"நாம் செய்யாததையா செய்து விட்டார்கள்"
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான கட்ஆஃப் மதிப்பெண்ணை வெறும் 28.5% ஆக நிர்ணயித்து அதிர வைத்திருக்கிறது ஸ்டேப் பேங்க் ஆப் இந்தியா. இதே பணிக்கு எஸ்.சி, ஓ.பி.சிக்கு 61.25% கட்ஆஃப் மதிப்பெண்களும் எஸ்.டி. பிரிவினருக்கு 53.75% கட்ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
2009ஆம்
ஆண்டு சுரேஷ் டெண்டுல்கர் தலைமையிலான கமிட்டி நாளொன்றுக்கு
கிராமப்புறங்களில் ரூ27ம், நகர்ப்புறங்களில் 33 ரூபாயும் செலவு செய்ய
முடியாதவர்களை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என அறிவிக்க வேண்டும்
எனப் பரிந்துரை செய்தது.
இது பரபரப்பாக பேசப்பட்டதையடுத்து அப்போதைய
ஆர்.பி.ஐ. கவர்னர் ரங்கராஜன் தலைமையிலான நிபுணர்கள் குழு கிராமங்களில் 32
ரூபாயும், நகர்ப்பகுதிகளில் 47 ரூபாய்க்கு கீழ் செலவு செய்பவர்களை
வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என நிர்ணயித்தது.
இந்தியாவில்
9வது ஐந்தாண்டு திட்டத்தின் (1997- 2002) கீழ் தான் கடைசியாக
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.
இதர பின்தங்கிய மாணவர்களுக்கு ரூ 4 லட்சம்தான் வருமான உச்ச வரம்பு.
அப்படியிருக்கும் போது , பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களின்
வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது
என்பதே நிபுணர்களின் கேள்வியாகவுள்ளது.
எஸ்.பி.ஐ. வங்கித்தேர்வில் இடஒதுக்கீடு
எஸ்.பி.ஐ
நிறுவனம் 8,653 வங்கிப்பணிகளுக்கான தேர்வு முடிவுகளை சமீபத்தில்
வெளியிட்டது.
இதில் வகுப்புவாரியாக கட் ஆப் மதிப்பெண் பட்டியலையும்
வெளியிட்டுள்ளது.
அதன் படி எஸ்.சி பிரிவினருக்கு 61.5 மதிப்பெண்ணும்,
எஸ்.டி பிரிவினருக்கு 53.75 மதிப்பெண்ணும், ஓபிசி பிரிவினருக்கு 61.25
மதிப்பெண்ணும், ஜெனரல் வகுப்பினருக்கு 61.25 மதிப்பெண்ணும் பெற்றிருந்தால்
தேர்ச்சி பெற்றவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.
அதில் முன்னேறிய
வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு வெறும் 28.5
மதிப்பெண்கள் கட் ஆஃப் மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டு தேர்ச்சி
பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னேறிய
வகுப்பினரில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத
இடஒதுக்கீடு வழங்கி, மத்திய அரசு சட்டமியற்றியது.
இதற்கு சமூக ஆர்வலர்கள்
கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
சமூக ரீதியாக, கல்வி
வேலைவாய்ப்புகளில் பின்தங்கியவர்களுக்குத்தான் இட ஒதுக்கீடே தவிர,
பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு என்பது தவறான அளவுகோல் என்ற வாதம்
முன்வைக்கப்பட்டது.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு
உயர்வகுப்பில்
ஆண்டுக்கு 8 லட்சத்துக்கு கீழ் வருமானம் கொண்டவர்களுக்கு கல்வி மற்றும்
வேலைகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது தான் இந்த
மசோதாவின் நோக்கம்.
ஆண்டிற்கு 8 லட்சம் என்றால், மாதத்திற்கு 66ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கொண்டவர்கள்.
இந்தியாவில் சராசரி மனிதனின் ஆண்டு வருமானமே ரூபாய் ஒரு லட்சம் தான்.அப்படி இருக்கும் பட்சத்தில் 8 லட்சம் ஆண்டிற்கு ஈட்டுபவர்கள் எப்படி பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களாக இருக்க முடியும்.
பலதரப்பினர்
10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்துவரும் நிலையில், எஸ்.பி.ஐ தேர்வில்
வெறும் 28.5 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி எனக் குறிப்பிட்டிருப்பது
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு
திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அவரது பதிவில், பாஜக அரசு சமூகநீதியைப் படுகுழியில்
தள்ளியிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் தினமணியில் மதி(கெட்ட)கருத்துப்படம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தி செயற்கையாக உருவாக்கப்பட்டமொழி.
இந்தி இயற்க்கையாக தோன்றிய மொழி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.அதாவது தமிழ்,அரபி,கிரேக்க ,சீன மொழிகள் போன்று பழமையான தோற்றம் கண்டுபிடிக்க முடியாத ஒரு மொழியல்ல இந்தி.
இந்தி செயற்கையாக உருவாக்கப்பட்டமொழி.
இந்தி இயற்க்கையாக தோன்றிய மொழி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.அதாவது தமிழ்,அரபி,கிரேக்க ,சீன மொழிகள் போன்று பழமையான தோற்றம் கண்டுபிடிக்க முடியாத ஒரு மொழியல்ல இந்தி.
இந்தி மொழி 19-ம் நூற்றாண்டில் செயற்க்கையாக உருவாக்கப்பட்ட ஒரு மொழி.
முகலாயர்கள் ஆட்சி காலத்தில், உருது
மொழியையே ஆட்சி மொழியாக வடநாட்டில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தினர்.
முகலாயர்கள் ஆட்சி வீழ்சியடைந்தபின் உருது மொழிக்கு எதிராக ஒரு மொழியை
உருவாக்க வேண்டும் என்பதற்காகவே வட இந்தியாவில் பேசப்பட்டு வந்த
இந்துஸ்தானி மொழிகள் என்று அழைக்கப்படும் மற்றும் பிராகிருதம் மொழி வழி
வந்த கடிபோலி, ஆவாதி, போஜ்பூரி, உருது போன்ற மொழிகளுடன் சமஸ்கிருதத்தை கலவை
செய்து இந்தி மொழியானது செயற்கையான முறையில் உருவாக்கப்பட்டு வட
இந்தியாவில் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் திணிக்கப்பட்டது.
இந்தி
மொழி ஒரு இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சார்ந்த மொழியாகும்.
ஏனெனில்
இதன் மூலத்தை ஆராய்ந்து பார்த்தோமேயானால் இது ஈரானியர்களின் பாரசீக
மொழியையும் மற்றும் சமஸ்கிருதம் வழியாக ஐரோப்பிய மொழிகளையும் சார்ந்த ஒரு
மொழியாகும்.
எடுத்துக்காட்டாக கீழ்வரும் அட்டவணையில் இந்தி எண்களையும் அதன் பாரசீக (ஈரானின் மொழி)மூலத்தையும் காணவும்.
பாரசீகம் > உருது > இந்தி
பீகார் மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருந்த உருது மொழியை நீக்கிவிட்டு இந்தியை 1881-ம் ஆண்டு பீகாரின் ஆட்சி மொழியாக்கினர்.
இருந்தாலும் இந்தி மொழியின் இலக்கணம் வரையறுக்கப்பட்டது 20-ம் நூற்றாண்டில்
தான்(1956-ல்). அதாவது, 63 ஆண்டுகளுக்கு முன்பு தான். அதாவது நம்மூரில்
இருக்கும் பாட்டன்களை விட வயது குறைவு இந்தியின் புதிய இலக்கணத்திற்க்கு.
வட இந்தியாவில் இந்தி திணிப்பின் காரணமாக பல வடநாட்டு மொழிகள்(இந்தியை தத்தெடுத்துக் கொண்டவர்களின் சொந்த தாய்மொழிகள்) அழிந்தும் மற்றும் அழியும் தருவாயில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில்
வேடிக்கை என்னவென்றால் இந்த 19-ம் நூற்றாண்டின் செயற்கை கத்துக் குட்டியான
இந்தி மொழியை தான் உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றான தமிழைப் பேசும்
தமிழர்களுக்கு கட்டாயப் பாடமாக்க முயற்சி செய்தனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
"நாம் செய்யாததையா காங்கிரசார் செய்து விட்டார்கள்"
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
மொத்தம் 230 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் கட்சி 114, பா.ஜ., 109 எம்.எல்.ஏ.,க்களை பெற்றுள்ளன.
பெரும்பான்மையை விட 2 உறுப்பினர்கள் பெற்ற காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி 1, பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் மற்றும் சுயேட்சைகள் 4 பேரின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.
எனவே, மத்திய பிரதேசத்தில் அடிக்கடி கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பா.ஜ., வலியுறுத்தி வருகிறது.
தற்போது கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் விரைவில் பா.ஜ., ஆட்சியமைக்க உள்ளது.
அடுத்த இலக்கு ம.பி.,தான் என்று பா.ஜ.,வினர் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச சட்டசபையில், குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்து மசோதா ஒன்று ஓட்டெடுப்புக்கு வந்தது.
அதில், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 2 பேர் அரசுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ம.பி.,முதல்வர் கமல்நாத், '' பா.ஜ., தினமும் காங்கிரஸ் அரசு சிறுபான்மை அரசு என்றும், எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்று கூறி வருகிறது.
ஆனால், இன்று அரசுக்கு ஆதரவாக 2 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வாக்களித்துள்ளதை சுட்டிக் காட்டுகிறேன்,'' என்றார்.
இந்த சம்பவம், மத்திய பிரதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாராயணன் திரிபாதி மற்றும் சரத் கவுல் என்ற அந்த 2 பா.ஜ., எம்எல்ஏக்களும், முதல்வர் கமல்நாத்துடன் விருந்து சாப்பிட்ட பின்னர் தற்போதுவரை ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக, பா.ஜ., தலைவர்கள் புலம்பிவருகின்றனர்.
"நாம் செயயாததையா காங்கிரசார் செய்து விட்டார்கள் என பாஜக மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்."
-------------------------------------------------------------------------------------------------------------------------------------