24,000 ஆண்டுகள் பழமையானது

தூத்துக்குடி தேரிப் பகுதிகள்


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேரிக் காட்டுப் பகுதிகள் 24 ஆயிரம் ஆண்டுகள்  பழமையானது என்று வெப்ப உமிழ்வு ஒளிர் நிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ பீர்பால் சானியின் பழைய அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சி யாளர் மொர்தெகாய்.
 இவர் வெப்ப உமிழ்வு ஒளிர் நிலை நிகழ்வை வைத்துக் காலத்தினை கணிக்கும் வல்லுநர்.

இவர் ஆத்தூர் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் வெளியே தெரிந்த கட்டிடங்களை ஆய்வு செய்ய வந் தார். இவர் அங்குள்ள இடங்களை பார்வையிட்டார்.
 பின் செங்கல் கட்டிடங்கள், கல் தூண்கள், அதில் வரையப்பட்ட சிற்பங்கள், மேலும் நங்கூரம் போன்ற அமைப்புகள். நுழைவு வாயில் போன்றவற்றை பார்வையிட்டார். பின் அவர் நிரு பர்களிடம் கூறியதாவது: நாங்கள் ஏற்கனவே இந்த பகுதி யில் பல ஆய்வுகள் நடத்தியுள் ளோம்.
தேரி குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்த போது 24 ஆயிரம் வருடம் பழமையானது என்பதை கண்டு கொண்டோம். அதன் பிறகு கொற்கை துறை முகம் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கொற்கை ஒரு துறைமுகமாக இருந் தது என்பது வரலாற்றுக் குறிப்பு களிலிருந்து மெகஸ்தனிஸ் கி.மு. 302 லும் எரித்ரியன் (கடல் வழிப் பய ணம் ஆசிரியர்), கி.பி. 80 லிலும், தாலமி கி.பி 130 லிலும் கிடைக்கிறது.

பின்னர் கி.பி. 1296 ல் மார்க்கோ போலோ பழைய காயலில் வந்து படகில் இறங்கியதாகவும், அங்கி ருந்து மதுரை பாண்டிய மன்னனைக் காணச் சென்றதாகவும் குறிப்பிடப் படுகிறது. இக்குறிப்புகளின் அடிப்ப டையில் முதலாவது கொற்கையில் துறைமுகமிருந்ததாகவும், பின்னர் கடல் மட்டம் தாழ்ந்த காரணத்தி னாலோ, அல்லது தரைமட்டம் உயர்ந்ததாலோ அத் துறைமுகம் கைவிடப்பட்டு பழைய காயலுக்கு இடம் பெயர்ந்ததாக கருத முடி கிறது.

 பின்னர் பழைய காயல் துறை முகமும் கைவிடப்பட்டு தூத்துக் குடிக்கு இடம் பெயர்ந்திருக்கலாம். ஏனெனில் கோழிக்கோட்டிலிருந்து கடல் மார்க்கமாக தெற்கே வந்த போர்ச்சுக்கீசியர்கள் கி.பி 1532 இல் தூத்துக்குடியில் தான் இறங்கு கிறார்கள்.
இங்குள்ள தேரிக்காடு 24 ஆயிரம் வருடம் பழமையானது.
நாங்கள் மேற்கொண்ட கொற்கை ஆராய்ச்சிக்கு இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன.
 கொற்கை துறைமுகமும் பழைய காயல் துறைமுகமும் எப்போது ஏன் கைவிடப்பட்டன என்பது தான் அந்த நோக்கங்கள். ஆனால் இதை நாங்கள் அகழ்வாராய்ச்சியாக கொண்டு செல்ல விரும்பவில்லை.
மாறாக புவியாராய்ச்சியின் வழி யாகவே கொண்டு செல்கிறோம்.
நாங்கள் கடலை விட்டு அதிக தூரத் திலுள்ள ஆறுமுக மங்கலம் என்ற குளத்திலும், கொற்கை குளத்திலும் பழையகாயல் குளத்திலும் மாதிரி களை ஒவ்வொரு இரு சென்டிமீட்டர் ஆழத்திலும் எடுத்து சென்றுள் ளோம்.

அம்மாதிரிகளில் இருந்து, காலக் கணிப்பை செய்த பின்பு, மகரந்த தூள்கள், நுண்ணுயிரிகள் (ஆழக்கடல், கடற்கரை, நன்னீர் குளம்) மற்றும் புவி வேதியல் தனி மங்கள் மூலக் கூறுகளைப் பிரித்து ஆராய்ந்து, அந்தத்த தகவல்களின் அடிப்படையில் கடல்மட்டம் ஒவ்வொரு காலக்கட்டத்தில் எந்த அளவு இருந்திருக்கும், அப்போது கடலின் ஆழம் எவ்வளவு இருந்தி ருக்கும், அந்த ஆழத்தில் படகுகள் வந்து செல்ல வாய்ப்பு எந்த அளவு இருந்திருக்கும் என்ற கணிப்பு களை செய்ய இயலும்.
  இதன் அடிப்படையில் அந்தக் காலகட்டத்தில் துறைமுகம் செயல் பட்டிருக்குமா? கைவிடப்பட்டிருக் குமா? என்று தெரிந்து கொள்ள இய லும்.
மேலும், எதனால் இத் துறை முகங்கள் கைவிடப்பட நேர்ந்தன என்றும் அறிந்து கொள்ள இயலும்.
 இந்த வேளையில் தான் ஆத்தூர் பகுதியில் கட்டிடங்கள் தெரிகிறது  என்பதை பத்திரிக்கை செய்தி வாயி லாக தெரிந்து கொண்டோம்.
எனவே இன்று இதை ஆய்வு செய்ய வந் துள்ளோம்.

 இங்குள்ள செங்கல் களை ஆய்வுக்கு எடுத்து செல்கி றோம். இதன் மூலம் இந்த கட்டிடங்க ளின் வயதை கண்டறியலாம்.
அப்போது கொற்கை துறை முகத்திற்கும் இதற்கும் உள்ள தொடர்பு, எங்களது கொற்கை ஆய் வுக்கு மிக உதவியாக இருக்கும். இதைச் செய்து முடிக்க கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஆகும் என்று பா.மொர்தெகாய் தெரிவித்தார்.

 
காவல்  துறைக்கு, தகவல் தொடர்பு சாதனங்கள் கொள்முதல் செய்யும், 350 கோடி ரூபாய் டெண்டரில், மெகா ஊழல் நடந்துள்ளதாக  தி.முக., தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
"தமிழக போலீஸ் துறைக்கு, சி.சி.டி.வி., கேமராக்கள், டிஜிட்டல் மொபைல் ரேடியோ உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் கொள்முதல் செய்யும், 350 கோடி ரூபாய் டெண்டரில், மெகா ஊழல் நடந்துள்ளது. 
ஏற்கனவே முன்பு  88 கோடி ரூபாய்க்கு  'வாக்கி டாக்கி' வாங்கியதை ஊழல் நடந்துள்ளது .அந்த ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் எனகோரிக்கை மனது கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அ.தி.மு.க., அரசு, அந்த விவகாரத்தை குட்கா ஊழல் போன்று மூலையில் மூடி மறைத்து விட்டது.
தமிழ்நாடு காவல்துறை தொடர்பான  இந்த ஊழலையாவது லஞ்ச தடுப்புத்துறை முறைப்படி விசாரித்து, உண்மை குற்றவாளிகளை, அவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்.
ஆனால் காவல்துறையை கையில் வைத்திருக்கும் பழனிசசாமி சொந்த  துறையில் நடைபெற்ற ஊழல் என்பதால் அவருக்கும் தொடர்பிருக்க வாய்ப்புள்ளது.
எனவே இந்த ஊழல் விசாரணை தொடர்பான எந்த விவரங்களையும், முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகளுடன், லஞ்ச ஊழல் தடுப்புத் துறை பகிரக்கூடாது.
தன்னிச்சையாக  இந்த விசாரணையை நடத்தி ஊழலில் ஈடுபட்டவர்களை மக்களுக்கும்,சட்டத்திற்கும் அடையாளம் காட்ட வேண்டும்.  
என்று ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் 
முன்னால்
உலக  மொழிபெயர்ப்பு தினம்
உலகின் முதலாவது நீர்மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1882)
பாகிஸ்தான், ஏமன் ஆகியன ஐநாவில் இணைந்தன(1947)
போட்ஸ்வானா விடுதலை தினம்(1966)
தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது(2003)

ஈதர்நெட்
1980 - கணினி வலையமைப்பில் (கம்ப்யூட்டர் நெட்வொர்க்) மிகப்பெரும் பங்காற்றும் அமைப்பான ஈதர்நெட் தொழில்நுட்பத்தின் முதல் சீர்தரங்கள்(ஸ்டாண்டர்ட்ஸ்) வெளியிடப்பட்டன.
ஈதர்நெட் உண்மையில், ஜெராக்ஸ் நிறுவனத்தின் பிஏஆர்சி ஆய்வகத்தில் 1973-74 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்துறையில் ஜெராக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஏராளமான முன்னேற்றங்கள்பற்றிய குறிப்பு இத்தொடரில் 2019 ஏப்ரல் 19இல் இடம்பெற்றுள்ளது.

1960களின் இறுதியில் உருவான அலோஹாநெட் என்ற தொழில்நுட்பத்தை முன்னோடியாகக்கொண்டு உருவான ஈதர்நெட் தொழில்நுட்பத்தை, ராபர்ட் மெட்கால்ஃப் தனது முனைவர் பட்டத்துக்கான ஆய்வின் ஒரு பகுதியாக முன்மொழிந்திருந்தார். பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கும் ஊடகம் என்று முற்காலத்தில் நம்பப்பட்ட லுமினிஃபெரஸ் ஈதர்என்பதை அடிப்படையாகக்கொண்டே ஈதர்நெட் என்ற பெயரை அவர் சூட்டினார்.

 வெற்றிடத்தில் ஒளி பயணிக்க முடியாது என்று கருதப்பட்ட காலத்தில், பிரபஞ்சமெங்கும் ஓர் ஊடகம் பரவியிருக்கவேண்டும் என்று நம்பப்பட்டது.
அதனை ஈதர் என்று அழைத்தனர்.

இந்த நிலையான லுமினிஃபெரஸ் ஈதர்(அல்லது ஈதர் காற்று!) ஊடகத்திற்கும், புவிக்குமான சார்பு இயக்கத்தைக் கண்டறிவதற்காக, 1887இல் ஆல்பர்ட் மைக்கேல்சன், எட்வர்ட் மார்லி ஆகியோர், ஒஹையோவின் க்ளீவ்லாந்தில் தற்போதைய கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வினை மேற்கொண்டனர். இதன் முடிவுகள் எதிர்மறையாக வந்ததே, ஈதர் என்றொரு ஊடகமே இல்லை என்பது வெளிப்படக் காரணமாக அமைந்தது.
இந்த ஆய்வு ‘மிகப் புகழ்பெற்ற தோற்றுப்போன ஆய்வு’ என்று அழைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சிறப்புச் சார்புக் கோட்பாடு உருவாகக் காரணமாக அமைந்தன.
மைக்கேல்சன்-மார்லி ஆய்வு என்றழைக்கப்படும் இந்த ஆய்வு இல்லையென்றால், சிறப்புச் சார்புக்கோட்பாடே உருவாகியிருக்காது என்று ஐன்ஸ்டீன் குறிப்பிட்டிருக்கிறார்.
 ஈதர்நெட் என்பது மாய ஊடகம் என்றாகிவிட்டாலும்கூட, அதைப் போன்று, எங்கும் பரவி இணைக்கக்கூடியது என்பதற்காகவே மெட்கால்ஃப் இப்பெயரைத் தேர்ந்தெடுத்தார். 1979இல் மெட்கால்ஃப் ஜெராக்ஸ் நிறுவனத்தைவிட்டு வெளியேறிவிட்டாலும், ஈதர்நெட் என்பது அந்நிறுவனத்தின் வணிகச் சின்னமாக(ட்ரேட் மார்க்) பதிவு செய்யப்பட்டிருந்தது.
மெட்கால்ஃபின் வேண்டுகோளுக்கிணங்கி அந்த உரிமையை விட்டுக்கொடுத்த ஜெராக்ஸ் நிறுவனம், இண்ட்டெல், டிஇசி(டிஜிட்டல் எக்விப்மெண்ட் கார்ப்பரேஷன்) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, ஈதர்நெட்டை மேம்படுத்திப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது.
இன்றைய நெட்வொர்க்குகளில் முக்கியப் பங்காற்றும் ஈதர்நெட்டே, பெரும்பாலும் இணையத்தை இணைப்பதாக உள்ளதால், இணையத்திற்கான மிகமுக்கியத் தொழில்நுட்பங்களில் ஒன்றாக இன்றும் விளங்குகிறது.
                                                                                                                                    -அறிவுக்கடல்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 நெகிழிக்கு மாற்றாக வரும் செல்லுலோஸ் 
ஒரு முறை பயன்படுத்தி வெளியில் எறியும் நெகிழி ( பிளாஸ்டிக்) பொருட்கள் மக்கிபோகாமல் நிலம்,நீர் சுற்றுசூழலைக்கெடுத்து பல நூற்றாண்டுகள் சீரழிவைத்தருகிறது.
அதனால் நெகிழியை அரசு தடை செய்துள்ளது.
தற்போது அதற்கு மாற்றாக  செல்லுலோஸ் மூலம் கப்புகள், தட்டுக்களை செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது, 'பல்பாக்!'
ஏற்கனவே பல துறைகளில் புழங்கும் செல்லுலோசைக் கொண்டு, உலர்ந்த பொருட்கள், ஈரமுள்ள பொருட்கள் என, இரண்டையும் கையாளும் வகையில் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை, பல்பாக் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது.
 உலர் கலன்களுக்கான செல்லுலோஸ் கூழினை, வார்ப்புகளில் ஊற்றி, ஒரே நொடி அழுத்தம் தந்தால், ஒரு செல்லுலோஸ் கப் தயாராகிவிடுகிறது.
ஈரப் பொருட்களை சுமக்கும் செல்லுலோஸ் கப்பை தயாரிக்க, 'ஐசோஸ்டாடிக் பிரஸ்' முறையில் அழுத்தம் தந்து பொருட்களை தயாரித்து விடலாம்.
 ஈரப் பொருட்களை வெகுநேரம் தாங்கும் வகையில், இது சற்றே கூடுதல் கடினமாகவும் இருக்கும்.
இரண்டு முறைகளிலும் பிளாஸ்டிக்கைவிட குறைந்த நேரத்தில், குறைவான செலவில் கப்புகள் போன்றவற்றை தயாரிக்க முடியும் என்கிறது, பல்பாக்.

 செல்லுலோஸ் நீரில் கரையும்; எளிதில் மட்கிவிடும்.

இதனால், ஒரு முறை பயன்படுத்தி எறியப்பட்டாலும், அவை சுற்றுச்சூழலுக்கு சவாலாக இருக்காது.
ஒரு முறை பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உலகெங்கும் பரவும் நிலையில், வந்திருக்கும் செல்லுலோஸ் கப்புகள், தட்டுகளை இருகரம் கோடு வரவேற்போம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

நினைவில் கொள்ளுங்கள்.

 சுரன் 260919
அக்டோபர் 
.12,13,மற்றும் 19, 20 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ.,முதல் நிலைத் தேர்வு
நவம்பர் .
17 - என்.டி.ஏ., தேர்வு
30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு
டிசம்பர் 
.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு
7,8,மற்றும் 14,15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் முதல் நிலைத்தேர்வு
நபார்ட் வங்கியில் வேலை.
 மத்திய அரசின் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி நபார்டு. இங்கு 'டெவலப்மென்ட்' உதவியாளர் (82), 'டெவலப்மென்ட்' உதவியாளர்/இந்தி (9) என 91 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 18 - 35. வயது வரம்பு தளர்ச்சி உண்டு.
தகுதி: * ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, 69 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
* இந்தி பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்தி அல்லது ஆங்கில பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.32,000
கடைசி நாள்: 2.10.2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (ஆன் லைன்), நேர்முகத் தேர்வு
விபரங்களுக்கு: https://www.nabard.org.
 --------------------------------------------------------------------------------
 ரிசர்வ் வங்கிப் பனி.
ஆன்லைன் முறை விண்ணப்பம் தொடங்கும் நாள் – செப்டம்பர் 21, 2019
ஆபிசர்ஸ் கிரேடு பி (டிஆர்)- டிஎஸ்ஐஎம் பதவிக்கு புள்ளியியல்/ கணித புள்ளியியல்/ கணித பொருளாதாரம்/ எகானாமெட்ரிக்ஸ்/ புள்ளியியல் மற்றும் இன்பர்மேட்டிக்ஸ் ஆகிய பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் கிரேடு பி அதிகாரிக்கு அடிப்படைச் சம்பளம் 35,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே 35150-1750 (9)-50900-இபி-1750 (2)-54400-2000 (4)-62400 என்ற முறையில் வழங்கப்படும்.
*--------------------------------------------*---------------------------------------*--------------------* 
ஆயுள் காப்பீட்டு கழகம் ( Life Insurance Corportaion LIC) நிறுவனத்தில், காலியாக உள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

இந்த பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு மட்டுமே போதும் என்பதால், பட்டதாரிகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மொத்தக் காலிப்பணியிடங்கள் : 7,871 பணியிடங்கள்
மண்டல வாரியாக பணியிடங்கள்
வடக்கு மண்டலம் – 1544
மத்திய வடக்கு மண்டலம் – 1242
மத்திய கிழக்கு மண்டலம் – 1497
கிழக்கு மண்டலம் – 980
மத்திய மண்டலம் – 472
மத்திய தெற்கு மண்டலம் – 632
தெற்கு மண்டலம் – 400
மேற்கு மண்டலம் – 1104
சம்பளம் : மாதம் ஒன்றிற்கு ரூ.14,435
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு
தேர்வு முறை : முதனிலை தேர்வு,
 முதன்மை தேர்வு மற்றும்
நேர்முகக்காணல்  மூலம் தகுதியுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள் :
பணியிட அறிவிக்கை வெளியான நாள் : செப்டம்பர் 17, 2019
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான இறுதிநாள் : அக்டோபர் 01, 2019
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் : அக்டோபர் 22, 2019
விண்ணப்ப கட்டணம் :
எஸ்.சி மற்றும் எஸ்.சி பிரிவினருக்கு ரூ.85 + ஜிஎஸ்டி
மற்ற பிரிவினருக்கு ரூ.510 + ஜிஎஸ்டி
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான நேரடி லிங்க் : //ibpsonline.ibps.in/licastaug19/
--------------------------------------------------------------------------------------------------------------------------------- 
டெங்கை ஒழிப்போம்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:

1. உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றும்

2. கடுமையான தலைவலி

3. உதடு, நாக்கு, வாய் உலர்ந்து காணப்படுதல்

4. தாங்க முடியாத காய்ச்சல்

5. சிறுநீர் கழிப்பது குறைதல்

6. கண்கள் குழி விழுந்தது போல் காணப்படல், மற்றும் கண்ணுக்கு பின்புறம் வலி

7. கை, கால் விரல்கள் ஜில்லிட்டு இருத்தல்

8. இதயத் துடிப்பு வழக்கத்தை விட வேகமாக இருத்தல்

9. தொடர்ச்சியான வாந்தி

10. கண்ணீர் குறைவாகவோ, வராமலோ இருப்பது.

11. வயிற்றுவலி, உடல்வலி, உடல்சோர்வு, மூட்டுவலி

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும்.

மழைக் காலங்களில் டெங்குக் காய்ச்சல் அதிகம் பரவுவதும், பல உயிர்கள் பரிதபமாக உயிரிழப்பதும் பெரும் வாடிக்கையாகிவிட்டது. மத்திய ,மாநில அரஅரசுகளின்  சுகாத்தராத்துறையில் அலட்சிய நடவடிக்கையால்  பலர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்.

இந்திய அளவில் தமிழ்நாட்டில் டெங்கு உயிரிழப்பு அதிகம். மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததுதான் அதற்கு காரணம்.தற்போது   தமிழகத்திலும்  டெங்கு காய்ச்சால் பரவத் தொடங்கியுள்ளது.
மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் டெங்குவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதைக் காட்டிலும் மக்களும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியம். குறிப்பாக, டெங்கு காய்ச்சல் வரக் காரணம் என்ன, அது எப்படி பரவுகிறது, மற்ற காய்ச்சல்களிலிருந்து எப்படி அதை வேறுபடுத்தி அறிவது, அதற்கான பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் என்னென்ன என்பதனை அறிந்துக்கொள்ளவேண்டும்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.
நல்ல தண்ணீரில் இனப்பெருக்கம் செய்யக் கூடிய `ஏ.டிஸ் என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த டெங்குவைரஸ் பரவுகிறது.

1. நல்ல தண்ணீரை சேமித்து வைக்கும் குடங்கள் மற்றும் பாத்திரங்கள் ஆகியவற்றை மூடி வைக்க வேண்டும்.

2. தண்ணீரை கட்டாயம் காய்ச்சி தான் பருகவேண்டும்.

3. தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் கலன்களை, பாத்திரங்களை வாரம் ஒரு முறையாவது பிளீச்சிங் பவுடரால் தேய்த்துக் கழுவ வேண்டும்.

4. வீட்டை சுற்றி டயர், காலி பாட்டில்கள், பேப்பர் கப்புகள், தேங்காய் மட்டைகள், இளநீர் கூடுகள் ஆகியவற்றை நீக்கி சுத்தப்படுத்த வேண்டும்.

5. குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் சேரும் தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்.

6. சமையல் செய்வதற்கு முன், சாப்பிடுவதற்கு முன், மலம் கழித்த பின் கட்டாயம் சோப்பால் கைகளை கழுவ வேண்டும்.

7. வீடுகளில் மட்டுமல்லாமல் பள்ளி நிர்வாகமும் குழந்தைகள் உடல்நலம் குறித்துக் கண்காணித்து வரவேண்டும்.

8. வீடுகளில் கொசுவலைகளை பயன்படுத்தவேண்டும்.

9. எந்த காய்ச்சால இருந்தாலும் 3 நாட்கள் இருந்தால் உடனே மருத்துவரை அனுக வேண்டும்.
இதனை மேற்கொண்டால் டெங்கு பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?