முற்றிலும் அபஸ்பரம்


 பாஜகவின்  ‘கர்நாடக’கச்சேரி

கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக தலைவர் எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார்.
 சட்டப் பேர வையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள் ளது. இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை யாகும்.
தற்போதைய நிலையில் பாஜகவிற்கு ஆட்சியமைக்கும் அளவிற்கு உரிய பெரும்பான் மை இல்லை என்பது தெரிந்தே ஆளுநர் ஆட்சி யமைக்க அனுமதியளித்திருப்பது அப்பட்டமான குதிரை பேரத்திற்கே வழி வகுக்கும்.


கர்நாடக சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்கு களும் கிடைத்த நிலையில் குமாரசாமி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். 
அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரில் 3 பேரை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் ரமேஷ் குமார் புதனன்று இரவு அறிவித்தநிலையில், வியாழ னன்று காலை எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அவசர அவசரமாக அவரும் பதவியேற்றுள்ளார்.

 கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் பாஜக விற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் ஆளுநர் அவரை பதவியேற்க அழைத் தார். எனினும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா ராஜினாமா செய்து பதவி இழந்தார்.
இதனிடையே மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றது.
இந்த அரசை கவிழ்ப்பதற்கு அனைத்து வகை யான சூழ்ச்சிகளிலும், கீழ்த்தரமான பேரங்களி லும் பாஜக ஈடுபட்டது.
ஒரு காலத்தில் வித்தியா சமான கட்சி என்று தன்னை கூறிக் கொண்ட பாஜகவின் தேசிய தலைமையும் இதற்கும் முழு ஆசியும் ஆதரவும் வழங்கியது. ஆளுநரையும் தங்களது நோக்கத்திற்கு கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பயன்படுத்திக் கொண்டனர்.
 இந்த நிலையில்தான் ஜனநாய கத்தை கேலி செய்யும் வகையில், பல நூறு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு, கட்சி தாவல் நாடகம் அரங்கேறியது. எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டு மும் பையில் சிறை வைக்கப்பட்டனர். இன்று வரை  அவர்கள் தலையை காட்டவில்லை.
மேலும் பலருக்கு பதவி, பண ஆசைக்காட்டி எப்படியாவது ஆட்சி யமைத்துவிட வேண்டும் என்ற பாஜகவின் திட்டப்படி அனைத்தும் நடந்து வருகிறது.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி லோக்பால் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு பதவியிழந்த எடி யூரப்பாவை மீண்டும் முதல்வராக்கி அழகு  பார்க்கி றது பாஜக.
தாங்கள் ஊழலை முற்றாக ஒழித்து விட்டதாக அவர்கள் கூறிக்கொள்வதுதான் சகிக்க முடியாததாக உள்ளது.  கர்நாடக தேர்தலில் மக்களின் தீர்ப்பை பெற முடியாமல் ஒரு முறை ஆட்சியமைத்து அவமா னப்பட்டவர்கள் மறுமுறை அதே வழியில் மீண்டும் முயற்சிக்கிறார்கள்.
 பாஜக நடத்தும் ‘கர்நாடக’ கச்சேரி முற்றிலும் அபஸ்பரம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஜிஎஸ்டியால்  இல்லாமல் பிக்கும் 10 லட்சம் வேலை வாய்ப்பு.
இந்தியாவின் மிக முக்கியத் தொழிற்துறைகளில் ஒன்று, ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள் துறை. உற்பத்தி, விநியோகம், ஏற்றுமதி, இறக்குமதி, மொத்த விற்பனை, சில்லரை விற்பனை எனப்பல வகையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 லட்ச பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் துறையாகும்.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வந்த துறையாகவும் இதுவே இருந்தது.

ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகள் மதிப்பு, கடந்த 2017-ஆம் ஆண்டு வரைவேகமான வளர்ச்சியையே கொண்டிருந்தன.
 டிசம்பர் 2017 வரை வளர்முகத்திலேயே இருந்தன.
ஆனால், நரேந்திர மோடியின் கடந்த2 ஆண்டு கால ஆட்சியில், இந்திய ஆட்டோமொபைல் தொழிற்துறை கடும்வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 2018 ஜனவரி முதல் குறையத் தொடங்கிய வளர்ச்சி, இந்த 16 மாதங்களில், கடும் வீழ்ச்சிக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இதற்கு காரணமே, மோடி அரசுதிட்டமிட்டுள்ள ‘எலெக்ட்ரிக் வாகனக்கொள்கை’தான் என்று கூறப்படுகிறது.
அதாவது, 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைத்து வாகனங்களையும் எலெக்ட்ரிக் மயமாக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய முதலீடுகள் அதை நோக்கியே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே பெருவாரியாக முதலீடு செய்து, உற்பத்தியில் தீவிரமாக இருக்கும்போது, திடீரென எலெக்ட்ரிக் வானங்கள் தயாரிப்பில் முதலீடு செய் வது சிரமம் என்று நிறுவனங்கள் கூறுகின்றன.
 மேலும், எதிர்காலத்தில் எலெக்ட்ரிக்வாகனங்களையே பயன்படுத்த முடியும் என்பதால், பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீதான ஆர்வமும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்து விட்டது.
இதுசந்தையில் வாகனங்களுக்கான தேவையையும் குறைத்து விட்டது.

 முதலீட்டாளர்கள் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் முதலீடு செய்யவே அஞ்சும் நிலைஏற்பட்டுள்ளது.
பயணிகள் வாகனங்களைப் பொறுத்தவரை, முன்னணி நிறுவனங்களான சுசுகி, மகிந்திரா அண்ட் மகிந்திராநிறுவன பங்குகளே சுமார் 20 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளன.
 ஆட்டோ மொபைல் துறையில், கடந்த 2019 மே வரையிலான 16 மாதங்களில் 42 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
 இது இந்திய மதிப்பில் ரூ. 2 ஆயிரத்து 905 கோடியாகும்.
அதாவது, ஆட்டோமொபைல் துறைக்கு,எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய வர்த்தகச் சரிவு தற்போது ஏற்பட்டுள்ளது.
 நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டில் மட்டும் பயணிகள் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 18.4 சதவிகிதம் குறைந்துள்ளது.

 ஜூன்மாத விற்பனை அளவு மட்டும், சுமார் 18 வருடங்களில் இல்லாத சரிவைச் சந்தித்து, மொத்த ஆட்டோமொபைல் துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வர்த்தகச் சரிவின் காரணமாக வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை பெருமளவில் குறைக்க முடிவு செய்து, கதவடைப்பு செய்து வருகின்றன.
இதன் எதிரொலியால் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்த வேண்டியதாகி இருக்கிறது.விளைவு, ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சுமார்10 லட்சம் பேர் உடனடியாக வேலையிழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள் ளனர்.

இந்திய ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளர்கள் அமைப்பு(Automotive Component Manufacturers Association of India-ACMA) தலைவர் ராம் வெங்கட்ரமணி, “ஆட்டோமொபைல் துறைக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு, இந்த துறையோடு முடிந்துபோகாது; நாட்டின் மொத்த உற்பத்தியில் 50 சதவிகிதத்தைப் பாதிக்கும்” என்று எச்சரிக்கிறார்.
“எலெக்ட்ரிக் வாகனக் கொள்கை மீது அரசுக்குத் தெளிவான புரிதல்இல்லாத காரணத்தால் ஆட்டோமொபைல் துறையில் முதலீடு முற்றிலும் முடங்கியுள்ளது” என்ற குற்றச்சாட்டையும் வெங்கட்ரமணி முன்வைத்துள்ளார்.
மேலும், “ஆட்டோமொபைல் துறைக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் நாட்டில் வளர்ச்சி என்ற பேச்சுக்கே இடம்இல்லாமல் போகும்.

ஆட்டோமொபைல் துறையில் இந்த மோசமான நிலையை உடனடியாகச் சரி செய்ய ஒரே வழி, வாகனங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை மிகப்பெரிய அளவிற்கு குறைப்பதுதான்” எனவும் ராம் வெங்கட்ரமணி கூறியுள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆப்பிள் அழகு தரக்கூடியது.
சத்து நிறைந்தது.
ரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவ கூடியது.

தினமும் 1 ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என உடலுக்கு ஆப்பிளின் தேவை குறித்து நிறைய படித்திருப்பீர்கள்.

அதை தினமும் ஃபலோ செய்வோம் என்ற பெயரில் காலையில் ஆப்பிளை காலை உணவாகவும், ஸ்நேக்கஸாகவும் சாப்பிடும் பழக்கம் கொண்டவரா நீங்கள்?
இதோ உங்களுக்கு தான் இந்த செய்தி.


1 ஆப்பிளில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுக் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் Frontiers in Microbiology ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.
 இந்த ஆய்வின் மூலம் ஆர்கானி ஆப்பிள்களில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உருவாகவதாகவும் இதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியம் கிட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுக் குறித்து விளக்கம் அளித்துள்ள பேராசிரியர் கேப்ரிலி பெர்க், மனிதனின் குடல் நுண்ணுயிரிகளுக்கு பாக்டீரியார்கள் மிகச் சிறந்த உணவுகள்.
 இவற்றை சமைத்து சாப்பிடும் போது கிடைக்கும் பலனை விட அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஆர்கானிக் ஆப்பிள்களில் 100 மில்லியன் பாக்டீரியாகக்கள். இவை அனைத்தும் முழுமையாக வளர்ந்த பாக்டீரியாக்கள் ஆகும்.

எப்படி சாப்பிட வேண்டும்?
நாம் பொதுவாகவே ஆப்பிளை சாப்பிடும் போது தோல், விதையை எல்லாம் வெட்டி எறிந்து விட்டு, வெறும் சதை பகுதியை ம்ட்டும்தான் சாப்பிடுவோம்.
ஆனால் பழத்தில் விதை பகுதியின் தான் பாக்டீரியாக்கள் அதிகம் தங்கி இருக்கும்.
இதனை நீக்கி சாப்பிடும் போது பாக்டீர்யாக்களின் சத்து நமக்கு கிடைக்காமல் போக வாய்ப்புண்டு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?