புளிச்ச மாவி(ஜெயமோக)ன் மறுபக்கம்

நேத்து வந்த மாவுதான் சார் இருக்கு, ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். பரவால்ல  கொடுங்கன்னு வாங்கிட்டுப்போன கொஞ்சம் நேரம் கழிச்சு திடீர்ன்னு பைக்குல வந்த ஜெயமோகன், ஏண்டி நாயே தே...மவளே... என்ன மாவடி கொடுத்திருக்கன்னு கேட்டுக்கிட்டே மாவு பாக்கெட்டை தூக்கி என்னோட மூஞ்சில வீசினாரு... 'நீதானே பார்த்து எடுத்துட்டுப்போன? இப்பவந்து இப்படி பேசுற?' ந்ன்னு கேட்டேன்.

உடனே, தண்ணீர் சொம்பை வேகமாக தள்ளிவிட்டுட்டு உள்ளவந்து என் முடியப்பிடிச்சு இழுக்க முயற்சி பண்ணினாரு... பக்கத்துல இருந்த என்னோட கணவர் அந்தாள நெட்டி தள்ளி அடிச்சிட்டாரு... அந்தாளால எங்க மானமே போயிடுச்சு.


அன்னைக்கு வந்த ஆளு மாவு பிடிக்கல.
காச கொடுன்னு கேட்டிருந்தா கொடுத்திருப்பேன். இப்படி அசிங்க அசிங்கமா பேசலாமா? எனக்கு அவரை யார்ன்னுக்கூட தெரியாது.
ஆனா, நீங்களே சொல்லுங்க... என் கணவருக்கு அவரைத் தெரியுமாம். தெரிஞ்சிருந்தும் அடிச்சார்ன்னா அதுக்குக்காரணம், ஒரு மனைவியை கண்ணு முன்னாடி அப்படி தரக்குறைவா பேசினா எந்தக்கணவன் தான் பார்த்துக்கிட்டு சும்மா நிற்கமுடியுமா?
 என  மாவுக்கடைக்காரர் சம்சாரம் கீதா கண்ணீரோடு சொல்கிறார்.

திமுகவை சார்ந்தவரின் கடைக்கு சென்று,  அவரது சம்சாரத்தின் மூஞ்சில் புளிச்ச மாவை  வீசி  வீசி அடித்துள்ளார் ஜெயமோகன். இதனால் காண்டான  கடைக்காரர் ஜெயமோகனை ரோட்டிலேயே புரட்டி எடுத்துள்ளார்.
சராசரி மனிதர்கள் எல்லோருமே, தனது மனைவியை ஒருவன் அசிங்க அசிங்கமாக திட்டும்போது இப்படி அடிக்கத்தான் செய்வார்கள்?

இந்த ஜெயமோகனுக்கு அடாவடியில்  இறங்குவது புதிதல்ல.
முன்பு ஒரு A T Mஇல் பணமில்லை என்பதால் வெளியே வருகையில்  A T M கதவு உடனே திறக்கவில்லை (முன்பு அட்டையை உள்ளே நுழைத்தால்தான் கதவு தீர்க்கும்) என்பதால் கதவையே கோபத்தில் கிடைத்து வெளியே வந்துள்ளார்.
வங்கி அலுவலர்கள் இவர் எழுத்தாளர் என்பதால் இதை பெரிது படுத்தாமல் மன்னிப்பு கடிதம் வாங்கி விட்டு விட்டு விட்டார்கள்.
ஆனால், நடந்தாது என்னன்னு கூட தெரியாமல் புளிச்சமாவு ஜெயமோகனுக்காக உதயசூரியன் சின்னத்தில் ஜெயிச்ச விழுப்புரம் எம்.பியும் தி.மு.க.வின் ரவிக்குமார், திமுக ஆதரவினால் மதுரை  எம்.பி ஆன சு.வெங்கடேசனும், அவசர அவசரமாக ஒரு பெண்ணிடம் அடாவடி செய்த ஜெயமோகனுக்காக வக்காளத்து வாங்கியிருப்பது மட்டுமல்லாமல் திமுகவை சேர்ந்த கடைக்காரருக்கு மேலும் இடைஞ்சல் கொடுக்க   காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.ஆர்.எஸ்.எஸ்.,பாஜக ஒருபக்கம் அழுத்தம் கொடுப்பதால் காவல்துறை உண்மையான புகாராக முதலிலேயே  கடைக்கார பெண்மணி கொடுத்த புகாரை பதிவு செய்யாமல் குப்பையில் போட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

நடந்தது என்ன என்று குமாரை மாவட்டத்தில் தங்கள் கட்சியினர் மூலம் விசாரிக்காமலேயே எழுத்தாளர் என்ற ஒரே காரணத்துக்காக அநீதிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.
ஆனால் இவர்கள் ஆதரவாக செயல்படுமளவு ஜெயமோகன் தகுதியானவரா என்றால் இல்லைதான்.கரணம் கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ்.ஆததவு வலதுசாரி ,சங்கி தான் ஜெயமோகன்.
 காரணம் கேட்டால் ஒரு எழுத்தாளரை அடிச்சு அட்மிட் பண்ண வச்சிட்டாங்கன்னு சொல்கிறார்கள் இந்த எழுத்தாளர்கள். ஆனால், உண்மை என்னன்னு விசாரிச்சா?

கடைக்காரர் செல்வத்தின் சம்சாரம் கீதா நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அட்மிட்டான, ஒன்றரை மணிநேரம் கழித்து தான், திடீரென வந்து அட்மிட் ஆனாராம் புளிச்சமாவு ஜெயமோகன், எழுத்தாளர்கள் எம்.பி. கூட்டாளிகள்  பிரஷரால், கடைக்காரர் செல்வத்தை  போலீஸ் கைது செஞ்ச மேட்டர் தெரிஞ்சதும்  டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டார்.


ஆனால், ஜெயமோகனால் பாதிக்கப்பட்ட கீதா தற்போதுவரை  சிகிச்சை பெற்று வருகிறாராம்.
இதுல இன்னொரு கொடும என்னன்னா?
 , திமுகவைச் சேர்ந்த கடைக்கார் செல்வத்துக்கு எதிரா வழக்கை வலுவாக்க  பெண் எம்பிக்களும், எழுத்தாளர்களுமான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி  உள்ளிட்ட எழுத்தாளர்களை வக்காளத்துக்கு கூப்பிடவும் பிளான் போட்டுள்ளார்களாம்.
அப்படி அவர்கள் வருவார்களானால் அது அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு,அவருக்காக  உழைத்த திமுக அடிமட்ட தொண்டர்களுக்கு செய்கின்ற துரோகம்தான்.

புளிச்சமாவு ஜெயமோகனுக்காக பெண் எம்பிக்களிடம் ஆதரவு திரட்டும் விஷயம் தெரிந்த அந்த பகுதியிலுள்ள பெண்கள் மற்றும் கடைக்காரர்கள் அனைவரும் ஒன்று கூடி புளிச்சமாவு ஜெயமோகனால் பாதிக்கப்பட்ட கீதாவுக்கு,அவரது கணவர் செல்வத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
கடைக்கார பெண்மணியின் மீது மாவுப்பாக்கெட்டை வீசி அவமானப்படுத்தி தாக்குதலுக்குள்ளான ஜெயமோகன் குறித்து 'ஜெயமோகனுக்கு ஒரு வேண்டுகோள்' என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் அ.மார்க்ஸ் தனது முகநூலில் இப்படி எழுதியுள்ளார்.

 ஜெயமோகன் பிரச்சினை குறித்து முழு விவரங்களையும் கேட்டு அறிந்தேன்.
நாகர்கோவில் நண்பர்கள் உதவினார்கள். ஒரு சாதாரண பிரச்சினையை அவர் இத்தனை சிக்கலாக்கியிருக்க வேண்டியதில்லை. உள்ளூர் நண்பர்கள், இதுபோன்று மாவு பாக்கெட்கள் விற்கும் சிறு கடைக்காரர்கள் ஆகியோரிடமும் பேசியபோது ஜெயமோகன் சற்று பொறுமையாக இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

அன்றாடம் எத்தனையோ அநீதிகளைப் பொறுத்துக் கொண்டு போகிறோம். உடைந்து கிடக்கும் சாலைகள், ஏமாற்றும் கான்டிராக்டர்கள் இவை குறித்தெல்லாம் நாம் கவலைப்படாமல் கடந்துபோய் விடுகிறோம்.

இப்படியான பிரச்சினைகளை இந்த 'லெவலு'க்குக் கொண்டு சென்றிருப்பது ஒரு அப்பட்டமான "மிடில் கிளாஸ் மென்டாலிட்டி" என்றுதான் சொல்ல வேண்டும்.

திருச்சியிலிருந்து ஒரு நண்பர் ஜெயமோகன் 2008ல் எழுதிய பதிவொன்றை அனுப்பி இருந்தார். 

ஒரு முறை ஜெயமோகன் ATM கதவு ஒன்றைச் சரியாகத் திறக்கத் தெரியாமல் அதை உடைத்துத் திறந்து வெளிவந்த கதையை அவரே எழுதியது அது. அதைப் படிக்கும்போது ஒன்று விளங்குகிறது. 
தான் ஒரு எழுத்தாளன் என்கிற வகையில் ஏகப்பட்ட சிந்தனைகளைச் சுமந்து எப்போதும் தாஸ்தாவெஸ்கி, காம்யூ போன்ற சிந்தனைகளில் ஈடுபட்டிருக்கும்போது இப்படித்தான் பொறுமை இல்லாமல் நடந்து கொள்ள முடியும் என அவர் தன்னை நியாயப்படுத்துகிறார்.
  மூர்க்கமாக நடந்து கொண்ட அச்சம்பவத்தையும் தனது மேதமையின் அடையாளமாகச் சித்திரிக்கும் அம்முயற்சி உண்மையில் நேற்று வாசிக்கும்போது எனக்கு வெறுப்பைத்தான் ஏற்படுத்தியது.

 ATM கதவை உடைப்பது பெரிய குற்றம். அது, வழக்காகி இருந்தால் சிக்கல்.
 எனினும் ஒரு எழுத்தாளர் என்கிற வகையில் அந்த வங்கி அதிகாரிகள் மிக்க பொறுமையுடன் அந்த நிகழ்வைக் கையாண்டுள்ளனர். 
அவர்களே அதை 'ரிப்பேர்' செய்து உரிய தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு வழக்கு ஏதும் இல்லாமல் செய்துள்ளனர்.  
அவர்களின் அந்தப் பொறுமைக்கு ஒரு நன்றி தெரிவிக்கும் பண்புகூட அப்பதிவில் ஜெயமோகனிடம் காணவில்லை.

இப்படியான ஒரு புளித்த மாவுப் பிரச்சினையில் நானாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் எனச் சற்று யோசித்துப் பார்த்தேன்.
 மாவு புளித்திருக்கு என மனைவி சொல்லி இருந்தால், "சரி அதைத் தூக்கி எறி. வீட்டில் கோதுமைக் குருணை இருந்தால் கொஞ்சம் கஞ்சி போடு. சாப்பிட்டுவிட்டுப் படுப்போம். உடம்புக்கும் நல்லது"
 என்று அது இப்படியான சம்பவமாக ஆக்கப்படாமல் கழிந்திருக்கும்.  
அ.மார்க்ஸ்




இரண்டு விடயங்கள் முடிக்கு முன்: 
1. அந்த கடைக்காரர் செல்வம் என்பவர் குறித்தும் நாகர்கோவில் நண்பர்கள் ரொம்பவும் நல்ல அபிப்பிராயத்தையே சொல்கின்றனர்.அவர் திமுக வட்ட செயலாளராக அப்பகுதி மக்களுக்கு பல பணிகள் செய்து நல்லபெயர் பெற்றுள்ளார்.

2. மருத்துவமனையில் அட்மிட் ஆகும் அளவிற்கு ஜெயமோகனுக்கு ஒன்றும் இல்லை. வழக்கை மெய்ப்பிப்பதற்காகவும், வலுவாவதற்காகவும் வழக்கமாக எல்லோரும் செய்யும் தந்திரம்தான் இது என்பதை பாரதி மணி போன்ற பெரியவர்களும் கூடப் பதிவு செய்துள்ளனர். 
அரசு மருத்துவர் ஒருவர் இப்படி வழக்குக்காக அரசு மருத்துவமனையில் வந்து வேண்டுமென்றே படுத்துக் கொள்வது எப்படி ஒரு உண்மையான நோயாளிக்குக் கிடைக்கக் கூடிய மருத்துவ வசதியைப் பாதிக்கிறது என அவர் உளமார்ந்த வருத்ததுடன் எழுதியிருந்தது நெஞ்சைத் தொடுகிறது.


இந்தப் பின்னணியில் நான் ஜெயமோகனிடம் முன்வைக்கும் அன்பான வேண்டுகோள் இதுதான். ஜெயமோகன் கடைக்காரர் செல்வத்தின் மீது தொடுத்துள்ள வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டு இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும். 
இதை பெரிதுபடுத்தினால் அசிங்கம் வந்து சேர்வது ஜெயமோகனுக்குத்தானாக இருக்கும்.
காரணம் ஜெயமோகனுக்கு அதிகாரவர்க்கம் ஆதரவு தரலாம்.ஆனால் பாதிக்கப்பட்ட கடைக்காரருக்கு ஆதரவாக பொது மக்கள் ஒன்று கூடுகிறார்கள்.

நாகர்கோவில் எழுத்தாள நண்பர்களான லட்சுமி மணிவண்ணன் முதலானோர் இதற்கு உதவ வேண்டும்..

ஜெயமோகனிடமிருந்து வேறு பல நியாயமான காரணங்களுக்காக கருத்து வேறுபடுபவர்கள் இச்சம்பவத்தைப் பயன்படுத்தி அவரை வசைபாடுவதை நிறுத்திக் கொள்வோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?