‘மக்களாட்சியின் கறுப்பு நாள்’
விபரீத பாதையில் மோடி அரசு
"ஜூலை 26 - 1803 - உலகின் முதலாவது பயணிகள் ரயில் சேவை நடைபெற்ற நாள்.
இங்கிலாந்தில் லண்டன் நகருக்கு அருகில் வேண்ட்ஸஒர்த் மற்றும் கிராய்டன்
என்ற இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டது.
தி சர்ரே அயன்(The Surrey Iron ) என்கிற தனியார் நிறுவனம் இந்த ரயிலை இயக்கியது.
திறந்த - கட்டை வண்டிகள் போன்ற இரண்டு பெட்டிகளில் பயணிகள் அமர்ந்திருந்தனர்.
இந்த இரு நகரங்களுக்கு இடையே ஆன தூரம்14 மைல் ஆகும் .
அதற்கு முன்னர் சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டுவந்தன."
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
‘மக்களாட்சியின் கறுப்பு நாள்’
தகவல் உரிமைச் சட்டம் ,திருத்தம்.
இரண்டாவது முறையாக மீண்டும்
ஆட்சிக்கு வந்துள்ள மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஐம்பது நாட்களை
பூர்த்தி செய்துள் ளதை பற்றி தன்னைத்தானே பாராட்டி புளகாங்கிதம் அடைந்து
ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முதல் ஐந்தாண்டுகளை காட்டிலும் வளர்ச்சிப் பணிகள் வேகம் அடைந்துள்ளதாக அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில் கடந்த ஐந்தாண்டுகளில் கூறப்பட்டு வந்த பல்வேறு மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவ சாயிகள் விரோத, மாணவர்கள் விரோத திட்டங்க ளை சட்டமாக்குவதில்தான் மோடி அரசு முன்னை விட வேகமாக உள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவின் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்த வேகம் காட்டப்படுகிறது.
சிறுபான்மை இஸ்லாமிய மக்களை வேட்டை யாடும் நோக்கத்துடன் தேசிய புலனாய்வு முக மைக்கு கூடுதல் அதிகாரம் தரும் மசோதா எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையில் நிறைவேற் றப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் ஆர்டிஐ சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள் ளது.
இந்த சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டுமென்றும் நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என்பதையும் அரசுத்தரப்பு நிராகரித்து அடாவடியாக இம் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதேபோன்று இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைத்துவிட்டு மருத்துவக் கல்வியை தனியாரிடம் முற்றாக ஒப்படைக்க வகை செய்யும், தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்க வகை செய்யும் மசோதா, மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைக் குரிய மசோதாக்களை நிறைவேற்றுவதில்தான் மோடி அரசு முனைப்பாக உள்ளது.
மாநிலங்களவையில் மனித உரிமை பாதுகாப்பு திருத்த சட்ட மசோதாவை அரசு நிறை வேற்றியுள்ளது.
இந்த திருத்த மசோதாவின் மூலம் தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணை யங்களில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளில் யாரையாவது ஒருவரை தலைவ ராக நியமிக்கலாம் என்று திருத்தம் செய்துள்ள தோடு தலைவரின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகாலமாக குறைக்கவும் வகை செய்யப் பட்டுள்ளது.
முக்கியமான அரசியல் சாசன மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளில் மத்திய அரசின் கண் ஜாடைக்கேற்ப செயல்படுபவர்களையே நியமிக்க வும் இந்த அமைப்புகளை தன்னுடைய கட்டுப்பாட் டுக்குள் வைத்துக் கொள்ளவும் மோடி அரசு முயல்கிறது.
ஜனநாயகத்தின் ஒவ்வொரு தூணாக தகர்ப்பதன் மூலம் சர்வாதிகாரப் பாதையில் நடைபோடுகிறது. இதை தடுத்து நிறுத்தாவிடில் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------முதல் ஐந்தாண்டுகளை காட்டிலும் வளர்ச்சிப் பணிகள் வேகம் அடைந்துள்ளதாக அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.