100% அல்ல 80% வாக்குகள்கூட வராததற்கு யார்காரணம்?

ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்விசாரம் பகுதியில் இந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றிருந்த வாக்கு மையத்தை பார்வையிட பாமக முன்னாள் மத்திய ரயில்வே துறை அமைச்சர் வேலு, முன்னாள் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் இளவழகன் காரில் வந்தனர்.


அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி, காரை நிறுத்தி காரை 100 மீட்டருக்கு வெளியே இருக்க வேண்டும் என்று கூறியதால் அங்கிருந்து தொண்டர்கள் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்தனர்.

 இந்த வாக்குவாதம் மேலும் முற்றியதால் அதிக அளவில் தொண்டர்கள் கூட்டம் கூடியதால் கூட்டத்தைக் கலைக்க அங்கிருந்த சி. ஆர். பி. எஃப் துணை ராணுவ வீரர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு செய்தார். 
அதனால் அங்கிருந்த தொண்டர்கள் பயந்து ஓடினர்.

 துப்பாக்கி சூடு செய்த பிறகு ஏன் துப்பாக்கி சூடு செய்தாய்?, 
இங்க என்ன கலவரமா நடந்தது என்று துணை ராணுவத்தோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பாமக நிர்வாகிகள்.

இந்த தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பர்வேஷ்குமார், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் கூட்டத்தை கலைக்கவே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
அப்படி நடத்தவில்லையென்றால் பூத்தை கைப்பற்றியிருப்பார்கள் என்றனர்.
 தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

  விசாரணையில் ஆற்காட்டை அடுத்த கீழ்விஷாரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தலையொட்டி, இங்கு வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது.
 இந்த வாக்குச் சாவடி பதற்றமானது என்று ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. பாமகவினர் கைப்பற்றும் வாக்குச்சாவடி பட்டியலாக திமுகவினர் கொடுத்த பட்டியலில் இந்த வாக்கு சாவடி முதலில் உள்ளது.


 மாலை 6 மணியளவில் வரிசையில் இருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதனைப் பெறுவதில் அதிமுக, திமுகவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
மொத்தமாக பாமகவினர் டோக்கன்களையோ பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால்   இரு தரப்பும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர்.

மோதலில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக துணை ராணுவப் படையினர் வானத்தை நோக்கிச் சுட்டனர். ஒரு சுற்று மட்டுமே அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
தகவல் அறிந்து பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளார். அதேபோல, திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகனும் கீழ்விஷாரம் சென்றுள்ளார்.
 தேர்தல் நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு என்பதால், இந்த விவகாரம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதே  தினமலர் நாளிதழ் இந்த வாக்கு சாவடிக்குள் ராணிப்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினரா காந்தி அடியாட்களுடன் உள்ளே நுழைய முயற்சித்ததாகவும் அதை அங்கிருந்த மக்கள் (?)எதிர்த்து மோதலில் ஈடு பட்டதால் துணை ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதால் திமுகவினர் ஒடி விட்டதாகவும் பாமாவை சேர்ந்த ஏ.கே மூர்த்தி ,இணைவேந்தன் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் மக்கள் (?) கலைந்து சென்றனர் என்றும் செய்தியை காணொளியாக வெளியிட்டுள்ளது.
பின் அதே  செய்தியை
வேலுார் மாவட்டம் அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட ஆற்காடு அருகே கீழ்விஷாரத்தில் வானை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஓட்டுப்பதிவு இறுதி நேரத்தில் வாக்குச்சாவடியை நோக்கி கூட்டமாக சிலர் வந்த நிலையில், கூட்டத்தை கலைக்கவும் நிலைமையை கட்டுப்படுத்தவும் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தினர்.
  என்றும் வெளியிட்டுள்ளது.
ஆனால் உண்மையில் ஏ.கே.மூர்த்தி தலைமையில் பாமகவினர் அந்த வாக்குசாவடியை கைப்பற்ற முயற்சிக்க திமுகவினர் ,கூட்டணியினர் தடுத்ததால் உண்டான மோதல் அது.
அதை பாஜக ஆதரவு இதழ் தினமலர் எவ்வளவு சாமர்த்தியமாக திரித்து வெளியிடுகிறது.
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
 76% மட்டுமே வாக்குப்பதிவு.
100% வாக்குகள் வராததற்கு யார்காரணம்?
தமிழக மக்களவைத் தொகுதிகள் வாரியாக
 வாக்குப்பதிவு விபரம் வருமாறு:

1. திருவள்ளூர் 70.36
2. வடசென்னை 61.46
3. தென்சென்னை 58.14
4. மத்திய சென்னை 57.05
5. திருப்பெரும்புதூர் 60.39
6. காஞ்சிபுரம் 67.52
7. அரக்கோணம் 72.86
8. கிருஷ்ணகிரி 72.79
9. தருமபுரி 73.45
10. திருவண்ணாமலை 69.84
11. ஆரணி 65.08
12. விழுப்புரம் 72.50
13. கள்ளக்குறிச்சி 75.18
14. சேலம் 72.73
15. நாமக்கல் 78.00
16. ஈரோடு 71.10
17. திருப்பூர் 63.88
18. நீலகிரி 69.74
19. கோயம்புத்தூர் 63.81
20. பொள்ளாச்சி 69.72
21. திண்டுக்கல் 70.40
22. கரூர் 75.84
23. திருச்சிராப்பள்ளி 71.12
24. பெரம்பலூர் 74.67
25. கடலூர் 72.51
26. சிதம்பரம் 76.07
27. மயிலாடுதுறை 71.20
28. நாகப்பட்டினம் 75.52
29. தஞ்சாவூர் 70.53
30. சிவகங்கை 70.48
31. மதுரை 64.00
32. தேனி 74.57
33. விருதுநகர் 70.38
34. இராமநாதபுரம் 67.70
35. தூத்துக்குடி 69.31
36. தென்காசி 70.39
37. திருநெல்வேலி 65.78
38. கன்னியாகுமரி 65.55

100% வாக்குப்பதிவு என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் அடிக்கடி கூறி வந்தது.
ஆனால் 76% கூட பதிவாகவில்லை.
காரணம் பாரதீய தேர்தல் ஆணையம் தான்.சித்திரைத்திருவிழா ,தேரோட்டம்,கள்ளழகர் ஆற்றில் இறங்கல் என்று தமிழக இந்துமக்கள் இருக்கும் கோலாகல அன்றே தெரிந்தே வாக்குப்பதிவை வைத்தது ஏன்?ஒன்பது கட்டமாக நடக்கும் தேர்தலை ,வாக்களித்து 34 நாட்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை அடைகாக்க வேண்டிய அவசியம் இல்லாமல் வேறு தேதியில் தமிழகத்தில் தாராளமாக நடத்தியிருக்கலாம்.

மதுரை கள்ளழகர் விழா மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுக்க இருந்து மக்கள் குழுமும் விழா அன்று நடத்த வேண்டாம் வாக்குப்பதிவு குறையும் என்று எடுத்து சொல்லியும் தேதியை மாற்றா திமிர் எதற்கு ஆணையத்துக்கு.விளைவு மதுரை 64% மட்டுமே வாக்கு பதிவு.

அதுமட்டுமல்ல ஆயிரக்கணக்கில் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகள் வழங்கப்படவே இல்லை.தபால் வாக்கு பெற்றவர்களுக்கு வாக்களிக்க வசதிகள்செய்யப்படவே இல்லை.முத்திரை வைக்கப்பட்டாத திறந்த நிலையில் உள்ள வாக்கு பெட்டிகளில் யார் வாக்களிப்பார்கள்?
தபால் வாக்கு போடும் பெட்டி வாக்குகளைப்போடும் தபால் துவரம் தவிர்த்து மற்றப்பகுதிகள் வெள்ளைத்தாளால் ஒட்டப்பட்டு தொகுதி பெயர் ஒட்டப்பட்டு துணைவாக்குப்பதிவு அதிகாரிகள் முத்திரையுடன் அரக்கு சீலிடவேண்டும் என்பது விதி.வாக்கு எண்ணிக்கையன்றுதான் அது கடசியினர் முன் சீலை அகற்றி வாக்குகளை எண்ண  வேண்டும்.

ஆனால் திறந்து கிடக்கும் பெட்டியை காண்பித்து அதில் போடு தபால் வாக்கை என்றால் நடப்பது தேர்தலா?
சாதாரண ஒப்பந்தப்புள்ளிக்கு கூட சிலிட்ட பெட்டியில் தான் மனுக்கள் வாங்கிக்கிறார்கள்.

 தேர்தல் ஆணையத்தின் செயல் பாடு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் ராணுவ தளபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

மோடி ஆட்சியில், மத்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி இருப்பதாக, ஏற்கெனவே அரசின் உயர் அதிகாரிகள் பலர் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்துக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதிகள், ராணுவத் தளபதிகள், அரசுஉயர் அதிகாரிகள் 80 பேர், புதிதாகஒரு கடிதத்தை குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பியுள்ளனர்.

தில்லி காவல்துறை முன்னாள் ஆணையர் ஆர்.எஸ். குப்தா, இந்தியவிமானப்படையின் முன்னாள் துணைத் தளபதி ஆர்.சி. பாஜ்பாய், வெளிவிவகாரத்துறை முன்னாள் உயர் அதிகாரி அசோக்குமார், ராணுவமுன்னாள் துணைத்தளபதி ஏ.கே. ஷானி உள்ளிட்டோர் இந்த கடிதத்தில்கையெழுத்திட்டுள்ளனர்.

அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:“தேர்தல் ஆணைய நடவடிக்கைகளின் மீது அதிருப்தி தெரிவித்து நாங்கள் ஏற்கெனவே தங்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தோம். ஆனால்,அதன் பிறகும் கூட தேர்தல் ஆணையத்தின் போக்கில் மாற்றம் தென்படவில்லை. இப்போது தேர்தல் ஆணையம் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும் போது அதன் மீதான நம்பகத் தன்மை மேலும் கவலை அடையச் செய்கிறது.

தேர்தல் ஆணையத்தின் மீதானகளங்கம் உச்சக்கட்டத்தை அடைந்துஇருக்கிறது.

இவர்களால் நேர்மையான முறையில் தேர்தல் நடத்த முடியுமா?
 என்ற சந்தேகம் அதிகரித்துஇருக்கிறது.

அதற்கான திறன் தேர்தல் ஆணையத்திடம் தென்படவில்லை. அதன் செயல்பாடுகளும் முற்றிலும் சீர்குலைந்து இருக்கிறது.நாட்டின் முக்கியமான குடிமகன் கள் என்ற முறையில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் கவலையை உங்கள் முன்பு வைக்கிறோம்.ஜனநாயகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அதனைத்தரம் தாழ்த்த சிலர் முயற்சிக்கிறார் கள்.
தேர்தல் ஆணையமும் அதற்குவளைந்து கொடுத்து பாரபட்சமாக நடக்கிறது. குறிப்பிட்ட நபர்களின் நலனுக்கு தேர்தல் ஆணையம் துணைபோகிறது.

ஆளும் கட்சியினரின் தேர்தல் விதி மீறல்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளது.

இது போன்ற பாஜக சொல்கிறபடியே செயல்படுவதமன் மூலம் தன் மூலம் 
 தேர்தல் ஆணையம் அதன் மதிப்பை இழந்திருக்கிறது.

அதற்கு காரணம் இந்திய தேர்தல் ஆணையம் பாரதீய தேர்தல் ஆணையமாக மாறி பாஜக துணை அமைப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதுதான்.
 
திரிபுரா மாநிலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்தால், உடலில் தலை இருக்காது என்று பொதுமக்களுக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த மிரட்டலை சுவரொட்டியாகவே அடித்து ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒட்டியிருக்கும் அவர்கள், வெட்டப்பட்ட கோழியின் தலையையும் அருகில் கட்டித் தொடங்க விட்டுள்ளனர்.

திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, வரலாறு காணாத அராஜகத்தை கட்டவிழ்த்து விட்ட ஆளும் பாஜக-வினர், 464 வாக்குப்பதிவு மையங்களை முழுமையாக கைப்பற்றி, முறைகேடுகளை அரங்கேற்றினர்.

இதனால், திரிபுரா மேற்குத் தொகுதியில் வாக்குப்பதிவு முறையாக நடைபெறவில்லை என்றும், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால், தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கையை ஏற்காமல் உள்ளது.


இதனிடையே, திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது, அப்படி வாக்களித்தால் அவர்களின் உடலில் தலை இருக்காது என்று பாஜக-வினர் கொலை மிரட்டல் விடுக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, கிழக்கு திரிபுராவின் கொவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜம்புரா நகரத்தில், ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது’ என்று வீட்டு வாசல்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டிகளின் அருகில் வெட்டப்பட்ட கோழியின் தலையை இரத்தத்துடன் கட்டித் தொங்கவிட்டு, அதன் கீழ் “நீங்கள் ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்களிக்கச் சென்றால், உங்களுக்கும் இதே நிலைதான்” என்று எழுதி வைத்துள்ளனர்.

இது திரிபுரா பொதுமக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பாஜக-வினரின் இந்த அராஜகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக-வினர், தோல்வி பயத்தில் இருப்பதாகவும், அதன்காரணமாகவே இவ்வாறு அராஜகம் மூலம் வாக்காளர்களை அச்சுறுத்துவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொவாய் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிர்மல் பிஸ்வாஸ் கூறியுள்ளார்.


இந்த அச்சுறுத்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

திரிபுராவில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு சூழல் நியாயமான முறையில், தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை என மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியும் சிறப்பு காவல் கண்காணிப்பாளரும் ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்திருந்தனர்.

அதனடிப்படையில், திரிபுரா மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவை ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

 திரிபுரா மேற்குத் தொகுதியில் சங்கர் பிரசாத் தத்தாவும், திரிபுரா கிழக்குத் தொகுதியில் ஜிதேந்திர சவுத்ரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
பொற்விரல்  பாண்டியன்.
தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததற்காகத் தன் விரலை வெட்டிக்கொண்டுள்ளார் ஒரு வாலிபர். உத்தரப் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டாவதுகட்டமாக நேற்று (ஏப்ரல் 18) உத்தரப் பிரதேச மாநிலத்தில் எட்டு தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அவற்றுள் புலந்த்ஷார் தொகுதியும் ஒன்று.

தற்போது பாஜக எம்.பி.யாக இருக்கும் போலா சிங்குக்கும் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் - ராஷ்டிரிய லோக் தளம் கூட்டணி வேட்பாளர் யோகேஷ் வர்மாவுக்கும் இடையே அத்தொகுதியில் போட்டி நிலவுகிறது.

புலந்த்ஷார் தொகுதிக்கு உட்பட்ட ஷிகார்புர் அருகேயுள்ள அப்துல்லாபுர் குலசன் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் பவன் குமார். 25 வயதான இவர், பகுஜன் சமாஜ் கட்சியின் தீவிர ஆதரவாளர். நேற்று நடந்த தேர்தலின்போது வாக்களிக்கச் சென்ற இவர், தவறுதலாக பாஜக வேட்பாளர் பெயருக்கு நேராக இருந்த பட்டனை அழுத்திவிட்டார்.
தான் தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததை உணர்ந்த பவன், அது பற்றிப் புலம்பிக்கொண்டே இருந்துள்ளார்.

தவறுதலாக வாக்களித்த குற்றவுணர்வில் இருந்தவர், வீட்டுக்குச் சென்றதும் தனது விரலைக் கத்தியால் வெட்டிக்கொண்டுள்ளார்.
 இதைப் பார்த்த அவரது சகோதரர், பவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்ற பின்பு, இருவரும் வீடு திரும்பியுள்ளனர்.
செய்த தவறுக்கு கையை வெட்டிக்கொண்ட பொற்கைப் பாண்டியன் நினைவு வருகிறதா?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
பயங்கரவாதி பாஜக வேட்பாளர்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான பாஜக வேட்பாளர்கள் குற்றவாளிகள். இவர்கள் மீதுள்ள வழக்குகள் அரசியல் காரணங்களுக்காக போடப்பட்டவை அல்ல.
கொலை,கொள்ளை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட மிகத்தீவிரமான குற்றங்களுக்காகச் சிறையில் இருந்தவர்கள் அல்லது வழக்கை எதிர்கொள்பவர்கள்.

இவர்களைத் தான் வித்தியாசமான கட்சி என்றுகூறிக்கொள்ளும் பாஜக தேர்தலில் நிறுத்தியுள்ளது.
 இதுமட்டுமல்ல மத்திய அரசு அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரங்கள் மூலமாகப் பலகோடிரூபாய் நன்கொடையாகப் பெற்றுள்ள கட்சியும் அதுதான்.
போலியாக நிறுவனத்தைத் தொடங்கிஅந்த நிறுவனத்தின் பெயரால் தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டு பாஜகவுக்கு நன்கொடைஎன்ற பெயரில் கறுப்புப்பணம் வெள்ளையாக்கப்பட்டிருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.

இந்த நிலையில் மாலேகான் வெடிகுண்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் என்ற பெண் சாமியார் பாஜகவில் இணைந்து போபால் மக்களவைத் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
மக்களை மதரீதியில் பிரிப்பதற்காக பிரக்யா சிங்கை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
காரணம் போபால் தொகுதியில் கணிசமான வாக்காளர்கள் முஸ்லிம்கள்.

கடந்த செப்டம்பர் 2006-ல் மகாராஷ்டிராவின் மாலேகானின் மசூதிஅருகே வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 
100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 இந்தசம்பவத்தில் முக்கியக் குற்றவாளிதான் சாத்விபிரக்யா சிங்.தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இவர்மீதான வழக்கு மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்த வரை சரியாகவே நடந்தது.
 2014ஆம்ஆண்டு மோடி தலைமையிலான பாஜக அரசுவந்தபின்னர் தேசிய புலனாய்வு முகமைக்கு கடும்நெருக்கடி தரப்பட்டது.
இதன் விளைவு மாலேகான் குண்டுவெடிப்பில் பிரக்யா சிங்குக்கு எதிரான சாட்சிகள் குலைக்கப்பட்டன. மேலும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மிகவும் பலவீனமாக இந்தவழக்கை நடத்தினர்.
இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு இவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன்அளித்தது.

சிறையிலிருந்து விடுதலையானவுடன் அவர்பாஜகவில் சேர்ந்திருப்பதன் மூலம் தமது பின்னணி என்ன? என்பதை வெளிப்படையாக நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்திவிட்டார்.

 போபால் மக்களவைத் தொகுதியில் 1989 ஆண்டுமுதல் தொடர்ந்து பாஜக வெற்றி பெற்றுவருகிறது.

இம்முறை இந்த தொகுதியை பாஜக-விடமிருந்து கைப்பற்றவேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான திக் விஜய் சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

பாஜக-வை கடுமையாக விமர்சனம் செய்து வரும் அவர் எதிராளிக்கு கடும் போட்டியை ஏற்படுத்துவார் என்பதில்சந்தேகமில்லை.

 தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு சிறைக்குசென்ற ஒருவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளதன் மூலம் பாஜக மோசமான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிட்டது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------


 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?