திருக்கிறது.

ராணுவத்தினை, தான் இழுத்த இழுப்பிற்கு பயன்படுத்தத் துவங்கியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் கூட்டம்.
 போர் என்று வந்தால் எவ்வளவு பணம் செலவழிக்கப்பட வேண்டும், எத்தனை கோடி மக்கள் பொருளாதார நெருக்கடியில் தெருவில் நிற்க வேண்டும், எத்தனை லட்சம் பேர் வெளியேற்றப்பட வேண்டும், எத்தனை ஆயிரம் மக்கள் சாக வேண்டும், எத்தனை ராணுவ தொழிலாளர்கள் பலியாக வேண்டும் என எதுவும் தெரியாமல் AC அறையில் அமர்ந்து கொண்டு, ஆண்ட்ராய்டு மொபைல்களின் வாயிலாக போர் முழக்கம் இட்டுக் கொண்டிருக்கிறது Elite கூட்டம்.


 ஊடகங்கள் அறநெறி இழந்து ஆளுங்கட்சியின் காசுக்காக கூலி வேலைக்குப் போகும் ஏழை இளைஞர்களுக்கு கூட போர்வெறி ஊட்டிக் கொண்டிருக்கின்றன.
 நீங்கள் போர்க்களத்திற்கு போக வேண்டியதில்லை, போர்ப் பகுதியில் வாழ வேண்டியதில்லை எனும்போது போர் என்பது உங்களுக்கு எளிதானதுதான்.

இந்த நாட்டின் முக்கிய தலைநகரங்களின் மக்களுக்கு போர் விமானங்களின் சத்தம் கேட்டாலே போதும், போர் என்பது எத்தனை கொடூரமானது என்பது தெரிந்துவிடும். GST, Demonetization, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார சரிவு, ரஃபேல் ஊழல், அரசுத் துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது என்று நாட்டையே பின்னுக்கு தள்ளிய மோடி, நீட் தேர்வு, ஸ்டெர்லைட் படுகொலை, சமூக நீதி அழிப்பு, மாட்டுக் கறி கொலைகள், விவசாயிகள் தற்கொலை என்று தனக்கு நாடு முழுதும் எழுந்த எதிர்ப்பலையை திசைமாற்ற இந்த மோசமான வேலையை செய்து கொண்டிருக்கிறார்.

நாடு நாடாய் சுற்றிக்கொண்டு, விதவிதமான ஆடைகளில் படமெடுக்கும் மோடிக்கு எல்லையில் எவன் செத்தால் என்ன?
காசுமீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முயலாமல், தேர்தலுக்காக இந்த கும்பல் நடத்திய பகடை ஆட்டத்தில் ஏற்கனவே 44 படைத் தொழிலாளர்கள் பலியாக்கப்பட்டார்கள்.

இப்போது இன்னும் ஏராளமானோரை பலியாக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
 சீனாக்காரன் உள்ளே நுழைந்து எல்லைக் கோடு போட்டபோது, பொத்திக் கொண்டிருந்த மோடி, இப்போது தேர்தல் நேரத்தில் பாகிஸ்தானைப் பார்த்து "டேய் தைரியமிருந்தா சண்டைக்கு வாடா" என கூப்பிடுவதன் சூட்சமம் அறிந்து கொள்ள முடியாததல்ல.

 பதவி வெறிக்காக நாட்டை பலியாக்கத் துடிக்கும் இந்த அயோக்கிய பார்ப்பனிய காவிக் கூட்டத்தினை எதிர்த்து நிற்க மக்களாகிய நாம் தயாராக வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------