100 நாட்கள் (ஏ)மாற்றங்கள்
பா.ஜ.க.வின் 100 நாள் ஆட்சியின் மிகப்பெரிய மாற்றங்கள்!.
'' மோடி கூறிய இந்த ஆட்சி கால 100 நாட்கள் மிகப்பெரிய (ஏ)மாற்றங்கள்.
மோட்டார் வாகன துறையில் 3.5 லட்சம் வேலையிழப்பு, 300 வாகன விநியோகஸ்தர்கள் தங்களது நிறுவனங்களை மூடிவிட்டார்கள்.
பல மோட்டார் வாகன தொழிற்ச்சாலைகள் மாதம் தோறும் உற்பத்தி நிறுத்த நாட்களை அறிவிக்கின்றன. மூன்றில் ஒரு பங்கு ஜவுளி தொழில் முடங்கியுள்ளது.
எட்டு முக்கிய நகரங்களில் கட்டுமானத் தொழில் முடங்கியுள்ளது.
இந்த பொருளாதார சீர்குலைவைத்தான் இந்த 100 நாட்களில் மோடி அரசு சாதித்துள்ளது.
இதனை மறைப்பதற்காக எதிர்கட்சிகள் மீது சி.பி.ஐ, அலமாக்கத்துறை, வருமான வரித்துறையினர் ஏவி விடப்படுகின்றனர். ஊழலில் திளைத்த பெல்லாரி சகோதரர்கள் மீதோ, வியாபம் ஊழல் மீதோ எந்த நடவடிக்கையும் இல்லை .
நாட்டின் வளர்ச்சி விகிதம் 5% அளவுக்கு வீழ்ச்சியடைந்ததுதான் மோடி அரசின் 100 நாள் சாதனை. இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.
விவசாய விளைபொருள்களின் வருவாய் 2020ல் இரட்டிப்பாக்கப்படும் என்று கடந்த 5 அண்டுகளாகச் சொன்ன பிரதமர் மோடி, இப்போது 2022 இல் இரட்டிப்பாக்கப்படும் என்கிறார்.
இது ஏமாற்று வேலை. அறிவிப்புக்கள் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை என்பதுதான் உண்மை.''
தேசத்துரோகம் எது?
"நீதித்துறை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது கிடையாது. தீர்ப்பு கள் தொடர்பான விமர்சனங்கள் குறித்து வழக்குகளை தொடர்ந்தால் நீதிமன்றத்தில் வேறு எந்த வழக்கு விசாரணையும் நடைபெறாது.
என்னைப் பொறுத்தவரை நீதித் துறையில் விமர்சனங்களை வரவேற்கிறேன்.
அரசு, நீதித்துறை, ராணு வத்தை விமர்சிப்பதை தேசத் துரோகமாகக் கருதக்கூடாது.
நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித் துறை, அரசின் இதர அமைப்புகளுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்க முயன்றால் நமது நாடு சர்வாதிகார நாடாகிவிடும்.
இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்படூவது தேவையற்றது.
பழைய நடைமுறைகளுக்கு எதிராக கேள்வி எழுப்பவில்லை என்றால் புதிய பாதை எப்படி பிறந்திருக்கும்?"
-உச்ச நீதி மன்ற நீதிபதி தீபக் குப்தா
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
சந்திரயான்
சந்திரயான் 2 திட்டத்தின் அதிமுக்கிய நிகழ்வான லேண்டர் விக்ரம் தரையிறக்கம் நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபோது லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பு இழக்கப்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது.
திட்டமிட்டபடி நிகழ்ந்திருந்தால் பாறைகள்,தண்ணீர், பனிக்கட்டிகள், சரிவுகள், மேடுகள்உள்ளிட்ட பகுதிகளை தவிர்த்து கலன்களுக்குஎந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத பகுதியைகண்டறிந்தவுடன், நான்கு சக்கரங்களை கொண்ட விக்ரம் என்னும் லேண்டர் தரை இறங்கியிருக்கும்.அதிலிருந்து வெளி வரும் பிரக்யான் எனும் ஆய்வு ஊர்தி தனது இலக்கை எட்டியிருக்கும்.
ஒரு நொடிக்கு ஒரு சென்டி மீட்டர் வேகம்
விக்ரம் எனும் லேண்டர் தரையிறங்கியவுடன் அதிலிருந்து வெளிவரும் ஆய்வு ஊர்திக்கு பிரக்யான் என்று பெயர்.
மொத்தம் 27 கிலோ எடை கொண்டஇந்த ஊர்தி மொத்தம் ஆறு சக்கரங்களை கொண்டது.இந்த ஆய்வு ஊர்திக்கு தேவையான மின்சாரம் அதன் மேற்புற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளி மின்தகடுகள் மூலம் பெறப்படும்.
ஒரு நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் தூரம் மட்டுமே நகரும் திறன்பெற்ற பிரக்யானால் தனது ஆயுட்காலத்தில் அதிகபட்சம் 500மீட்டர்கள் மட்டுமே நகர முடியும்.
இதன்ஆயுட்காலம் ஒரேயொரு நிலவு நாள்தான்.
அதாவது, நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமம்.
பிரக்யானால் லேண்டரான விக்ரமுடன் மட்டுமே தகவல்னளை பகிர்ந்துகொள்ள/ பெற்றுக்கொள்ள முடியும்.
என்னென்ன ஆய்வுகள்?
விக்ரம் எனும் லேண்டரிலிருந்து தரையிறங்கும் பிரக்யான், தனது முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு கேமராக்களை கண்களைப் போன்று பயன்படுத்தி தனது பாதையை தெரிவு செய்யும்.பிரக்யானை நேரடியாக பூமியிலுள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இயக்க முடியாது; அதே போன்று பிரக்யானும் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல்களை நேரடியாக அனுப்பாது.
இந்த இருவேறு நிகழ்வுக்கும் விக்ரம்தான் இணைப்பு பாலமாக செயல்பட்டு தொடர்பாடலுக்கும், இயக்கத்துக்கும் உதவும்.உதாரணமாக, நிலவின் மேற்பரப்பை பிரக்யான் படம் எடுத்து விக்ரமுக்கு அனுப்பும்;
அதை உடனடியாக விக்ரம் பெங்களூருவிலுள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும்.
ஒருவேளை, அந்த ஒரு குறிப்பிட்டஇடத்தில் பரிசோதனை செய்வதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் விரும்பும் பட்சத்தில், அதற்கான கட்டளைகள் விக்ரமுக்கு அனுப்பப்பட்டு, அதன் வழியாக பிரக்யான் இயக்கப்படும்.
ஒருவேளை பிரக்யான் பயணப்படும் பாதையில் பாறைகள் உள்ளிட்ட தடுப்புகள் இருந்தால், அதை மீறி செல்வதற்கு அதன் ஆறு சக்கரங்கள் கொண்ட அமைப்பு உதவுகிறது.
இவ்வாறு சென்றுகொண்டிருக்கும் பிரக்யான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்பட்டு, அதில் பொருத்தப்பட்டுள்ள ஏபிஎக்ஸ்எஸ்(APXS) மற்றும் எல்ஐபிஎஸ் (LIBS) ஆகிய உதிரிபாகங்கள், இருவேறு எக்ஸ்-ரே கதிர்களையும், லேசரையும் வெளிப்படுத்தி நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்து அதில் சோடியம், மெக்னீசியம், அலுமினியம், சிலிக்கா, கால்சியம், டைட்டானியம், இரும்பு மற்றும் ஸ்ட்ரோண்டியம், யட்ரியம் மற்றும் சிர்கோனியம் போன்றவற்றின் இருப்புகள் குறித்து ஆய்வு செய்யும்.பிரக்யான் நிலவின் பரப்பில் ஆய்வு செய்யும்போது, நீர் அல்லது பனிக்கட்டியின் இருப்பு உறுதிசெய்யப்பட்டால்,
அது பூமியின் துணைக்கோள் எதிர்காலத்தில் மனிதனின் வாழ்விடமாக மாறுவதற்கான மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்குமென்று கருதப்படுகிறது.இவை கண்டறியும் விஷயங்கள் குறித்தும், திரட்டும் தரவுகளையும் விக்ரமுடன் பகிர்ந்து, அது பிறகு பூமியிலுள்ள கட்டுப்பாட்டு மையத்தை வந்து சேரும்.
பிரக்யானின் ஒட்டுமொத்த செயல்பாட்டிலும் இந்தியாவிலேயே மேம்படுத்தப்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகளவில் உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
தலையில் அட்டைப்பெட்டியுடன் தேர்வு.
மெக்சிகோ
நாட்டின் தலாக்ஸ்கலா என்ற கிராமத்தில் உள்ள முதுகலைப் பள்ளியில் மாணவர்கள்
கடும் இன்னல்களை தினந்தோறும் சந்தித்து வருவதாக மாணவர்களின் பெற்றோர்
தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மீண்டும் மாணவர்களை அவமானப்படுத்தும் விதமாக பள்ளி நிர்வாகம் நடந்து கொண்டதாக பெற்றோர், உயர் கல்வி அதிகாரியிடம் குற்றச்சாட்டியுள்ளனர்.
கடந்த வாரம் அந்த பள்ளியில் முதுகலை மாணவர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வை எழுதச் சென்ற மாணவர்களுக்கு தேர்வு கண்காணிப்பு ஆசிரியர் தேர்வுத் தாளுடன் அட்டைப்பெட்டி ஒன்றையும் கொடுத்துள்ளார்.
மாணவர்கள் தேர்வின்போது பிற மாணவர்களை பார்த்து எழுதுவதாகவும், மேலும் சில ஒழுங்கீன செயலில் ஈடுபடுவதாகவும் கூறி இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்பட்டது.
மாணவர்கள் தலையில் அட்டை பெட்டியை கவிழ்த்தபடி, அந்த அட்டைப்பெட்டியில் கண்கள் தெரியும் அளவிற்கு மட்டும் போடப்பட்டுள்ள ஓட்டை வழியாக தேர்வுத்தாளை பார்த்து எழுதியுள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அதனால் தான் இப்போது, அமேசான் காடுகள் பற்றியெறிவதைப்பார்த்து உலகமே பதறினாலும், அவர் பதறவில்லை.
தீ வைத்தவரே எப்படிப் பதறுவார்?
♦♦♦
அமேசானில் பற்றியெறிந்து கொண்டிருப்பது வெறும் காட்டுத்தீ அல்ல, அது ஏகாதிபத்தியத்தின் லாபத் தீ. அதை புரிந்து கொள்ளாவிட்டால் தீயை அணைப்பதற்கான வழி தெரியாமலே அம்பலமாகிவிடும்.
1971ல் எட்வர்டோ கலியானோ என்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் எழுதினார்: “எங்க ளது மாபெரும் செல்வங்கள் மற்றவர்களை வள மிக்கவர்களாகவும் செல்வம் கொழித்தவர்க ளாகவும் மாற்றுவதற்காக எங்களது வறு மையை உற்பத்தி செய்தது.” லத்தீன் அமெரிக்க நாடுகளின் - தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளின் - பிரம்மாண்டமான செல்வ வளங்களை, பூமிக்க டியில் புதைந்து கிடக்கும் கனிமவளங்களை, உலகின் எல்லா வளங்களையும் தனக்குள்ளே பொதிந்து வைத்திருக்கும் காடுகளை, கடலோ ரத்திலும் காடுகளிலும் கொட்டிக் கிடக்கும் மண்ணை - என எல்லா வளங்களையும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த ஏகாதிபத்திய சக்திகள் தான் காலம் காலமாக கைப்பற்றி, கடத்திச் சென்று கொண்டிருக்கின்றன.
இந்த மாபெரும் வளங்களின் மையமாக இருப்பதுதான் அமேசான் காடுகள். அடர்ந்த மலைக்காடுகள் என்று சொல்லப்படும் அமேசான், இந்த பூமிப்பந்தின் பிரதானமான உயிரி - மரபியல் ஆதாரமாக திகழ்கிறது.
சொல்ல முடியாத அளவிற்கு வளங்கள் இங்கு புதைந்து கிடக்கின்றன.
நீங்கள் அமேசானை அழித்தால் பூமியை அழிப்பதற்கு சமம். அமேசான் காடுகளில் பெரும் பகுதி பிரேசில் நாட்டிற்குள் இருக்கிறது. அதாவது அமேசானின் 61 சதவீதம் பிரேசில் எல்லைக்குள் இருக்கிறது. இடைவிடாமல் மழை பெய்யும் காடுகள் இவை.
இதன் காரணமாக உலகில் உற்பத்தியாகும் புதிய தண்ணீரில் 5ல் ஒரு பகுதி அமேசான் காடுகளில்தான் உருவாகிறது. கொலம்பியா, பெரு, வெனிசுலா, பொலிவியா, ஈக்வடார், இனியா, சுரிநா ஆகிய நாடுகளிலும் அமேசான் காடுகள் பரந்து விரிந்து கிடந்தாலும் பிரேசில் எல்லைக்குள் இருக்கிற பகுதிகள்தான் இப்போது ஆபத்தின் பிடியில் சிக்கியுள்ளன.
பிரேசில் எல்லைக்குள் வருகிற அமேசான் காடுகளில் மட்டும் 170 வகையான பழங்குடி இனங்கள் வசிக்கின்றன. அடர் மழைக் காடுகளுக்குள் இம்மக்கள் வாழ்கிறார்கள். இவர்களது வரலாறு 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்குகிறது.
இவர்கள் தவிர, கி.பி. 1532 முதல் 1888 வரை ஆப்பிரிக்க நாடுகளில் பிரிட்டிஷ் உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளால் கருப்பின மக்கள் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்ட சமயத்தில், அங்கிருந்து தப்பி பல்வேறு குழுக்களாக கடல் கடந்து வந்து அமேசான் மழைக் காடுகளுக்குள் குடியேறிய இனங்களில் இன்றைக்கும் 357 இனக்குழுக்களை சார்ந்த மக்கள் அமேசானில் வசித்து வருகிறார்கள். இவர்கள்தவிர அமேசான் காடுகளுக்குள் ஓடும் எண்ணற்ற ஆறுகளையொட்டி பழங்குடி மக்கள் ரப்பர், தென்னை உள்ளிட்ட விவசாயத்து டன் வாழ்ந்து வருகிறார்கள்.
மனிதர்கள் மட்டு மின்றி, உலகில் வேறெங்கும் இல்லாத பன்முக உயிரி சூழல் பரந்து விரிந்து கிடக்கிறது.
♦♦♦
முதலாளித்துவம் என்பது எப்போதுமே அதி பயங்கர மான நெருக்கடியை தன்னகத்தே கொண்டது. 1870ஆம் ஆண்டு முதலாளித்துவம் பெரும் நெருக்கடியில் சிக்கியது.
பின்னர் 1950ல் உலகப் பெரு மந்தம் ஏற்பட்டது. அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் மையம் கொண்ட நெருக்கடி உலகம் முழுவதும் பரவி, பத்தாண்டுகளாகியும் இன்னும் மீள முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஒவ்வொரு நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு முதலாளித்துவம் இன்னொரு நெருக்கடியை உருவாக்கும்.
அதாவது, மேலும் மேலும் செல்வ வளங்களை குவிப்பதன் மூலம், தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை தீர்த்துக் கொள்ள முதலாளித்துவம் முயற்சிக்கிறது; அப்படி செல்வ வளங்களை குவிப்பதற்காக, உலகெங்கிலும் உள்ள இயங்கை வளங்களை அழித்தொழிக்கிறது; அந்த வளங்களை கையில் வைத்திருக்கிற அல்லது அந்த வளங்களின் காப்பாளர்களாக உள்ள உழைப்பாளிகளை, பழங்குடி மக்களை தயக்கமில்லாமல் வேட்டையாடு கிறது. இதைத்தான் மார்க்சிய புவியியல் அறிஞர் டேவிட் ஹார்வி, “வளங்களை சூறையாடுவதன் மூலம் செல்வங்களை குவிப்பது” என்று குறிப்பிட்டார்.
அமேசான் காடுகள் என்ற இப்பூவுலகின் மிக பிரம்மாண்டமான சொத்து. அது முதலாளித்துவத்தின் செல்வ லாபக் குவிப்புக்காக ஈவிரக்கமின்றி வேட்டை யாடப்படுகிறது.
அந்த வேட்டைக்காக அவர்க ளது கைக்கூலி ஜனாதிபதி பொல்சானரோ வைத்த தீயில்தான் அமேசான் பற்றியெறிந்து கொண்டிருக்கிறது. ♦♦♦
2016ல் பிரேசிலில் ஜனாதி பதியாக இருந்த இடதுசாரி தலைவர் டில்மா ரூசெப்பிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியக் கைக்கூலிகள், மைக்கேல் டிமெர் என்ற வலதுசாரி அரசியல்வாதியின் தலைமையில் அராஜகமான கண்டனத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து, சில நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, தீர்மானத்தை நிறைவேற்றினர். டில்மா, அநியாயமான முறையில் பதவியிலி ருந்து வெளியேற்றப்பட்டார்.
ஏற்கெனவே பல்லாண்டு காலமாக அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளால் சூறையாடப்பட்ட அமேசான் காடுகள் உள்ளிட்ட பிரேசிலின் வளங்கள், டில்மா காலத்திலும் அவருக்கு முன்பு ஆட்சியிலிருந்த மகத்தான இடதுசாரி தலைவரான பிரேசில் தொழிலாளர் கட்சித் தலைவர் லூலா காலத்திலும் பாதுகாக் கப்பட்டன. ஏகாதிபத்திய சக்திகளின் கார்ப்பரேட் கம்பெனிகளின் வசமிருந்து அமேசானை பாதுகாப்பதற்கான தீவிர முயற்சிகள் இவர்களது ஆட்சிகளில் மேற்கொள்ளப்பட்டன.
இது ஒட்டுமொத்த அமேசானையும் கொள்ளையடிப்பதற்கு திட்டம் போட்ட ஏகாதிபத்திய சக்திகளுக்கும் கார்ப்பரேட் கும்பல்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. லூலாவையும் டில்மாவையும் குறி வைத்து காய் நகர்த்தினார்கள். டில்மாவின் பதவியைப் பறித்தார்கள். லூலாவை ஊழல் குற்றவாளியாக்கி சிறையில் அடைத்தார்கள்.
இரண்டாண்டு காலம் ஆட்சியில் இருந்த மைல்கேல் டிமெர் என்ற கைப்பாவையை விட 2018 ஜனாதிபதி தேர்தலில் ஜெய்ர் பொல்சானரோ என்ற அப்பட்டமான கைக்கூலி அவர்களுக்கு கிடைத்தார்.
பொல்சானரோ 2018 தேர்தல் பிரச்சா ரத்தில், அமேசான் காடுகளை சுரங்க வணி கத்திற்கும் விவசாய தொழில் வர்த்தகத்திற்கும் முழுமையாக திறந்துவிடுவேன் என்று கொக்கரித்தான். உலகெங்கிலும் இடதுசாரி இயக்கங்கள் பலவீனப்படுத்தப்பட்ட நிலையில், மற்ற நாடுகளின் மக்களைப் போலவே பிரேசில் மக்களும் வேறு பல காரணங்களுக்காக பொல்சானரோவை தேர்வு செய்தனர்.
ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே பொல்சா னரோ செய்தது பிரேசிலின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையினை ஒழித்துக் கட்ட தீர்மானம் போட்டதுதான். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தவுடனே, வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை இருக்கும் என்று அறிவித்துவிட்டு, அந்த துறையை உயிரற்ற ஒன்றாக மாற்றி னான் பொல்சானரோ. துறை இருக்கும், அது செயல்படாது. ♦♦♦
இப்போது கார்ப்பரேட்டுகளுக்கு கொண்டாட்டம். அனைத்துவிதமான கனிமங்கள் வெட்டியெடுப்பு, கார்ப்பரேட் உயிரி எரிபொருள் உற்பத்திக்கான மூலப்பொருள் சோயாபீன்ஸ் உற்பத்தி மற்றும் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகள் அமேசான் காடுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடிகளின் அறிவுச் சுரங்கத்தை முற்றிலும் கார்ப்பரேட் லாபத்திற்காக கைப்பற்றுவது என்ற மெகா திட்டங்களுடன், ஈவிரக்கமற்ற லாபவெறியுடன் அமேசானுக்குள் இறங்கியிருக்கிறது ஏகாதிபத்தியம்.
அமேசானில் முதன் முதலில் மாங்கனீசு 1945ல் கண்டுபிடிக்கப்பட்டது.
மாங்கனீசு கனிம வளம் குவிந்துகிடப்பதை அறிந்த அமெரிக்க பன்னாட்டு கார்ப்பரேட் இரும்பு நிறுவனமான பெத்லகேம் ஸ்டீல் நிறுவனம், அமேசானில் ஒரு சுரங்க கம்பெனியை துவங்கியது. அன்று துவங்கிய சுரங்கங்கள் படிப்படியாக அமேசானில் இருந்து எண்ணற்ற வளங்களை கொள்ளையடிக்கத் துவங்கின. 1967ல் பிரேசில் ராணுவ சர்வாதிகாரத்தின் கைகளில் சிக்கியது.
இதற்கு பிறகு பாக்சைட் தாது உட்பட எதை வேண்டுமானாலும் அள்ளிச் செல்லுங்கள் என்று அமெரிக்க கம்பெனிக ளுக்கு தாராள அனுமதி கிடைத்தது. சுரங்கங்களை இயக்குவதற்காக அமேசா னுக்குள் சாலைகள் போடப்பட்டன. மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன.
அப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி மக்கள் பலவந்தமாக துரத்தப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். இதற்கிடையே இத்தனை ஆண்டு காலங்க ளில் அமேசானுக்குள் சுரங்கத் தொழிலில் ஈடுபட பிரேசில் அரசு சார்பில் சிவிஆர்டி என்ற பெயரில் ஒரே ஒரு நிறுவனம்தான் துவக்கப்பட்டது.
அந்த நிறுவனமும் 1997ல் அமெரிக்க கார்ப்பரேட் கம்பெனியிடம் வெறும் 3.3 பில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. விற்கப்பட்ட போது அந்த கம்பெனியின் வளாகத்தில் 12.9 மில்லியன் டன் இரும்புத் தாது இருப்பு இருந்தது. இது முழுவதும் அமேசானின் சொத்து, பிரேசில் மக்களின் சொத்து. ஆனால் அது இலவசமாகவே அமெரிக்க கம்பெனிக்கு தாரை வார்க்கப்பட்டது.
இருந்த ஒரேயொரு அரசுத்துறை சுரங்க நிறுவனமும் விற்கப்பட்டு விட்ட நிலையில் அமேசான் காடுகள் முழுக்க முழுக்க அமெரிக்க, பிரிட்டன் மற்றும் கனடாவைச் சேர்ந்த மிகப் பெரும் கார்ப்பரேட் சுரங்க கம்பெனிகள் கைகளில் சிக்கின. இன்றைக்கும் வாலே, ஹைட்ரோ நோர்டே, மக்னீசியா, ஆங்லோ அமெரிக்கன், அல்பராஸ், அல்கோ, மராக்காஸ் மைன்ஸ், ஹைட்ரோ பராகோமின் போன்ற நிறுவனங்கள்தான் அமேசானில் மிகப் பெரும் சுரங்கங்களை நடத்தி வருகின்றன.
அளவில்லாத மாங்கனீசும், பாக்சைட்டும், தாமிரமும் வெட்டியெடுக்கப்படுகிறது.
இதைவிட மிக முக்கியமானது தங்கம். 67 தங்க சுரங்கங்கள் இயங்கி வருகின்றன.
உலகளவில் எந்தவொரு தங்கச் சுரங்கத்திலும் ஒரு டன் பாறையை வெட்டினால் 7.4 கிராம் அளவிற்கு தங்கம் கிடைக்கும். ஆனால் அமேசானில் மட்டும் ஒரு டன் பாறையை வெட்டினால் 21.2 கிராம் தங்கம் கிடைக்கிறது.
விட்டு வைப்பார்களா இந்த பிரம்மாண்டமான சுரங்கங்களை? இவை மட்டுமல்ல, வைர சுரங்கங்கள், இரும்பு சுரங்கங்கள், குரோமியம், டன்டாலம், டின், கோபால்ட், நியோபியம் உட்பட ஏராளமான கனிமவளங்களை வெட்டியெடுக்கும் சுரங்கங்களை இந்த நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.
லூலாவும் டில்மாவும் அமேசானைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த பன்னாட்டு கார்ப்ப ரேட் கம்பெனிகளுக்கு கடிவாளம் போட்டனர். அந்த கடிவாளத்தை பொல்சானரோ அகற்றி னார்.
சுரங்கங்கள் மட்டுமல்ல, சோயாபீன்ஸ், மக்காச் சோளம், கோதுமை, எண்ணெய் வித்துக்கள் விவசாயம். கார்ப்பரேட் மயமாக்கப்பட்ட இந்த விவசாயம், முழுக்க முழுக்க பசுமை மட்டுமே நிலவுகிற அமேசான் காடுகளை, பசுமைப் புரட்சி என்ற பெயரில் அழித்துக் கொண்டிருக்கி றது. இதை மார்க்சிய அறிஞர் விஜய் பிரசாத், “பசுமை முதலாளித்துவம்” என்கிறார்.
பசுமை முதலாளித்துவம் என்ற பெயரில் அமேசா னுக்குள் கார்ப்பரேட் விவசாயத் தொழிலை மேலும் மேலும் விரிவுபடுத்துவதற்கான சக்தி வாய்ந்த நவீன கருவிகளை கார்ப்பரேட் கம்பெனிகள் இறக்கிய வண்ணம் உள்ளன. சமீபத்திய விபரங்களின்படி அமேசானுக்குள் 350 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு (1 மில்லியன் = 10 லட்சம்) கார்ப்பரேட் கம்பெனி களின் விவசாயம் நடக்கிறது.
இதில் 64 மில்லியன் ஹெக்டேரில் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. 159 மில்லியன் ஹெக்டே ரில் கார்ப்பரேட் கம்பெனிகளால் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.
எஞ்சியுள்ள நிலங்களில் இதர பல்வேறு உற்பத்திகள் நடக்கின்றன. இவையெல்லாவற்றுக்குமே ஆதாரம் தண்ணீர். அபரிமிதமான அளவில் தண்ணீர் இருக்கிறது.
கார்ப்பரேட்டுகள் முழுமையாக உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
♦♦♦
பழங்குடிகள் இதை எதிர்த்தார்கள். விவசாயிகள் அணி திரண்டார்கள். தொழிலாளர்கள் சங்கம் அமைத் தார்கள். ஏகாதிபத்திய கைக்கூலிகள் இவர்களை யெல்லாம் குறி வைத்தார்கள்.
எத்தனை எத்தனை படுகொலைகள். அந்த படுகொலை களின் உச்சம்தான் டில்மாவையும், லூலாவை யும் ஆட்சியிலிருந்து வீழ்த்தி பிரேசிலில் பொல்சானரோ தலைமையில் அரங்கேற்றப் பட்ட ஜனநாயகப் படுகொலை. இப்போது பொல்சானரோ அதிதீவிர வலதுசாரி பிற்போக்கு வாத ஆட்சியை நடத்துகிறார். அமேசானை அழிப்பது, ஏகாதிபத்திய பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபவேட்டைக்கு அமேசானை அர்ப்பணிப்பது என்பதுதான் அவரது முழு நேரப் பணி.
அவர் சொல்வது போல அமேசானை கடவுள் பாதுகாக்க மாட்டார். இப்பூவுலகின் உயிர் அமேசானில் இருக்கிறது.
அமேசானின் உயிர் பிரேசில் மக்களது எழுச்சியில் அடங்கியிருக்கிறது.
-ராஜேந்திரன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்நிலையில் மீண்டும் மாணவர்களை அவமானப்படுத்தும் விதமாக பள்ளி நிர்வாகம் நடந்து கொண்டதாக பெற்றோர், உயர் கல்வி அதிகாரியிடம் குற்றச்சாட்டியுள்ளனர்.
கடந்த வாரம் அந்த பள்ளியில் முதுகலை மாணவர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வை எழுதச் சென்ற மாணவர்களுக்கு தேர்வு கண்காணிப்பு ஆசிரியர் தேர்வுத் தாளுடன் அட்டைப்பெட்டி ஒன்றையும் கொடுத்துள்ளார்.
மாணவர்கள் தேர்வின்போது பிற மாணவர்களை பார்த்து எழுதுவதாகவும், மேலும் சில ஒழுங்கீன செயலில் ஈடுபடுவதாகவும் கூறி இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்பட்டது.
மாணவர்கள் தலையில் அட்டை பெட்டியை கவிழ்த்தபடி, அந்த அட்டைப்பெட்டியில் கண்கள் தெரியும் அளவிற்கு மட்டும் போடப்பட்டுள்ள ஓட்டை வழியாக தேர்வுத்தாளை பார்த்து எழுதியுள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பின்னர்
இதனை பார்த்த மாணவர்களின் பெற்றொர் மாநில கல்விதுறை அதிகாரியிடம் புகார்
தெரிவித்துள்ளனர்.
அந்த புகாரில், “மாணவர்களின் அடிப்படை உரிமையை மீறிய செயலை பள்ளி நிர்வாகம் செய்துள்ளது. இது மாணவர்கள் மீது நம்பிக்கையில்லாமல் அவமானப்படுத்தும் வகையில் உள்ளது.
இதுபோல தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் மனநிலை கடும் பாதிப்புகளைச் சந்திக்கும்.
மாணவர்கள் தேர்வில் காப்பி அடிக்காமல் தடுக்கவேண்டும் என்றால், தேர்வுக்கு புரியும்படி பாடம் நடத்தியிருக்கவேண்டும். அதிகமான நேரம் படிப்பதற்கு அவகாசம் கொடுத்திருக்க வேண்டும்.
இதுபோல எந்த செயலையும் செய்யாமல் மாணவர்களை ஏதோ குற்றவாளிகள் போல நடத்துவது சரியல்ல. அந்த தேர்வை கண்காணித்த ஆசிரியரை தகுதி நீக்கம் செய்யவேண்டும்” என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதைப்போன்று பாங்காக்கில் மாணவர்கள் தேர்வில் காப்பியடிப்பதைத் தடுக்க, இருபுறமும் வெள்ளைத்தாளை வைத்து தேர்வு எழுத வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்மை ஊரில் துப்பட்டா,கம்மல்,மோதிரம் உள்ளாடை வரை சோதனையிடப்படும் நீட் தேர்வை விட இவை
எவ்வளவளோ பரவாயில்லைதானே?

அமேசானில் எரிவது லாபத்தீ-
“கடவுள் சித்தம், எல்லாம் நன்றாக நடக்கும். சுரங்கத் தொழில் உட்பட அனைத்தும் தொடர்ந்து நீடிக்கும். நான் தேர்தலின் போது கூறிய கொள்கைகள் தொடரும்.” - உலகின் நுரையீரல் என்றும் இதயம் என்றும் வர்ணிக்கப்படும் மிகப் பிரம் மாண்டமான அமேசான் காடுகள் முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிற பயங்கரத்தைத்தான், கடவுள் சித்தம் என்று ஒற்றை வார்த்தையில் நியாயப்படுத்தியிருக்கிறார் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சானரோ. பிரேசில் நாட்டு ஜனாதிபதி இவர். ஆட்சிக்கு வந்தால் அமேசான் காடுகளை வர்த்தகத்திற்கு திறந்து விடுவேன் என்று பகிரங்கமாக சொல்லி விட்டுத்தான் வந்தார்.அதனால் தான் இப்போது, அமேசான் காடுகள் பற்றியெறிவதைப்பார்த்து உலகமே பதறினாலும், அவர் பதறவில்லை.