புத்தம் புதிய காப்பி
ஒரு வழியாக பாஜக தேர்தல் அறிக்கையை
வெளியிட்டுவிட்டது.
கடந்த தேர்தல் அறிக்கையிலேயே அனைத்து பொய்களையும் அள்ளி வீசிவிட்டதால் இந்த முறை புதிய பொய்களை தயாரிப்பதற்குள் அவர்களுக்கு நாக்கு தள்ளிவிட்டது.
கடந்த முறை அளித்த சில வாக்குறுதிகளையே புத்தம் புதிய காப்பி என்று வண்ண நகல் (கலர் ஜெராக்ஸ்) எடுத்து இந்த முறையும் தந்துள்ளனர்.
அதில் சில அருதப் பழசு.கடந்த முறை மக்களவைத் தேர்தல் துவங்கிய முதல் நாளன்றுதான் அறிக்கையை வெளியிட்டனர்.
அந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டவர் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி.
இந்த முறை அவரும், எல்.கே.அத்வானியும் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
பொய்யான வாக்குறுதிகளை வெளியிட்டதற்காக முரளி மனோகர் ஜோஷிக்கு சீட் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது.
இந்தத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு அடுத்த தேர்தலில் சீட் கிடைப்பது சந்தேகமே. ஏனென்றால் இந்தத் தேர்தல் அறிக்கையிலும் ஏராளமான பொய்களை மை கொண்டு எழுதியுள்ளனர்.
மளிகைக் கடை சிட்டை எழுதுபவர்கள் எடுத்தவுடன் பிள்ளையார் சுழி போடுவதுபோல பாஜக எப்போது தேர்தல் அறிக்கையை தயாரித்தாலும் ராமருக்கு கோயில் கட்டுவோம் என்றுதான் துவங்குவார்கள்.
இந்த முறையும் அந்த வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாக்குறுதியை கேட்டு ராமபிரானின் காதே புளித்துப் போயிருக்கும்.
எனக்கு கோயிலும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம், என்னை விட்டுவிடுங்கள் என்று பாஜகவிடம் கதறிக்கொண்டிருக்கிறார் தசரதகுமாரன்.
அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும் என்றும் பாஜகவின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.
வீடு என்றால் மேலோகம் என்று ஒரு பொருளும் உண்டு.
இவர்கள் இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் அனைவரையும் மேலோகம் அனுப்பிவிடுவார்கள்.
கடந்த தேர்தல் அறிக்கையைப் போலவே இந்த முறையும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்படும் என்று பாஜக கூறியுள்ளது.
இவர்கள் பின்பற்றிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் காரணமாகவே ஜம்மு-காஷ்மீர் பிரச்சனை மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டிருக்கிறது.
அதை ஒருவழியாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கொஞ்சம் கூட கூசாமல் இந்த முறையும் எழுதி வைத்துள்ளனர்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருப்பார்களா?

விவசாயிகளின் நிலத்தை பறிக்க மாறி மாறி அவசரச் சட்டம் கொண்டுவந்தவர்கள், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற என்ன செய்தார்கள்?
கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிக்குழு அமைக்கப்படும். கருப்புப்பண பரிவர்த்தனைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்றெல்லாம் கடந்த தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள்.
பாஜக அமைத்த அந்தப் பணிக்குழுவில் அம்பானி, அதானி, அமித் ஷாவின் மகன் மற்றும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய மல்லையா, நீரவ் மோடி, சோக்சி ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள் போலிருக்கிறது. பணிக்குழு மிகவும் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது.
கருப்புப் பணம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க வல்லபாய் படேல் சிலைக்கு அருகில் இடம்பார்த்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது கருப்புப் பணத்தை கைப்பற்றி ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15லட்சம் டெபாசிட் செய்வோம் என்றார் மோடி.
அந்தத் தொகையை செலவழிக்க முடியாமல் இந்திய குடிமக்கள் திணறிக் கொண்டிருப்பதால் இந்த முறை அதுகுறித்து எதுவும் கூறவில்லை.கடந்த முறை அளித்த தேர்தல் அறிக்கையில் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோம், விளைபொருளுக்கு உற்பத்திச் செலவைவிட ஒன்றரை மடங்கு அதிக விலை தருவோம் என்றார்கள்.
இந்த முறை விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவோம் என்று கூறியுள்ளனர்.
விவசாயிகள் அனைவரையும் விவசாயத்தை விட்டு விரட்டி அவர்களுக்கு ஓய்வூதியம் தரப்போகிறார்கள் போலிருக்கிறது. இவர்கள் விவசாயிகளுக்கு அல்ல, விவசாயத்திற்கே ஓய்வளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அது நம்வேலை இல்லை என்று விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது.
உயர்கல்வியை மேம்படுத்த ரூ.1லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அந்தத் தொகை முழுவதையும் ஆரம்பிக்கப்படாத அம்பானியின் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு வழங்குவோம் என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம்.
சில்லரை வணிகத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய கொள்கை உருவாக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறது.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்ததன் மூலம் அந்தத் துறையையே நாசம் செய்துவிட்டது மோடி அரசு. இதில் இன்னும் ஒரு தேசிய கொள்கையை உருவாக்கப்போகிறார்களாம்.
மாநிலங்களிடம் கலந்து ஆலோசித்து ஜிஎஸ்டி எளிமைப்படுத்தப்படும் என்றும் பாஜகவின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மாநிலங்களின் வரி வருவாயை வாரிச் சுருட்டிய பிறகு இனி ஆலோசிக்க என்ன இருக்கிறது. ஜிஎஸ்டியை எளிமைப்படுத்துவோம் என்றால் இந்த வரிவரம்புக்குள் வராத அனைவரையும் வேட்டையாடுவோம் என்றுதான் பொருள்.
வரிக்குதிரையைவிட கூடுதலான அளவுக்கு வரி போட திட்டம் போடுகிறார்கள் போலிருக்கிறது.
இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதே இலக்கு என்றும் பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறது.
சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டை கொண்டாட உள்ள 2047ஆம் ஆண்டில் இந்த இலக்கை நிறைவேற்றுவார்களாம். அதுவரை பாஜக என்ற கட்சி இருந்தால் பார்க்கலாம்.
2022ம் ஆண்டு 75வது சுதந்திரம் தினம் கொண்டாடப்பட உள்ளதால் 75 முக்கிய வாக்குறுதிகளை தற்போது தந்திருக்கிறதாம் பாஜக.
சுதந்திரப் போராட்டத்தோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாத இவர்கள் சுதந்திரத் தினத்தையே பொய் வாக்குறுதிகள் மூலம்தான் நினைவுபடுத்திக் கொள்கிறார்கள்.
மக்களிடம் இருப்பது ஒரே ஒரு வாக்குறுதிதான்.
அது இனி பாஜக ஆட்சி வேண்டாம்
என்பதுதான்.
- மதுக்கூர் ராமலிங்கம்.
"பெண்களுக்கு எதிராக குற்றம் செய்யும் வகையில் சட்டம் மாற்றப்படும்"
("transferring the laws in order to commit crimes against women") எனவும்
"பாலியல் வன்புணர்வுக்காக வழி ஏற்ப்படுத்தப்படும் "
("trail for Rape")
என்று குறிப்பிட்டுள்ளதை என்ன சொல்லுவார்கள்??
ரபேல் ஊழல் மேலும் ஆதாரங்கள்
பிரான்ஸ் நாட்டின், டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து, ரபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில், மோடி அரசு ரூ. 58 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்திருப்பதாக, எதிர்க் கட்சிகள் இப்போதுவரை குற்றச்சாட்டு வைத்து வருகின்றன.
கொள்முதல் செய்யப்படும் ரபேல் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்தது;
விமானங்களுக்கு மூன்றுமடங்கு அதிக விலை கொடுக்க சம்மதித்தது;
டஸ்ஸால்ட் நிறுவனத்தின் கூட்டுநிறுவனமாக இருந்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை வெளியேற்றி விட்டு, அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்தைச் சேர்த்துக்கொண்டது ஆகியவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அரசால் எந்த பதிலும் அளிக்க முடியவில்லை.
நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய விஷயம் என்பதால், ரபேல் ஒப்பந்தம் பற்றி வெளிப்படையாக விவாதிக்க முடியாது என்ற வார்த்தைகளையே திரும்பத்திரும்ப கூறி வருகிறது.
ரபேல் ஊழல் தொடர்பான ஆதாரங்களை, பிரான்ஸ் நாட்டு ஊடகங்களேவெளியிட்ட போதும், ‘ரபேல் ஒப்பந்தம்நடந்த போது, பிரான்ஸ் அரசுடன், இந் திய பிரதமர் அலுவலகம் நேரடியாக பேரம் பேசியது;
இந்தியாவுக்கு இழப்புஏற்பட்டாலும் பரவாயில்லை என்று அனில் அம்பானி ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக இவ்வாறு பேரத்தில் இறங்கியது’ என்று ‘தி இந்து’ ஆங்கில ஏட்டின் ஆசிரியர் என். ராம் பகிரங்கமாகவே குற்றம் சாட்டிய போதும் கூட, மோடி அரசு விசாரணைக்கு முன்வரவில்லை.
இந்நிலையில், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்திற்கு சாதகமாக, மோடி அரசு செய்த அதிகார துஷ்பிரயோகம் குறித்து மேலும் பல புதிய ஆதாரங்களை என். ராம் வெளியிட்டுள்ளார்.
“இந்திய ராணுவ விமான ஒப்பந்தவிதிகளில் இரண்டு முக்கியமான விஷயங்களை அடிப்படையாக கடைபிடிக்க வேண்டும். முதலில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் யாருடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
இது முறையற்ற கமிஷன் கைமாறுவதற்கு எதிரானவிதியாகும்.
மற்றொன்று, வெளிநாட்டு நிறுவனங்கள் ஒப்பந்த கணக்குகளை பார்க்க அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவெடுக்கும் விஷயமாகும்.
ஆனால் இந்த இரண்டு விதிகளையும் மோடி அரசு காற்றில் பறக்கவிட்டு இந்த ஒப்பந்தத்தை செய்து இருக்கிறது.
இதன்படி, முதல் விதியான பேச்சுவார்த்தை விதியில் முறைகேடு நடந்து உள்ளது.
அதாவது இந்தியாவின் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை குழுவுடன் மட்டும் பிரான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
தனிப்பட்ட முறையில் பிரதமர்அலுவலகமும், பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.அதேபோல் ஒப்பந்தத்தின் கணக்கு வழக்குகளை பார்க்க ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது இந்திய ஒப்பந்த விதிமுறைகளின்படி மிக மிக தவறு.
ஆனால்இந்த இரண்டு விதிகளையும் கண்டுகொள்ளாமல்தான், ஒட்டுமொத்த ஒப் பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், இந்த ஒப்பந்தத்தில் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்திற்குதான் அதிக லாபம் கிடைத்து இருக்கிறது. இந்த விதிமுறை மீறலுக்கு அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
அதேபோல் ரபேல்ஒப்பந்த பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்று இருந்த அதிகாரிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
ஆனால் அனைத்தையும் மீறித்தான்பிரதமர் அலுவலகம் நடத்திய தனிப்பட்டபேச்சுவார்த்தை மூலம் இந்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்று இருக்கிறது.” என்று என். ராம் குறிப்பிட்டுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய வாரன் பப்பெட்.
பாஜக தலைவர் அமித்ஷா, குஜராத்மாநிலம் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், அந்த வேட்புமனுவுடன் அமித்ஷா தாக்கல் செய் துள்ள சொத்து விவரங்களில், புதிய தகவல்கள் பல வெளியாகியுள்ளன.
அமித்ஷா தனக்கு ரூ. 30 கோடியே49 லட்சம் அளவிற்கு சொத்துக்கள் உள்ளதாக கணக்கு காட்டியுள்ளார் என்றால், இதில், கார்ப்பரேட் நிறுவனங்களில் அவருக்கு இருக்கும் பங்குத்தொகை மட்டும் ரூ. 17 கோடியே56 லட்சம் என்று தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தில் ரூ. 2 கோடியே 15 லட்சம் அளவிற்கு பங்குவைத்துள்ள அமித்ஷா,
டிசிஎஸ் நிறுவனத்தில் ரூ. 1 கோடியே 6 லட்சம்,
அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனத்தில்ரூ. 97 லட்சம்,
எச்யுஎல் நிறுவனத்தில் ரூ.83 லட்சம்,
எல் அண்ட் டி நிறுவனத்தில் ரூ. 78 லட்சம்,
மாருதி சுசுகி நிறுவனத்தில் ரூ. 65 லட்சம்,
பி அண்ட் ஜிநிறுவனத்தில் ரூ. 62 லட்சம்,
எம்ஆர்எப்நிறுவனத்தில் ரூ. 56 லட்சம்,
கோல் கேட் நிறுவனத்தில் ரூ. 50 லட்சம்,
ஐடிசிநிறுவனத்தில் ரூ. 45 லட்சம்,
கிராசிமில்நிறுவனத்தில் ரூ. 22 லட்சம் என்று பங்குகளை வாங்கிக் குவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட 200 நிறுவனங் களில் மட்டுமன்றி, அங்கீகரிக்கப்படாத 80 நிறுவனங்களிலும் எக்கச்சக்கமாக பணத்தை முதலீடு செய்துள்ளார்.
இவைதவிர, தன் பெயரில் ரூ. 1 கோடியே 25 லட்சம் அளவிற்கு விவசாய நிலம்,
ரூ. 6 கோடிக்கு விவசாயம்அல்லாத நிலம்,
மனைவி சோனல் பென் பெயரில் ரூ. 3 கோடியே 90 லட்சத்திற்கு சொத்து,
ரூ. 35 லட்சத்து 29 ஆயிரத்திற்கு தங்க நகைகள்,
ரூ.63 லட்சத்திற்கு வைரக் கற்கள் இருப்பதாகவும் அமித்ஷா கணக்கு காட்டியுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் மோடி வந்தால் நல்லது: பாக்., பிரதமரே சொல்கிறார்-தினமலர் புளகாங்கிதம்.
அட அறிவுகெட்ட தினமலர் .இந்தியாவை அழிக்க தீவிரவாதிகளுக்கு தெண்டம் அழ வேண்டாம்.
மோடியே போதும்னு சொல்லுகிறார் இம்ரான்.அது கூட புரியாமல் அதை பாராட்டுனு பிரேம் போட்டுவைக்கிறே.