செவ்வாய், 10 செப்டம்பர், 2019

வங்கி இணைப்பு யாருக்காக? -

 மோடி ஆட்சி செய்த விதம்
 "நாட்டின் தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கு, கடந்த ஐந்து வருடங்களாக மோடி அரசு ஆட்சி செய்த விதம் மற்றும் அதன் கொள்கைகள் தான் காரணம் என்கிற பொதுவான கூற்று ஏற்றுக் கொள்ளக்கூடியதா?

அப்படி இல்லையெனில் வேறு காரணிகள் என்ன என்பதை சுருக்கமாக விளக்க முடியுமா?"

ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் வேண்டாம்.உண்மை அதுதான்.

"இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைகைப்பற்றி ஆண்டாலும் இன்றைய இழிவான நிலையை சந்தித்துதான் ஆக வேண்டும்.காரணம் இன்றைய நிலைக்கு சென்ற மோடி ஆட்சியில் எடுக்கப்பட்ட தவறான பொருளாதார முடிவுகள்தான் காரணம் "
என்று பொருளாதார வல்லுனரும்,முன்னாள் பிரதருமான மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இன்று காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் சென்ற ஆட்சியாளர் செய்த தவறுக்கு பரிகாரம் செய்து பொருளாதாரம் மேம்பட உழைத்திருப்பார்கள்.பலனும் கிடைத்திருக்கலாம்.

ஆனால் மோடி ஆட்சியிலோ சென்ற முறை தவறின் விளைவுகளைத் தடுக்க மேலும் மோசமான முடிவுகளையே எடுக்கிறார்கள்.
முதலில் சென்ற நிதியமைச்சர் அருண் ஜெட்லீ பொருளாதார அறிவு இல்லாத சட்டம் பயின்றவர.அதேபோல்தான் நிர்மலா சீதாராமன் பொருளாதாரம் தெரியாதவர்.மக்களையே சந்திக்காத,எந்த அனுபவ அறிவும் இல்லாத நிர்மலாவை முன்பு ராணுவ அமைச்சராக்கியது எவ்வளவு தவறோ அதைவிட அதிக தவறான செயல் தற்போது நிதியைச்சராக்கியது.

வாகன உற்பத்தி முடங்கி வேலையிழப்பை சரி செய்ய எல்லோரும் பழைய காரை விற்று விட்டு புதியக்கார்களை வாங்கினால் தேக்கநிலை சரியாகிவிடும் என்கிறார்.
எல்லோரும் விற்றால் பழையக்கார்களை வாங்குவது யார்?பாகிஸ்தான்காரர்களா?
வங்கிகளை இணைப்பது தற்போதைய பொருளாதார நெருக்கடி வேளையில் மேலும் சிரமத்தைத்தான் ,சீர்கேட்டைத்தான் தரும்.பலர் வேலையிழக்கவும் வைக்கும்.


ரிசர்வ வங்கி கையிருப்பை வாங்கியது உலக அளவில் இந்தியாவை கடன்கார நாடாகத்தான் உணரவைக்கும்.அந்நிய முதலீடு வ்ருவது நின்று விடும்.கையிருப்பு ரிசர்வ் வங்கியில் அதிகரிப்பதுதான் இந்தியாவை மீதான முதலீட்டு நம்பிக்கையை பிற நாட்டினருக்குத்தரும்.மூழ்கிக்கொண்டிருக்கும் நாட்டின் மீது முதலீடு செய்வார்களா,செய்த முதலீட்டை எடுக்க முயல்வார்களா?நீங்களே எண்ணிப்பாருங்கள்.
ரிசர்வ் வங்கியில் பணத்தை எடுக்கும் இழிநிலையை உள்ள அரசை நடத்தும் மோடி,ரஷ்யாவுக்கு 7500கோடிகளை வளற்சி நிதியுதவியாக கொடுத்ததை எங்கே போய் முட்டிக்கொண்டு அழுவது.அதை சரியான செயலாகப்பார்க்கிறீர்கள்?
"கெட்டுப்போகாதே எனப்புத்தி சொன்னால்,இன்னும் கெட்டுப்போகிறேன் பார்.பந்தயம் எவ்வளவு ?என்று கேட்பவன் இவன்"என்று எங்கள் பகுதியில் சொலவடை உண்டு.அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள்தான் பாஜக பொருளாதாரப்புலிகள்.
பணமதிப்பிழம்பில் ஆரம்பித்து அவரக்கோல ஜி.எஸ்.டி வரி விதிப்பு ,கார்ப்பரேட்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் வரக்கடன்கள்,நிதியுதவி செய்தது,விவசாய,சிறுதொழில்களை புறக்கணித்ததும்தான் இன்றைய பொருளாதார நலிவுக்கான அடிப்படைக்காரணிகள்.
                                                                                                                                                           QUORA தளத்தில் இருந்து.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 மோடியின் திறமை  
தெரியாமல் இந்திய பொருளாதாரம் கீழே செல்வதாக எதிர்க்கட்சிகள் புலம்பிக்கொண்டிருக்கின்றன. 
டாலருக்கு எதிராக ரூபாய் விழுவதாகப் பதறுகின்றனர்.
 ஆனால் மோடி அமித்ஷா திட்டப்படிதான் இந்தப் பொருளாதார சீரழிவு.
ஒரே நாள் இரவில் 1000, 500 செல்லாது என்று அறிவித்த மோடிக்கு, அமெரிக்க டாலர் இனிமே செல்லாது என்று அறிவிக்க எவ்வளவு நேரம் ஆகும். 
ஆனால் அவர் அதைச் செய்யப் போவதில்லை. 
இப்போது மோடி அமித்ஷா வகுத்துள்ள திட்டம் அமெரிக்கா, ரசியா, ஜெர்மன், ஜப்பான்  என உலக வல்லரசுகளையே இந்தியாவிடம் விழவைக்கப்போகிறது. 
காசுமீரை இந்தியாவுடன் இணைக்க ஒரே ஒரு தீர்மானம் போட்ட மாதிரி, அமெரிக்காவை இந்தியாவுடன் இணைக்க ஒரே ஒரு தீர்மானம் போட்டால் போதும் அமெரிக்க இந்தியாவுடன் இணைந்துவிடும். 
அதை அமித்ஷா ஒரே நாளில் முடித்துவிடுவார்.
இதைத்தடுக்க அமெரிக்காவாலும் முடியாது. தீர்மானத்தை நிறைவேற்றும் அளவுக்கு BJP க்கு தனிப்பெரும்பான்மை உள்ளது.
 அதை யாராலும் கேள்வி கேட்க முடியாது. 
ஒருவேளை டிராம்ப் இதை எதிர்த்தால் அவரது கட்சி MP க்களை அமித்ஷாவால் ஒரே நாளில் வருமான வருத்துறையை வைத்து BJP யில் சேர்க்க முடியும்.
அதையும் தாண்டி டிரம்ப் முரண்டுபிடித்தால் அமெரிக்கத் தேர்தலில் BJP போட்டியிடும், வெற்றிபெறும். அங்கேயும் வோட்டிங் மெசின் இருக்கிறது பார்த்துக்கொள்ளலாம் என்று அமித்சா முடிவெடுத்துள்ளார்
இதே போல ரசியா, பிரிட்டன், ஜெர்மன் என அடுத்தடுத்து இந்தியாவுடன் சேர்க்கப்படும். 
இது நடந்தப்பிறகு இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி மோடியும், நிர்மலா சீத்தாராமனும் கவலைப்படத்தேவையில்லை. 
அமெரிக்காவும் ரசியாவும் இந்தியப்பொருளாதரத்தை உயர்த்த பாடுபடும்.
இப்போது எப்படி பீகார், உத்திரப் பிரதேசத்திற்காக தமிழ்நாடும், ஆந்திராவும், கேராளாவும் சம்பாதித்துக்கொடுக்கிறதோ. 
அதுபோல அமெரிக்கர்களும், ரசியர்களும், ஜப்பானியர்களும் இந்தியர்களுக்காக, வேலைப்பார்த்து பொருளாதாரத்தை உயர்த்துவார்கள்.  
2025 ஆம் ஆண்டில் மோடி தலைமையில் உலகமே அகண்டப்பாரதமாகவும், இந்தியாவே உகண்டாவாகவும் மாறி இருக்கும்.
குறிப்பு – ஒரு சங்கி (மாரிதாஸ் தாசர்) வாட்சப்பில் வெளியிட்ட குறிப்புகள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
"தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை பெய்யாத பகுதிகளில் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு வெப்பச் சலன மழை பெய்யக்கூடும்" 
எனக் கணித்துள்ளார் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ எனப்படும் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.
இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை பெய்யாத பகுதிகளில் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு வெப்பச் சலன மழை பெய்யும்.

இதன் காரணமாக சென்னையின் தண்ணீர் பற்றாக்குறை தீரும் எனச் சொல்ல முடியாது. ஆனால், தென்மேற்குப் பருவ மழைக்காலம் முடிவடைவதற்கு முன்பே, சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

இன்று இரவு சென்னையின் பல இடங்களில் நல்ல மழைக்கான வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இன்று இரவு மழை இல்லாமல் போனால் நிச்சயம் நாளை மழை பெய்யும்.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழை வாய்ப்புள்ளது."
 எனத் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 இதுதான் இந்தியா

குஜராத் கலவரத்தின் இரு முகங்கள்

குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற இந்து - முஸ்லிம் கலவரத்தின் போது இரண்டு பேரின் புகைப்படம் ஒட்டுமொத்த இந்தியாவை நடுங்கச் செய்தது.
அந்த புகைப்படத்தில் ஒருவர் கைகளை கூப்பி மிரட்சி நிறைந்த கண்களில், ரத்தக் காயத்துடன் இருப்பார். அவர் பெயர் குத்புதீன் அன்ஸாரி.
மற்றொருவர் தலையில் காவி வண்ண ரிப்பன் அணிந்தும், இடதுகையில் வாளும் ஏந்தி முழக்கம் எழுப்பி ஆக்ரோஷமாக இருப்பார்.
அவர் அசோக் மோச்சி.
 கலவரத்தின் போது எதிரும் புதிருமாக இருந்த, இவர்கள் தற்போது நண்பர்களாகியுள்ளனர்.


2014ம் ஆண்டு கேரளாவில் இடதுசாரிகள் நடத்திய நிகழ்ச்சியில் இருவரும் ஒரேமேடையில் கைகுலுக்கியது பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதனையடுத்து தற்போது, அகமாதாபாத்தில் புதிதாக திறக்கவுள்ள தனது காலணி கடையை திறந்துவைக்க கவுரவ அழைப்பாளராக அன்ஸாரியை அழைத்துள்ளார் மோச்சி.
இது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முன்னதாக டெல்லி தர்வாசா அருகே நடைபாதையில் 25 ஆண்டுகாளாக மோச்சி காலணிகளை தைக்கும் வேலை செய்து வந்துள்ளார்.
சமீபத்தில் மெட்ரோ கட்டுமான பணி நடைபெறுவதனால், அந்த இடத்தில் கடை வைத்து 150 ரூபாய் கூட சம்பாதிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டுள்ளார்.

அதனால் அவருக்கு கடை அமைத்துக் கொடுக்க நிதியுதவியை கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கியது.
பின்னர் அந்த நிதியைக் கொண்டு, அகமாதாபாத்தில் ‘ஏக்தா சப்பல் கர்’ என, ஒற்றுமையை வெளிப்படுத்தும் பொருளில் பெயர் வைத்து கடையை திறந்துள்ளார் மோச்சு.
தற்போது அந்த கடை திறப்பு விழாவில் கவுரவ விருந்தினராக குதுபுதீன் அன்சாரியை அழைத்துள்ளார். குத்புதீன் அன்சாரி கலவரத்தின் பின்னர் மேற்கு வங்கத்தில் குடியேறினார்.
அவரது வீட்டிலேயே தையல்கடை அமைத்து பணியாற்றி வருகிறார். அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்திவருகிறார்.

இந்நிலையில் கடையை திறந்து வைத்து பேசிய அன்சாரி, ”நானும் அசோக்கும் அவ்வபோது சந்திக்கின்றோம். என்னுடைய குடும்பத்தில் ஒருவராகவே அசோக் உள்ளார்.
திடீரென ஒருநாள் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அசோக் தான் திறக்கவிருக்கும் புதிய கடையை நீதான் திறக்கவேண்டும் என கோரினார். நானும் ஒப்புக்கொண்டேன்.
அவர் சிறப்பாக வாழ்வில் முன்னேறுவதை பார்ப்பதை தவிர வேறு என்ன நான் விரும்பப் போகிறேன். நிச்சயம் அவர் நல்ல நிலைமைக்கு வருவார்.” என்று ஆனந்தத்துடன் தெரிவித்தார்.

உனாவில் தலித்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராகவும் சமூகத்தின் உரிமைகளுக்காக போராடுவதற்காகவும் 2017ம் ஆண்டு தலித் ஆசாதி என்ற இடதுசாரிகள் அமைப்பில் இணைந்தார் அசோக் மோச்சு.

கடை திறப்பு விழாவிற்கு பின் அசோக் மோச்சி கூறுகையில், “இந்து வர்ணாசிரம அமைப்புதான் என்னை செருப்பு தைக்கும் நிலைக்கு உள்ளாக்கியது.
 இந்து வர்ண அமைப்பு எங்களை முன்னேற அனுமதிக்காது. அதனால் நடக்கும் அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்று மோச்சி தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலின் போது கேரளாவில் சி.பி.ஐ (எம்) வேட்பாளர் பி.ஜெயராஜனுக்காக வட்டகர தொகுதியில் மோச்சி மற்றும் அன்சாரி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 வங்கிகள் இணைப்பு யாருக்காக? -
வங்கிச் சேவை என்பது அடிப்படையில் தொழில் துறை வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டது.
ஒரு நாடு முதலாளித்துவ பாதையில் இருந்தாலும், சோசலிசப் பாதையில் இருந்தாலும், அந்த நாட்டு மூலதனத் திரட்டலில் முக்கியப் பங்காற்றுவது வங்கிகளே.
அனைத்து நாடுகளிலும் அது சின்னஞ்சிறிய பொரு ளாதார சக்தியாக இருந்தாலும், மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இருந்தாலும் அதன் பொருளாதாரத்திற்கு ஏற்ப வங்கிகளின் பெருக்கம் மற்றும் அளவு மாறுபடுகிறது.  சிறிய பொருளாதார நாடாக இருக்கும் போது அங்குள்ள சிறிய வங்கிகளே அதன் மூலதனத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவையாக இருக்கின்றன.
 உதாரணமாக பூடான் உலகின் 158வது பொருளாதார நாடு. அங்கு மூல தனத் தேவைகளை பாங்க் ஆப் பூடான், பூடான் தேசிய வங்கி மற்றும் டிரக் பி.என்.பி ஆகிய வங்கிகளே கவனித்து வருகின்றன. அவற்றின் மொத்த சொத்து மதிப்பு சில ஆயிரம் மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

அதே சமயம் ஒரு நாடு முன்னேறிய ஏகாதிபத்திய நாடாக இருக்கும் போது அதன் மூலதனம் அனைத்து நாடுக ளுக்கும் சென்று வரும் வகையில் இருக்கும் போது அந்த நாட்டு வங்கிகளும் பன்னாட்டு வங்கிகளாக இருக்கும். உதார ணமாக, அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள வங்கிகள் பன்னாட்டு வங்கிகளாக இருப்பது தேவைப் படுகிறது.
ஆகவே அவற்றின் சொத்து, மூலதனம்  ஆகிய வையும் பிரம்மாண்டமாக இருப்பது தேவைப்படுகிறது.
 அமெரிக்காவின் 10 பெரிய வங்கிகளில் முதல் 5 வங்கிகளின் சொத்து மதிப்பு மட்டுமே கிட்டத்தட்ட 10 டிரில்லி யன் டாலர் (டிரில்லியன் -லட்சம் கோடி) என்ற அளவிற்கு உள்ளது.
ஜெர்மனி உலகின் மற்றொரு மிகவும் முன்னேறிய பொருளாதார நாடாகும். இந்த நாட்டின் முதல் 5 வங்கிகளின் சொத்து மதிப்பு மட்டும் 3.215 டிரில்லியன் யூரோவாகும்.
இந்த வங்கிகள் பெரும்பாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறுதியிட்டு சொன்னதைப் போல் பெரிய மீன் சின்ன மீனை விழுங்கி விழுங்கி பெரும் கொழுத்த வங்கிகளாக வளர்ந்துள்ளன.
இவைகளின் முக்கிய வாடிக்கையாளர்கள் பன்னாட்டு தொழிற்சாலைகள்.
ஆகவே, அவை எந்த நாட்டிலும் எந்த வளத்தையும் வளைத்துப் போடும் அளவிற்கு மூல தனமும் சொத்து மதிப்பும் கொண்டுள்ளன.
இந்த நிலையில் நமது நாட்டின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பற்றி நாம் அறிந்து கொள்வது தேவையாகும்.  

வங்கிகள் தேசிய மயம்
ஜூலை 19, 2019 தேதியோடு  வங்கிகள் தேசியமயமாக் கப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. 1969ல் முதலில் 14 வங்கிகளும் பின்னர் 1980ல் மேலும் 6 வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன.

 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது அன்றைய இந்திரா காந்தி அரசு முன் வைத்த காரணம் இரண்டு:
  • பல தனியார் வங்கிகள் அடிக்கடி திவாலாகி நாட்டு மக்களின் சேமிப்புகளை அழித்துக் கொண்டிருந்தன. 
  • முன்னுரிமைத் துறை எனப்படும் முதன்மைத் துறை களான விவசாயக் கடன், சிறு குறு நடுத்தரத் தொழில்க ளுக்கு அன்றைய வங்கிகள் எந்தக் கடனும் வழங்க வில்லை. 1968 வரை வெறும் 2 சதவீதத்திற்கு குறைவாகவே இந்த துறைகளுக்கு கடன் வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டி வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. l முன்னுரிமைத் துறை எனப்படும் முதன்மைத் துறை களான விவசாயக் கடன், சிறு குறு நடுத்தரத் தொழில்க ளுக்கு அன்றைய வங்கிகள் எந்தக் கடனும் வழங்க வில்லை. 1968 வரை வெறும் 2 சதவீதத்திற்கு குறைவாகவே இந்த துறைகளுக்கு கடன் வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டி வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. 

வங்கிகள் தேசியமயத்தால் பெரும் தொழில்கள் தொடங்க பெரும் மூலதனம் பெற்ற பெருமுதலாளிகள் பெரும் வளர்ச்சியை அடைந்தனர்.

80களின் இறுதி வரை தனியார் துறை மிகப் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்ற நிலை யில், 91ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய பொருளா தாரக் கொள்கையில் தனியார்மயம் அமல்படுத்தப்பட்ட நிலையில் நாட்டின் பொதுத்துறைகளை தனியார் துறை கபளீகரம் செய்யத் துவங்கியது.
 உலகமயம், தனியார் மயம், தாராளமயம் அறிமுகப் படுத்தப்பட்டபின் தனியார் துறை  அரசின் உதவியோடு மிக மிக பிரம்மாண்ட அளவில் வளரத் தொடங்கின.
அவற்றின் வளர்ச்சியில் நாட்டின் பொதுத்துறை வங்கிகளே மிகப் பெரும் பங்காற்றின.

தேசிய மயமாக்கப்பட்ட போது சொல்லப்பட்ட முன்னுரி மைத்துறை எனப்படும் விவசாயம், மற்றும் சிறு, குறு தொழில்களுக்கு மீண்டும் 91 முதல் வங்கிகள் கடன் வழங்குவதை பெரும் அளவில் குறைத்தன அல்லது நிறுத்தின.
இதன் காரணமாக கிராமப்புற பொருளாதாரம் சீர்குலைந்தது.
நாடு முழுவதும் 10 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
 இந்திய அளவில் பெரும் நிறுவனங்களாக இருந்தவை இந்த காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களாகின. வேதாந்தா நிறுவனம், உலகம் முழுவதும் சுரங்கங்களை வாங்கி குவித்தது. டாடா நிறுவனம் ஜாகுவார் நிறுவனத்தை கைப் பற்றியது.
 மிட்டல், ஆர்சிலர் உருக்கு ஆலையை கைப்பற்றினார்.  இதற்கிடையில் இந்திய அளவில் பெரும் நிறுவனங்கள் உற்பத்தி துறையிலும், சேவைத்துறையிலும் வளர்ச்சி பெற்றன.
அவை பெற்ற வளர்ச்சி வங்கிகள் பணத்திலிருந்து தான்.அவை மூடப்பட்டாலும் வங்கிகள்தான் பாதிக்கப்பட்டன.

விஜய் மல்லையா, நீரவ்மோடி போன்றோர் வங்கி கடனை தராமல் வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற நிலை யில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகே ஷன்ஸ் 59000கோடி ரூபாய் கடனை அடைக்காமல் திவாலானது.
 நாடு முழுவதும் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வராக்கடன் கார்ப்பரேட் நிறுவனங்களால் ஏற்பட்டுள்ளது.
இதனால், அடுத்த கட்டமாக வங்கிகள் திவாலாகக் கூடிய நிலையில் உள்ளன. இதற்கிடையில், ரிலையன்ஸ் ஜியோ, ஐடியா-வோடோபோன் போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பிரம்மாண்ட வளர்ச்சியால் மிகப் பெரிய அளவில் விரிவாக்கத்திற்கு நிதி தேவை ஏற்படுகிறது.
 மின் துறையில் தனியார்  துறைக்கு வழங்கிய கடன்கள் அதானி மின் நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் தற்போது திவாலாகும் நிலையில் உள்ளது.
அவற்றின் கடன்கள் வராக் கடன்களாக உள்ளன.  இந்த நிலையில் இந்தியாவின் பெருமுதலாளிகளின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கக் கூடிய அளவில் பிரம்மாண்ட மான வங்கிகள் தேவைப்படுகின்றன.
அதே சமயம் அவற்றின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் அவற்றில் புதிய முதலீடுகளை பாய்ச்சி அவற்றின் நிலையை மேம்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபங்களை உறுதி செய்ய வேண்டியுள்ளது.

இந்த பின்னணியில்தான் வங்கிகள் இணைப்பும், ரிசர்வ் வங்கியின் கையிருப்புகள் சுரண்டி எடுப்பதும் நடை பெற்றது.

முன்னேறிய முதலாளித்துவ நாடுகளைப் போன்று நமது நாட்டிலும் வங்கிகளை இணைப்பதன் மூலம் அவற்றின் எண்ணிக்கையை குறைப்பது முதல் கட்ட நடவடிக்கை.
 பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் காமர்ஸ் வங்கி, யுனைடட் வங்கி ஆகியவற்றை இணைத்த பின் அவற்றின் மொத்த வர்த்தகம் 18 லட்சம் கோடியாக இருக்கும்.
கனரா வங்கி, சிண்டிகேட் வங்கியின் மொத்த வர்த்தகம் 15லட்சம் கோடியாக இருக்கும். யூனியன் பேங்க், ஆந்திரா பேங்க், கார்ப்பரேஷன் வங்கியின் மொத்த வர்த்தகம் கிட்டத்தட்ட 15 லட்சம் கோடி.
இதன் மூலம் வங்கிகளின் சொத்து மிக மிக அதிகமாகும். அதே சமயம் வராக்கடனும் அதிகரிக்கும்.
ஆகவே, வங்கிகளை இணைத்து பிரம்மாண்ட வங்கிகளாக மாற்றினாலும், அவற்றால் பெரும் அளவில் கடன் தர இயலாத நிலை நீடிக்கும்.
 அதனை சரி செய்ய, புத்தம் புதிதாக வங்கிகளில் மூலதனத்தை பாய்ச்ச வேண்டும். பட்ஜெட்டிலேயே ரூ.70,000 கோடி வங்கிகளில் மறு முதலீடு செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது.
 ஏற்கனவே, பட்ஜெட்டில், நிதி பற்றாக்குறை அறி விக்கப்பட்டதை விட அதிகம். இப்பொழுது பொருளாதார மந்தம் வேறு. ஏற்கனவே எதிர்பார்த்த வரவு இருக்காது.
இவற்றிற்கெல்லாம் அனைத்தும் நார்மலாக இருந்தாலே பணம் இல்லாத நிலை. ஆகவே, நிதி திரட்டலுக்கு வழி இல்லை.
இவற்றை சமாளிக்கவே தற்போது அரசு ரிசர்வ் வங்கியி லிருந்து நிதியை சுரண்டியுள்ளது. அதில் வங்கிகளில் மறு மூலதனம் பெரும் அளவில் செய்யப்படும். வங்கிகள் செழிப்பாக இருப்பதன் காரணமாக ஏற்கனவே பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்தாத கடன்கள் மாற்றிய மைக்கப்பட்டு அவர்களுக்கு மீண்டும் பிரம்மாண்ட கடன்கள் வழங்கப்படும்.
 அந்த நிதியைக் கொண்டு பொதுத்துறை நிறுவ னங்கள், ரயில்வே உட்பட அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மலிவாக வாங்கிப் போடலாம்.
 பின்னர், கடனை திருப்பிச் செலுத்தாத நிலையில் வங்கிகள் நிலைமை மோசமாகும் போது, அவற்றையும் சேர்த்து கபளீகரம் செய்யும் திட்டமே வங்கிகள் இணைப்பு.

வங்கிகள் இணைப்பு என்பது ஏதோ மோடி அரசின் திட்டம் என யாரும் எண்ணி விட வேண்டாம்.
90 களின் பிற்பகுதிகளில், வங்கி சீரமைப்பு என்பதற்கு நரசிம்மம் கமிட்டி பரிந்துரைகளை எதிர்த்து வங்கி தொழிற்சங்கங்க ளும், இடதுசாரி தொழிற்சங்கங்களும் போராடியது நினைவு க்கு வருகிறதா?
அந்த நரசிம்மம் கமிட்டியின் பரிந்துரை தான் வங்கிகள் இணைப்பு.

 அதன் பிறகு வந்த பல அரசுகளுக்கு மெஜாரிட்டி பிரச்சனை போன்றவைகள் இருந்ததால் தொழிற்சங் கங்களின் கடும் எதிர்ப்பால் அவை திரும்பப் பெறப்பட்டன.
தற்போது, காஷ்மீர் 370ஆவது பிரிவு ரத்து போன்ற நடவடிக் கைகளால், தனக்கு சாதகமான நிலை, நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி தனது முரட்டு பலத்தின் மூலமாக எதை வேண்டுமானாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நிலையில் பாஜக அரசு இந்த முடிவை தற்போது அமல்படுத்தியுள்ளது.

வங்கிகள் இணைக்கப்படும் போது, பல வங்கிக் கிளை கள் மூடப்படும், பலர் வேலையிழப்பர், ஆறு மாதங்கள் அளவிற்கு கடன்கள் நிறுத்தப்படுவதால் விவசாய மற்றும் சிறு குறு தொழில்கள் கைவிடப்படும் போன்ற நிலைமை களும் ஏற்படும்.
ஏற்கனவே சீரழிவை நோக்கி செல்லும் இந்தியப்பொருளாதாரம் இன்னும் வேகமாக அதை நோக்கி செல்லும்.
 ஏற்கனவே சிறுநீரகம் பாதிப்படைந்த ஒருவருக்கு அதை சரி செய்ய அவரிடமிருந்தே மற்றோரு சிறுநீரகத்தை எடுத்து பொருத்தினால் அவர் நிலை என்னவாகும்.?
அதைத்தான் மோடி,அமித் ஷா வழிகாட்டலில் நிதியமைச்சர் நிர்மலா செய்கிறார்.
                                                                                                                        -தூத்துக்குடி,ஜி.ஆனந்தன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாம் வாழும் பூமி 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. 
கடந்த காலங்களில் பூமி பல பேரழிவுகளைச் சந்தித்து உள்ளது. 
இந்தப் பேரழிவுகளில் எவையெல்லாம் பூமியின் மொத்த உயிரினங்களில் 50 சதவிகிதத்திற்கும் மேலான உயிரினங்களைக் கொன்றுள்ளதோ, அவற்றை நாம் ‘ஊழி’ என்று அழைக்கிறோம்.
இதுவரையிலான நிலவியல் ஆய்வுகள் பூமியில் 5 முறை ஊழிகள் நடந்துள்ளதாகப் பதிவு செய்துள்ளன. ஆய்வுகளின்படி பூமியின் முதல் ஊழி 44 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. 
ஐந்தாவது மற்றும் கடைசி ஊழி 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய விண்கல் ஒன்று பூமியில் மோதியதால் ஏற்பட்டது. 
இந்தக் கடைசி ஊழியில்தான் டைனோசர்கள் முற்றிலுமாக அழிந்தன.

இந்நிலையில், வரலாற்றில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத புதிய ஊழி ஒன்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
 சுமார் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த ஊழியால் அன்றைக்கு உலகில் இருந்த 99% உயிரினங்கள் அழிந்தன என்பதால் இதுவரை புவி கண்ட ஊழிகளில் எல்லாம் பயங்கரமானதாக இந்த ஊழியே கருதப்படுகின்றது!
அமெரிக்காவின் ஆய்வு இதழான பி.என்.ஏ.எஸ். இதுபற்றிய கட்டுரையை கடந்த மாதம் வெளியிட்டுள்ளது. கனடாவின் ஹட்சன் வளைகுடா பகுதியில், இஸ்ரேலைச் சேர்ந்த ஆய்வாளர் பீட்டர் கிராக்போர்டு தலைமையிலான குழுவினருக்குக் கிடைத்த ‘பாரைட்’ தனிமத்தில் இருந்துதான், 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவியில் நடந்த மாபெரும் ஊழியின் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன!

ஆதாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, சுமார் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட திடீர் ஆக்சிஜன் தட்டுப்பாடே இந்த பேரழிவுக்குக் காரணமாக இருந்துள்ளது. இந்தப் பேரழிவின் போது அன்றைக்கு நிலத்திலும் கடலிலும் வாழ்ந்த 99.5 சதவிகித உயிரினங்கள் சுவாசிக்க முடியாமல் அழிவைச் சந்தித்து உள்ளன. 
இந்த ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் தாக்கங்கள் பாரைட் கனிமத்தின் புதைபடிமங்களில் கூட காணப்படுகின்றன. ஆனால் இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு எந்த குறிப்பிட்ட காரணத்தால் ஏற்பட்டது என்பதை ஆய்வில் கண்டுபிடிக்க முடியவில்லை!.

இன்றைய உலகில் வாகனப் புகை அதிகரித்து, காடுகளின் பரப்பு குறைந்துவருவதால் ஆக்சிஜன் அளவு பாதிக்கப்பட்டுவரும் சூழலில், அமெரிக்க அறிவியல் இதழின் இந்தப் புதிய கண்டுபிடிப்பு ‘மீண்டும் ஆக்சிஜன் தட்டுப்பாடு வந்தால், பூமியில் ஏழாவது ஊழி ஏற்படுமோ?’ 
என்ற அச்சத்தையே அறிவியலாளர்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது. 
இந்தப் புதிய ஆய்வினால், புவியின் வரலாற்றையே மாற்றி எழுத வேண்டிய தேவையும்
ஏற்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------