இந்தப் புளுகு போதுமா?

இன்னும் கொஞ்சம் வேணுமா??
2014 முதல் 2019 வரை பண்டைய இந்தியாவின் மகிமை எனும் பெயரில் நம் பிரதமர் மோடியும், அவர் சகாக்களும் சொன்னவை சாதாரணமானவை அல்ல.
மோடி சொன்ன, 2000 வருடத்திற்கு முன்பே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததால் தான் பிள்ளையாருக்கு யானை தலை வைக்கப்பட்டது என்பதில் தொடங்கி அவர் சகாவான பிரக்யா தாகூர், மாட்டு சிறுநீர் புற்றுநோயை குணப்படுத்தும் என்பது வரை அறிவியலை துவம்சம் செய்த பட்டியல் வரிசைகள்:

மாட்டு சிறுநீர் புற்றுநோயை குணப்படுத்தும்
தற்போது எம்.பி ஆக இருக்கும் பிரக்யா தாகூர் இந்தியா டுடே பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில், மாட்டு சிறுநீர் தனது மார்பக புற்றுநோயை குணமாக்கிவிட்டதாக கூறினார். 
மாட்டு சிறுநீர், மாட்டுச்சாணி, பால் மூன்றையும் கலந்து குடித்து வந்தால் மார்பக புற்றுநோய் வராது என்றார். இதனை புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் கடுமையாக மறுத்து அறிக்கையும் வெளியிட்டார்கள். 
அதனை விட வெயிட்டாக மற்றொன்றையும் கூறினார், மாட்டை உரசிக்கொண்டே இருந்தால் ரத்த அழுத்தம் குறையும் என்றார்.
புவி வெப்பமயக்கலைத்தடுக்கும் முயற்சியில் சங்கிகள்.

இந்துக்கள் தான் மரபணு ஆராய்ச்சிக்கு முன்னோடி
ஜனவரி 2019ல் நடைபெற்ற 106வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ஆந்திர பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஷ்வர ராவ், மகாபாராதத்தை மேற்கோள் காட்டி 100 கௌரவர்கள் ஒரே தாயிலிருந்து உருவானவர்கள். இவர்கள் டெஸ்ட் டியூப் மூலமாக உருவாக்கப்பட்டார்கள்.
 அதனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்துக்கள் தான் மரபணு ஆராய்ச்சிக்கு முன்னோடியாக இருந்தார்கள் என்று பேசினார்.

ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் பண்டைய இந்தியாவிலேயே இருந்தன
நாகேஷ்வர ராவ் இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டத்தில் பேசும் போது, பண்டைய காலத்திலேயே தற்போது இருப்பதை விட அதிக தொழிற்நுட்பத்துடன் ஏவுகனைகள் இருந்திருக்கிறது. 
கடவுள் விஷ்னு பயன்படுத்திய விஷ்னு சக்ரா என்ற ஏவுகணை எதிரிகளை தாக்குவதோடு மட்டுமில்லாமல் மீண்டும் அவர் கைக்கே வந்து விடும். 
அதுமட்டுமல்ல கடவுள் ராமர் காலத்தில் 24 வகையான ஏவுகனைகளும், பல விமான தளங்களும் இருந்திருக்கிறது என்றார்.

டைனோசோர்களை கடவுள் பிரம்மா தான் கண்டுபிடித்தார்
ஜனவரி 2019ல் இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் மற்றும் இணை பேராசிரியரான அஷூ கோஷ்லா பேசும் போது, முதன் முதலில் கடவுள் பிரம்மா தான் டைனோசோர்களை கண்டுபிடித்தார். 
டைனோசோர்களுக்கு அப்போது ராஜசௌராஸ் என்ற பெயர் இருந்தது.
 இதெல்லாம் இந்து புனித நூல்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.

இண்டர்நெட்டை கண்டுபிடித்தவர்கள் இந்துக்கள்
ஏப்ரல் 2018ல் திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் தெப் மஹாபாரதத்திலிருந்து, சஞ்சயா என்ற கதாபாத்திரம் குர்சேத்திர போரில் அரசர் திர்ரஷ்திரா அவர்களுக்கு பல மைல்களுக்கு தொலைவில் இருந்த போதும் கூட உடனடியாக தகவல் கொடுக்க முடிந்தது எண்ற உதாரணத்தை கூறி இந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இண்டெர்நெட்டை பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது என்றார்.

ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவத்தை விட மேலானது வேத தத்துவம்
மார்ச் 2018ல் 105வது இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டத்தில், தற்போதைய அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப துறையின் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியது, ஸ்டீபன் ஹாக்கிங் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தை விட இந்து வேதங்கள் தான் பலமான தத்துவத்தை கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் என்றார். 
ஆனால், ஸ்டீபன் ஹாக்கிங் அமைச்சரிடம் எப்போது சொன்னார் என அறிவியல் ஆய்வாளர்கள் தற்போது வரை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

கண்ணீரை விழுங்குவதன் மூலம் தான் மயில் உற்பத்தி ஆகிறது
2017 மே மாதம் ராஜஸ்தான் நீதிபதி மஹேஷ் சந்திர சர்மா மாடு தான் இந்த நாட்டின் தேசிய விலங்காக இருக்க வேண்டும் என பரிந்துரை செய்கிறேன் என்று தீர்ப்பளித்து விட்டு சொன்னார், மயில்கள் ஒன்றுக்கொன்று இணைவதில்லை. 
பெண் மயில் கண்ணீரை விழுங்குவதன் மூலம் கருத்தரிக்கிறது. 
ஆண் மயில் எப்போதுமே பிரம்மச்சாரியாகவே இருக்கிறது. அதனால் தான் கிருஷ்ணர் மயில் இறக்கையை தலையில் வைத்திருக்கிறார் என்றார்.

யோகத்தின் மூலமாக சுற்றுச்சூழலை சுத்திகரித்தல்
2018ல் உத்திரபிரதேச மீரட் நகரில் 350 இந்து பண்டிதர்கள் ஒன்றிணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க யோகம் நடத்தினார்கள். 
அதில் 50 மெட்ரிக் டன் மாமரக் கட்டைகளை எரித்து யோகம் வளர்த்து சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க யோகம் நடத்தினார்கள்.

மாட்டு சிறுநீரில் தங்கம் இருக்கிறது.
ஜூன் 2016ல் ஜுனகத் வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மாட்டு சிறுநீரில் தங்கம் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாக கூறினார்கள். 400 பசுக்களின் சிறுநீரை சேமித்து ஆய்வு செய்ததில் ஒவ்வொரு லிட்டர் சிறுநீரிலும் 3லிருந்து 5 மில்லிகிராம் வரை தங்கம் கிடைக்கிறது என்றார்கள்.
 ஆராய்ச்சியாளர் டாக்டர் BA கோலாக்கியா நியூஸ்18 பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில், ஒவ்வொரு பசு வகைக்கும் ஏற்ற்வாறு தங்கம் சிறுநீரில் கிடைக்கிறது.
 அதிலும் காலையில் பசு கொடுக்கும் சிறுநீரில் தான் அதிகம் தங்கம் கிடைக்கிறது என்றார்.

7000 வருடத்திற்கு முன்னதாகவே விமானம் கண்டுபிடிக்கப்பட்டது
ஜனவரி 2015ல் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் ஓய்வு பெற்ற விமான பைலட் ஆனந்த் போடாஸ் பேசுகையில், 7000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்துமுனிவர் பரத்வாஜா விமானம் செய்வதற்கான வழிமுறைகளை கொடுத்திருக்கிறார். 
விமானத்தை ஓட்டுபவர்கள் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார். 
பண்டைய இந்தியாவில் இப்போதுள்ள நடைமுறையை விட ரேடார் தொழிற்நுட்பத்துடன் அதி நவீன விமானங்கள் இருந்திருக்கிறது என்றும் கூறினார்.

ஒரு லட்சம் வருடத்திற்கு முன்பே நியூக்ளியர் சோதனை
டிசம்பர் 2014ல் ரமேஷ் போக்ரியால் நிஷாங் மனித வள மேம்பாட்டு அமைச்சராக இருந்த போது பாராளுமன்றத்தில் பேசுகையில், ஜோதிடம் மிகப்பெரிய அறிவியல். 
உண்மையை சொன்ன போனால் அறிவியலை விட மேலானது. 
 அதை நாம் உலகம் முழுக்க எடுத்து செல்ல வேண்டும். இந்து முனிவர்கள் ஒரு லட்சம் வருடத்திற்கு முன்னதாகவே நியூக்ளியர் சோதனைகள் நடத்தியிருக்கிறார்கள் என்றார்.

பண்டைய இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி
அக்டோபர் 2014ல் மருத்துவர்கள் குழுமியிருக்கும் ஒரு அரங்கில் பேசிய மோடி, நாம் நமது நாட்டின் மருத்துவத் தன்மையை நினைத்து பெருமைப்பட வேண்டும். நாம் கடவுள் கணேசாவை வணங்குகிறோம். எப்படி ஒரு மனிதனுக்கு யானை தலை வந்திருக்க முடியும். 
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அப்போதே இருந்திருக்கிறது என்று அதிரவைத்தார் மோடி..
----------------------------------------------------------------------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 அணுகுண்டை விடப் பெரிய சக்தி இருக்கிறதா?                                                                                                                                               - பேரா. விஜய் பிரசாத்
பிரேசிலின் கடலோரப் பகுதிகள் முழுவ தும் பெரும் புகை மண்டலத்தால் வானமே இருண்டு கிடக்கிறது.
இந் தாண்டில் மட்டும் அமேசான் காடுகளில் 40,341 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. ஜனாதிபதி ஜெய்ர் பொல்சானரோ, சில என்ஜி ஓக்கள் தான் காரணம் என்று கூறி பிரச்சனையை திசை திருப்ப முயல்கிறார்.
அவரைப் பொருத்த வரை பிரேசிலின் மக்கள் என்பவர்கள் - ராணுவப் படைகளுக்குள் தனக்கு விசுவாசம் காட்டுகிற அதிகாரிகள், கிறிஸ்தவ மத அடிப்படை வாதம் பேசுகிற சில மதக் குருக்கள் மற்றும் கார்ப்பரேட் விவசாய வர்த்தக கம்பெனிகள் மற்றும் கார்ப்பரேட் சுரங்க கம்பெனிகள் ஆகி யோர்தான்.
கார்ப்பரேட் விவசாயக் கம்பெனி களும், சுரங்க கம்பெனிகளும் இந்த உலகின் மிகப் பெரும் ‘கார்பன் தொட்டி’யான அமேசான் காடுகளின் 1.6 பில்லியன் ஏக்கர் நிலங்களை கைப்பற்றுவதில் குறியாக இருக்கின்றன.
இதை எதிர்ப்பவர்களுக்கு பொல்சானரோ கூறும் பதில் என்னவென்றால், இனப் படுகொலை. அதிபயங்கரமான கூட்டணி பொல்சானரோ- சுரங்க கும்பல் கூட்டணி. பணவெறியே இவர்களது மனிதநேயம்.

பொலிவியாவை ஒட்டியுள்ள அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைப்பதில் பொலிவியா இடதுசாரி ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் முனைப்பாக இருக்கிறார்.
 போயிங் 247 விமானங்கள் மூலம் தண்ணீர் ஊற்றி வருகிறார்கள். பொல்சானரோ வேடிக்கை பார்க்கி றார். தீயை அணைக்காமல் அவர் தலையிடாக் கொள்கையை பின்பற்றுகிறார். தலையிடாக் கொள்கை என்பது முதலாளித்துவ உலகில், எளிய மக்களின் உயிர் பறிபோகும் போது அமலில் இருக்கும். உலகமே அழிந்தாலும் அது அமலில் இருக்கும்.
 அதே வேளையில் சர்வ தேச கார்ப்பரேட் தனியார் வங்கிகள் மூழ்கிப் போகுமோ என்ற நிலை வந்தால், அரசுகளின் தலையிடாக் கொள்கை காணாமல் போகும்.

சூறாவளியும் டிரம்ப் யோசனையும்
அமேசானில் பொல்சானரோவின் அணுகு முறை டொனால்டு டிரம்பின் அணுகுமுறை யைப் போலவே இருக்கிறது.
சமீபத்தில் ஒரு முறை அமெரிக்காவை தாக்குகிற மிகப் பெரும் சூறாவளிகளைப் பற்றிய பேச்சு எழுந்தது. டிரம்ப்  சொன்னார், சூறாவளிகள் மீது அணுகுண்டு களை போட்டு விட வேண்டியதுதான் என்று. 1961ஆம் ஆண்டு அமெரிக்க வானிலை மையத்தின் தலைவர் பிரான்சிஸ் ரீச்சல்டர், கடலில் எங்கு சூறாவளி தோன்றுகிறதோ அந்த இடத்தில் ஒரு அணுகுண்டைப் போட்டு சூறா வளியை தடுத்துவிட முடியுமா என்று ஓர் கற்ப னையை வெளியிட்டிருந்தார்.
 நல்ல வேளை, இது தான் சிறந்த யோசனை என்று டொனால்டு டிரம்ப், அணுகுண்டின் விசையில் கை வைக்கா மல் விட்டுவிட்டார்.
கடந்தாண்டு இறுதியில் வெளியிடப்பட்ட அணுஆயுத புள்ளி விபரங்களின்படி அமெரிக்க ராணுவம் தனது அணு ஆயுதங்களை மேலும் குவிப்பதற்காக மட்டும் 500 பில்லியன் டாலர் கூடுதலாக செலவழித்திருக்கிறது.

 இதில் குறைந்த சக்தி கொண்ட அணுகுண்டுகளையும் தயாரித்துக் கொண்டிருப்பதாக தகவல்.
எதிரிகள் மீது மட்டுமல்ல, சூறாவளிகள் மீதும் இவற்றை அவர்கள் வீசக்கூடும். இதற்காக டெக்சாஸ் நகரில் பேண்டக்ஸ் எனுமிடத்தில் அமைந்துள்ள அணுகுண்டு உற்பத்தி மையத்தில் தயாரிப்புப் பணி நடந்து வருகிறது. ஹிரோஷிமாவில் போடப்பட்டதில் பாதி சக்தியைக் கொண்டதாக இந்த அணுகுண்டுகள் இருக்கும் என அந்த விபரம் தெரிவிக்கின்றது.
கடந்தாண்டு சுவீடன் அரசாங்கம் தங்கள் நாட்டில் ஏற்பட்ட ஒரு காட்டுத்தீயை அணைப்ப தற்காக ஜிபியு - 49 என்ற கதிர்வீச்சால் இயங்கக் கூடிய குண்டை தனது விமானப்படையின்மூலம் அப்பகுதியில் வீசியது.
குண்டு வெடித்து அப்பகுதி யில் மேலும் தீ எரிவதோடு மட்டுமல்லாமல் அப்பகுதியில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி இழுத்துவிடும்.
ஆக்சிஜன் இல்லாமல் தீ அணைந்துவிடும். நினைத்துப் பார்க்கவே அச்ச மாக இருக்கிறது; காட்டுத்தீயை அணைக்க குண்டுகள் தான் தீர்வு என்றால் சூறாவளிக ளைத் தடுக்க அணு ஆயுதப் போர்தான் தீர்வு என்று சொல்வார்கள் போலிருக்கிறது.
 இது இப்பூவுலகிற்கு எதிரான போர்.
அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்ட ஈவிரக்கமற்ற - மனிதத்தன்மையற்ற லாபவெறி யின் போர்.

‘நவீன’ விமானம் வாங்கி என்ன செய்ய?
நவீன உலகில் எல்லா பிரச்சனைகளுக்கும் இவர்கள் ராணுவத் தீர்வையே நாடுகின்றனர். ஒரு ராணுவ சர்வாதிகாரியை இவர்கள் விரும்ப மாட்டார்கள் என்ற போதிலும் தங்களது அதிகா ரத்தை நிலைநாட்ட ராணுவ கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ராணுவம் மூலமாக தீர்வு காணமுடியும், பிரச்சனைகளை தடுத்துவிட முடியும் என்று நம்புகிறார்கள்.
சமீபத்தில் பிரான்சின் பியாரிட்ஸ்  நகரில் நடந்து முடிந்துள்ள ஜி7 அமைப்பின் 45வது உச்சி மாநாடு அப்படித்தான் நடந்தி ருக்கிறது. இந்த மாநாட்டில் பிரான்ஸ் அழைப்பின் பேரில் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவேத் ஜரீப் கலந்து கொண்டார்.
 அவருடன் பிரான்ஸ் அமைச்சர் மட்டுமே சந்திப்பு நடத்தினார். சந்திக்க வேண்டிய டிரம்ப் தவிர்த்தார். ராஜீய முயற்சிகள் என்று எதுவும் நடக்கவில்லை.
தாங்கள் சொல்வதை கேட்கா விட்டால் ஈரான் மீது குண்டு போடுவோம் என்ற தகவலை மட்டும் ஒவ்வொரு முறையும் டிரம்ப் சொல்ல முயற்சிக்கிறார்.
ஜி7 உச்சி மாநாட்டில் கூடிய ஜனாதிபதிகள் அவரவர் நாடுகளில் மக்களின் கடும் அதிருப்தி யை சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள். பிரிட்ட னின் போரிஸ் ஜான்சன் இன்னும் ஒரு மாதம் பதவியில் இருப்பாரா என்று தெரியாது.
கனடா வின் ஜஸ்டின் ட்ரூடு, 35 சதவீதம் அளவிற்கே செல்வாக்கு கொண்டிருக்கிறார். இத்தாலியின் குயிஸ்ப் கோன்ட்டே, விரைவில் பதவியிலிருந்து வெளியேறப் போகிறார். ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல் 2021க்கு பிறகு பதவியில் இருக்க முடியாது. இந்த குறுகிய கால அதிகாரத்தைக் கொண்டே நாடுகளை அழிக்கவும் வங்கிகளில் உள்ள மக்களின் பணத்தை சூறையாடவும் இவர்கள் திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  அமேசான் காடுகள் தீப்பற்றி எரியும் நிலை யில், ஜி7 உச்சி மாநாட்டிற்கு பிரேசிலின் பொல்சானரோவை இந்த மாநாட்டிற்கு அழைக்காமல் தவிர்த்துவிட்டார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரான். ஆனால் அவர் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்தார்.
இதற்கு சில தினங்களுக்கு முன்பு இந்த இரண்டு நபர்களும் ஊழல் ரபேல் விமா னங்களை உற்பத்தி செய்வது பற்றிப் பேசினார் கள். 7 பில்லியன் யூரோ மதிப்புள்ள 36 ரபேல் விமானங்கள் விரைவில் இந்தியாவை அடையும் என்று ஒப்புக் கொண்டார்கள்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட உலக பட்டினிப் பட்டியலில் 116 நாடுகளில் இந்தியா 103 வது இடத்தை பெற்றி ருக்கிறது. நவீன போர் விமானம் வாங்கி என்ன செய்ய?
 சொந்த மக்களின் பட்டினியைப் போக்க முடியவில்லையே?
இந்த சந்திப்பின் போது மோடியிடம் காஷ்மீரை பற்றி விசாரித்திருக்கிறார் மக்ரான்.
70 லட்சம் காஷ்மீரிகள் திறந்தவெளி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதை மக்ரானிடம் மோடி ஒப்புக்கொண்டாரா என்று தெரிய வில்லை.

ஒரு புதிய மொழி
உலகின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற முதலாளித்துவத்தின் அசிங்கங்களை யெல்லாம் நாம் பார்த்துக் கொண்டே யிருக்கிறோம். அவற்றுக்கு பதில் சொல்ல ஒரு புதிய மொழி தேவைப்படுகிறது. கிரேக்க கவிஞர் ஜஸ்ரா காலித் எழுதினார்:
“நான் என்னை கண்டுபிடிக்கும் ஒரு புரட்சிக்காக காத்திருக்கிறேன். வர்க்கப் போரின் மொழிக்காக நான் பசித்திருக்கிறேன்.
வர்க்கப் போர் எனும் மொழிதான் நம்மை சூறையாடுபவர்களை புசிக்கும்.”
அமேசானில் தீ எரிகிறது.
சூறாவளிகளின் மீது அணுகுண்டு வீசலாம் என ஒரு கூட்டம் தயாராகிறது. 70 லட்சம் காஷ்மீரிகளின் குரல் மவுனமாக்கப்பட்டிருக்கிறது.
 எண்ணிப் பார்க்க முடியாத பயங்கரம் இது.

 சில வாரங்களுக்கு முன்பு பிரேசிலின் வலின்ஹோஸ் எனுமிடத்தில் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்தேன். நிலமற்ற தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இங்கே தங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஒரு சிறிய எண்ணிக்கையிலான பெரு முதலாளிகளின் லாபங்களுக்காக வாழ்நாளெல்லாம் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் கூட வசிப்பதற்கு ஒரு இடம் கிடைக்காதவர்களாக இருக்கிறார்கள். இந்த முகாமில் இரண்டு சிறுமிகளை நான் சந்தித்தேன். கெட்லி ஜூலியா மற்றும் பெர்னான்டா பெர்னான்டஸ். நீண்ட காலமாக இந்த பகுதியில்தான் வசித்து வருகிறோம்;
ஆனால் திடீரென்று ரியல் எஸ்டேட் நபர்கள் வழக்குப் போட்டு, அந்த வழக்கில், எங்களையெல்லாம் வெளியேற்றுமாறு உள்ளூர் நீதிபதி தீர்ப்பளித்துவிட்டார்.
இந்த இடத்தில் ஏதோ ஒரு பெரிய விவசாய பண்ணைக் கம்பெனி வருகிறதாம் என்று அந்த சிறுமிகள் மழலைக் குரலில் கூறினார்கள். எனக்கு பாலஸ் தீனத்திலும் காஷ்மீரிலும் சிக்கியுள்ள குழந்தை களின் கதி என்ன என்ற சிந்தனை வந்தது.

ரியல் எஸ்டேட்காரர்களிடம் விலைபோன நீதிபதியின் தீர்ப்பு, எளிய மக்களின் குடிசைக ளை தகர்க்கும் புல்டோசரின் சத்தம், அணு குண்டுகளின் சத்தம் - இவையெல்லாவற்றை யும் விட சக்தி வாய்ந்த ஒன்று இருக்கின்றதா?
அதிசக்தி வாய்ந்த ஒரு மொழி இருக்கிறதா?
 இருக்கிறது...
அது இந்த சத்தங்களால் உடைமைகளை இழந்த, வாழ்வை இழந்த, ஒட்டுமொத்த உழைப்பாளி மக்களின் வர்க்கப் போர் என்ற மொழி.
தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
ஏன் இந்தப்பார்வை அய்யய்யயோ?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?