ரகசிய நோட்டிஸ்....?
வருமான வரித் துறையின் மும்பை பிரிவு, பல நாடுகளில் இருக்கும்
அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 2015 கறுப்புப்
பணச் சட்டத்தின் கீழ் முகேஷ் அம்பானி, குடும்ப உறுப்பினர்களுக்கு நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
இந்த ஆண்டு, மார்ச் 28-ம் தேதியன்று வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள் வைத்திருப்பதாக முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளின் பெயர்களில் இந்த நோட்டிஸ் ரகசியமாக வெளியே தெரியாதபடி வெளியிடப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டில் எச்எஸ்பிசி ஜெனீவாவில் 700 இந்திய நபர்கள் மற்றும் நிறுவனங்கள் கணக்குகளை வைத்திருக்கும் பற்றிய விவரங்களை அரசாங்கம் பெற்ற பின்னர் ஐடி விசாரணை தொடங்கியது.
இதைத் தொடர்ந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு (பிப்ரவரி 2015) சுவிஸ் லீக்ஸ் வெளியிட்டது.
இது எச்எஸ்பிசி ஜெனீவா கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையை 1,195 ஆக விரிவாக்கம் செய்தது.
இந்த ஜெனீவா எச்எஸ்பிசி யில் வரிவிலக்கு நாடுகளில் இயங்கும்,14 ஆப்ஷோர் கம்பெனிகளின் ( offshore companies) கணக்கான 601 மில்லியன் டாலர் எப்படி ரிலையன்ஸ் குழுமத்திற்கு எப்படி சம்மந்தம் உள்ளது என்பது ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ விசாரணையே அம்பலப்படுத்தியது.
பிப்ரவரி 4, 2019 தேதியிட்ட வருமான வரி விசாரணை அறிக்கையின் மூலமாகவும், மார்ச் 28, 2019 அன்று அனுப்பப்பட்ட நோட்டிஸின் மூலமகாவும் என்ன தெரியவருகிறது என்றால் “அம்பானி குடும்ப உறுப்பினர்கள் இந்த 14 நிறுவனங்களில் ஒன்றான கேபிடல் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் மூலம் பயனடைந்து உள்ளார்கள் என்பதே.
இந்தியன் எக்ஸ்பிரஸ் வருமான வரித் துறை அனுப்பிய நோட்டிசையும், குற்றச்சாட்டுகளையும் குறித்து ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவருக்கு சில கேள்விகளை மெயிலில் கேட்டிருந்தது.
அதற்கு அவர் “இதுபோன்ற வருமானத் துறை நோட்டீஸ் மற்றும் நீங்கள் மெயிலில் அனைத்து கேள்விகளையும் நாங்கள் மறுக்கிறோம்.” என்று பதிலளித்தார்.
வருமான வரி மும்பை பிரிவு நோட்டிஸ் அனுப்ப , மத்திய வருமான வரி வாரியத்தின் உயர்மட்ட அதிகாரிகள்ஆளும்கட்சி , அனுப்பவேண்டாம் என எதிப்பு தெரிவிக்க பலத்த கருத்து வேறுபாடுகளுக்கு பின்னரே, தடையையும் மீறி இந்த நோட்டிஸ் அனுப்பப்படும் என்று மும்பை வருமானவரி பிரிவு கூறிய பின்னர்நோட்டிஸ் அனுப்புவதற்கு சில நாட்களுக்கு முன்னர் வேறு வழியின்றி அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் வெளியே ஊடகங்களுக்கு தெரியாதபடி ரகசியமாக அனுப்ப அரசு கூறியுள்ளது.
கறுப்புப் பணம் (வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள்) மற்றும் வரிச் சட்டம், 2015 இன் பிரிவு 10 இன் துணைப்பிரிவு (I) கீன் இந்த நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
‘கேபிடல் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்’ மற்றும் அதன் அடிப்படை நிறுவனமான ‘கேமன் தீவுகளை தளமாகக் கொண்ட உள்கட்டமைப்பு நிறுவனம் லிமிடெட் ‘ ஆகியவற்றில் உள்ள தொடர்புகளையும் , இருப்புக்களையும் வெளியிட அம்பானி குழுமம் தவறிவிட்டதாகவும் ஐடி துறை நோட்டிஸ் குற்றம் சாட்டியுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆகஸ்ட் மாத சில்லரைப் பணவீக்க விகிதம் 3.21 சதவிகிதமாக
அதிகரித்து உள்ளது.
இது 2018 அக்டோபருக்குப் பின், கடந்த பத்து மாதங்களில் இல்லாத அதிகரிப்பு ஆகும்.மத்திய அரசு வெளியிட்டுள்ள நுகர்வோர் பணவீக்கம் தரவுகளில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் ஜூலை மாதத்தை விடவும் ஆகஸ்ட் மாதம் சில்லரை பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஜூலை மாதத்தில் 3.15 சதவிகிதமாக பணவீக்க விகிதம் இருந்தது.
இது ஆகஸ்ட் மாதத்தில் 3.21 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இந்த உயர்வு, முழுக்க முழுக்க உணவுப் பணவீக்கத்தால் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் நுகர்வோர் உணவுப் பணவீக்கம் 2.99 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது ஜூலை மாதத்தில் 2.36 சதவிகிதம் என்ற அளவிலேயே இருந்துள்ளது.
உணவுப் பொருட்கள் பணவீக்கம் நாட்டின் பணவீக்க விகிதத்தைத் தீர்மானிக்கும் முக்கிய பிரிவு என்ற நிலையில், நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற மழைப்பொழிவு காரணமாக விளைபொருட்கள் பாதிக்கப்பட்டதே பணவீக்க உயர்வுக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லரைப் பணவீக்கம் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டிலும் 3.69 சதவிகிதம் வரை இருந்தது முக்கியமானது ஆகும்.
ரிசர்வ் வங்கி, இருமாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் நிதிக் கொள்கையை உருவாக்குவதில் சில்லரைப் பணவீக்கம் முக்கிய காரணியாக உள்ளது.
அந்த வகையில், பணவீக்கம் 4 சதவிகிதத்திற்கு மேல் சென்றுவிடாதபடி பார்த்துக் கொள்ளுமாறு, மத்திய அரசை, ஏற்கெனவே ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
உலகத்தின் முக்கியமான பொருளாதார அமைப்புகள் எல்லாம் இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.
அவற்றில் சர்வதேச நாணய நிதியம் (IMF) முக்கியமானது.
உலக அளவில் அதிக மதிப்புகொண்ட பொருளாதார நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது ஏழாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
`உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் விற்பனை சரிந்துவருகிறது; பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துவருகிறார்கள்; முதலீடுகள் வெகுவாகக் குறைந்துள்ளன; லாபம் சரிந்துள்ளது' என இந்தியாவின் பொருளாதார மந்த நிலை குறித்துப் பேசி வருகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
இது 30 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி என்றும் தெரிவிக்கின்றனர்.

"பேனர் வழக்கு தொடர்பாக ஏராளமான உத்தவுகள் பிறப்பித்தும் பலனில்லை, அரசின் நிர்வாகத்தை நாங்கள் செய்ய முடியாது. தலைமைச் செயலகத்தை உயர் நீதிமன்றத்துக்கு மட்டும்தான் நாங்கள் மாற்றவில்லை .
அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கே சென்னையில் இளம்பெண் உயிரிழந்ததற்கு காரணம்.
இன்னும் எத்தனை மனிதர்களின் ரத்தம் தமிழக அரசுக்கு வேண்டும் ?.
எங்களுக்கு அரசு மீதான நம்பிக்கை போய்விட்டது.
ஏன் பேனர்கள் வைத்தால்தான் அமைச்சருக்கு வழி தெரியுமா?
காது குத்துக்கும், திருமணத்துக்கும் பேனர்கள் வைத்தால்தான் விருந்தினர்கள் வருவார்களா?
காலையில் எழுந்ததும் அமைச்சர்கள் தத்தம் முகங்களை கண்ணாடிக்கு பதில் பேனர்களைதான் பார்ப்பார்களா?
பள்ளிக்கரணையில் பேனர்கள், கொடிக்கம்பங்கள் வைக்க யார் அனுமதி அளித்தது?
உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்துக்கு இந்த என பதில் சொல்லப் போகிறது?
இதுபோன்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அடுக்கக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது மட்டுமல்லாமல், முதலமைச்சரை வரவேற்பதற்காக மெரினா சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்றவும் .
பேனர் விழுந்ததில் நிலைத்தடுமாறி இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜராகவேண்டும்."
- சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன், ஷேசாயி அமர்வு
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் புதிய தேர்தல் கண்காணிப்பகம் இணைந்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், தற்போது பதவியில் உள்ள 213 மாநிலங்களவை உறுப்பினர்களால் அறிவிக்கப்பட்ட நிதி வருவாய்களை ஆய்வு செய்துள்ளது.
இதில் 17 எம்.பி-க்கள் தங்களுடைய பண வருவாய் விவரங்களை தாக்கல் செய்யவில்லை.
தங்கள் வருவாய் விவரங்களை சமர்ப்பித்த 213 எம்.பி-க்களின் அறிவிப்புகளில் 124 எம்.பி-க்கள் (அதாவது 58 சதவீதம்) கிடைக்கவில்லை அல்லது எம்.பி-க்கள் அளிக்க வேண்டிய அறிவிப்புகளில் ஐந்து வகையான வழிகளில் வருமானம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
அந்த ஐந்து வகைகள்; ஊதியம்பெறும் இயக்குநர்கள் பதவி, வழக்கமான ஊதியம் பெறும் செயல்பாடு, நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் பங்குதாரர்கள், கட்டண ஆலோசனை, தொழில்முறை ஈடுபாடு ஆகியவை ஆகும்.
ஊதியம்பெறும் இயக்குநர் பதவி:
24 எம்.பி.க்கள் இந்த படிவத்தில் தங்களுக்கு நிதி வருவாய் இருப்பதாக அறிவித்துள்ளனர். ஊதியம் பெறும் இயக்குநராக அதிகபட்ச தொகையை பெற்றுள்ளதாக கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.பி டி.குபேந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.
அவர் ஆண்டுக்கு ரூ.40.68 கோடி பெற்றுள்ளார்.
இவரைத் தொடர்ந்து, ராஜீவ் சந்திரசேகர்(பாஜக, கர்நாடகா) ஆண்டுக்கு ரூ.7.03 கோடி பெறுவதாக தெரிவித்துள்ளார்.
இவருக்கு அடுத்து, அப்துல் வஹாப் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரளா) ரூ.3.34 கோடி பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த பிரிவில் கோகுலகிருஷ்ணன்(அ.இ.அ.தி.மு.க, புதுச்சேரி) அதிகப்பட்சமாக 7 இயக்குநர் பதவிகளில் இருப்பதாக அறிவித்துள்ளார்.
வழக்கமான ஊதியம் பெறும் செயல்பாடு:
இந்த படிவத்தில் 30 எம்.பி.க்கள் (அதாவது 14.1%) இந்த படிவத்தில் தங்களுக்கு நிதி வருவாய் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
வழக்கமான ஊதியம் பெறும் நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட மிக அதிகப்பட்ச தொகையை மகேஷ் பொட்டார் ( பாஜக, ஜார்க்கண்ட்) ஆண்டுக்கு ரூ.3.18 கோடி பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவரை அடுத்து, பாஜகவின் நியமன எம்.பி மேரி கோம் ஆண்டுக்கு ரூ.2.50 கோடியும் மற்றொரு நியமன எம்.பி ஸ்வப்பன் தாஸ்குப்தா ஆண்டுக்கு ரூ.66.60 லட்சம் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் பங்குதாரர்கள்:
44 எம்.பி-க்கள் (அதாவது 20.7%) இது போன்ற வருவாய் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதில் அதிகப்பட்ச தொகையை ரவிந்திர கிஷோர் சின்ஹா (பாஜக, பீகார்) ரூ.747 கோடி இருப்பதாக தெரிவித்துள்ளர்.
இவரைத் தொடர்ந்து, அபிஷேக் மனு சிங்வி (காங்கிரஸ், மேற்குவங்கம்) ரூ.386 கோடி என்று அறிவித்துள்ளார்.
அடுத்து, காக்டே சஞ்சய் தத்தாத்ரேயா(சுயேச்சை,மகாரஷ்டிரா) ரூ.262 கோடி என்று அறிவித்துள்ளார்.
இரண்டு எம்.பி-க்கள் மட்டுமே கட்டண ஆலோசனை படிவத்தில் தங்களுக்கு நிதி வருவாய் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
நியமன எம்.பி கே.டி.எஸ்.துளசி இந்த வகையில் ரூ.27.50 லட்சம் வருவாய் பெறுவதாக தெரிவித்துள்ளார். எம்.பி டாக்டர் விகாஸ் ஹரிபாவு மஹாத்மி (பாஜக, மகாராஷ்டிரா) ரூ.5.60 லட்சம் வருவாய் பெறுவதாக அறிவித்துள்ளார்.
40 (18.8%) எம்.பி.க்கள் தொழில்முறை ஈடுபாட்டு படிவத்தில் நிதி நலன்களை அறிவித்துள்ளனர்.
இது போன்ற தொழில்முறை ஈடுபாடுகள் மூலம் சிங்வி ரூ.177 கோடி பெறுவதாகவும் இவரைத் தொடர்ந்து ப.சிதம்பரம் (காங்கிரஸ், மகாராஷ்டிரா) ரூ.33 கோடியும் துளசி ரூ.27.67 கோடியும் வருவாய் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
மேற்கூறிய ஒவ்வொன்றின் கீழும் வருவாய் கிடைக்கவில்லை/ இல்லை என்று அறிவித்த 124 எம்.பி-க்களில், 104 எம்.பி-க்கள்(அதாவது 48.8%) பேர் தங்கள் தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் அறிவித்தபடி ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள மொத்த சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்.
அதில் முதல் 4 இடங்களைப் பிடித்தவர்கள்: டி.சுப்பரமணி ரெட்டி (காங்கிரஸ், ஆந்திரப் பிரதேசம்) ரூ.422.44 கோடிகள் .
சி.எம்.ரமேஷ் (தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திரப்பிரதேசம்) ரூ.258.20 கோடிகள்
அம்பிகா சோனி (காங்கிரஸ், பஞ்சாப்) ரூ.105.82 கோடிகள்
சொத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

முன்னாளில்
இந்நாள்.
அனைத்து நாடுகள் கலாச்சார ஒற்றுமை தினம்
தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது(1886)
ரஷ்யா அதிகாரப்பூர்வமாகக் குடியரசானது(1917)
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்புஒபெக் (OPEC) உருவாக்கப்பட்டது(1960)
எம்.எஸ்.டாஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது(2000)
ஒபெக் (OPEC)
இந்தியாவின் முன்னணி பேமெண்ட் சிஸ்டம் நிறுவனங்களில் ‘பேடிஎம்’-மும் ஒன்று. இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம்தான் ‘ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்’. இதன் நிதி ஆண்டு முடிவுகள் மற்றும் ஆண்டு அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
அதில்தான், 2018 - 19 நிதியாண்டில் மொத்தம் ரூ. 4 ஆயிரத்து 217 கோடி அளவிற்கு ‘பேடிஎம்’ நிறுவனம் நஷ்டம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2017 - 18 நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் நஷ்டம் 1,604 கோடி ரூபாயாக மட்டுமே இருந்த நிலையில், ஒரே ஆண்டுக்குள் 2018-19-இல் நஷ்டம் 300 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2017 - 18 நிதியாண்டில் பேடிஎம் நிறுவனத்தின் வருவாய் 3 ஆயிரத்து 309 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
இது 2018 - 19 நிதியாண்டில் 8.2 சதவிகிதம் உயர்ந்து 3 ஆயிரத்து 579 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.
கடந்த 2017 - 18 நிதியாண்டில் பேடிஎம் நிறுவனத்தின் செலவு 4 ஆயிரத்து 864 கோடி ரூபாயாகவும், 2018 - 19 நிதியாண்டில் 7 ஆயிரத்து 730 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
செலவினங்கள் சுமார் 60 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.அதாவது, பேடிஎம் நிறுவனம் தன்னுடைய பிராண்டின் பெயரை மக்கள் மத்தியில் இன்னும் பெரிதாக பதிய வைக்க கூடுதலான தொகையை செலவு செய்ததாக கூறப்படுகிறது.
பல்வேறு முதலீடுகள் மற்றும் அன்றாட செயல்பாட்டு செலவினங்களையும் மேற்கொண்டுள்ளது. இதுவே செலவின அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம்தான் பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பீடுகள் சுமாராக 25 சதவிகிதம் அதிகரித்து 15 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனமாக மாறி இருப்பதாக கூறப்பட்டது.
இதனடிப்படையில், 2020 - 2021 நிதி ஆண்டில் பேடிஎம் நிறுவனம் சுமார் 200 கோடி லாபம் பார்க்கலாம் என்றும், வரும் 2026 நிதி ஆண்டில் சுமார் 8,512 கோடி லாபம் பார்க்கலாம் எனக் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.

உலகத்தின்
முக்கியமான பொருளாதார அமைப்புகள் எல்லாம், `இந்தியாவின் எதிர்காலம் எப்படி
இருக்கும்?' என்று கணிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.
அவற்றில் சர்வதேச நாணய நிதியம் (IMF) முக்கியமானது. 2019 மற்றும் 2020-ல் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எந்தளவுக்கு இருக்கும் என்று ஐ.எம்.எஃப் கணித்துள்ள மதிப்பீடுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில், `இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிடவும் மிகவும் பலவீனமாக உள்ளது. அதற்கு அரசு எடுத்துவரும் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் வங்கிசாரா நிதி அமைப்புகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, மற்றும் இந்திய பொருளாதார ஆதாரங்களுக்கு தக்க பொருளாதாரக் கொள்கை வடிவமைக்கததுதான் பலவீனங்களுக்கான காரணங்களாகும்.இதுவரை போய்க்கொண்டிருந்த பொருளாதார வழியைத் திடீரென மாற்றியது தவறான அரசு முடிவுதான் முழுக்காரணம்.' எனக் கூறப்பட்டுள்ளது.
இதே ஐ.எம்.எஃப் ஜூலையில் வெளியிட்ட அறிக்கையில், `2019 மற்றும் 2020-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்திருக்கும்' எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், `தற்போது ஜிடிபி முறையே 7 மற்றும் 7.2 சதவிகிதமாக வளர்ந்தாலும், உள்நாட்டில் தேவை அதிகம் உள்ளதால் எதிர்பார்த்ததைவிட பொருளாதார வளர்ச்சி பலவீனமாக உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளது.
எனினும்,சரியான பொருளாதாரக்கொள்கையாக்களை வடிவமைத்தால் உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் முக்கிய பொருளாதார நாடாகவும், சீனாவை விடவும் இந்தியா முன்னேறும் எனவும் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் உலகளாவிய நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீவிர வலதுசாரி அரசான மோடி அரசை சீனாவிடம் ஐ.எம்.எஃப் விட்டுக்கொடுக்குமா என்ன?

மாநிலங்களவை உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) தொழில்களில் இருந்து எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் தெரியுமா?
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் புதிய தேர்தல் கண்காணிப்பகம் இணைந்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், தற்போது பதவியில் உள்ள 213 மாநிலங்களவை உறுப்பினர்களால் அறிவிக்கப்பட்ட நிதி வருவாய்களை ஆய்வு செய்துள்ளது.
இதில் 17 எம்.பி-க்கள் தங்களுடைய பண வருவாய் விவரங்களை தாக்கல் செய்யவில்லை.
தங்கள் வருவாய் விவரங்களை சமர்ப்பித்த 213 எம்.பி-க்களின் அறிவிப்புகளில் 124 எம்.பி-க்கள் (அதாவது 58 சதவீதம்) கிடைக்கவில்லை அல்லது எம்.பி-க்கள் அளிக்க வேண்டிய அறிவிப்புகளில் ஐந்து வகையான வழிகளில் வருமானம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
அந்த ஐந்து வகைகள்; ஊதியம்பெறும் இயக்குநர்கள் பதவி, வழக்கமான ஊதியம் பெறும் செயல்பாடு, நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் பங்குதாரர்கள், கட்டண ஆலோசனை, தொழில்முறை ஈடுபாடு ஆகியவை ஆகும்.
ஊதியம்பெறும் இயக்குநர் பதவி:
24 எம்.பி.க்கள் இந்த படிவத்தில் தங்களுக்கு நிதி வருவாய் இருப்பதாக அறிவித்துள்ளனர். ஊதியம் பெறும் இயக்குநராக அதிகபட்ச தொகையை பெற்றுள்ளதாக கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.பி டி.குபேந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.
அவர் ஆண்டுக்கு ரூ.40.68 கோடி பெற்றுள்ளார்.
இவரைத் தொடர்ந்து, ராஜீவ் சந்திரசேகர்(பாஜக, கர்நாடகா) ஆண்டுக்கு ரூ.7.03 கோடி பெறுவதாக தெரிவித்துள்ளார்.
இவருக்கு அடுத்து, அப்துல் வஹாப் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரளா) ரூ.3.34 கோடி பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த பிரிவில் கோகுலகிருஷ்ணன்(அ.இ.அ.தி.மு.க, புதுச்சேரி) அதிகப்பட்சமாக 7 இயக்குநர் பதவிகளில் இருப்பதாக அறிவித்துள்ளார்.
வழக்கமான ஊதியம் பெறும் செயல்பாடு:
இந்த படிவத்தில் 30 எம்.பி.க்கள் (அதாவது 14.1%) இந்த படிவத்தில் தங்களுக்கு நிதி வருவாய் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
வழக்கமான ஊதியம் பெறும் நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட மிக அதிகப்பட்ச தொகையை மகேஷ் பொட்டார் ( பாஜக, ஜார்க்கண்ட்) ஆண்டுக்கு ரூ.3.18 கோடி பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவரை அடுத்து, பாஜகவின் நியமன எம்.பி மேரி கோம் ஆண்டுக்கு ரூ.2.50 கோடியும் மற்றொரு நியமன எம்.பி ஸ்வப்பன் தாஸ்குப்தா ஆண்டுக்கு ரூ.66.60 லட்சம் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் பங்குதாரர்கள்:
44 எம்.பி-க்கள் (அதாவது 20.7%) இது போன்ற வருவாய் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதில் அதிகப்பட்ச தொகையை ரவிந்திர கிஷோர் சின்ஹா (பாஜக, பீகார்) ரூ.747 கோடி இருப்பதாக தெரிவித்துள்ளர்.
இவரைத் தொடர்ந்து, அபிஷேக் மனு சிங்வி (காங்கிரஸ், மேற்குவங்கம்) ரூ.386 கோடி என்று அறிவித்துள்ளார்.
அடுத்து, காக்டே சஞ்சய் தத்தாத்ரேயா(சுயேச்சை,மகாரஷ்டிரா) ரூ.262 கோடி என்று அறிவித்துள்ளார்.
இரண்டு எம்.பி-க்கள் மட்டுமே கட்டண ஆலோசனை படிவத்தில் தங்களுக்கு நிதி வருவாய் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
நியமன எம்.பி கே.டி.எஸ்.துளசி இந்த வகையில் ரூ.27.50 லட்சம் வருவாய் பெறுவதாக தெரிவித்துள்ளார். எம்.பி டாக்டர் விகாஸ் ஹரிபாவு மஹாத்மி (பாஜக, மகாராஷ்டிரா) ரூ.5.60 லட்சம் வருவாய் பெறுவதாக அறிவித்துள்ளார்.
40 (18.8%) எம்.பி.க்கள் தொழில்முறை ஈடுபாட்டு படிவத்தில் நிதி நலன்களை அறிவித்துள்ளனர்.
இது போன்ற தொழில்முறை ஈடுபாடுகள் மூலம் சிங்வி ரூ.177 கோடி பெறுவதாகவும் இவரைத் தொடர்ந்து ப.சிதம்பரம் (காங்கிரஸ், மகாராஷ்டிரா) ரூ.33 கோடியும் துளசி ரூ.27.67 கோடியும் வருவாய் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
மேற்கூறிய ஒவ்வொன்றின் கீழும் வருவாய் கிடைக்கவில்லை/ இல்லை என்று அறிவித்த 124 எம்.பி-க்களில், 104 எம்.பி-க்கள்(அதாவது 48.8%) பேர் தங்கள் தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் அறிவித்தபடி ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள மொத்த சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்.
அதில் முதல் 4 இடங்களைப் பிடித்தவர்கள்: டி.சுப்பரமணி ரெட்டி (காங்கிரஸ், ஆந்திரப் பிரதேசம்) ரூ.422.44 கோடிகள் .
சி.எம்.ரமேஷ் (தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திரப்பிரதேசம்) ரூ.258.20 கோடிகள்
அம்பிகா சோனி (காங்கிரஸ், பஞ்சாப்) ரூ.105.82 கோடிகள்
சொத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
முன்னாளில்
இந்நாள்.
அனைத்து நாடுகள் கலாச்சார ஒற்றுமை தினம்
தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது(1886)
ரஷ்யா அதிகாரப்பூர்வமாகக் குடியரசானது(1917)
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்புஒபெக் (OPEC) உருவாக்கப்பட்டது(1960)
எம்.எஸ்.டாஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது(2000)
ஒபெக் (OPEC)
1960 - எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு
(OPEC) தொடங்கப்பட்டது.
1940களில் உலகின் மிக அதிக எண்ணெய் உற்பத்தியாளராகவும், நுகர்வோராகவும் அமெரிக்கா இருந்தது. உலகின் எண்ணெய் உற்பத்தியின் பெரும்பகுதி செவன் சிஸ்டர்ஸ் என்று குறிப்பிடப்பட்ட ஏழு பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இவற்றில் ஐந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் இருந்தது. அவையும்கூட, ராக்ஃபெல்லரின் ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனத்தின் ஏகபோகத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பிரிக்கப்பட்ட நிறுவனங்களே. மத்திய கிழக்கு நாடுகளின் மிகப்பெரிய எண்ணெய் வயல்கள் அப்போதுதான் உற்பத்தியைத் தொடங்கியிருந்தன.
இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளிலிருந்து விடுபடத் தொடங்கியிருந்த நிலையில், எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கிடையே தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ஓர் அமைப்பு தேவை என்று வெனிசுலா, ஈரான் ஆகிய நாடுகள், இராக், குவைத், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்தன.
1959 பிப்ரவரியில் எண்ணெய் நிறுவனங்கள், வெனிசுவேலாவிலிருந்தும், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் பெறப்படும் எண்ணெயின் (கொள்முதல்) விலையைத் தன்னிச்சையாகக் குறைத்தன.
இதைத் தொடர்ந்து, அவ்வாண்டின் இறுதியில், அரபு லீக், முதல் அரபு பெட்ரோலிய மாநாட்டைக் கூட்டியது.
இதில் சந்தித்த, அமெரிக்கா, சோவியத் அல்லாத மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளான வெனிசுலா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், விலை, உற்பத்தி ஆகியவற்றில் முடிவெடுக்க எண்ணெய் ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க மற்ற நாடுகளை வலியுறுத்தினர்.
1960 ஆகஸ்டில் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் மத்திய கிழக்கின் எண்ணெய் விலையைக் குறைத்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 10-14 தேதிகளில் நடைபெற்ற பாக்தாத் மாநாட்டில், வெனிசுலா, சவூதி அரேபியா, ஈரான், இராக், குவைத் ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக்கொண்டு OPEC உருவாக்கப்பட்டது.
பின்னர் உறுப்பினரான நாடுகளில் இந்தோனேஷியா, கத்தார் ஆகிய நாடுகள் 2 மில்லியன் டாலர் ஆண்டுச் சந்தா செலுத்த விரும்பாமை, உற்பத்தி வரம்புகளுக்கு கட்டுப்பட விரும்பாமை போன்ற காரணங்களால் வெளியேறி, தற்போது 14 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இதன் தலைமையிடம் பாக்தாத், அல்லது பெய்ரூட்-ஆக இருக்க வேண்டுமென்று மத்திய கிழக்கு நாடுகள் விரும்பினாலும், நடுநிலை நாடொன்றில் இருக்க வேண்டுமென்ற வெனிசுலாவின் வலியுறுத்தலின்படி ஜெனீவா(ஸ்விட்சர்லாந்து) தலைமையிடமாக்கப்பட்டது.
ஆனால், சிறப்பு வசதிகளை அந்நாடு வழங்காததால், 1965இல் தலைமையிடம் வியன்னா(ஆஸ்திரியா)வுக்கு மாற்றப்பட்டு, இன்றுவரை அங்கேயே செயல்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------- 1940களில் உலகின் மிக அதிக எண்ணெய் உற்பத்தியாளராகவும், நுகர்வோராகவும் அமெரிக்கா இருந்தது. உலகின் எண்ணெய் உற்பத்தியின் பெரும்பகுதி செவன் சிஸ்டர்ஸ் என்று குறிப்பிடப்பட்ட ஏழு பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இவற்றில் ஐந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் இருந்தது. அவையும்கூட, ராக்ஃபெல்லரின் ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனத்தின் ஏகபோகத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பிரிக்கப்பட்ட நிறுவனங்களே. மத்திய கிழக்கு நாடுகளின் மிகப்பெரிய எண்ணெய் வயல்கள் அப்போதுதான் உற்பத்தியைத் தொடங்கியிருந்தன.
இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளிலிருந்து விடுபடத் தொடங்கியிருந்த நிலையில், எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கிடையே தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ஓர் அமைப்பு தேவை என்று வெனிசுலா, ஈரான் ஆகிய நாடுகள், இராக், குவைத், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்தன.
ஒபெக் தலைமையிடம் |