குழப்பாமல் தெளிவாக பகிரங்கமாக அறிவியுங்கள்.கமல் !


அல்லது அதில் உங்கள் குழப்பமான பேச்சை கடைசியாகப்போட்டு குழம்பிப்போய் உடைப்பதாகப் போட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும்.

தொலைக்காட்சியை உடைப்பது என்ன அரசியல் பரப்புரை.
அதை சாதாரண மக்கள் செய்தால் சரி.

ஒரு கட்சியை அல்லது மய்யத்தை வைத்திருக்கும் தலைவர் செய்வது எப்படி சரியாகும்?



ஊழல் என்றாலே காதில் புகை வரும் ஊழல் எதிர்ப்பாளராக உங்களை நீங்கள் கட்டிக்கொள்கிறீர்கள்.
ஆனால் 3000 கோடிகள் ஊழலில் மாட்டிக்கொண்டு சிபிஐ விசாரணையை எதிர் கொள்ள பயந்துவாழும் போராளி மம்தா பானர்ஜியை போய் சந்தித்து கூட்டணி அமைக்கிறீர்கள்.அவரை ஆதரித்து அந்தமான் சென்று பரப்புரை செய்கிறீர்கள்.

மம்தா பானர்ஜி லேசுப்பட்டவர் அல்ல.வங்கத்தின் ஜெயலலிதா.அவர் 250 ரூபாய் சாதாரண சேலைதான் காட்டுகிறார் என்று பெருமிதப்படும் நீங்கள் ஜெயலலிதா இங்கு ஒரு ரூபாயைத்தான் சம்பளமாகப்பெற்றார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.அதனாலதான் உங்கள் ஊழல் எதிர்ப்பு வீரத்தை ஜெயலலிதா இருக்கும் வரை மூட்டைக்கட்டி ஆழ்வார் பேட்டையில் வைத்திருந்தீர்களா.

உங்கள் தேர்தல் பரப்புரையும் ,கட்சி ஆரம்பித்தபின்  பேசுகிறவைகளும் பழைய கமல்ஹாசன் பேசினவைகளுக்கு முற்றிலும் மாறாக உள்ளதை நீங்களே உணர்ந்திருப்பீர்கள்.
அதாவது "தேடித்திருப்போம் வா "வரை நீங்கள் நான்  விரும்பிய கமல்.அதுவரை அவரிடம் இடதுசாரி சிந்தனைகள் இருந்தன.பிரனாயி விஜயனை அடிக்கடி சந்தித்தவர்.திராவிடம் என்றால் பகுத்தறிவுடன் சிந்தித்து விளக்கியவர்.
அன்றைய பிரதமர் நரசிம்மராவையே எதிர்த்து கேள்வி கேட்ட  அரசியல் தெளிவு மிக்கவர்.
இவையெல்லாம் தான் உங்கள் படைப்பை மட்டும் ரசித்த என்னைப்போன்றவர்களை உங்களின் நற்பணி மன்றத்தில் ஈடுபடவித்தது.

இறை மறுப்பாளரான உங்களையே அதே அலைவரிசையுள்ள எங்களைப்போன்றவர்களை ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்று கூவ வைத்தது .
இன்று மனதில் ஆண்டவனை போல உங்களையும் இல்லை என்றாக்கிவிட்டது உங்கள் செயல்கள்,பேச்சுக்கள்.

கமல் என்றால் தாமரை என்பதை உணர்ந்த பின்னர் தான் இந்த மாற்றமா?
நடப்பது இந்திய நாடாளுமன்றத்தேர்தல் .இதில் விமர்சிக்க வேண்டியவர்கள் மத்தியில் ஆள்பவர்கள்,ஆண்டவர்கள்.
ஆனால் மய்யம் கொள்கைப்படி நீங்கள் விமரிசித்தது மத்தியில் மட்டுமல்ல,மாநிலத்திலும் கூட ஆளுங்கட்சியாக இல்லாத திமுகவை.

மோடியை விமர்சித்து ஒருவர்த்தைக் கூட நீங்கள் பேசியதாக நினைவுக்கெட்டிய தூரம் வரை ஆதாரம் இல்லை.
மாறாக 120 உயிர்களை பலி கொண்ட,இந்திய மக்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட ,சிறு,குறுந்தொழில்களையே இல்லாமல் போக்கி விட்ட பணமதிப்பிழப்பை ஆதரித்து அறிக்கை விட்டீர்கள் நீங்களும்,ரஜினியும்.இன்றுவரை நீட் தேர்வைப்பற்றி தெளிவான முடிவை சொல்லவில்லை.

அதுமட்டுமா விவசாயிகள் நலனுக்கெதிராக செயல்பட்டார் மோடி,எட்டுவழிசாலை,சாகரமாலா,பாரதமாலா என்ற கடலோர மக்களின் வாழ்க்கையை இல்லாமல் செய்யும் திட்டங்கள்,ரபேல் ஊழல் இது போன்ற எத்தனையோ மோடி அரசின் கொடுங்கோல் கைகளை விரிக்கையில் அதை பற்றி கண்டு கொள்ளாத உங்களுக்கு 2ஜி,சர்க்காரியா போன்றவற்றில் இருந்து நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்ட திமுகவினர் மட்டுமே ஊழல்வாதிகள்.

ஊழல்,வாரிசு அரசியல் என்பதுதான் நீங்கள் வைக்கும் குற்றசாட்டு.அது திமுகவுக்கு மட்டுமே பொருந்தும் என்பது உங்கள் வாதம்.


உங்கள் குடும்பமே வாரிசு நடிப்புக்குடும்பம்தானே.இருமகள்கள்,விட்டுப்போன இருமனைவியர்,ஒரு துணைவியார்,அண்ணன்கள்,அன்னான் மகள்கள் அனைவருமே நடிகர்கள்தானே.
 டாகடர் மகன் டாக்டர் ஆகலாம்,வக்கீல் வாரிசுகள் வக்கீல்களாகலாம்.
 சிறுவயதில் இருந்தே அரசியல் சூழலில் வாழ்ந்த,வளர்ந்தவர்கள்,செயல்பட்டவர்கள் மட்டும் அரசியலுக்கு வரக்கூடாது .
இது எந்த ஊர் நியாயம்.


எம்.ஜி.ஆர். இறந்தவுடன் அவரது மனைவி என்பதால் அவருக்கு விருப்பமே இல்லாவிட்டாலும் முதல்வராக்கப்பட்டவர் ஜானகி அம்மையார்.18 நாட்கள் போல்தான் முதல்வர்.ஜா அணி என்றும்,ஜெ அணி என்றும் அடித்துக்கொண்டார்கள்.பின்னர் அவர் அரசியலை விட்டே விலகி விட்டார்.
இதை சொல்லக்காரணம் வாரிசு என்றாலும் அரசியல் ஆர்வம் இல்லாதவர்கள் அரசியலுக்கு வரப்போவதில்லை.

நீங்கள் எதிர்க்க வேண்டிய வாரிசு அரசியை திடீரென தேர்தலில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் பன்னிரு செல்வம்,ஜெயக்குமார் மகன்களைத்தான்.13 வயதில் இருந்தே திமுக கொடியைத்தூக்கியவர்,மிசாவில் அடிகளை கட்சிக்காக வாங்கிக்கொண்டவரை அல்ல.கலைஞருக்கு வாரிசுகளாக அழகிரி,தமிழரசு ,மு.க.முத்து என்று பலர் இருக்கையில் மு.க.ஸ்டாலினை மட்டும் அன்றைய அரசு மிசாவில் கைது செய்து மரண அடி அடித்தது ஏன்.காரணம் அரசியல் ஈடுபாடுதான்.

 உங்களைப்போல் திடீர் அரசியல் தலைவர்களை விட தலைவராகும் தகுதி ஸ்டாலினுக்குத்தான் உண்டு.

உங்களுக்கு 50 ஆண்டுகாலம் திரைத்துறை இருந்த அனுபவம் மட்டும்தான் இன்றைய அரசியலுக்கு கொண்டுவந்துள்ளது.
ஸ்டாலினுக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் மட்டுமே அரசியல் செய்த அனுபவம் உண்டு.மேயர்,துணை முதல்வர் என பணியாற்றி அதில் பெயர்வாங்கிய தகுதியும் உண்டு.
அவரைப்பார்த்து நீங்கள் விமரிசிப்பது பழைய பழமொழி என்றாலும்  பொருத்தமானது "சூரியனைப்பார்த்து" என்று துவங்கும் சொலவடைதான்.

உங்கள் அரசியல் பயணத்தில் கலந்து கொள்ள எனக்கும் ஆர்வமாகத்தான் இருந்தது.கரணம் அன்றைய பேச்சுக்கள்.திராவிடம்,பகுத்தறிவு,இடதுசாரித்தனம் எல்லாம்தான்.

ஆனால் கட்சி ஆரம்பித்தவுடன் உங்களின் நேர் எதிர் பயணம் அதிற்சியைத்தந்தது.முதல் அதிர்ச்சி "கருப்பினுள் காவியும் இருக்கிறது "என்றதுதான்.

அப்போதே எனது பகுத்தறிவு தனது வேலையைதுவக்கியது.
எடப்பாடியை சிறிது தாக்குவது போல் தாக்கிவிட்டு அப்படியே பயணித்து அழுக்குப்பொதி திமுக என்றது.
பணமதிப்பிழப்பை திமுக மட்டுமல்ல இடதுசாரிகள் உட்பட எல்லாக்கட்சிகளும் தாக்கி பேசியபோது வரவேற்றது தமிழ்நாட்டில் கமல்ஹாசனும்,ரஜினிகாந்த் என்ற இருவர் மட்டும்தான்.
அன்றே உங்கள் அரசியல் பாஜகவின் ஐந்தாம்படைதான் நீங்களோ என்று ஐயுறவைத்தது.

ஐயமே வேண்டாம் நான் பாஜகவின் பி டீம்தான்.பகுத்தறிவு,திராவிடம்,இடதுசாரி கருத்துக்களை பேசி மக்களை குழப்பிட வந்த திரிபுவாதி தான் என்பதை உங்கள் இன்றைய செயல்கள் பகிரங்கப்படுத்தி விட்டது.
இதில் உங்கள் நண்பர் ரஜினி தேவலாம்.அவர் அவவப்போது பாஜக ஆதரவாக பேசி தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார்.

படித்தவர்கள்,தொழிலதிபர்களைத்தான் வேட்பாளர்களாக்குவேன் என்று அதன்படி செயல்பட்டிருக்கிறீர்கள்.இவர்கள் மக்களுக்கு சேவை  செய்வார்களா?செலவிட்ட பணத்தை மீட்பது எப்படி என்று வியாபாரக்கணக்கிடுவார்களா?

ஆக படிக்காதவர்கள் முட்டாள்கள் என்ற என்னமா?மக்களவையில் தமிழ் உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் பேச,தங்கள் வாதத்தை எடுத்துவைக்க முடியும்,அதற்கான மொழிபெயர்ப்பு கருவிகள் உள்ளது .தமிழிலேயே பேசலாம் .படித்தவர்கள் எல்லோரும் சரளமாக பேசுவார்களா என்ன?


மிகையின்றி இயற்கையாக நடிப்பதால் உங்களைப்பார்த்து வியந்திருக்கிறேன்.ரசித்ததால் தீவிர ரசிகனானேன்.இன்றும் நான் உங்கள் ரசிகன்தான்.
ஆனால் அரசியலில் விரும்பத்தகாதவர்.சொல்லப்போனால் ஆதரிக்க கூடாதவர்.ராமதாஸ் ,அன்புமணி போன்றவர்களுக்கு உங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.அவர் சாதியை வைத்து ,நீங்கள் பணக்காரர்கள்,படித்தவர்களை வைத்து அரசியல் செய்கிறீர்கள்.
ஆனால் வாக்களிப்பது படிக்காதவர்கள்தான்.இன்று 90% தமிழர்கள் 10 வரை பிடித்துள்ளார்கள் என்பது உங்கள் தாழ்வான கவனத்துக்கு.

ஒரே ஒரு ஐயம் விஸ்வரூபம் பட போரின் போது குடியிருக்கும்விட்டு வரை அடமானத்தில் இருப்பதாக கண்ணீர் விட்டிர்களே.
இப்போது நாளொன்றுக்கு பலலட்சங்களில் செலவாகும் .பணம் எங்கிருந்து வருகிறது.குஜராத் சந்தானபாரதி தருகிறாரா?
விஸ்வரூபம் வெற்றி என்றாலும் வீடுகளைத்திருப்பி கடனைத்தான் அடைத்திருப்பிர்கள் .தேர்தல் செலவுக்குப்பணம்.
நிதி வசூல் ?
அப்படி நிதி தந்தவன் நீங்கள் (ஒருவேளை) வென்றால் உங்கள் மூலம் தனது காரியத்தை சாதிக்க நெருக்கடி கொடுப்பானே.
இப்போது அம்பானி,அதானிகள் செய்வது அதானே .,

அப்போ என்ன செய்வீங்க?அப்போ என்ன செய்வீங்க.
ஊழலின் முதல் விதை மய்யத்தில் போடப்பட்டு விட்டது என்று சொல்லலாமா?.
இல்லையெனில் பணம் வந்த விதத்தை உங்கள் பாணியில் குழப்பாமல் தெளிவாக பகிரங்கமாக அறிவியுங்கள்.


மோடி,அமித்ஷா ஊழல்
 ஒளிபரப்பு பாதியில் நிறுத்தம்.
மோடி அமைச்சரவையை கூட கூட்டி முடிவெடுக்காமல் தன்னிச்சையாக டீமானிட்டைசேசன் அறிவித்தபோதே பலருக்கும் சந்தேகம் எழுந்தது.
தேவையான புது ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை, அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஏடிஎம் எந்திரத்தில் பொருந்தக்கூடியதாக இல்லை.
அதுபோக உலகத்தில் எந்த ஒரு கேனையும் கருப்புப்பணத்தை ஒழிப்பதற்கு ஆயிரம் ரூபாய் நோட்டை தடை செய்துவிட்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை கொண்டுவரமாட்டான். ஆனால் மோடி கொண்டுவந்தார்.
இவ்வளவு படு சொதப்பலான, தேசத்தின் பொருளாதாரத்தையே நாசப்படுத்தக்கூடிய ஒரு முடிவை எடுக்கிற அளவுக்கு மோடியும் அமித்ஷாவும் அவ்வளவு கேனைகளா என்ற சந்தேகம் அப்போதே எழுந்தது. அதற்கான விடை இப்போது தான் தெரிகிறது.
பாஜக தலைவர் அமித்ஷா பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு 6 மாதம் முன்பே
* புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வெளிநாடுகளில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அச்சிட்டிருக்கிறார்.*
அவற்றை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய விமானப்படைத் தளங்களையும் விமானங்களையும், அதை இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களிடம் கொடுத்து மாற்ற நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி, பிரதமர் அலுவலகம் தொடர்புடைய 26 அதிகாரிகளை இதற்கென நியமித்துக் காரியம் சாதித்துக் கொண்டார்.
Reliance Jio தரவுத் தளத்தைப் பயன்படுத்தி பணப்பரிமாற்றத்தில் RBIக்குச் சந்தேகம் வராதவாறு பார்த்துக் கொண்டார்.
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதுமே குஜராத்தில் வைத்து 40% கமிஷன் பெற்றுக்கொண்டு சப்ளை செய்தார்.
நாம் ஏடிஎம் வாசல்களில் நம் பணத்தை எடுப்பதற்கே பிச்சைக்காரர்கள் போல வரிசையில் நின்று போலீஸிடம் அடிவாங்கினோம்.
இன்று இந்தச் செய்தியை காங்கிரசுக் கட்சியின் கபில்சிபல் அறிவித்தார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த போதே, அனைத்துத் தொலைக்காட்சிகளும் பாதியில் ஒளிபரப்பை நிறுத்திக் கொண்டன.

ஏன் என்றால், இந்தத் தொலைக்காட்சிகளை நடத்துவது அம்பானி.Reliance.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஜூலியன் வாலாபாக்கில் ராகுல்,ராஜ்நாத் சிங்,மோடி.






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?