புதன், 19 ஜூன், 2019

போதை மிகவும் ஆபத்தானது


தமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா,
ஸ்ரீராமை  இழுப்பதேன்?
17-வது மக்களவையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
 அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து, பல்வேறு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும்  பதவியேற்றனர்.
தொடர்ந்து, 2-வது நாளாக இன்றும் எம்.பிக்கள் பதவியேற்றனர்.
 அந்தவகையில், தமிழக எம்.பிக்கள் இன்று தமிழிலேயே பதவியேற்று, மக்களவையை அதிர வைத்தனர்.

ஒவ்வொரு தமிழக எம்.பியும், பெரும்பாலும் தங்கள் பதவியேற்பு உரையின் இறுதியில், 'வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு' என முழக்கமிட்டனர்.
திமுக எம்.பிக்கள், பெரும்பாலானோர், கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க என்றும் கூறி பதவியேற்றனர்.
 தமிழக காங்கிரஸ் எம்.பிக்களும் தமிழில் பதவியேற்று, ராஜிவ் காந்தி வாழ்க என்று முழக்கமிட்டனர்.


இவர்களில், அதிமுக எம்.பி. ரவிந்தரநாத் பதவியேற்கும் போது, 'வாழ்க எம்.ஜி.ஆர், வாழ்க ஜெயலலிதா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்' எனக் கூறினார். அப்போது அவருக்கு மட்டும் பாஜக எம்.பிக்கள் பெரும்பாலானோர் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இதனிடையே, தமிழக எம்.பிக்கள் தமிழில் பதவியேற்ற போதும், தமிழ் வாழ்க என்று கோஷமிட்ட போதும், எதிரே அமர்ந்திருந்த பாஜக எம்.பிக்கள் தேவையே இல்லாமல் 'பாரத் மாதாகி ஜே' என கூச்சலிட்டனர்.

இதேபோல், தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க என கனிமொழி குறிப்பிட்டபோது பாஜக வினர் ஜெய்ஸ்ரீராம் என பலத்த கூச்சலிட்டனர்.
தமிழ் வாழ்க என்றால் பாஜகவினருக்கு  கடுப்பு கிளம்புவதேன்.?
தமிழ்,தமிழன்,தமிழ்நாடு என்றாலே பாஜகவினருக்கு தேவையே இல்லாத எரிச்சல்,கோபம்தான் வருகிறது.
பின் இவர்கள் எப்படி தமிழகத்தில் வளர முடியும்.
 நக்கலு?..................,
யாருகிட்டே.. ?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாடப்புத்தகங்கள் எங்கே?

தமிழகத்தில் பள்ளிகள் திறந்து, 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை 3, 4, 5ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை.
பள்ளிகள் திறக்கப்பட்ட அன்றே புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேற்குறிப்பிட்ட வகுப்புகளுக்கான புத்தகங்களை இன்னும் அச்சடிக்கும் பணியே முடியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

2018-19ஆம் கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
அதைத்தொடர்ந்து 2, 7, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்தன.

இதனிடையே 3, 4, 5ஆம் வகுப்புகளுக்கும் இந்தக் கல்வி ஆண்டிலேயே புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த நிலையில் பாடப்புத்தகங்கள் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.

 ஆனால் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பள்ளிகளில் இதுவரை, 3, 4, 5ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் முறையாகச் சென்று சேரவில்லை எனத் தெரியவந்திருக்கிறது.
3, 4, 5ஆம் வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கான தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன்படி புதிய பாடத்திட்ட வடிவமானது கடந்த மாதம்தான் இறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் புத்தகம் அச்சடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

எனினும் பள்ளிகள் திறந்து இன்றுடன் 15 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், மாணவர்களுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாததால் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
விரைவில் பாடப்புத்தங்களை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் 3, 4, 5ஆம் ஆகிய வகுப்புகளுக்குப் பாடப்புத்தகம் வழங்க இன்னும் இரண்டு வாரங்கள் ஆகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வரை www.textbooksonline.tn.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து பாடங்களை நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் பிரதியை, மாணவர்கள் நகல்கள் எடுக்கப் பள்ளிகள் கூறிவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளிகளுக்குப் புத்தகங்கள் வழங்கப்படாததற்குக் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பள்ளிகள் திறந்தும் 3, 4, 5ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களை அனுப்ப இயலாத கையாலாகாத அரசாக தமிழக அரசு உள்ளது.
குடிநீர் முதல் கல்வி வரை எதைப்பற்றியும் கவலை இல்லாதவர் கையில் ஆட்சி சிக்கி உள்ளது. இனிமேலாவது துரிதமாகச் செயல்பட்டுப் பாடப்புத்தகங்கள் கிடைக்க அரசு ஆவண செய்ய வேண்டும். செய்யுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 டிஜிட்டல் போதை மிகவும் ஆபத்தானது!
இன்று டிஜிட்டல் மோகம் அனைத்து தரப்பான வயதினரிடையேயும் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
அதன் விளைவு என்னவாக இருக்கிறது என்றால், இந்த மோகம் தற்கொலை மற்றும் இறப்புகளில் சென்று முடிகிறது.
இந்த மோகம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது.

இந்த டிஜிட்டல் போதை சமீபத்தில், 'தமிழகத்தில் கடந்த வாரம் டிக்-டாக் செயலியால் தற்கொலை செய்து இறந்து போன ஒரு 24 வயதான பெண்' மற்றும் 'மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி விளையாடியாதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோன 16 வயது சிறுவன்' என்று வெளியான இரண்டு செய்திகளுக்கு பின் அனைவரின் கவணத்தையும் பெற்றுள்ளது.

உளவியல் நிபுணர்களோ மது போதைய விட இந்த டிஜிட்டல் போதை மிகவும் ஆபத்தானது என்கிறார்கள்.

அவ்வளவு ஆபத்தானதா இந்த டிஜிட்டல் போதை, இதிலிருந்து எப்படி வெளியேறுவது,  உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் இதோ!

"இதிலிருந்து வெளியேற மக்கள் இரண்டு விஷயங்களை பின்பற்ற வேண்டும். முதலில், அவர்கள் வேலை, இல்லற வாழ்வு, வெளியுலக வாழ்கை மற்றும் சமூகத்துடனான ஒருங்கிணைப்புகள் ஆகியவற்றை சரிவர சமனில் வைத்துக்கொள்ள வெண்டும்.
 மற்றொன்று, ஒருவர் தேவையான அளவு துக்கத்தை எடுத்துக்கொள்கிறார்களா என்பதை உறுதி செய்துகொள்ள வெண்டும்.", என்கிறார் ஃபோர்டிஸ் ஹெல்த்கேரை சேர்ந்த மனநலம் மற்றும் நடத்தை அறிவியல் துறையின் இயக்குனர் சமீர் பரிக் (Samir Parikh).

பரிக் மேலும் கூறுகையில், ஒருவர் ஒரு வாரத்தில் ஒரு முறையாவது குறைந்தது 4 மணி நேரம் 'டிஜிட்டல் டிடாக்ஸ்' (digital detox) செயல்முறையை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்.
இந்த 'டிஜிட்டல் டிடாக்ஸ்' என்பது என்னவென்றால், எந்த ஒரு மின்னனு சாதனங்களையும் பயன்படுத்தாமல் இருப்பது.
"ஒருவர், இந்த 4 மணி நேரத்தில் எந்த ஒரு மின்னனு சாதனங்களையும் பயன்படுத்தாமல் இருப்பதில் சிரமப்படுகிறார் என்றால் அவர் கவணிக்க வேண்டிய ஒரு பிரச்சனையில் இருக்கிறார் என்று அர்த்தம்.", என்கிறார் பரிக்.


மேலும் புது டெல்லியை சேர்ந்த இந்திரபிரசாதா அப்போலோ மருத்துவமனையின் உளவியல் துறையின் மூத்த ஆலோசகரான சந்தீப் வோஹ்ரா இது குறித்து கூறுகையில்,"எந்த ஒரு போதையை விட இந்த டிஜிட்டல் போதை என்பது மிகவும் ஆபத்தானது.
இந்த டிஜிட்டல் போதையின் அறிகுறி என்னவென்றால், உங்கள் அன்றாட வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்டு செயல்படுவீர்கள்" என்கிறார்.
மேலும் ஒருவர் இந்த டிஜிட்டல் போதைக்கு அடிமையானால் மனச்சோர்வு, பதட்டம், தூக்கமின்மை, எரிச்சல் மற்றும் பிற விஷயங்களில் கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள் என்கிறார் வோஹ்ரா.

இந்த போதையால் பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். "ஒருவேளை, குழந்தைகள் அதிக நேரம் டிஜிட்டல் திரைகளுக்கு முன்பு செலவிடுகிறார்கள் என்றால், அது கவணிக்கப்பட வேண்டிய ஒன்று.
 பேற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இந்த மோகத்திலிருந்து வெளிக்கொண்டு வர பெரிதும் பங்காற்ற வேண்டும். அவர்களின் கவணத்தை மற்ற செயல்களில் திருப்ப வேண்டும். உள்விளையாட்டு வெளிவிளையாட்டு, குடும்பத்தினருடனான ஒருங்கிணைப்புகள் போன்றவற்றில் தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும்.
அவர்களுக்கு பிடித்த மற்ற செயல்களை கண்டறிந்து அதில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். வாசிப்பு பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்" போன்றவாறான ஆலோசனைகளை வழங்குகிறார் பரிக்.

''ஒருவேளை குழந்தைகள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதிக நேரங்களை ஸ்மார்ட்போன் திரைக்கு முன் போக்குகின்றனர் என்றால், பெற்றோர்கள் அவர்களுடன் உரையாட வேண்டும், அவர்களின் கவணத்தை வேறு பக்கம் மாற்ற வேண்டும்.
அவர்களை அந்த போதையிலிருந்து வெளிக்கொண்டுவர வேண்டும்.", என்கிறார் வோஹ்ரா.
முன்பு கூறியதுபோல, இந்த டிஜிட்டல் போதை என்பது மற்ற அனைத்து போதைகளை விட மிகவும் ஆபத்தானது.
 இதன் விளைவு என்னவாக இருக்குமென்றால், உங்களுக்கே தெரியாமல், உங்களை மரணத்திற்கு அருகில் அழைத்து செல்லும்.
அதுவும் குழந்தைகளுக்கு, இதுகுறித்த அறிவு என்பது மிகவும் குறைவாகவே இருக்கும். இந்த கட்டுரை முக்கியமாக பெற்றோர்கள் கவண்த்திற்குதான்.
 அவர்கள்தான், அவர்களின் குழந்தைகளை இம்மாதிரியான பிரச்சனைகளிலிருந்து காக்க வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 நக்கலடித்த வேலுமணி?
ரெயில்வே அலுவலகம்
சென்னையில் தண்ணீர்த் தட்டுப்பாடு இருப்பதாக எதிர்க்கட்சிகளால் பொய்யான தோற்றம் உருவாக்கப்படுவதாகவும் அதை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
 சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது எதிர்க்கட்சிகளால் இட்டுக்கட்டி கூறப்படும் பொய் அல்ல என்பதை மக்கள் படும் பாட்டிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.
சென்னை மாநகரத்தின் தண்ணீர் பற்றாக்குறைக்கு தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியமே முழு காரணம். சென்னை பெரு நகரப் பகுதிகளில் 1350 மி.மீ. மழை பெய்திருக்கிறது.
அதாவது 330 டி.எம்.சி. சென்னையின் ஒரு மாத தண்ணீர் தேவையே 1 டி.எம்.சி.தான். இவ்வளவு தண்ணீரை வீணடித்துவிட்டு நாம் வறட்சி என்று சொல்வது ஏதாவது நியாயம் இருக்கிறதா என்று நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன் எழுப்பியுள்ள கேள்வி நியாயமானதுதானே.


பருவநிலை மாற்றத்தால் மழை மற்றும் வெயில் மாறி மாறி ஏற்படும்போது மாநிலத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்கவும் தண்ணீர்ப் பற்றாக்குறையை சமாளிக்கவும் முன் ஏற்பாடு ஏதும் செய்யாமல் இருந்துவிட்டு பற்றாக்குறை ஏற்பட்ட பிறகு அவசர ஆலோசனைகள் நடத்துவதும் எதிர்க்கட்சிகளை திட்டுவதும் நிலைமையை சீராக்கிவிடாது.

 தயவு செய்து சென்னைப் பக்கம் வந்துடாதீங்க  என வெளியூரில் வசிக்கும் உறவுகளுக்கு சென்னை வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ள னர் என்று செய்திகள் வெளியாகின்றன.

 காலி வீடு கிடைக்காத நிலை மாறி, எங்கு பார்த்தாலும் வீடு வாடகைக்கு என்ற பலகையும் தொங்குகிறது என்றும் செய்திகள் கூறுகின்றன. இவையெல்லாம் எதிர்க்கட்சிகளின் வெறும் புரளி அல்ல, சென்னையின் நடப்பு நிகழ்வுகள்.

ஹோட்டல்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதாக கூறுவதை நம்ப வேண்டாம் என்று அமைச்சர் கூறுகிறார்.
அதுமட்டுமின்றி ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வீட்டி லேயே வேலைபார்க்க சொல்வது ஏற்கெனவே நடந்து வருகிறது. அது தண்ணீர் பற்றாக்குறை யால் செய்யப்பட்டுள்ள ஏற்பாடு அல்ல என்று கூறிய அமைச்சர் வேலுமணிஅன்று மாலையே முதல்வர்,அதிகாரிகளுடன் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கான கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.இது மிகப்பெரிய கேலிக்கூத்து மட்டுமல்ல.
 தாகத்தால் வாட்டும் மக்களை நக்கல் செய்வதுதான் இது.
அமைச்சர் குறைகளைக்களைவதுதான்  முக்கியப்பணியாக செய்யவேண்டும்.பூசி மெழுகுவதல்ல.டெல்லிக்கு ஆட்சியைக்காப்பாற்ற பல முறை காவடி தூக்கி செல்லும் வேலுமணி குடிநீர் தேவையைப்பற்றி டெல்லியில் வாயையே திறக்கவில்லையே ஏன்/

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்று சென்னை  உயர்நீதிமன்றம் ஒரு மனு மீதான விசாரணையின் போது கூறியுள்ளது.

  எனவே தண்ணீர்ப் பற்றாக்குறையை போக்குவது, நிலத்தடி நீரை பாதுகாப்பது, மழை நீரை சேகரிப்பது போன்ற நீண்டகால திட்டங்களோடு தொடர்புடையவை ஆகும். ஆனால் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்வதில், ஆட்சியை நீடிக்கச் செய்வதில் காட்டும் அக்கறையை நீர் வளத்தை பாதுகாப்பதில் சிறிதளவாவது செலுத்துவதே தமிழக ஆட்சியாளர்களின் கடமையாகும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 எப்படி செய்வார் மோடி.
மோடி தலைமையிலான பாஜக அரசு, இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு, பல  விவசாயிகள் நலத் திட்டங்களை அறிவித்துள்ளது.
குறிப்பாக பிரதமர் மோடி, ‘விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்' என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் உலக வர்த்தக அமைப்பான டபள்யூ.டி.ஓ (WTO)-வின் கூட்டத்தில், மோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.


டபள்யூ.டி.ஓ அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், அந்த அமைப்பின் விதிமுறைகளை புறந்துள்ளும் வகையில் உறுப்பினராக இருக்கும் நாடுகள் நடந்து கொண்டால், கேள்விகள் எழுப்பப்படும்.
அப்படித்தான் தற்போது இந்தியாவிடம் கேள்வி கேட்டுள்ளது டபள்யூ.டி.ஓ அமைப்பு மற்றும் மற்ற உறுப்பினர் நாடுகள்.

டபள்யூ.டி.ஓ அமைப்பின் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம்,
 “பிரதமர் மோடி விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காக சுமார் 25 டிரில்லியன் ருபாயை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றும் கூறுகிறார்.
 அதை எப்படி செய்வார் அதற்கான திட்டங்கள் என்ன வைத்துள்ளார்.இது குறித்து விளக்குங்கள்.” 
என்று இந்தியாவிடம் கேள்வி கேட்டுள்ளது.

ஏற்கனவே போன தேர்தலில் மோடி"ஆளுக்கு 15 லட்சம் வங்கியில் போடுவதாக" கொடுத்த வாக்குறுதி
பற்றி அங்கே தெரிஞ்சிடுச்சு போலிருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------