தாமரைனு தமிழில் அழைக்க வேண்டுமா?

வாழ்த்தினால்  போதுமா?
"தமிழகத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி ‘தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச்’சொன்னாராம். புளகாங்கிதம் அடைந்து, புல்லரித்துப் போய் சமூக ஊடகங்களில் பரணி பாடிக் கொண்டிருக்கிறார்கள், மோடி பக்தர்கள்."

உண்மையில் கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் இந்தித் திணிப்பை வேகப்படுத்துவதையும், தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தடைக் கற்களை ஏற்படுத்துவதையும் ஆதிக்க வெறியோடுசெய்து வருகிறது பிஜேபி அரசு.
தமிழின் தொன்மையை உலகுக்கு உணர்த்தும் கீழடி அகழ்வாய்வுக்கு மோடி அரசு போட்ட முட்டுக்கட்டைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.
ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் வேண்டுகோளையும் காலில் போட்டு மிதித்து நீட் தேர்வைத் திணித்தது மோடி அரசு.
அதில் தமிழில் தேர்வெழுதி, வினாத்தாள் குழப்பம் காரணமாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் முன்முயற்சியுடன் உயர்நீதிமன்ற ஆணை பெற்று 49 மதிப்பெண்கள் நிவாரணம் பெற்றனர் தமிழக ஏழை, நடுத்தர மாணவர்கள்.

ஆனால் உச்ச நீதி மன்றத்துக்கு உடனே சென்று, தமிழக மாணவர்களுக்கான மதிப்பெண் நிவாரணத்தைத் தட்டிப் பறித்து, தனது மேலாதிக்க வெறியைத் தீர்த்துக் கொண்டது மோடி அரசு.
தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் (மட்டும்) பெயர் எழுதி நோட்டம் பார்த்தது பிஜேபி அரசு. எதிர்ப்பு பலமாக வந்தவுடன் ஓசைப்படாமல் பின்வாங்கிக் கொண்டது.

அவ்வளவு ஏன்? முழுவதும் தமிழ்நாட்டில் மட்டும் ஓடிக்கொண்டிருக்கும் இரயில்களுக்கு தமிழில் பெயர் சூட்டாமல் அந்த்யோதயா, தேஜஸ் என்று இந்தியில் பெயர் வைக்கிறது மோடி அரசு.
இதை எடுத்துச் சொல்பவர்களை நையாண்டி செய்து திமிரோடு பேசித் திரிகிறார்கள் தமிழக பிஜேபி தலைவர்கள்.
இப்போதோ ஒரு படி மேலே போய், நாங்கள் இந்தித் திணிப்பு மட்டும் அல்ல, சமஸ்கிருதத் திணிப்பும் செய்வோம், என்ன செய்வீர்கள் பார்ப்போம் என்று தமிழக மக்களைப் பார்த்து சவால் விடுகிறது பிஜேபி.

சமஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்தும் முயற்சியாக பள்ளிக் கல்வியில் சமஸ்கிருதம் புகுத்தப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையிலேயே அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது பிஜேபி.

தமிழகத்தை ஆளும் ‘அதிமுக’, பிஜேபி-யின் மிரட்டல்களுக்குப் பயந்து ‘மோடிமுக’-வாக மாறிவிட்ட நிலையில், தமிழைப் புறக்கணிப்பதையும், தங்களுடைய ஆதிக்கச் செயல்பாடுகளை நிலைநாட்டுவதற்காக இந்தி, சமஸ்கிருதத்தை வளர்ப்பதையும், தயக்கம் எதுவுமின்றிச் செயல்படுத்த முனைகிறது ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் முகமான பிஜேபி.


 பிஜேபி-யின் இத்தகைய போக்கிற்கு இருபதாண்டுகளுக்கு முந்தைய ஒருசில நிகழ்வுகளை இப்போது நினைவுகூர வேண்டியுள்ளது.
1998-2004 வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் சமஸ்கிருதத்தைச் செம்மொழி என்று அறிவித்து, அதற்கான வளர்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கென ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதியை ஒதுக்கியது அன்றைய அரசு.

1999 தேர்தலில் மதுரையில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்ற மார்க்சிஸ்ட் எம்பி தோழர் பொ. மோகன் தனது முதலாவது உரையிலேயே சமஸ்கிருதத்திற்கு வழங்கப்பட்டி ருப்பது போல, பழம் பெருமையும் தொன்மையும் மிக்க தமிழ் மொழிக்கும் செம்மொழிஅந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று மக்களவையில் கோரிக்கை வைத்தார்.

அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியதோடு பிரதமருக்கு அடுத்தடுத்துக் கடிதங்களும் அனுப்பினார்.தமுஎகச அமைப்பு நூற்றுக்கணக்கான தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களைப் புது தில்லிக்கே அழைத்துச் சென்று செம்மொழி கோரிக்கைக்கென தலைநகரில்ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இது எப்படி இருக்கு?


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்த ஆர்ப்பாட்டத்தில்தானும் பங்குகொண்டு ஆதரவு நல்கினார்.ஆனால் சமஸ்கிருதத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய பிஜேபி அரசாங்கம், தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கிடும் நியாயம் நிறைந்த கோரிக்கையைக் கடைசி வரை கண்டுகொள்ளவே இல்லை.

2004-ல் இடதுசாரிகள் ஆதரவோடு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பிறகு தான் தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டதோடு, தமிழுக்கான உயர் ஆய்வு மையங்களும் உருவாக்கப்பட்டன என்பது என்றுமேமறக்கவியலாத உண்மை வரலாறு.

ஆனால் இன்று, தமிழ்மொழியே சமஸ்கிருதத்திலிருந்து தான் தோன்றியது என்று முற்றிலும் கற்பனையான, பொய்யான வாதத்தை முன்வைத்துப் புத்தகம் எழுதியுள்ள முனைவர் நாகசாமி என்ற ஆர்எஸ்எஸ் பேர்வழியைத் தமிழ்ச் செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் தலைவராக நியமித்து, தமிழ்மொழியின் உண்மையான வரலாற்றின் மீதே போர்தொடுக்க முற்பட்டுள்ளது தமிழர் விரோத பிஜேபி அரசு. நாகசாமி நியமனத்தை எதிர்த்துத் தமிழறிஞர்கள் போராடி வருகிறார்கள்.

ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை மொழி என்று பேசித் திரியும் ஆர்எஸ்எஸ்-பிஜேபி வகையறாக்களையும், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கூட்டணி வைத்துள்ள அதிமுக, பாமக, தேமுதிக-வின் துரோகங்களையும் தமிழக வாக்காளர்கள் நன்றாகவேபுரிந்து வைத்துள்ளார்கள்.

சித்திரை துவங்கியவுடன் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தகுந்த பதிலடியைத் தருவதற்குத் தயாராகவுள்ளார்கள்.

                                                                                                                     -க.மன்னன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------

1,600 கோடி வழங்க 7000 கோடி செலவு?

கடந்த 5 ஆண்டுகளில் மேக் இன் இந்தியா, தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, விவசாயிகளுக்கான பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா, மருத்துவக் காப்பீட்டுக்கான ஆயுஷ்மான் பாரத் யோஜனா, எரிவாயு இணைப்புக்கான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா... என ஏராளமான திட்டங்களை மோடி அறிவித்தார்.

 உண்மையாக சொன்னால், பிரதமர் மோடி ஆட்சி அறிவித்தது எதுவும், புதிய திட்டங்கள் இல்லை.
அவை ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்தவைதான்.
 திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றி, புதிய திட்டம்போல, மக்களை ஏமாற்றினார்.

அப்படியும், மோடி புதிதாக அறிவித்த எந்தத் திட்டமும் உருப்படவில்லை. அனைத்துத் திட்டங்களும் தோல்வியிலேயே முடிந்தன.
அதிலொன்றுதான் மோடி அறிவித்த, கர்ப்பிணிப் பெண்களின் பிரசவ நிதியுதவிக்கான ‘பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ (ஞஆஆஏலு) திட்டமாகும்.
இந்த திட்டமும் மோடி கண்டுபிடித்த திட்டமல்ல.
 1990-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘மாத்ரித்வ லாப் யோஜனா’ என்ற திட்டத்தின் ஈயடிச்சாம் காப்பிதான் இது.

ஏழைப் பெண்கள் கர்ப்பக் காலத்தில் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பாக ரூ. 3 ஆயிரம், குழந்தை பிறந்ததற்குப் பின்னர் ரூ. 3 ஆயிரம் என இரண்டு கட்டங்களாக மொத்தம் ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டம்தான் ‘மாத்ரித்வ லாப் யோஜனா’.

இதுவே பின்னர், ‘இந்திரா காந்தி மாத்ரித்வ சஹ்யோக் யோஜனா’ என்ற பெயரில், சோதனை முயற்சியாக 53 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், 2014-இல் ஆட்சிக்கு வந்த மோடி, இந்த திட்டத்தில் இருந்த இந்திரா காந்தியின் பெயரை நீக்கி விட்டு, ‘பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ என்று புதிய நாமகரணம் சூட்டினார்.

எனினும் பிரச்சனை அதுவல்ல.
திட்டத்திற்கு எந்த பெயரை வேண்டுமானாலும் மோடி வைத்துக் கொள்ளட்டும். திட்டத்தின் நோக்கம் நிறைவேறினால் போதுமானது.
 ஆனால், அது நடக்கவில்லை என்பதுதான் இங்கு சொல்லவேண்டியதாகும்.

ஏழைத் தாய்மார்களுக்கு முன்பு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை என்று இருந்தது.
முதல்வேலையாக அதை ரூ. 5 ஆயிரமாக மோடி குறைத்தார்.
அதுமட்டுமல்ல, முன்பு இரண்டு தவணைகளில் வழங்கப்பட்டு வந்த தொகையை, மோடி மூன்று தவணைகளாக மாற்றினார்.சரி அது போகட்டும். திட்டமாவது அனைவருக்கும் போய்ச் சேர்ந்ததா?
 என்றால், அதுவும் இல்லை.

கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் திட்டத்திலும் மோடி அரசு தனது மோசடிகளை அரங்கேற்றியிருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக தற்போது அம்பலமாகி இருக்கிறது.
அதாவது, மோடி அறிவித்த திட்டத்தில் ஆண்டுக்கு 2 சதவிகித கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமே பயனடைந்து இருக்கின்றனர்.

2018 நவம்பர் 30-ஆம் தேதி வரை, வெறும் 18 லட்சத்து 82 ஆயிரத்து 708 கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமே தலா ரூ. 5 ஆயிரம் விகிதம் பெற்றுள்ளனர்.


இவர்களுக்கு மொத்தம் ரூ. 1,655 கோடியே 83 லட்சம் அளவிற்கே உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கொடுமை என்னவென்றால், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, அதாவது விளம்பரம், நிர்வாகச் செலவினம் என்ற வகையில் மட்டும் ரூ. 6 ஆயிரத்து 966 கோடியை செலவிட்டு இருப்பதாக மோடி அரசு கணக்கு காட்டியிருப்பதாகும்.

புரியும் வகையில் சொன்னால், மோடியின் கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதியுதவித் திட்டத்தால், ஒடிசாவில் பயனடைந்த கர்ப்பிணிப் பெண்கள் வெறும் 5 பேர் மட்டுமே.
 இவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த உதவித்தொகை வெறும் 25 ஆயிரம் ரூபாய்தான்.

 ஆனால், ஒடிசாவில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 274 கோடி என்று கணக்கு காட்டியிருக்கிறார்கள்.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மக்களை எப்படியெல்லாம் மோடி அரசு ஏமாற்றி இருக்கிறது என்பதற்கு பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனாவும் மற்றொரு உதாரணமாகி இருக்கிறது.


 பிரதமரா கார்ப்பரேட் தரகரா?
ரிலையன்ஸ் நிறுவனம், பிரான்ஸ் அரசிடம் ரூ. 1,124 கோடி வரித்தள்ளுபடி பெற்றிருப்பதன் மூலம், ரபேல் பேரத்தில், அனில்அம்பானிக்கு பிரதமர் மோடி, இடைத்தரகராக செயல்பட்டிருப்பது நிரூபணமாகி இருப்பதாக காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

இதுதொடர்பான விவரம் வருமாறு:இந்தியாவின் பெருமுதலாளிகளில் ஒருவரான அனில் அம்பானி, ‘ரிலையன்ஸ்அட்லாண்டில் பிளாக் பிரான்ஸ்’ எனும் பெயரில் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றை, பிரான்சில் நடத்தி வருகிறார்.

ஆனால்,பிரான்ஸ் அiசுக்கு செலுத்த வேண்டிய 151 மில்லியன் யூரோ (சுமார் ரூ. 1182 கோடி)அளவிற்கான வரியை, கடந்த 2007 முதல்2012-ஆம் ஆண்டு வரை அம்பானி செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில், பிரான்ஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், முதற்கட்டமாக 7.3 மில்லியன் யூரோவை (ரூ. 57 கோடி) செலுத்த, ரிலையன்ஸ் நிறுவனம் சம்மதித்துள்ளது.

2014 கால கட்டத்தில் இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.இந்நிலையில், கடந்த 2015-ஆம்ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்குப் பயணம்செய்த இந்தியப் பிரதமர் மோடி, அங்குபிரான்ஸ் நாட்டின் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்திடம் இருந்து பறக்கும் நிலையில், 36 ரபேல் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.


‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்தின் ‘ஆப்செட்’ நிறுவனமாக, அனில்அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ சேர்த்துக் கொள்ளப்பட்டது. பிரான்ஸ் நாட்டிற்கு ரூ. 1182 கோடிவரிபாக்கி வைத்திருந்த, ‘ரிலையன்ஸ் அட்லாண்டில் பிளாக் பிரான்ஸ்’ நிறுவனத்தைத்தான், ‘டஸ்ஸால்ட்’ நிறுவனம் கூட்டு நிறுவனமாக சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, பிரதமர் மோடி பிரான்சிற்கு வந்துசென்றதற்குப் பிறகு, ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த வேண் டிய வரிப் பாக்கி ரூ. 1182 கோடியில், ரூ.57 கோடியை (73 லட்சம் யூரோ) மட்டும்செலுத்தினால் போதும் என்று கூறிவிட்டு, ரூ.1,124 கோடியை பிரான்ஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ‘லீ மாண்டே’ என்றநாளேடு இந்த உண்மையைத் தற்போதுவெளிக்கொண்டு வந்துள்ளது. இது இந்தியாவில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பேட்டி ஒன்றை அளித் துள்ளார்.

அதில், “ரபேல் பேரத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு இடைத்தரகராக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட் டார் என்பது இப்போது தெளிவாகி விட்டது” என கூறியுள்ளார்.

“இதேபோல வேறு எந்தெந்த நிறுவனங்களெல்லாம் வரித் தள்ளுபடி பெற்றனவோ?” என்றும் சந்தேகம் எழுப்பியுள்ள சுர்ஜேவாலா, “காவலாளி திருடனாகி விட்டார்” என்பது உண்மையாகி இருப்பதாகவும், மோடியின் ஆசி உள்ளவர்கள் எதையும் அடைய முடியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த செய்திகளை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் மட்டுமன்றி, மோடி அரசும் வழக்கம்போல மறுத்து மழுப்பியுள்ளன.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 "தாமரை"னு தமிழில் அழைக்க வேண்டுமா?
  "நீட் இல்லாவிட்டால் தமிழகம் வளர்ந்து விடுமா என்ன?"
-கமல்ஹாசன் கிண்டல் .

தமிழகத்துக்கு நல்ல கல்வியை தார்த்தனே நீட் வேண்டாம் என்கிறார்கள்.பிராமண பாசத்தால் இப்படி பேசுகிறார்.கமல்.நீட் எதற்காக வேண்டாம் என்கிறார்கள் என்ற அடிப்படைப்புரிதல் இல்லாமல் எதையாவது உளறுவது?தமிழக மாணவர்கள் தகுதித்தேர்வு எஸுதி மருத்துவக்கல்லூரிகளில் தகுதி அடிப்படையில் சேரும் பொது வட மணிலா மாணவர்கள் லட்சங்களைக்கொட்டி இடம் பிடித்தார்கள்.இப்போது நீட் மூலம் தமிழக மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வு முற்றிலும் மத்திய அரசு கல்வித்திட்டப்படி நடக்கிறது.மாநிலக்கல்வியில் படித்தவர்கள் கலந்து கொள்ள முடியாதபடி கடினமான கேள்விகள்.தமிழில் அய்யா எடப்பாடி நடத்தக்கூறினர் .மொழிபெயர்த்து நடத்தினர்.ஆனால் புரியாத,மிக கொடுமையான,தவறான மொழிபெயர்ப்பு வேண்டுமென்றே செய்யப்பட்டது.நீதிமன்றம் வரை சென்றனர் தமிழக மாணவர்கள்.மொழி பெயர்ப்பு தவறு.இனி சரியாக மொழி பெயர்க்க வேண்டும் என்று சொல்லிய நீதிமன்றம்,தவறான மொழிபெயர்ப்புக்கு மதிப்பெண்கள் தரமுடியாது என்றும் கூறி விட்டது .அனிதாக்கள் இறக்க கரணம் இவைதான்.இந்தியாவிலேயே அரசு,தனியார் மருத்துவக்கல்லூரிகள்௪௬ உள்ளது தமிழ்நாடு மட்டும்தான் .அனால் மத்திய அரசு நிடால் அணைத்து இடங்களுக்கும் வடமாநில மாணவர்கள்.௫ இடங்கள்தான் தமிழர்களுக்கு.
நீட் தேர்வு எழுதிய வடமாநில மாணவர்களுக்கு கண்காணிப்பாளர்கள் பலர் சரியான விடையை சொல்லியிருக்கிறார்கள்.ஆனால் தெற்கே மாணவர்களின் சட்டைகள் கலர்கள் வெட்டப்பட்டன,மாணவிகள் தலைவிரி கோலமாக வந்தனர்.காதணிகள்,கொலுசு வளையல்கள் கழற்றப்பட்டன.கேரளாவில் மாணவிகள் உள்ளாடைகள் வரை கழற்றப்பட்டன.அனால் இவை வடக்கே கிடையாது.மேலும் தமிழக மாணவர்கள் பலருக்கு ராஜஸ்தான்,இமாசலப்பிரதேஷ் என்று தேர்வு மையங்கள் மூன்று நாட்களுக்கு முன் ஒதுக்கப்பட்டன.அதை மாற்றித்தரவும் மறுத்து விட்டனர்.இப்போது சொல்லுங்கள் தற்போதைய நீட் தேவையா.
கமல் சொல்வது போல் அனிதா இறந்தபிறகு நிட்டை எதிர்க்கவில்லை.அதற்கு முன்னரே திமுக உட்பட பல ராசியில் தலைவர்கள்,கல்வியாளர்கள் மணிலா அரசு கல்வித்திட்டப்படி நடத்துங்கள் என்று மத்திய அரசுடன் மோதித்தான் வந்துள்ளனர்.கமழும் ,நீங்களும் பழைய வரலாறை படியுங்கள்.கிராமசபைக்கூட்டத்தை பலகாலமாக திமுக ,பட்டாள் மக்கள் கட்சிகள் நடத்தி வந்த போதும் தானே கண்டுபிடித்தது போல் சொன்னதும் பழைய வரலாறை கண்டு கொள்ளாத அரசியல் அரைவேக்காட்டுத்தனம்தான்.

காவிரி நீர் கேட்டு போராட்ட வேண்டாம்.பேசித்தீர்ப்போம்.நீட்டை எதிர்க்க வேண்டாம்.அது இல்லாவிட்டால் தமிழகம் வளர்ந்து விடுமா.விவசாயிகள் போராட வேண்டாம் உழுவதில் கவனம் செலுத்துங்கள் என்று கமல்ஹாசன் தொடர்ந்து பேசுவதைப்பார்த்தால் பாஜக பேசுவதை தனது பணியில் டப்பிங் பேசுவதாகத்தான் தெரிகிறது.
பலமுறை பேசியும்,மனுக்கள் கொடுத்தும் ஒன்று நடக்காவிட்டால் கடைசியில் மக்கள் கையில் எடுக்கும் ஆயுதம்தான் போராட்டம் .தெருக்குழாயில் தண்ணீர் வராவிட்டாலும் பெண்கள் செய்யும் போராட்டமே அதைக்காட்டுகிறது.
யாருமே எடுத்தவுடன் போராடுவதில்லை.அரசியல்வாதிகளைத்தவிர.இது தெரியாமல் மக்கள் பணியாற்ற அரசியலுக்கு வந்தார் கமல்ஹாசன்.
அரைசியல்வாதிகள் பேச்சை  கேட்டு பொறுக்காமல் கோபம் அடைந்து தொலைக்காட்சி பெட்டியை உடைப்பதே ஒரு போராட்ட வடிவம்தானே கமல்.இனி தாமரைனு தமிழில் அழைக்க வேண்டுமா?
அம்மணமான அய்யாக்கண்ணு.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?