மூடி மறைக்கும் மோடி வித்தை

 கல்வியிலுமா ?
உலகில் உள்ள சிறந்த 300 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் ஒன்று கூட இடம்பெறாதது இந்தியக் கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆண்டுதோறும் உலகின் தலைச்சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை அமெரிக்காவைச் சேர்ந்த டைம்ஸ் நாளிதழ், உலகளாவிய கல்வி அமைப்பு இணைந்து வெளியிடுவது வழக்கம்.
அதன்படி, 2019ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் முதலிடத்திலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இரண்டாமிடத்திலும் உள்ளது.
அதேபோல், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான்போர்டு, மசாசூட்டூஸ், கலிஃபோர்னியா பல்கலைக்கழகங்கள் முறையே 3, 4, 5 இடங்களை பெற்றுள்ளது.

அதேச்சமயத்தில் உலகின் சிறந்த 300 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவில் உள்ல ஒரு பல்கலைக்கழகங்களும் இடம்பெறவில்லை.

டெல்லி, கரக்பூர், ரோபார், இந்தூர், ஆகிய தொழில்நுட்பக் கழகங்கள் அனைத்தும் 300ல் இருந்து 600 வரை உள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
உலகின் 92 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஏடு தெரிவித்துள்ளது.

 ஏற்கெனவே இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் ஆட்டோமொபைல், உணவுத்துறை, ஜவுளித்துறை உள்ளிட்ட பல துறைகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், மோடி ஆட்சியில் கல்வித்துறையும் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் கல்வியாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் ஆளாகியுள்ளனர்.
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------
 ''பிராமணர்கள் 
தங்கள் பிறப்பின் காரணமாக 
உயர்ந்த மதிப்பில் உள்ளனர்''
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ''மற்ற சமுதாய பிரிவினர்களை பிராமணர்கள் எப்போதும் வழிநடத்தி வருகின்றனர்.
நாட்டில் அவர்களுக்கு எப்போதும் வழிநடத்திச் செல்லும் பணி இருந்துள்ளது.

சமுதாயத்தில் கல்வியையும் மதிப்புகளையும் பரப்புவதில் எப்போதும் அது பங்காற்றுகிறது.

 இன்றும் கூட ஒரு பிராமண குடும்பம் ஒரு கிராமத்திலோ அல்லது ஒரு குடிசையிலோ வாழ்ந்தாலும், அந்த பிராமண குடும்பம் எப்போதும் அதன் அர்ப்பணிப்பு மற்றும் சேவையின் காரணமாக ஒரு உயர் நிலையிலேயே இருக்கிறது.
 ஆகவே, பிராமணர்கள் தங்கள் பிறப்பின் காரணமாக சமூகத்தில் உயர்ந்த மதிப்பில் உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சிலவற்றை பதிவிட்டுள்ளார். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 எல்லா மக்களுக்கும் பொதுவான பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி ஒரு குறிப்பிட்ட சாதியினரை தூக்கி நிறுத்துவது கேவலமான செயல்.அவரது பதவிக்கு அசிங்கத்தை உண்டாக்குகிறார்.
அவரையும்,அவரது கட்சி பாஜகவையும் வழி நடத்துவது பிராமணர்களாக இருப்பது மட்டுமே உண்மை.
அதிகார கும்பலில் அவர்கள் அதிகம் இடமா பெற்றிருப்பதால் அவர்கள்தான் நாட்டை வழிநடத்துவதாககூறுவது தவறு.அதை அவர்கள் சமூகத்தினர் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்.ஆனால் ஒரு இந்திய பெருநாட்டின் மக்களவை அவைத்தலைவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.இதை சொல்வது,அதுவும் பொது மேடையில் பேசுவது அவர் பதவிக்கு தகுதியானதல்ல.
அவற்தகுதி எப்படியோ மக்களவை அவைத்தலைவர் பதவியி தகுதியை சிறுமைப்படுத்துகிறது.அப்பதவிக்கு அவர் தன்னை தகுதியாக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

மன்னிப்பு கேட்க வேண்டியது.

 இந்த பேச்சிற்காக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மக்கள் மத்தயில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவாணி தெரிவித்துள்ளார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு புகார் அனுப்புவதாக மக்கள் சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் தெரிவித்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------


நூறாண்டு பேசும் 
மோடி ஆட்சியின் நூறு நாட்கள்.
நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்ற கடந்த 100 நாட்களில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மட்டும் 13 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பைச் சந் தித்திருப்பதாக கூறப்படுகிறது.
நரேந்திர மோடி கடந்த 2019 மே 30ஆம் தேதி, இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். 

அன்றைய நாளில், மும்பை பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களின் மொத்த பங்குகள் மதிப்பு 1 கோடியே 54 லட்சத்து 43 ஆயிரத்து 363 கோடியே 95 லட்சம் ரூபாயாக இருந்தது. 

ஆனால், இதுவே செப்டம்பர் 9-ஆம் தேதி நிலவரப்படி, 13 லட்சத்து28 ஆயிரத்து 47 கோடியே 56 லட்சம்ரூபாய் சரிந்து, 1 கோடியே 41 லட்சத்து15 ஆயிரத்து 316 கோடியே 39 லட்சம்ரூபாயாக குறைந்துள்ளது.
மே 30, 2019 முதல் மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸூம் 2,687 புள்ளிகள் சறுக்கியுள்ளது. 

அதாவது, மோடியின் 100 நாள்ஆட்சியில் 6.74 சதவிகிதம் குறைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிப்டி 943 புள்ளிகள் வழுக்கி7.89 சதவிகிதம் அளவிற்கு சரிந் துள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் நிலவும் மந்தநிலை, மொத்த உள் நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி குறைவு ஆகியவையே பங்குச் சந்தைகளை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், 2018-19 நிதி ஆண்டின் முதல் காலாண்டிலேயே ஜிடிபி வளர்ச்சி எதிர்பார்த்ததைக் விட, 5 சதவிகிதம் என்று குறைந்ததும், முதலீட்டாளர்கள் ஓட்டம் பிடித்ததன் பின்னணியில் உள்ளதாக, ‘ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அருண் துக்ரல் குறிப்பிட்டுள்ளார்.


 செப்டம்பர் முதல் வாரத்தில் மட்டும்,பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூபாய் ஆயிரத்து 263 கோடி மதிப்பிலான முதலீடுகளை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.
மத்திய அரசின் 2019-20 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டதால், அந்நிய முதலீடுகள் குறைந்தன.
ஆனால், கடந்த மாதம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்நிய முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வரி விதிப்பை ரத்து செய்வதாக அறிவித்தார்.

அப்படியிருந்தும், செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை அந்நிய முதலீட்டாளர்கள் 4 ஆயிரத்து 263 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர்.
 3 ஆயிரம் கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு புதிய முதலீடு வந்தாலும், நிகரமாக ஆயிரத்து 263 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான முதலீடு வெளியேறியுள்ளது.

இதேபோல, முந்தைய இரண்டு மாத கணக்குகளை எடுத்தால், ஆகஸ்டில் 5 ஆயிரத்து 920 கோடியே 2 லட்சம் ரூபாய்மதிப்பிலான முதலீடுகளும், ஜூலையில் 2 ஆயிரத்து 985 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வெளியேறியுள்ளன.


மூடி மறைக்கும் மோடி வித்தை.
இந்தியாவில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரு கிறது.
மத்திய மோடி அரசு என்னதான் சாக்கு போக்கு சொன்னாலும் களநிலவரம் மிகவும் கவலைக்கிடமாக மாறிநிற்கிறது.

சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ் ஆய்வில்  கடந்த 3 மாதங்களாக இந்தியர்களின் முக்கிய கவலையே அதிகரித்து வரும் வேலையின்மை யாக இருக்கிறது என தெரிய வந்திருக்கிறது.
ஆனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண  உருப்படியான நட வடிக்கை எடுக்க தயாராக இல்லை.
மாறாக நெருக்கடியை மூடி மறைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்.


ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சிக்கு ஓலா, உபேர் கார்கள்தான காரணம் என  பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார்.

 பயணிகள் வாகன சரிவிற்கு ஓலா, உபேர்தான் காரணம் என்றால், லாரி, டிப்பர், டிரக்கர் உள்ளிட்ட மீடியம் மற்றும் கனரக வர்த்தக வாகன விற்பனை கடந்த மாதம் மட்டும் 54.3 சதவிகிதம் வீழ்ச்சி யடைந்திருக்கிறது. அதற்கு யார் காரணம்?
முதன் முறையாக 75 தேசிய வழித்தடங்க ளில் போக்குவரத்து 30 சதவிகிதம் குறைந்தி ருக்கிறது.
அனைவரும் ஓலா, உபேர் கார்களை பயன்படுத்தியிருந்தால் சாலையில்தானே சென்றிருக்க வேண்டும்.
பறந்தா சென்றார்கள்? இரு சக்கர வாகன விற்பனை 22.24 சதவிகி தம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.
இதற்கு என்ன காரணம்?
இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் எல்லாம் தற்போது விமானத்தில் செல்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை.

உலகின் 4வது பெரும் வேலை வாய்ப்பு துறையாக இருந்து வரும் இந்திய ஆட்டோ மொபைல் துறையின் வீழ்ச்சியால் பல லட்சம் பேர் வேலையிழந்து வீதியில் நிற்கின்றனர்.
அதைப்பற்றி மத்திய அரசு சிறிதும் கவலை கொள்வதாக தெரியவில்லை.
ஆட்டோ மொபைல் துறை மட்டுமின்றி  அனைத்து உற் பத்தி துறைகளும் கடும் வீழ்ச்சியையே சந்தித்து வருகிறது.

 ஜட்டி, பனியன், பிஸ்கட் கூட விற்பனை யாகவில்லை என புள்ளி விபரங்கள் தெரி விக்கின்றன.
இங்கே பிரச்சனை மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து வாங்கும் சக்தியையும் இழந்திருக்கின்றனர் என்பதுதான்.  அதன் தாக்கம் தமிழகத்திலும் கடுமையாக இருக்கிறது.

கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் ஏராளமான சிறு,குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு அதன் உரி மையாளர்கள் கூலி தொழிலாளியாக மாறி யிருக்கின்றனர்.

லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை யின்றி வீதியில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
 வட மாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்களும் வேலையின்றி மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பி செல்கின்றனர்.

 ஆனால் இதைப்பற்றி யெல்லாம் மத்திய அரசோ, அதன் கூஜாவாக இருக்கும் தமிழக அரசு எந்த கவலையும் கொள்வதாக தெரியவில்லை.

இந்நாள்

இதற்கு முன்னால்

செப்டம்பர் 12 

ஹென்றி ஹட்சன், ஹட்சன் ஆற்றலை கண்டுபிடித்தார்(1609) 

சுவிட்சர்லாந்து, கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது(1848)

ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டது(1890)

துருக்கியில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1980)


1857  எஸ்எஸ் சென்ட்ரல் அமெரிக்கா என்ற அமெரிக்கக் கப்பல்,  மத்திய அமெரிக்கப்பகுதியிலிருந்துகொண்டுவரப்பட்ட, 14 டன் தங்கத்துடன், சூறாவளியில் சிக்கி மூழ்கியது.

477 பயணிகளும், 101 பணியாளர்களுமிருந்த இந்தக் கப்பலிலிருந்து, உயிர்காக்கும் படகுகள்மூலம் தப்பித்த பெண்கள், குழந்தைகள், கடலில் தத்தளித்தபோது மீட்கப்பட்ட சுமார் 150 பேர், ஒரு வாரம் கழித்து மீட்கப்பட்ட 3 பேர் என்று  மொத்தம் 153 பயணிகள் மட்டுமே உயிர்பிழைத்தனர்.

 எஞ்சிய 425 பேரின் உயிரிழப்பு, அமெரிக்காவின் கடற்பயன வரலாற்றில் அதுவரை இல்லாத பேரழிவாகப் பார்க்கப்பட்டது. கப்பலிலிருந்த தங்கத்தின் அன்றைய மதிப்பு சுமார் 80 லட்சம் டாலர்கள்.
தற்போதைய மதிப்பில் சுமார் 4 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்கள்!
 நெருக்கடியிலிருந்த அமெரிக்க வங்கிகளுக்கு அவசரமாகத் தேவைப்பட்ட இந்தத் தங்கம் கைவிட்டுப்போனதால், அமெரிக்காவின் 1857இன் பொருளாதார நெருக்கடிக்கும் இது முக்கியக் காரணியாகியது.

ஒகையோவின் கொலம்பஸ்-அமெரிக்கா டிஸ்கவரி க்ரூப் என்ற நிறுவனத்தால், பேயசியன் தேடுதல் முறையைப் பயன்படுத்தி, டாம்மி கிரிகோரி தாம்சன் என்பவர் தலைமையிலான அணியால், கடலுக்கடியில் கப்பலின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது.


தொலைவிலிருந்து இயக்கும் வாகனம்(ஆர்ஓவி) ஒன்றின்மூலம்,1988இல் 15 கோடி டாலர் மதிப்புள்ள தங்கம் மீட்கப்பட்டது.

80 லட்சம் டாலருக்கு விலைபோன 36 கிலோ எடையுள்ள மிகப்பெரிய ஒற்றைத் தங்கக்கட்டியும் அதில் அடக்கம்.
ஆனால், மூழ்கிய தங்கத்திற்கு தாங்கள் இழப்பீடு வழங்கியிருப்பதால், கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் தங்களுக்கே சொந்தம் என்று 39 காப்பீட்டு நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்தன!

கைவிடப்பட்ட தங்கத்தையே தாங்கள் தேடி எடுத்துக்கொண்டதாக, கண்டுபிடித்தவர்கள் வாதாட, எட்டு ஆண்டுகள் சட்டப் போராட்டத்திற்குப்பின், கண்டுபிடிக்கப்பட்டதில் 92 சதவீதம் கண்டுபிடித்தவர்களுக்குச் சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது!

ஆனால், தேடுதல் பணிக்காக தாம்சனுக்கு அளித்த ஒன்றேகால் கோடி டாலருக்கு உரிய பங்கை அவர் தரவில்லை என்று அவருக்கு நிதியுதவி அளித்தவர்கள் 2005இல் வழக்குத் தொடர, தாம்சன் தலைமறைவாகிவிட்டார்!
2015இல் கண்டுபிடிக்கப்பட்ட தாம்சன், 500 தங்க நாணயங்களைத் தருவதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு விட்டு, பின்னர் அவற்றைக் காண வில்லை என்று கூறிவிட்டார்.
 அதைத்தொடர்ந்து, நிதியுதவி அளித்த நிறுவனங்களுக்கு கோடிக்கான டாலர்கள் இழப்பீடு வழங்குமாறு 2018இல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- அறிவுக்கடல்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?