`2016, நவம்பர் 8-ம் தேதி என்ன‌ நடந்தது?

அமித் ஷா திருட்டுத்தனம் பற்றி 

 கபில் சிபல் வெளியிட்ட அதிர்ச்சிகாணொலி 


"இவர்கள்தான் சவுகிதார்களாம்.உலக மகா திருடன்கள் .இந்த ஊழலின் மொத்தவடிவங்கள்தான் ஊழல் கறைபடியாத ஊழல் எதிர்ப்பார்க்கலாம்.நம்பாதவர்கள் தேசத்துரோகிகள்."

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பா.ஜ.க நிர்வாகிகள் பெருமளவு ஊழலில் ஈடுபட்டுள்ளதாகக் காங்கிரஸ் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. தேர்தல் பிரசாரங்களுக்கு மத்தியில் இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பனமதிப்பிழப்பு 
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்னும் பணமதிப்பிழப்பு (DeMonetisation) நடவடிக்கையை மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இரவோடு இரவாக அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் திண்டாடிப் போனார்கள். இயல்பு நிலை திரும்ப சில மாதங்கள் ஆனது. இந்த நடவடிக்கையால் கறுப்புப் பணம் பெருமளவுக்கு ஒழிந்துவிட்டதாக மோடி பெருமிதப்பட்டார். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையே புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டது.
கபில்சிபல்
இந்த நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்னும் பேரில் பா.ஜ.க மிகப்பெரிய ஊழல் நடத்தியுள்ளதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க மீது கபில் சிபல் முன்வைத்த குற்றச்சாட்டுகள்.
``இந்திய வரலாற்றில் இதுவரை நடந்த ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழல் பணமதிப்பிழப்பு என்னும் பேரில் நடத்தப்பட்ட ஊழல்தான்.
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதும் அமித் ஷா தலைமையில் மிகப்பெரிய பணப்பரிமாற்றம் அரங்கேறியுள்ளது. அதற்கான வீடியோ ஆதாரங்களும் உள்ளன.
பா.ஜ.க அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரிடம் இருந்த ரொக்கப் பணம், விமானங்கள் மூலம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹின்டான் விமானப்படை தளத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கிருந்து ரிசர்வ் வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 35-40 சதவிகிதம் கமிஷன் தொகை பெறப்பட்டு ரிசர்வ் வங்கி பணத்தை மாற்றிக் கொடுத்துள்ளது.
இந்த பணப்பரிமாற்றத்தை கண்காணிக்க அமித் ஷா அனைத்துத் துறைகளில் உள்ள அரசு அதிகாரிகள் 26 பேரை நியமித்து குழு அமைத்துள்ளார்.
கபில் சிபல்
இந்தத் தகவல்கள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பான RAW வாயிலாக வெளியே கசிந்துள்ளது. அது இந்தியாவின் வெளிநாட்டு உளவு நிறுவனமாகும்.
வீடியோவில் இருப்பவர் RAW அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ராகுல் பணப்பரிமாற்றம் எப்படி நடந்தது என்பதை விளக்குகிறார். அவருடன் அவரின் மனைவியும் இருக்கிறார். அவரும் இந்த ஊழலில் தொடர்புடையவர்.
செல்லாத நோட்டுகளை விமானம் மூலம் கொண்டுவந்து ரிசர்வ் வங்கியில் பரிமாற்றம் செய்துள்ளனர். இதில் Raw நிர்வாகி ராகுல் மட்டும் 20,000 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்து கொடுத்திருக்கிறார்.
``உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் என யாருமே இதைக் கண்டுகொள்ளவில்லை. அப்படி கேள்விக் கேட்பவர்களை அமித் ஷா பார்த்துக்கொள்வார்’’ என்று அந்த வீடியோவில் ராகுல் குறிப்பிடுகிறார்.
அதுமட்டும் இல்லை, இந்த ஊழலில் ரிலையன்ஸ் ஜியோ தரவுகளைத் தவறான முறையில் பயன்படுத்தியுள்ளனர்.
கடைசியாக மற்றொரு அதிர்ச்சியான செய்தியையும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்தப் பணப்பரிமாற்றம் தொடங்கிவிட்டது. உர்ஜித் படேல் கையெழுத்திட்ட புதிய ரூபாய் நோட்டுகள் நவம்பர் மாதத்துக்கு ஆறு மாதங்கள் முன்பே அச்சிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அந்த வீடியோவில் உள்ளன. மக்கள் www.tnn.world என்னும் இணையதளத்தில் இந்த வீடியோவை முழுமையாக பார்க்கலாம்’’ என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

``பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஆளும் கட்சி பல்வேறு ஊழலில் ஈடுபட்டதை உளவுதுறை அமைப்புகள் ஆராய்ந்து வருகின்றன. ஆனால் யாருக்கும் ஆளும் கட்சியை எதிர்த்து புகார் கொடுக்க தைரியமில்லை. காங்கிரஸ் ஆளும்கட்சியின் நடவடிக்கை குறித்து பலமுறை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. ஆனால், தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் நீதிமன்றத்தையும் அணுக முடியவில்லை’’ என்றும் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
                                                                                                                                                                                                                  நன்றி:விகடன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?