பனி மாறுதல் இல்லையெனில் வேலையே வேண்டாம்.

பாஜக தோல்வி உறுதியாகி விட்டது என்றாலும், குறுக்கு வழியில் ஒருவேளை பாஜக கூட்டணி வெற்றிபெற்று, மோடி மீண்டும் பிரதமராவார் என்றால், பிரதமர் அலுவலகத்தில் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் உயர் அதிகாரிகள் பலர்,பணி மாற்றம் பெறுவது அல்லது முன் கூட்டியே பதவியை ராஜினாமா செய்வது என்று முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறிப்பாக, 8 துறைகளின் அதிகாரிகள்தங்களின் முடிவில் உறுதியாக இருப்பதாகவும், மோடியின் தோல்வியை, ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச் சகத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகள்தான், இந்த அதிர்ச்சித் தகவலை, தங்களின் பெயரை வெளியிட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பிரதமர் அலுவலகத்தைப் பொறுத்தவரை சுமார் 25 மூத்த அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில், நிர்வாக விஷயங்களில் மோடி நடந்து கொள்ளும் விதம், வழக்கமான அரசு நிர்வாக முறைகள் அல்லது கொள்கைகளுக்கு மாறாக,தான் விரும்பியபடிதான் செயல்பட வேண்டும் என அதிகாரிகளை மிரட்டுவது, பிரதமர்மட்டும் அல்லாது சில மத்திய அமைச்சர் சளும் அதிகாரிகளின் முடிவில் குறுக்கிடுவது, குறிப்பாக ஆர்எஸ்எஸ் பேர்வழிகளின் மிதமிஞ்சிய தலையீடு ஆகியவை 25 மூத்த அதிகாரிகளை ரொம்பவே அதிருப்திக்கு உள்ளாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த உயரதிகாரிகள் பலரும் சாதாரணமானவர்கள் அல்ல.
இந்தியாவின்உயர்தரமான பல்கலைக்கழகங்கள் அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயின்றவர்கள். 4 ஆயிரத்து 500 பேர்களுடன் போட்டிபோட்டு, இந்தியஆட்சிப்பணித்துறை அதிகாரியாக தேர்வு பெற்றவர்கள்.

அப்படிப்பட்ட, திறமையான அதிகாரிகளான தங்களை, அரசு நிர்வாகம் பற்றிகொஞ்சமும் தெரியாத பாஜக பிரமுகர்கள்அடிமைகள் போல நடத்துகிறார்கள் என்றபுழுக்கம் அதிகாரிகளுக்கு நீண்டகாலமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
அதன் இறுதிக்கட்டமாகவே, தன்மானத்தை இழந்து இனியும் மோடிக்கு கீழே பணிபுரிய முடியாது என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்திருக்கிறார்களாம்.

அதிகாரிகளின் இந்த முடிவு, பாஜக தலைவர் அமித்ஷாவுக்கும் தெரியும் என்றுகூறப்படுகிறது.
இதனால், கடந்த பிப்ரவரி மாதம் 2 மூத்த அமைச்சர்களுடன் நடத்திய ரகசிய கூட்டத்தில், “நம் அதிகாரிகளில் பலருக்கு இன்னும் இடதுசாரித் தாக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

எனினும், தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவேண்டாம்; நாம் மீண்டும் வெற்றிபெற் றால்தானே, அதிகாரிகளின் எதிர்ப்பு வெளியே வரும், அது நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று கடந்து சென்றுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
நேரடியாக பதிலளிக்க முடியவில்லை. 
தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஒரு நாளிதழில் அளித்த பேட்டியில் ஆட்சியைதக்க வைத்துக் கொள்வதற்காக மாநில உரிமைகளில் மத்திய அரசுடன் அதிமுக அரசு சமரசம்செய்து கொள்வதாக பேசப்படுகிறதே என்றகேள்விக்கு அவரால் நேரடியாக பதிலளிக்க முடியவில்லை.

அதனால் அவர்களது வழக்கமான பாணியிலேயே திமுக மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்ள முயன்றிருக்கிறார்.
மாநில உரிமையைப் பாதுகாத்ததாக, ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்கியது அதிமுக அரசுதான் என்று கூறி, இப்படி எத்தனையோ சம்பவங்களை பட்டியலிட முடியும் என்றுசொன்னவர் அதை சொல்வதற்கு வழியில்லாது,வார்த்தையில்லாது, வக்கில்லாது விட்டுவிட்டார்.
ஏனென்றால் சொல்வதற்கு ஏதுமிருந்தால் தானே. நீட்தேர்வு விலக்கு சம்பந்தமாகவும் பிடிபடாமல் பதில் சொல்லி நழுவியிருக்கிறார். மத்தியஅரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தும் கூட நீதிமன்றம் அதை ஏற்கவில்லை என்றும் சப்பைக்கட்டுகட்டியிருக்கிறார்.

 தமிழக சட்டமன்றத்தில்ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்குகோரும் தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெற இவர்களால் இயலவில்லைஎன்பதை மறைத்துவிட முயன்றிருக்கிறார்.

மத்திய அரசுக்கு அனுப்பிய தீர்மானத்தை உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பவேயில்லை என்பதை சிபிஎம் எம்.பி., டி.கே.ரங்கராஜன் அம்பலப்படுத்திய பிறகும் கூட அசராமல் பாஜக அரசின்நிலையை ஆதரிக்கிறார்.

ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றது.

மக்கள் போராட்டத்தால் என்பதை மறைத்து அதிமுகவின் சாதனை என்கிறார்! நீட் தேர்விலிருந்து மாணவர்களை காப்பாற்றுவதில் அக்கறை இல்லாமல் போனதற்கு காரணம் தங்களது பதவியை காப்பாற்றிக் கொள்வதில் இருந்த அக்கறைதான்.
 பாட்டாளி மக்கள் கட்சியுடனும் தேமுதிகவுடனும் நீங்கள் ஏற்படுத்திக் கொண்டிருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
 என்ற கேள்விக்கு திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தால் அது லட்சியக் கூட்டணி, எங்களுடன் இருந்தால் அதுவே சந்தர்ப்பவாத கூட்டணியா?
என்று கோபம் கொண்டிருக்கிறார்.

உண்மையில் பாமக மத்திய பாஜக அரசுக்கு ஜீரோவுக்கும் கீழே மதிப்பெண் கொடுத்தது.
தமிழக அரசை இது அரசே அல்ல என்றது.
எட்டுவழிச்சாலை திட்டம், நீட் தேர்வுக்கு எதிரான நிலை கொண்டிருந்தது. தேமுதிகவை பாஜகவை வைத்து பஞ்சாயத்து செய்து பேரம் நடத்தி வளைத்ததையும் தமிழகம்பார்த்துக் கொண்டிருந்தது.

ஆனால் திமுக தலைமையிலான அணியில்உள்ள கட்சிகளோ கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக மக்களின் கோரிக்கைகளுக்காக ஒன்றுபட்டு இயக்கங்கள் நடத்தி, ஒருமித்த கருத்துக் கொண்டிருந்தன.
 முரண்பாடுகளின் மூட்டையும் ஒருமைப்பாட்டின் செயல்பாட்டையும் ஒன்றாக பார்க்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

இவர்களது சந்தர்ப்பவாத கூட்டணியை புறக்கணித்து திமுக தலைமையிலான கொள்கை கூட்டணியை ஆதரித்து தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம்..

 ராணுவத்தை வைத்து அரசியல் செய்யும் மோடி.
பிரதமர் மோடியின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில், இந்திய ராணுவம் சீர்குலைக்கப்பட்டு இருப்பதாக, முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான தேஜ் பகதூர் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹரியானா மாநிலம் ரேவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேஜ் பகதூர் யாதவ்.

முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான இவர், கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எல்லையில் பணியில் இருந்தபோது காணொலிக் காட்சி ஒன்றை வெளியிட்டார்.

ராணுவ வீரர்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது என்றும் மூத்த அதிகாரிகள் உணவுப் பொருட்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்கின்றனர் என்றும் அந்த காணொலியில் தேஜ் பகதூர் குற்றம் சாட்டியிருந்தார்.

 இந்தக் காணொலி நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தவே, தேஜ் பகதூர், பாதுகாப்புப் படையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, கொதித்தெழுந்த தேஜ் பகதூர் யாதவ், ராணுவத்தை சீர்குலைத்த பிரதமர் மோடியை நாடு முழுவதும் அம்பலப்படுத்தப் போவதாக அறிவித்தார்.

 வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடப் போகிறேன் என்றும் கூறிய அவர், “தேர்தலில் ஜெயிப்பதோ, தோற்பதோ என்னுடைய நோக்கமில்லை; ராணுவ வீரர்கள் விஷயத்தில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது; ராணுவ வீரர்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை என்பதை அம்பலப்படுத்துவதே எனது நோக்கம்” என்றும் பகிரங்கமாக தெரிவித்தார்.

அந்த வகையில், மோடி அரசுக்கு எதிராக வாரணாசியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தேஜ் பகதூர் யாதவ், “கடந்த ஐந்தாண்டு ஆட்சியில், இந்திய ராணுவத்தின் மதிப்பை மோடி அரசு குலைத்து விட்டது” என்று குற்றம் சாட்டியுள்ளார். “நமது நாட்டில் ராணுவத்தினருக்கு என்று ஒரு தனி மரியாதை உண்டு.


ஆனால், அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னரே, கடந்த 2013-ஆம் ஆண்டு, ராணுவ வீரர் ஹேம்ராஜ் கொலையை, மோடி அரசியலாக்கினார். அவர் செய்த அரசியலை நம்பிய பலர், மோடி பிரதமராகி விட்டால், நம் நாட்டின் ராணுவம் வலிமையாகும் என்று நினைத்தார்கள்.
ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பின்னர்தான், ராணுவம் படுமோசமான நிலைக்கு போயிருக்கிறது.
மோடி, ஆட்சியில் அமர்ந்த நாள்முதல், எதிரிகளால் கொல்லப்படும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.
கடந்த ஓராண்டில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை மட்டும் எடுத்துக் கொண்டால், அது கடந்த 10 ஆண்டுகளில் கொல்லப்பட்ட மொத்த வீரர்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கிறது.

அதுமட்டுமல்ல, கடந்த ஓராண்டில் தற்கொலை செய்து கொண்ட, துணை ராணுவப் படை வீரர்களின் எண்ணிக்கை மட்டும் 997 என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறது.
 ஆனால், இவற்றை எல்லாம் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.ராணுவத்தினருக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவது குறித்து, நான் வீடியோ மூலம் வெளியே தெரிவித்த பின்னர், ராணுவ வீரர்கள் மொபைல் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 தொடர்ந்து அநியாயங்களை மூடி மறைக்கவே முயற்சி நடக்கிறது. எனவே, ராணுவத்தை அரசியலாக்கிய நரேந்திர மோடிக்கு, தேர்தல் மூலமாக நாட்டு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். வாரணாசியிலும் அவரைத் தோற்கடிக்க வேண்டும்."
இவ்வாறு தேஜ் பகதூர் யாதவ் பேசியுள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?