யார் ஆட்சி என்ற ஆராய்ச்சி?
பல் இல்லாத ஒன்று
திரிலோசன் சாஸ்திரி, ஜனநாயக சீர்திருத்தங்கள் அமைப்பின் தலைவரும், பெங்களூரு இந்திய மேலாண்மை இன்ஸ்டிட்யூட்டின் முன்னாள் முதல்வருமாவார்.
இவர் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேசியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அவர்களது கலந்துரையாடலின் சாராம்சங்களில் சிலவற்றைக் கீழே தந்திருக்கிறோம்.
திரிலோசன் சாஸ்திரி: மிஸ்டர் குரேசி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியமைக்காக சமீபத்தில் தேர்தல் ஆணையம் சில அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பதன்மூலம், தன்னால் கடித்துக் குதறமுடியும் என்று காட்டிவிட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
எஸ்.ஒய். குரேசி: தேர்தல் ஆணையத்திற்கு, அதற்குள்ள அதிகாரங்கள் குறித்து உச்சநீதிமன்றம் நினைவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது என்பது உண்மையிலேயே பரிதாபகரமான விஷயமாகும்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததனால் தேர்தல் ஆணையத்தை பல்லில்லாத ஒன்று என்று கூறுவதும் தவறாகும். தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது, அதிலும்குறிப்பாக ஆளும் கட்சியினர் அவ்வாறு மீறும்போது, அது நடவடிக்கை எடுப்பதற்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக நெஞ்சுறுதி இருந்திருக்க வேண்டும்தான்.
ஏனெனில் ஆளும் கட்சிக்கு எப்போதுமே கொஞ்சம் அனுகூலம் உண்டு.
அதனை தேர்தல் ஆணையம் தன் நடவடிக்கைகள் மூலமாகமட்டுப்படுத்தி, அவர்களையும் நடுநிலையாளர்களாக மாற்றி இருக்க வேண்டும். இதற்கு, தேர்தல் ஆணையத்திற்குப் போதுமான அளவிற்குப் பற்கள் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
பிரதமருக்குச்சற்று பணிவுடன் அறிவுரை சொல்லியிருந்தாலேகூட, பிரதமர் தனக்குள்ள அதிகாரவரம்பெல்லையை மீறாது இருக்கச் செய்வதற்கு, போதுமானதாக இருந்திருக்கும்.
அரசியல் தலைவர்களுக்கு அறிவுரை கூறுபவர்களின் அதிகாரம் குறித்துக் குறைத்து மதிப்பிடுவதும் தவறாகும்.
திரிலோசன் சாஸ்திரி: ஆனாலும், தேர்தல் ஆணையம் உண்மையில் நடவடிக்கை எடுப்பதற்கு வெகுநீண்ட காலம் எடுத்துக்கொண்டிருக்கிறதே.
தேர்தல் ஆணையம், அரசாங்கத்துடன் சமரசமாகிப்போய் விட்டது என்று நம்புவதற்கான காரணமாக இதை எடுத்துக் கொள்ளலாமா?
எஸ்.ஒய். குரேசி: இந்த அளவிற்குக் கடினமான வார்த்தைப் பிரயோகங்களை நான் உபயோகப் படுத்தமாட்டேன். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும்எப்போதும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருவதேயாகும். அது நியாயமாகவும் நேர்மையாகவும் இருந்தால் மட்டும் போதாது.
அவ்வாறு இருப்பது போன்ற தோற்றத்தையும் அது அனைவருக்கும் அளித்திட வேண்டும். தற்போது அது தேர்தல் நடத்தை விதிகளை மீறியவர்களை, சற்றே தன் முஷ்டியால் தட்டி இருக்கிறது.
தேர்தல் ஆணையம் இதுவரை இருந்ததைவிட இப்போது மேலும் சற்றுக் கூடுத லான துணிச்சலுடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.
திரிலோசன் சாஸ்திரி: பிரதமருக்கு எதிராக நட வடிக்கை எடுப்பதற்கு தேர்தல் ஆணையம் நேரம் எடுத்துக்கொண்டிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எஸ்.ஒய்.குரேசி: அரசியல்வாதிகளின் நடத்தை குறித்து விவாதிப்பதற்குப் பதிலாக, நாம் தேர்தல் ஆணையத்தின் நடத்தை குறித்து விவாதிப்பதுமிகவும் துரதிர்ஷ்டவசமேயாகும்.
தேர்தல் ஆணைய மும் இதற்கு ஒருவிதத்தில் பொறுப்பாகும். ஏனெனில்நடவடிக்கை எடுப்பதற்கு அது எடுத்துக்கொண்டுள்ள தாமதமே காரணமாகும்.
உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திருக்குமாயின், தேர்தல் ஆணையம் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
திரிலோசன் சாஸ்திரி: அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களுக்கு யார் தேர்தல்நிதிப் பத்திரங்களைஅளித்தது, எவ்வளவு தொகைக்கு அளித்தார்கள் என்கிற விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு குறித்து உங்கள் கருத்து என்ன?
முன்பொருமுறை ஒரு விவாதத்தின்போது நீங்கள் தேர்தல்நிதிப் பத்திரங்கள் குறித்து கடும் விமர்சனங்களை முன்மொழிந்திருந்தீர்கள்!
எஸ்.ஒய்.குரேசி: உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு ஒரு விதத்தில் ஏமாற்றத்தையும், மற்றொரு விதத்தில் மகிழ்ச்சியையும் அளித்தது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று விமர்சனம் செய்திருப்பது மகிழ்ச்சியை அளித்தது.
ஆனால், அதனை மூடிமுத்திரையிடப்பட்ட உறையில் வைத்து அளித்திட வேண்டும் என்று உத்தரவிட்டது ஏன் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது நியாயமே கிடையாது. அது என்ன அரசு ரகசியமா? தேர்தல் நிதிப் பத்திரங்களைப் பெற்ற கட்சிகளுக்கு அவற்றை யார் கொடுத்திருக்கிறார்கள் என்பது நன்கு தெரியும். அதேபோன்று நன்கொடை அளிப்பவருக்கும், தான் யாருக்கு அளிக்கிறோம் என்பதும் நன்குதெரியும்.
உங்களுக்கும் எனக்கும்தான் அது தெரியாது.
மற்றொரு வருந்தத்தக்க விஷயம் என்னவெனில், தேர்தல்களுக்கான நடைமுறைகள் நடந்து கொண்டிருக்கும்போது, நம் அரசமைப்புச் சட்டம் எவ்விதமான நீதிமன்றத்தின் தலையீட்டையும் அனுமதித்திடவில்லை.
இவ்வாறு நீதிமன்றம் திரும்பத்திரும்ப தலையிடுவதும்கூட ஒரு வருந்தத் தக்க விஷயமேயாகும்.
திரிலோசன் சாஸ்திரி: தேர்தல் ஆணையத்திற்கு இருவிதமான பிரச்சனைகள் இருக்கின்றன. ஒன்று நடைமுறை குறித்தது. மற்றொன்று தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுகிறதா என்பது குறித்தது.
நடைமுறை குறித்த பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தலையிட்டிருக்க வேண்டுமா என்பதன் மீது நான் எவ்விதமான கருத்தையும் கூற விரும்பவில்லை.
ஆனால் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது என்றுவருகிறபோது, வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வேறு விஷயம்.
தேர்தல் நிதிப் பத்திரங்கள் குறித்த தகவல்களை, மூடி முத்திரையிட்ட உறையில் அளித்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதில் நாம் பொறுமை காக்க வேண்டியிருக்கிறது.
இதைவிட கூடுதலாக ஏதேனும் பரிந்துரைத்திருக்கலாம். தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டதால் அதில் தலையிட வேண்டாம் என்று ஒருவேளை நீதிமன்றம் கருதியிருக்கலாம்.
எனவே அது இரு தரப்பாரையும் திருப்திப்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு சமரசமான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. மே 30 அன்று என்ன நடக்கிறது என்று நாம் பார்ப்போம்.
ஆனால் உலகம் முழுதும் உள்ள மிகச்சிறந்த நடைமுறை என்னவென்றால், முழுமையான வெளிப்படைத்தன்மைதான்.
திரிலோசன் சாஸ்திரி: தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதில் தேர்தல் ஆணையம் சில உள்ளார்ந்த கட்டமைப்புப் பிரச்சனைகளை (iinherent structural problems) எதிர்கொண்டதா?
எஸ்.ஒய். குரேசி: தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரிகளை நியமனம் செய்யும்முறையை மேம்படுத்திட வேண்டும். தேர்தல் ஆணைய அதிகாரிகளின் இடங்கள் காலியாகும்போது, அந்த சமயத்தில் இருக்கின்ற ஆளும் கட்சிதான் அவர்களை நியமித்திடும் என்ற நிலை இருக்கிறது.
அப்படி நியமிக்கும்போது இவர் தங்களுக்குக் கடமைப்பட்டவராக இருப்பாரா என்று அப்போது ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் பரிசீலிக்கலாம்.
எனவே இதற்குப் பதிலாக, உச்சநீதிமன்றத்தில் இருப்பதைப்போன்று கொலிஜியம் முறை பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
திரிலோசன் சாஸ்திரி: உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படும் முறையே பிரச்சனைகளுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் நீங்கள் அங்கே மேற்கொள்ளப்படுவதுபோல கொலிஜியம் முறை சிறந்தது என்று கூறுவது போல் தோன்றுகிறதே!
எஸ்.ஒய். குரேசி: ஆம். பிரச்சனைகள் இருக்கலாம். எனினும், இருக்கக்கூடியதில் அதுதான் மிகச்சிறந்த முறை.
உலகில் எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும், இத்தகைய அரசமைப்பு நியமனங்கள் ஒன்று கொலிஜியம் அமைப்பு முறையில் இருக்கும், அல்லது நாடாளுமன்றக் குழுக்களால் நியமனம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் அமைந்திருக்கும். சில சமயங்களில், நாட்டு மக்கள் அனைவரும் நேரடியாக பார்க்கக்கூடிய விதத்தில் நேரலை ஒளிபரப்புடன் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளருடன் நேர்காணல் நடத்தப்படும்.
இந்தியாவில் மட்டும்தான் உலகிலேயே மிகவும் அதிகாரம் படைத்த ஆணையம் ‘நியமனமுறை’ எனும் மிகவும் மோசமான முறை நடைமுறையில் இருக்கிறது. இப்போதுள்ள தேர்வு முறையானது, தேர்ந்தெடுக்கப் படும் நபர்களிடமும் ஒரு நிர்ப்பந்தத்தைக் கொடுக்கிறது.
தேர்ந்தெடுக்கப்படும் ஆணையர்கள், தன் பதவியில் நேர்மையுடனும், உண்மையுடனும் நடந்து கொண்டால்கூட, “ஓ, இவர் இந்த அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால், இதனிடம் மென்மையாகத்தான் இருக்க வேண்டும்,” என்பதுபோன்று பொது வெளியில் விமர்சனங்கள் வருவதைப் பார்க்கிறோம்.
எனவே, ஆணையர்களை நியமனம் செய்வதில் ஒரு நடுநிலையான அமைப்பு முறையே இதற்குத் தீர்வாகும்.
திரிலோசன் சாஸ்திரி: சிலசமயங்களில் நல்லவித மாகச் செயல்படுத்தப்படும் நடைமுறைகள் ஒரு சட்டத்தைவிடச் சிறந்ததாக இருந்திட முடியும். நாம் ஒரு சட்டத்தை நிறைவேற்றிவிட்டோம் என்றால் அதிலுள்ள அனைத்து அம்சங்களும் மிகச்சரியாக நடந்திடும் என்று நாம் எதிர்பார்த்திட முடியாது.
நாம்தேர்தல் ஆணையம் தன்னிடம் உள்ள அதிகாரங் களை மிகச்சரியாகப் பயன்படுத்துகிறது என்ற நம்பிக்கை நமக்குத் தேவை என்றே நான் நினைக்கிறேன்.
இதனைச் சட்டமாக்கிடும்போது, சட்டத்தில் உள்ள ஒரு கால்புள்ளி அல்லது சில சொற்றொடர்கள் நீதிமன்றங்களில் வித்தியாசமான முறையில் வியாக்கியானம் செய்யப்படுவதையும் நாம் பார்த்திருக் கிறோம். எனவே சட்டமாக்கும்போது சட்டச்சிக்கல்கள் வரும்.
உச்சநீதிமன்றம்கூட தேர்தல் நடத்தை விதிகளுக்கு, சட்ட அந்தஸ்து அளித்திடாமல் இருப்ப தையே ஏற்றுக்கொண்டிருக்கிறது.
எனவே இப்போ துள்ள நிலையே சரி என்று நினைக்கிறேன் சரிதானா?
எஸ்.ஒய். குரேசி: தேர்தல் நடத்தை விதிமுறைகள் சட்டமாவதை முழுமையாக நானும் எதிர்க்கிறேன். தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடமிருந்து எடுத்து, நீதித்துறையிடம் ஒப்படைக்கலாம்.
ஆனால் பின்னர், விதிமீறல்கள் தொடர்பாக நீதித்துறை முடிவெடுப்பதற்கு 20 ஆண்டுகள் கூட ஆகலாம். இப்போது சில சட்டங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் கதி இதுதான். இப்போது தேர்தல் நடத்தை விதிமீறல்கள், நடைபெறும்போது, தீ அணைப்புப் படையினர் செயல்படுவதுபோல விரைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் கழித்து முடிவெடுத்திட முடியாது.
இரண்டாவதாக, தேர்தல் ஆணையம் அளித்திடும் தண்டனை என்பது அறிவுரை, எச்சரிக்கை, கண்டனம் அல்லது கடிந்துரைத்தல் என்பது போன்று இருப்பினும்கூட, அதன் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. இவர்களின் உத்தரவு மூலம் உருவாக்கப்படும் பொதுக் கருத்துதான் முக்கியம்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சித் தலைவர் அது தொடர்பாக அறிவிப்பைப் பெறுகிற உடனேயே அது செய்தியேடுகளின் தலைப்புச் செய்தியாகிவிடுகிறது.
மூன்றாவதாக, தேர்தல் நடத்தை விதிமீறல்கள் நம் நாட்டிலுள்ள சட்டங்களின்கீழும் நடவடிக்கை எடுக்கக்கூடியனவாக இருப்பின் அதன்கீழும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. ஆனால் அதன்மீதான தீர்ப்பு வருவதற்குத்தான் பத்தாண்டுகள் ஆகிவிடுகின்றன.
அதே சமயத்தில் தேர்தல் நடத்தை விதிமீறலுக்காக ஒரு பிரதமருக்குக்கூட, “உங்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது” என்று கோரி 24 மணிநேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி அறிவிப்பு அனுப்பப்படலாம்.
இவ்வாறு விரைந்து செயல்படுதல் என்பது நாட்டில் சட்டத்தின் கீழ் நடந்திடாது.
திரிலோசன் சாஸ்திரி: தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கூடிய அதிகாரம் தற்போது இல்லை. பல அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதே கிடையாது.
தங்கள் கணக்குகளை முறையாக அளிப்பதும் கிடையாது. தங்கள் கட்சியின் சட்டவிதிமுறை களின்படி தேர்தல்கள் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதும் கிடையாது.
இதுபோன்ற விஷயங்களில் தேர்தல் ஆணையம் எதுவும் செய்யமுடியாத நிலையில் அதிகாரம் எதுவுமின்றிதான் இருக்கிறது. உரிய எச்சரிக்கை அளித்தபின்புஅத்தகைய கட்சிகளின் பதிவை ரத்து செய்திட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
வேண்டு மானால் இதற்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்லலாமா?.
எஸ்.ஒய்.குரேசி: இந்தப்பிரச்சனை 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. நாட்டில் சுமார் ஈராயிரம் கட்சிகள் இருக்கின்றன.
அவற்றில் பல போலியானவை. பணப் பரிமாற்றத்திற்காகவே (money laundering) பல இருந்து வருகின்றன.
அவை தொடர்பாக நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த விஷயங்களைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையம் என்பது பல் இல்லாத ஒன்றுதான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை குண்டு வெடிப்பு .
இந்தியா முன்பே எச்சரித்தது.
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளின் காரணமாக இதுவரை 13 நபர்களை கைது செய்துள்ளது இலங்கை அரசாங்கம். 200க்கும் மேற்பட்டோர்களை பலி வாங்கிய இந்த தாக்குதலை ஜிஹாதி அமைப்புகள் எதாவது செய்திருக்குமா என்ற கோணத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
6 மாதங்களுக்கு முன்பு அவர் காணாமல் போனதாக அவர்களின் குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, காவல்த்துறையினர் சந்தேகத்தின் போது சிலரை நெருங்கும் போது 7வது மட்டும் 8வது குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
ஆனால் இதுவரையில் எந்த ஜிஹாத் இயக்கத்தினரை கைது செய்யச் சென்றனர் என்பது தொடர்பாக எந்த விதமான தகவல்களையும் அளிக்கவில்லை.
இந்திய தரப்பில் இருந்தும், இலங்கை தரப்பில் இருந்தும், தீவிரவாத தாக்குதல் நடைபெற உள்ளது என்று முன்பே எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
தீவிரவாத தாக்குதல்கள் இந்த நாட்டிற்கு ஒன்றும் புதிது கிடையாது.
2009 மே மாதத்திற்கு பிறகு நாட்டில் முதல் முறையாக வெடி கொண்டு வெடிக்கிறது.
கொழும்புவில் உள்ள செண்ட்ரல் பேங்க் அருகே 1996ம் ஆண்டு விடுதலைப் புலிகள் நடத்திய தீவிரவாத தாக்குதல் தான், கொழும்புவில் நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல்.
அதில் 91 நபர்கள் கொல்லப்பட்டனர்.
அதே போல் 2001ம் ஆண்டு ஜூலை மாதம் பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் விடுதலைப் புலிகளால் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் நேற்று நடைபெற்ற தாக்குதல்கள் எதுவும் அது போன்று இல்லை. மே 2009ம் ஆண்டிற்கு பிறகு, விடுதலைப் புலிகள் என்ற எண்ணமானது தமிழர்கள் வாழும் பகுதியில் மட்டும் கற்பனையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
விடுதலைப் புலிகள் தேவாலயங்களில் தாக்குதல்கள் அதிக அளவில் நடத்தியலை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் பெரும்பான்மை தமிழ் கிறித்துவர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, அங்கு வாழ்ந்த தமிழ் இந்து மக்களிடம் ஒற்றுமையாக இணக்கமாக வாழ்ந்து வந்தனர். அதனால் கத்தோலிக்க தேவாலயங்களை தாக்குவதில் விடுதலை புலிகளுக்கு விருப்பம் கிடையாது.
முன்பு தேவாலயங்களை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள்.
நேற்று மாலை வரை, நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில், உலகில் இது போன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களின் ஒப்பீடுகள் நடந்து வருகின்றன.
நேற்று நடைபெற்ற 8 குண்டு வெடிப்புகளில் இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்கள் என்று கூறப்படுகிறது.
இன்றைய சூழலில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது.
ஆனால் அவர்களின் இலக்கானது தேவாலயங்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஜோலோ கத்தோலிக்க தேவாலயம் மற்றும் தெற்கு பிலிப்பைனில் இருகும் மிந்தனௌ தேவாலயத்தில் இது போன்று ஜனவரி மாதம் இரட்டை தாக்குதல் நடத்தப்பட்டதை இது நினைவு கூறுகின்றது.
20 பேர்களை பலி கொண்ட இந்த தீவிரவாத தாக்குதல்கள் கிழக்கு ஆசியாவில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்போடு தொடர்பு கொண்டது.
சமீபத்தில் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் பகுதியில் அமைந்திருந்த மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பையும் நினைவு கூறுகிறது இந்த தக்குதல்கள்.
பலி எண்ணிக்கை, மற்றும் விடுதிகளின் தேர்வினை ஒப்பிடும் போது, மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்கள் நினைவிற்கு வருகிறது.
பெரும்பாலான வெளிநாட்டவர்கள் வந்து தங்கும் விடுதிகள் தான் இலக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புனித ஞாயிறு அன்று நடத்தபட்ட தாக்குதல், மார்ச் மாதம் 27, 2016 அன்று, லாகூரில் அமைந்திருக்கும் குல்ஷான் – இ – இக்பால் பூங்காவில் பாகிஸ்தான் தாலிபான்களால் நடத்தபட்ட தாக்குதலில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
2017ம் ஆண்டு எகிப்தில் உள்ள இரண்டு கோப்டிக் தேவாலயங்களில் பால்ம் சண்டே (Palm Sunday) நிகழ்வின் போது 45 பேர் கொல்லப்பட்டனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் யார் ஆட்சி என்ற ஆராய்ச்சி
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி, அதிமுகவில் 114, திமுகவில் 97, சுயேட்சை 1 என மொத்தம் 212 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
22 தொகுதிகள் காலியாக உள்ளது.
இதில் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 தேர்தல் நடைபெற்றது,
மீதமிருக்கும் 4 தொகுதிகளுக்கு மே 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான முடிவுகள் மே 23ம் தேதி வெளியிடப்படுகிறது.
அதிமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மொத்தம் 13 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
ஏனென்றால் கூட்டணியில் இருக்கும் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் அதிமுகவிற்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.
அதேநேரம் அதிமுகவில் இருக்கும் கலைச்செல்வன்(விருதாச்சலம்), ரத்தினசபாபதி(அறந்தாங்கி), பிரபு(கள்ளக்குறிச்சி) ஆகிய எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாகவே தினகரனை ஆதரிக்கின்றனர்.
ஒருவேளை இவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவளிக்கவில்லையென்றால் அதிமுகவின் எண்ணிக்கை 105 ஆக குறைந்துவிடும்.
இதனால்தான் 13 தொகுதிகளில் வெற்றி தேவை.
திமுக கூட்டணி இணக்கமாகவே இருக்கிறது.
ஆதலால் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்க, மொத்தம் 21 தொகுதிகளில் வென்றாக வேண்டும் (திமுக கூட்டணி 97 +21=118).
அப்படி வெற்றிபெற்றால் அவர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியும்.
இவற்றில் ஒன்றிரண்டு குறைந்தாலும் கடினமாகிவிடும்.
இந்த முடிவுகளை மாற்றும் சக்திகளாக இருப்பது அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள்.
மே -23.மிக முக்கிய நாளாகவே தமிழ்நாட்டிற்கு அமைந்துள்ளது.

எஸ்.ஒய். குரேசி |

கண்டெய்னர் நினைவிருக்கிறதா? |

யுகமாகி நின்ற லெனின்
யுகமாகி நின்ற லெனின் உலகாகி நின்ற லெனின்
உறவாகி நின்ற லெனினே!
அகமாகி நின்ற லெனின் அறிவாகி நின்ற லெனின்
அரசாள வந்த லெனினே!
சுகமாகி வந்த லெனின் துணையாகி வந்த லெனின்
சுதந்திர மான லெனினே!
இகமாகி நின்ற லெனின் எமையாள வந்த லெனின்
இறையாகி வந்த லெனினே!
நறவூறுகின்ற மொழி பொருளர்க்கும் என்றவழி
நடை கொண்டு வந்த லெனினே!
உறவாகி உலகெங்கும் உழைப்பாளர் ஆட்சிநெறி
உரமாக்கி வைத்த லெனினே!
- பாவேந்தர் பாரதிதாசன்
(1918)
(இன்று மாமேதை லெனின் பிறந்த நாள்)
உறவாகி நின்ற லெனினே!
அகமாகி நின்ற லெனின் அறிவாகி நின்ற லெனின்
அரசாள வந்த லெனினே!
சுகமாகி வந்த லெனின் துணையாகி வந்த லெனின்
சுதந்திர மான லெனினே!
இகமாகி நின்ற லெனின் எமையாள வந்த லெனின்
இறையாகி வந்த லெனினே!
நறவூறுகின்ற மொழி பொருளர்க்கும் என்றவழி
நடை கொண்டு வந்த லெனினே!
உறவாகி உலகெங்கும் உழைப்பாளர் ஆட்சிநெறி
உரமாக்கி வைத்த லெனினே!
- பாவேந்தர் பாரதிதாசன்
(1918)
(இன்று மாமேதை லெனின் பிறந்த நாள்)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை குண்டு வெடிப்பு .
இந்தியா முன்பே எச்சரித்தது.
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளின் காரணமாக இதுவரை 13 நபர்களை கைது செய்துள்ளது இலங்கை அரசாங்கம். 200க்கும் மேற்பட்டோர்களை பலி வாங்கிய இந்த தாக்குதலை ஜிஹாதி அமைப்புகள் எதாவது செய்திருக்குமா என்ற கோணத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குண்டு வெடிப்புக்கு சிலநிமிடங்களுக்கு முன் குதூகலம். |
6 மாதங்களுக்கு முன்பு அவர் காணாமல் போனதாக அவர்களின் குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, காவல்த்துறையினர் சந்தேகத்தின் போது சிலரை நெருங்கும் போது 7வது மட்டும் 8வது குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
ஆனால் இதுவரையில் எந்த ஜிஹாத் இயக்கத்தினரை கைது செய்யச் சென்றனர் என்பது தொடர்பாக எந்த விதமான தகவல்களையும் அளிக்கவில்லை.
இந்திய தரப்பில் இருந்தும், இலங்கை தரப்பில் இருந்தும், தீவிரவாத தாக்குதல் நடைபெற உள்ளது என்று முன்பே எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
தீவிரவாத தாக்குதல்கள் இந்த நாட்டிற்கு ஒன்றும் புதிது கிடையாது.
2009 மே மாதத்திற்கு பிறகு நாட்டில் முதல் முறையாக வெடி கொண்டு வெடிக்கிறது.
கொழும்புவில் உள்ள செண்ட்ரல் பேங்க் அருகே 1996ம் ஆண்டு விடுதலைப் புலிகள் நடத்திய தீவிரவாத தாக்குதல் தான், கொழும்புவில் நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல்.
அதில் 91 நபர்கள் கொல்லப்பட்டனர்.
அதே போல் 2001ம் ஆண்டு ஜூலை மாதம் பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் விடுதலைப் புலிகளால் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் நேற்று நடைபெற்ற தாக்குதல்கள் எதுவும் அது போன்று இல்லை. மே 2009ம் ஆண்டிற்கு பிறகு, விடுதலைப் புலிகள் என்ற எண்ணமானது தமிழர்கள் வாழும் பகுதியில் மட்டும் கற்பனையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
விடுதலைப் புலிகள் தேவாலயங்களில் தாக்குதல்கள் அதிக அளவில் நடத்தியலை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் பெரும்பான்மை தமிழ் கிறித்துவர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, அங்கு வாழ்ந்த தமிழ் இந்து மக்களிடம் ஒற்றுமையாக இணக்கமாக வாழ்ந்து வந்தனர். அதனால் கத்தோலிக்க தேவாலயங்களை தாக்குவதில் விடுதலை புலிகளுக்கு விருப்பம் கிடையாது.
முன்பு தேவாலயங்களை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள்.
நேற்று மாலை வரை, நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில், உலகில் இது போன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களின் ஒப்பீடுகள் நடந்து வருகின்றன.
நேற்று நடைபெற்ற 8 குண்டு வெடிப்புகளில் இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்கள் என்று கூறப்படுகிறது.
இன்றைய சூழலில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது.
ஆனால் அவர்களின் இலக்கானது தேவாலயங்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஜோலோ கத்தோலிக்க தேவாலயம் மற்றும் தெற்கு பிலிப்பைனில் இருகும் மிந்தனௌ தேவாலயத்தில் இது போன்று ஜனவரி மாதம் இரட்டை தாக்குதல் நடத்தப்பட்டதை இது நினைவு கூறுகின்றது.
20 பேர்களை பலி கொண்ட இந்த தீவிரவாத தாக்குதல்கள் கிழக்கு ஆசியாவில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்போடு தொடர்பு கொண்டது.
சமீபத்தில் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் பகுதியில் அமைந்திருந்த மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பையும் நினைவு கூறுகிறது இந்த தக்குதல்கள்.
பலி எண்ணிக்கை, மற்றும் விடுதிகளின் தேர்வினை ஒப்பிடும் போது, மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்கள் நினைவிற்கு வருகிறது.
பெரும்பாலான வெளிநாட்டவர்கள் வந்து தங்கும் விடுதிகள் தான் இலக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புனித ஞாயிறு அன்று நடத்தபட்ட தாக்குதல், மார்ச் மாதம் 27, 2016 அன்று, லாகூரில் அமைந்திருக்கும் குல்ஷான் – இ – இக்பால் பூங்காவில் பாகிஸ்தான் தாலிபான்களால் நடத்தபட்ட தாக்குதலில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
2017ம் ஆண்டு எகிப்தில் உள்ள இரண்டு கோப்டிக் தேவாலயங்களில் பால்ம் சண்டே (Palm Sunday) நிகழ்வின் போது 45 பேர் கொல்லப்பட்டனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் யார் ஆட்சி என்ற ஆராய்ச்சி
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி, அதிமுகவில் 114, திமுகவில் 97, சுயேட்சை 1 என மொத்தம் 212 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
22 தொகுதிகள் காலியாக உள்ளது.
இதில் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 தேர்தல் நடைபெற்றது,
மீதமிருக்கும் 4 தொகுதிகளுக்கு மே 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான முடிவுகள் மே 23ம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக தனது ஆட்சியை
தக்கவைத்துக்கொள்ளவும், திமுக ஆட்சியை கைப்பற்றவும் மிகுந்த முயற்சிகளை
எடுத்துவருகிறது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகள் கைவசம்
இருந்தால்தான் ஆட்சியமைக்க முடியும்.
அதிமுக கூட்டணியிலிருக்கும் 114
எம்.எல்.ஏ.க்களில் அதிமுக 111 + தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு (இரட்டை
இலை சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியினர்) ஆகியோர் இருக்கின்றனர்.
திமுகவில், திமுக 88, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 மொத்தம்
97பேர் உள்ளனர். காலியாக 22 தொகுதிகள் உள்ளன.
அதிமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மொத்தம் 13 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
ஏனென்றால் கூட்டணியில் இருக்கும் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் அதிமுகவிற்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.
அதேநேரம் அதிமுகவில் இருக்கும் கலைச்செல்வன்(விருதாச்சலம்), ரத்தினசபாபதி(அறந்தாங்கி), பிரபு(கள்ளக்குறிச்சி) ஆகிய எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாகவே தினகரனை ஆதரிக்கின்றனர்.
ஒருவேளை இவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவளிக்கவில்லையென்றால் அதிமுகவின் எண்ணிக்கை 105 ஆக குறைந்துவிடும்.
இதனால்தான் 13 தொகுதிகளில் வெற்றி தேவை.
திமுக கூட்டணி இணக்கமாகவே இருக்கிறது.
ஆதலால் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்க, மொத்தம் 21 தொகுதிகளில் வென்றாக வேண்டும் (திமுக கூட்டணி 97 +21=118).
அப்படி வெற்றிபெற்றால் அவர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியும்.
இவற்றில் ஒன்றிரண்டு குறைந்தாலும் கடினமாகிவிடும்.
இந்த முடிவுகளை மாற்றும் சக்திகளாக இருப்பது அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள்.
இந்தக் கட்சிகளின் வாக்கு வங்கிகள் பல
இடங்களில் வெற்றி, தோல்விகளை முடிவு செய்யும். ஒருவேளை இவர்கள் சில
தொகுதிகளைக் கைப்பற்றினால், அவர்களின் ஆதரவைக் கேட்கக்கூடும்.
நடைமுறை
அரசியலில் அது சாத்தியமற்றதாகவே இருக்கும்.
ஆதலால் அவரவர் தனது
பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கின்றனர்.
மே -23.மிக முக்கிய நாளாகவே தமிழ்நாட்டிற்கு அமைந்துள்ளது.
அதுவரை தமிழ்நாட்டில் யார் ஆட்சி என்ற ஆராய்ச்சிதான்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------