ஒப்பந்தங்களால் பலன் உண்டா?
இன்ப சுற்றுலா
மோடியுடன் எடப்பாடி போட்டி?
தமிழக அமைச்சர்கள் திடீரென அயல்நாடுகளுக்கு சென்று வந்துள்ளனர்.
கேட்டால் தமிழக நலனுக்காக என்கின்ற னர்.
இது பெரிய விமர்சனத்திற்கு வழி வகுத்துள்ளது.
வெளி நாடுகளுக்கு பறந்த அமைச்சர்களின் பட்டியலைப் பார்த்தாலே, இப்படி ஓரே சமயத்தில் வெளி நாடு சுற்றுப் பயணங்களின் மர்மம் என்ன எனும் கேள்வி எழுவது இயற்கைதான்.
ஜெயக்குமார்- ஜப்பான்;
நிலோபர் கபில்- ரஷ்யா;
எடப்பாடி பழனிசாமி /விஜய பாஸ்கர் /உதயகுமார் /சம்பத்/ராஜேந்திர பாலாஜி-லண்டன்/அமெரிக்கா/துபாய்; திண்டுக்கல் சீனிவாசன்- இந்தோனேஷி யா;
கடம்பூர் ராஜீ- மொரீஷியஸ்;
செங்கோட் டையன்- பின்லாந்து;
சி.வி. சண்முகம்/கே.பி. அன்பழகன்- சிங்கப்பூர்;
மா.பா. பாண்டியராஜன்- எகிப்து என சுற்றுலா சென்று வந்துள்ளனர்.
லண்டன் ஒப்பந்தங்கள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலில் இலண்டனுக்கு சென்றார்.
அங்கு இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒரு நோக்க அறிக்கை யும் கையெழுத்திடப்பட்டன.
இதில் ஒன்று சர்வதேச திறன் மேம்பாட்டு நிறுவனத்துடன் (International Skill Development Corpor ation) போடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத் தின் படி “மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணி மேம்பாடுகளை கண்டறிந்து அதனை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது” என்பது இலக்காக தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சேவை மேம்பாட்டுப் பயிற்சி தான் நோக்கம் எனில் ஏன் இந்த குறிப்பிட்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் எனும் கேள்வி எழுகிறது.
ஏனெனில் இந்த நிறுவனம் மருத்துவ துறையில் செயல்படும் அமைப்பு அல்ல. மருத்துவப் பயிற்சிதான் இலக்கு எனில் இலண்டனில் செயல்படும் ஏதாவது ஒரு சிறந்த மருத்துவமனை அல்லது அந்த துறையில் செயல்படும் அமைப்புடன் ஒப்பந்தம் செய்து இருந்தால் அதில் நியாயம் உள்ளது.
மருத்துவ துறையில் செயல்படாத ஒரு நிறுவனத்துடன் ஏன் புரிந்துணர்வு ஒப்பந்தம்?
இந்த ஒப்பந்தம் புதிய முதலீடு அல்லது புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்குவதற்கு வாய்ப்பு இல்லை.
London School of Hygiene and Tropical Medicine எனும் அமைப்புடன் ஒரு நோக்க அறிக்கை (Statement of Intent) கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் சாராம்சம் கூட தமிழக அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த அமைப்பு புகழ் பெற்ற ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
பல வளரும் நாடுகளில் தொற்று நோயைத் தடுப்பது குறித்து இந்த நிறு வனம் ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்தி யாவில் கூட Public Health Foundation India எனும் அமைப்புடனும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையுடனும் இணைந்து செயல் படுகிறது.
இந்த நோக்க அறிக்கை மூலம் தமிழகம் பயன் பெற வாய்ப்பு உள்ளது.
எனினும் புதிய முதலீடு அல்லது வேலை வாய்ப்புகள் உருவாகும் சாத்தியம் இல்லை.
மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இலண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவ மனையின் கிளைகள் தமிழகத்தில் அமைத்திட போடப்பட்டுள்ளது.
இந்தியா விலேயே தமிழகத்தில்தான் தலைசிறந்த மருத்துவமனைகள் உள்ளன எனவும் மருத்துவச் சுற்றுலாவிற்கு தமிழகம் புகழ் பெற்றுள்ளது என தமிழக அரசாங்கம் அடிக்கடி கூறிக்கொள்கிறது.
அப்படியெ னில் கிங்ஸ் மருத்துவ மனையின் கிளை களை இங்கு கொண்டு வருவதன் தேவை அல்லது நோக்கம் என்ன?
முதல்வர் அல்லது சுகாதாரத்துறை அமைச்சர் விளக்குவார்க ளா?
எப்படி இருப்பினும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமும் குறிப்பிடத்தக்க முதலீடு அல்லது வேலை வாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு இல்லை.
கிங்ஸ் மருத்துவமனையில் முதல்வர் ஆற்றிய உரையில், அங்குள்ளதை போல ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை தமிழ கத்திலும் அமலாக்கப்படும் என குறிப்பிடு கிறார்.
இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளும் இந்த செய்தியை வெளி யிட்டுள்ளன.
ஆனால் சென்னை திரும்பிய பிறகு முதல்வர் சார்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்துவது பற்றிதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏன் இந்த முரண்பாடுகள்?
தமிழக முதல்வர் இங்கிலாந்து நாடாளு மன்றத்தில் உரை நிகழ்த்தியதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இங்கி லாந்து நாடாளுமன்றத்தின் இணைய தளத்தில் எங்குமே இந்த செய்தி இடம் பெறவில்லை.
இங்கிலாந்தின் எந்த பத்திரி கையும் இந்த செய்தியை பெயரளவுக்கு கூட வெளியிட்டதாக தெரியவில்லை.
அது மட்டுமல்ல; புரிந்துணர்வு கையெழுத்திட்ட நிறுவனங்களும் கூட இந்த ஒப்பந்தங்கள் குறித்து தமது
இணையத்திலோ அல்லது முகநூல்/டிவிட்டர் ஆகிய சமூக வலைதளங்களிலோ பதிவு செய்யவில்லை. ஏன்?
இந்த ஒப்பந் தங்கள் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந் தது அல்ல எனும் மதிப்பீடு உள்ளதா?
இந்த புதிருக்கு விடை பெற வேண்டும் எனில் தமிழக அரசாங்கம் இந்த ஒப்பந்தங்கள், அவை அளிக்கும் முதலீடுகள், வேலை வாய்ப்புகள் குறித்து அனைத்து விவரங்க ளும் அடங்கிய ஒரு அறிக்கை வெளியிட வேண்டும்.
அப்பொழுதுதான் தமிழக மக்க ளுக்கு தகுந்த பதில்கள் கிடைக்கும்.
மேலும் முதல்வருக்கு லண்டன் தமிழ்ச் சங்கம் செல்ல நேரம் கிடைக்காதது துரதிர்ஷ்டமே!
அமெரிக்க ஒப்பந்தங்களால் பலன் உண்டா?
அமெரிக்காவில் சுமார் 5080 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும் அதன் மூலம் 26,500 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் முதல்வரின் அறிக்கை குறிப்பிடுகிறது.
முதல்வரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில நிறுவனங்கள்
லிங்கன் எலக்ட்ரிக்
இந்த நிறுவனம் வெல்டிங் சம்பந்தப்பட்ட பொருட்களை தயாரிக்கிறது.
இந்தியா விலேயே பாரத மிகு மின் நிறுவனத்தின் வெல்டிங் ஆராய்ச்சி அமைப்பு பல உயர்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது.
இந்த நிறுவனத்தை தவிர்த்து விட்டு அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் என்ன? மேலும் லிங்கன் நிறுவனத்திற்கு தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு ஆலை ஏற்கெனவே உள்ளது. அப்படியானால் புதிய ஒப்பந்தத்தின் தேவை என்ன?
கால்டன் பயோ டெக் :
இது ஒரு சிறிய நிறுவனம் ஆகும்.
மருத்துவத் துறையில் பயன்படும் சில பொருட்க ளை இந்த நிறுவனம் தயாரிக்கிறது.
இதனை உருவாக்கியவர் அழகப்பா குழுமத்தை சேர்ந்த ராமநாதன் வைரவன் என்பவர்.
இந்த நிறுவனம் எத்தகைய முதலீடு அல்லது வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வி!
இசட். எல். டெக்னாலஜி:
தரவுகளை ஆய்வு செய்யும் மென்பொருள் நிறுவனம் இது.
இந்த நிறுவனத்தின் ஆண்டு வணிகம் வெறும் 12 மில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ. 84 கோடி மட்டுமே. இந்த நிறுவனத்தில் வெறும் 174 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
(ஆதாரம்: https://www.owler.com/company/zlti) இத்தகைய சிறிய நிறுவனம் என்ன வகையான முதலீடையும் வேலை வாய்ப்புகளையும் தமிழகத்திற்கு கொடுக்கும்?
·காபிசாஃப்ட் (Kapisoft) :
இதுவும் ஒரு சிறிய நிறுவனம் என தெரிகிறது.
மென் பொருள், இயந்திர நுண்ண றிவு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்த நிறுவனம் தமிழகத்திற்கு எத்தகைய நன்மைகளை அளிக்கும் என்பது புதிராக உள்ளது.
·கிளவுட் லேர்ன் (KLOUD LEARN) :
இணைய தளம் மூலம் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும் ஒரு சிறிய நிறுவனம் இது! பெரும்பாலும் இந்தியர்களால் நடத்தப்படுகிறது.
இதற்கு சென்னை பெருங் குடியிலும் ஒரு அலுவலகம் உள்ளது.
நேச்சர் மில்ஸ் (Nature Mills):
இந்த நிறுவனம் தயாரிக்கும் சில பொருட்கள்: தேங்காய் எண்ணெய்/ கடலை எண்ணெய்/ நாட்டுச் சர்க்கரை/ மஞ்சள் தூள் இத்யாதி, இத்யாதி.
கலிபோர்னியா வில் உள்ள இந்த நிறுவனத்தின் கிளை சென்னை சேலையூரிலும் உள்ளது.
இது எந்த அளவு முதலீட்டை தரும் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.
ரைப். ஐஓ: (Ripe.Io)
உணவு உற்பத்தி மற்றும் உணவு போக்குவரத்து தொடர்பான இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது 2017ம் ஆண்டுதான்.
இதன் முதலீடு 2.4 மில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ.17 கோடி மட்டுமே.
100க்கும் குறைவான ஊழியர்களே பணியாற்றுகின்றனர். (https://craft.co/ripe-io).
·ஏ.சி.எஸ். குலோபல் டெக் சொலுஷன்ஸ் (ACS Global Tech Solutions)
ஒப்பந்தம் போடப்பட்டதில் ஓரளவிற்கு பெரிய நிறுவனம் இது. 800 மில்லியன் வருமானம் உள்ள இதுவும் மென்பொருள் நிறுவனம்தான்.
எனினும் இந்த நிறு வனத்திற்கு இந்தியாவில் நொய்டா, ஹைதராபாத், கான்பூர் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளன.
டாட்சால்வ்டு சிஸ்டம்ஸ் (Dotsolved Systems):
இதுவும் ஒரு மென் பொருள் நிறுவனம்.
இதற்கும் சென்னையில் அலுவலகம் உள்ளது.
இதன் ஆண்டு வருமானம் 2.1 மில்லியன் டாலர் அதாவது ரூ.15 கோடி மட்டுமே!
மொத்த ஊழியர்கள் 42 பேர் மட்டுமே!
(ஆதாரம்: https://www.zoominfo.com/c/dotsolved-systems-inc/44782206)
கூகுள் எக்ஸ்(Google X):
கூகுள் நிறுவனத்தின் ஒரு பிரிவான இந்த அமைப்பு எதிர்கால தொழில்நுட் பங்களை உருவாக்கும் ஒரு ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனம் இரு விதமான திட்டங்களை உருவாக்குகிறது.
1) மிக உள்புறத்தில் உள்ள கிராமங்க ளுக்கு பலூன் அல்லது சில தொழில்நுட்பங்கள் மூலம் இணையத்தை கொண்டு செல்லும் திட்டத்தை உருவாக்குகிறது.
2)அதே சமயம் ஓட்டுநர் இல்லாத வாகனங்கள், ஆளில்லாத துரோன் மூலம் கூரியர் டெலிவரி போன்ற தொழில் நுட்பங்களையும் ஆராய்ந்து வருகிறது.
முதல் வகையிலான திட்டங்கள் தமிழகத்திற்கு பெரும்பாலும் தேவைப்படாது.
இரண்டாவது வகை திட்டங்கள் ஓட்டுநர்கள் மற்றும் கூரியர் நிறுவன வேலை வாய்ப்புகளை அழித்துவிடும்.
டி.சி.எஃப் வென்ச்சர்ஸ்(DCF Ventures):
இந்த நிறுவனம் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகளை தரும் அமைப்பு ஆகும். இந்த நிறுவனத்தின் முதன்மை அதிகாரி அப்ஜித் பவார் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்.
இந்தியாவிலேயே இதன் அலுவலகம் இருக்கும் பொழுது ஒப்பந்தம் ஏன் அமெரிக்காவில் எனும் கேள்வி எழுகிறது.
இன்னொரு மிக முக்கிய தகவல் இந்த நிறுவ னத்திற்கும் இஸ்ரேலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. முதல்வர் நீர் மேலாண்மை குறித்து அறிய இஸ்ரேலுக்கு செல்வதற்கும் இந்த நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளது என்றெல்லாம் அபத்தமாக நீங்கள் சிந்திக்கக் கூடாது.
அமெரிக்காவில் புரிந்துணர்வு ஒப்பந்த
நிறுவனங்களிடையே உள்ள சில பொது அம்சங்கள்:
ஓரிரு நிறுவனங்கள் தவிர மற்றவை நிதி/வணிகம்/ ஊழியர்கள் எண்ணிக்கை ஆகிய அடிப்படையில் மிகச் சிறியவை.
இவை பெரும்பாலும் மென்பொருள் அல்லது ஆலோசனை வழங்கும் அமைப்புகளாக உள்ளன.
இந்த நிறுவனங்கள் கலிபோர்னியாவை மையமாக கொண்டு அமைந்துள்ளன.
பெரும்பாலும் இவற்றிற்கு தமிழகத்தில் அல்லது இந்தியாவில் அலுவலகங்கள் உள்ளன.
இத்தகைய நிறுவனங்கள் 26,500 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதை நம்புவதற்கு கடினமாக உள்ளது.
இங்கிலாந்தை போலவே அமெரிக்காவிலும் எந்த ஒரு ஊடகமும் முதல்வரின் நிகழ்ச்சிகள் குறித்து ஒரு வார்த்தை எழுதவில்லை.
துபாய் ஒப்பந்தங்கள்
டி.பி. ஒர்ல்டு (DP WORLD):
சரக்கு போக்குவரத்தை கையாளும் இந்த நிறுவனத்திற்கு ஏற்கெனவே சென்னையில் மட்டுமல்லாது கொச்சின்/விசாகப்பட்டினம்/ முந்த்ரா ஆகிய துறை முகங்களில் அலுவலகங்கள் உள்ளன.
புதிய ஒப்பந்தம் எப்படி அமலாக்கப்படும் எனும் விவரங்கள் இல்லை.
முதல்வர் ஒப்பந்தம் போட்டதில் இந்த நிறுவனத்தின் இணையதளம்தான் தனது செயல்பாடு கள் குறித்து விவரங்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் செயல் பட பெரிய பரப்பளவு உள்ள நிலப்பகுதி தமிழக அரசாங்கம் சென்னையில் ஒதுக்க வேண்டியிருக்கும். இது ஒரு கடினமான பணி.
எனினும் இந்த நிறுவனம் மட்டுமே 1000 வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியுமா என்பது விடை அளிக்க இயலாத கேள்வி.
ஐ.டி.இ.சி (ITEC):
இந்திய வர்த்தகம் மற்றும் கண்காட்சி மையம் எனப்படும் இந்த அமைப்பு, இந்தியா மற்றும் எமிரேட் அரசாங்கங்களின் உதவி யுடன் செயல்படுகிறது.
சிறு குறு தொழில் கள் மேம்பாட்டுக்கும் துபாயில் பணியாற்ற வாய்ப்புள்ள ஊழியர்களுக்கு திறன் மேம் பாடும் அளிக்கப்படும் என ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. துபாயில் பொருளாதார மந்தம் நிலவுகிறது.
இந்தச் சூழலில் இந்த ஒப்பந்தம் மூலம் 2000 வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலுமா என்பது எதிர்காலம்தான் பதில் கூறும்.
மேலும் ஜெயின்ட் இண்டஸ்ட்ரீஸ்/ முல்க் ஹோல்டிங்ஸ் போன்ற நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
குறைந்தபட்சம் துபாயில் உள்ள பத்திரி கைகள் முதல்வரின் நிகழ்ச்சிகள் குறித்து பரவலாக செய்திகள் வெளியிட்டுள்ளன.
அது தமிழக அரசாங்கத்திற்கு ஆறுதல் தரலாம்!
தமிழகத்தில் நிலவும் வேலையின்மையை நீக்கவும் தொழில் வளர்ச்சிக்கும் மிக முக்கிய தேவை ஆலை உற்பத்திக்கான திட்டங்கள் ஆகும்.
இதன் பொருள் மென்பொருள் உட்பட சேவைத்துறை தேவை இல்லை என்பது அல்ல!
வேலை வாய்ப்புகளை அதிக அள விற்கு உத்தரவாதப்படுத்தும் ஆலை உற்பத்திக் கான திட்டங்களுக்கு கூடுதல் அழுத்தம் தேவை.
ஆனால் முதல்வரின் சுற்றுப்பயணம் இந்த நோக்கங்களை பூர்த்தி செய்ததாக தெரிய வில்லை.
-அ.அன்வர் உசேன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பழைய சோறு
அறுபது வயதை கடந்த பிறகும் திடகாத்திரமாக இருக்கும் கிரா மத்து பெரியவர்கள் யாரிடமாவது கேட்டு பாருங்கள், உங்கள் ஆரோக்கியத்திற்கு காரணம் என்னவென்று?
சட்டென்று பதில் சொல்லிவிடுவார்கள்.
பழைய சோறும் கம்பங் களியும்தான் என்று.
பழைய சாதம் என்பது நம் முன்னோர்களின் உடல் நலத்திற்கு பக்கபலமாக இருந்துள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.
பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டு வந்த பழக்கம் நம் பாரம்பரி யத்திற்கு உண்டு.
ஆனால் இப்போது பீட்சா, பர்க்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளால் பழைய சோற்றின் மகத்து வம் இளைய தலைமுறையினருக்கு தெரியாமல் இருந்தது.
அது சமீபத்திய ஆய்வு அறிக்கை யின்படி இளைய தலைமுறையினரும் பழைய சோறு உணவினை விரும்ப தொடங்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்கன் நீயூட்ரிஷன் அசோசியேஷன் என்ற அமைப்பு பழைய சோற்றின் பெருமைகளை பட்டிய லிட்டுள்ளது.
அதன் பிறகு விழித்துக் கொண்ட இன்றை தலைமுறையினர் கூகுளில் பழைய சாதத்தை தேட ஆரம்பித்துள்ளனர்.
ஓட்டல்களில் பழைய சோறு கேட்டு வாங்கி சாப்பிட தொடங்கி இருக்கிறார்கள்.
இன்று பழையசோறு என்ற உணவை நம்பி மட்டுமே பல புதுப்புது ஓட்டல் கள் திறக்கப்பட்டுள்ளன. அது மட்டு மல்லாமல் பழைய சோறு பற்றிய பல விஷயங்களை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
குறிப்பாக அமெ ரிக்கர்களால் அதிகம் தேடப்படும் உணவு செய்முறையில் பழையசோறு முக்கிய இடம் வகிக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் ஓட்டல்களில் பழைய சோறு உணவும் விற்பனை செய்யப்படுகிறது.
தழிழ்நாட்டிலும் கூட ஒரு சில இடங்க ளில் பழைய சோறு விற்பதற்குகென பிரத்தியேக ஓட்டல்கள் திறக்கப்படு கின்றன.
அமெரிக்காவில் நிரந்தரமாக வசித்துவரும் தமிழர்களிடம் பழைய சோறு செய்முறைகளை கேட்பதற்கா கவே பலர் நட்புபாராட்டுகிறார்களாம். பழையசோற்றில் மற்ற உணவு பொருட்களில் இல்லாத வைட்ட மீன்கள் பி.6, பி.12, போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
என்று சொல்லப்படு கிறது.
இதில் லட்சகணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால் அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமாணப் பிரச்சனைகள் நீங்கி செரிமாண மண்டலம் ஆரோக்கியமாக செயல்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு காரணிகள் அதிகமாக உள்ளது.
தினமும் காலை யில் பழைய சோற்றினை சாப்பிட்டு வந்தால் விரைவில் முதுமை தோற்றம் ஏற்படுவதை தடுக்க முடியும். இதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பழையசோற்றுக்கு அடுத்தப்படியாக அமெரிக்கர்கள் விரும்பும் அடுத்த உணவு இட்லி என்று ஆராய்ச்சியில் சொல்லப்படு கிறது. எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனை களை பழைய சோறு விரட்டி அடிக்கி றது என்ற உண்மையையும் ஆராய்ச்சி யில் சொல்லப்பட்டுள்ளது.
உடல் சூட்டை குறைக்க அருமையான மருந்து பழைய சோறுதான் என்று சுட்டிகாட்டுகின்றனர். இக்கால தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் அல்சர் பிரச்சனையை பழைய சோறு தடுக்கிறதாம். இதற்கு காரணம் அதில் உள்ள நல்ல பாக்டீரி யாக்கள்தான் என்று கூறுகின்றனர்.
பழைய சோறு செய்வதற்கு சம்பா அரிசி அல்லது கைகுத்தல் அரிசி சிறந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஏனெனில் இந்த அரிசியில்தான் ஏராள மான ஊட்டசத்துக்களும் தாது உப்புக்களும் நிறைந்துள்ளது என்று சொல்கின்றனர். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய காலை உணவாக இருந்த பழைய சோறு அனேக வீடுகளில் காணா மல் போய்விட்டது.
இனியாவது பழைய சோற்றின் மகத்துவத்தை புரிந்துகொண்டு தினமும் உட்கொள்ளமுடியாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று அல்லது இரண்டு முறையாவது உட்கொள்ள முயற்சிப்போம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
100 நாள் மோடியின் சாதனை .
ஐக்கிய நாடுகளின் பொது அவை யில் உரையாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 21-ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் செல்கி றார்.
மோடி பிரதமராக 2-ஆவது முறை பதவியேற்று 100 நாட்களை மட்டுமே கடந்துள்ள நிலையில் இதுவரை 9 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
மாலத்தீவு, இலங்கை, பூடான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ் ரைன், பிரான்ஸ், ஜப்பான், கிர்கிஸ் தான், ரஷ்யா ஆகிய நாடுகளைச் சுற்றி வந்துள்ளார்.
இந்த வரிசையில் தற் போது அமெரிக்காவும் இடம்பெற உள்ளது.
7 நாள் அரசு முறைப் பயணமாக, செப்டம்பர் 21-ஆம் தேதி அமெரிக்கா செல்லும் மோடி, அங்கு பல நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து பேசுகிறார்.
22-ஆம் தேதி அமெரிக்காவின் ஹூஸ்ட னில் அமெரிக்கவாழ் இந்தியர்களுட னும் மோடி கலந்துரையாட உள்ள தாக கூறப்படுகிறது.
மோடியின் அமெரிக்கப் பயணம் தொடர்பாக வெளியுறவுத்துறை செய லகம் வெளியிட்டுள்ள தகவலில், செப்டம்பர் 27-ஆம் தேதி ஐக்கிய நாடு களின் பொது அவைக்கூட்டம் அமெரிக்காவில் நடைபெறுவதாகவும், அதில் பங்கேற்கும் மோடி ‘தலைமைப் பண்புகள்’ குறித்து பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கலந்து கொண்டு பேசவுள்ளது குறிப்பிடத்தக் கது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------