"வரும் ஆனா வராது து து .."
காலாண்டு விடுமுறை உண்டா, இல்லையா என்கிற சந்தேகம் ஆசிரியர்களுக்கும், மாண
வர்களுக்கும் மட்டுமின்றி, பெற்றோர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை அறிவிப்பு, அமைச்சரின் பேட்டி ஆகியவற்றால் குழப்பம் தீர்ந்தபாடில்லை. மத்திய பாஜக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொ துத்தேர்வு முறையை திணிக்கிறது.
ஆனால் எள் என்றால் எண்ணெய்யாக தமிழக அதிமுக அரசு அவற்றுக்கு செயல்வடி வம் கொடுப்பதற்கு துடிக்கிறது.
அதனால் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்தது. இதற்கு கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர், பெற்றோர்கள், மனநல மருத்துவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமி ருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து தற்போது மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்விலி ருந்து மூன்றாண்டு காலம் விதிவிலக்கு கோரப் பட்டுள்ளது என்றும் மாணவர்களின் திறன் மேம்பாடுகளை மேம்படுத்தியதற்கு பிறகு அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். விதிவிலக்கு கோரப்பட்டுள்ளது என்றால், இந்தாண்டு பொதுத்தேர்வு உண்டா?
இல்லை யா?
என்பது இன்னும் தெளிவாகவில்லை.
ஏனெனில் விதிவிலக்கு பெற்று விட்டார்களா?
என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
பெற்றி ருந்தால் விதி விலக்கு பெற்றிருக்கிறோம்.
அத னால், மூன்றாண்டுகளுக்கு தேர்வு இல்லை என்று தெளிவாக சொல்லியிருப்பார் அமைச்சர். உள்ளத்தில் உள்ளதுதானே வார்த்தையில் வெளி வரும்.
உள்ளத்தில் தெளிவு இல்லையெனில் அதுதானே வெளிப்படும்.
இந்த பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கும் போதே காலாண்டு தேர்வு விடுமுறைக் காலத்தில் பள்ளிகளில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி விழாக்கள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககம் அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள
சுற்றறிக்கையில் கூறப்பட்டுள் ளது.
இதனால் காலாண்டு விடுமுறை உண்டா?
இல்லையா? என்ற கேள்வி எழுந்தது.
அதற்கு பரவலான எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், விடுமுறை உண்டு. ஆனால் மாநில திட்ட இயக்ககம் அறிவித்துள்ள நிகழ்வு களில் விருப்பமுள்ள மாணவர்கள் தானாக முன்வந்து கலந்து கொள்ளலாம். யாருக்கும் கட்டாயம் அல்ல.
மாநில திட்ட இயக்ககத்தின் அறிக்கைக்கும் காலாண்டு விடுமுறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் கூறியுள்ளார்.
இதன் பொருள் என்ன?
இந்நிலையில்தான் காலாண்டு தேர்வு விடு முறை குறித்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்றும் பள்ளிகளில் விழாக்கள் நடைபெறும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறி யுள்ளார்.
இதனுடன் நிகழ்வுகள் நடத்தப்பட்டு தொகுப்பு அறிக்கையாக மாநில திட்ட இயக்க கத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற அதன் சுற்றறிக்கை பற்றி வேறு ஏதாவது விளக்கம் தருவார்களோ?
வடிவேலு படத்தில் வரும் "வரும் ஆனா வராது து து .."க்கும் செங்கோட்டையன் பேச்சுக்கும் வித்தியாசம் என்ன இருக்கிறது?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
கடந்த சில மாதங்களாகவே மந்தநிலை நிலவுவதாகவும், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப் பது உண்மைதான் என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் சக்திகாந்த தாஸ் மேலும் கூறியிருப்பதாவது: “2019-20 நிதியாண்டினுடைய முதல் காலாண்டில் 5.8 சதவிகிதம் ஜிடிபி வளர்ச்சியை கணித்திருந்தோம். ஆனால், முடிவு மிகவும் மோசமாகவே இருக்கிறது.
கிட்டத்தட்ட பிறகணிப்புகள் எல்லாமே 5.5 சதவிகிதத்துக்குக் கீழே இருந்துள்ளன.
ஆனால்,5 சதவிகிதம் என்பது ஆச்சரியம் அளிக்கிறது.
எனவே, இது எப்படி நிகழ்ந்தது என்பதை ஆராய்ந்து வருகிறோம்.
கடந்த சில மாதங்களாகவே, மந்தநிலையின் அறிகுறிகளை கண்கூடாக பார்த்தோம்.
அதனால்தான் சென்ற நிதிக் கொள்கைக் கூட்டத்தில், வளர்ச்சிதான் முதல் குறிக்கோள் என அறிவித்தோம். வட்டி விகிதத்தையும் குறைத்தோம். அமெரிக்கா, ஜப்பான் போன்ற முன்னேறிய பொருளாதாரம் கொண்ட நாடுகளிலும் ஒரு காலாண்டின் வளர்ச்சியைவிட அடுத்த காலாண்டின் வளர்ச்சி குறைவது வழக்கம் தான். எனினும், அதைச் சொல்லி, தற்போது நம் நாட்டில் ஏற்பட்டிருக் கும் மந்தநிலையை நான் நியாயப்படுத்த முயலவில்லை.
ஆனால், சர்வதேச நாடுகளின் விவகாரங்களும் இந்தியாவின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன என்று சொல்கிறேன்.
தவிர இந்தியாவில் உள்நாட்டு பிரச்சனைகளும் உள்ளன.தற்போதைய நிலை முன்னேற்றம் அடைய வேண்டும். அதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முன்வந்துள்ளது.
கட்டுமானத் தொழிலுக்கு சலுகை, ஏற்றுமதி ஊக்கத் தொகை, வங்கிகள் ஒருங்கிணைப்பு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வாகன துறைக்கு ஊக்கச் சலுகை அறிவிப்புகள் என, சில நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது.
எனவே, நிலைமை சீரடையும் போது வளர்ச்சியும் ஏறுமுகமாக மாறும் ஆனால், இப்போது ஒரு கணிப்பை கூறிவிட முடியாது."
இவ்வாறு சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
'நபார்டு' வங்கியில் வேலை.
வயது: 18 - 35. வயது வரம்பு தளர்ச்சி உண்டு.
தகுதி: * ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, 69 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
* இந்தி பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்தி அல்லது ஆங்கில பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.32,000
கடைசி நாள்: 2.10.2019
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (ஆன் லைன்), நேர்முகத் தேர்வு
விபரங்களுக்கு: https://www.nabard.org

தொலைந்த அலைபேசியை கண்டுபிடிக்க அரசு இணையத்தளம்.
மொபைல் திருட்டு போவது அல்லது அறியாமல் தவறவிடுவதால் பொருள் இழப்பு மட்டுமல்ல தகவல் இழப்பும் மிகப்பெரிய அளவில் நம்மை பாதிக்கிறது.
மொபைல் போன்களில்தான் பலரும் தங்களுடைய பல தனிப்பட்ட ஆவணங்கள், படங்கள், நிகழ்ச்சிக் குறிப்புகள் எனப் பலவற்றையும் பதிந்துவைத்திருக்கின்றனர். இத்தகைய தகவல்களை பதிந்து வைத்திருக்கும் பயனர்கள் மொபைலை இழக்கும்போது என்ன செய்வது?
எங்கு முறையிடுவது? கிடைக்குமா?
என்ற குழப்பத்தைத் தொடர்ந்து ஏற்படும் பதற்றம், மன உளைச்சலால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தில், திட்டம் ஒன்றை 2012ல் தொலைத் தொடர்புத் துறை தீட்டியது. மொபைல் போன் திருடப்பட்டு விட்டாலோ அல்லது தொலைத்துவிட்டாலோ அதை கண்டுபிடித்து தர Central Equipment Identity Register சுருக்கமாக CEIR என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தயாரிப்பாளர்களை ஒருங்கிணைத்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
இத்திட்டத்திற்காக மிகப்பெரிய அளவில் பங்களிப்பை வழங்கியது பிஎஸ்என்எல் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து மொபைல்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு இத்திட்டம் இறுதியாக தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மொபைல் திருட்டு குறித்து புகார் தெரிவிக்க இணையதளம் ஒன்றை தொலைத் தொடர்புத் துறை தற்போது தொடங்கியுள்ளது.
https://www.ceir.gov.in என்ற இத்தளத்தில் காணாமல் போன உங்கள் மொபைல் போன் IMEI எண் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம். நீங்கள் வாங்கிய மொபைல் ஒரிஜினல் IMEI எண் கொண்டதா? திருடப்பட்ட புகார் தெரிவிக்கப்பட்ட மொபைலா?
போன்ற விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
அனைத்து மொபைல் போன்களுக்கும் IMEI என்று சொல்லப்படும் தனித்துவமான எண் இருக்கும்.
உங்கள் மொபைலின் IMEI எண் அறிய *#06# என்பதை டயல் செய்து பெறலாம்.
அந்த எண் மூலம்தான் மொபைல் போன் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியும். அதே நேரத்தில் IMEI எண் நகல் செய்யமுடியும் என்பதால், இதன் காரணமாக ஒரே IMEI எண் கொண்ட பல போன்கள் இருக்கின்றன. இதை வைத்துப் பார்க்கும்போது, ஒரு IMEI எண்ணை ப்ளாக் (Block) செய்தால், பலர் பாதிக்கப்படுவார்கள்.
அதைத் தடுக்கும் நோக்கில்தான் CEIR திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், “ஒரு மொபைல் போன் தொலைந்துவிட்டால் அதை ப்ளாக் செய்ய இந்தத் திட்டம் உறுதுணையாக இருக்கும்.
அதேபோல போலி ஐ.எம்.ஈ.ஐ எண்கள் உருவாவதையும் இந்தத் திட்டம் மூலம் தடுக்க முடியும். திருடிய மொபைல் போன்களை பயன்படுத்துவது இதன் மூலம் தடுக்கப்படும்” என்று திட்டத்தின் நன்மைகளை விளக்கிக் கூறியுள்ளது.
உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால், முதலில் காவல் துறையிடம் சென்று எப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து தொலைத்தொடர்புத் துறைக்கு 14422 என்ற எண் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
உங்கள் புகாரைத் தொடர்ந்து, அரசு தரப்பிலிருந்து சில சோதனைகள் செய்யப்படும் . அதன் பின்னர் போன் ப்ளாக் செய்யப்படும். யாராவது உங்கள் மொபைல் போனை, புதிய சிம் கார்டு போட்டுப் பயன்படுத்தினால், அந்த சிம் கார்டு சேவை வழங்கும் நிறுவனம் போலீஸிடம் பயனர் குறித்து தகவலைப் பகிர்ந்து கொள்ளும். இதன் மூலம் மொபைலின் இருப்பிடம் குறித்த தகவல் கண்டறியப்படும்.
காணாமல் போன மொபைல் திரும்பக் கிடைத்துவிடும் பட்சத்தில் பிளாக் செய்யப்பட்டதை நீக்கும் வழிமுறையும் இத்தளத்தில் உள்ளது.
புகார் தெரிவித்த பிறகு புகாரின் நிலை குறித்து (Status) புகார் எண் பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.
இதே சேவையைப் பெற ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
KYM - Know Your Mobile என்ற இச்செயலி மற்றும் இணையதளத்தைப் பயன்படுத்தி தற்போது மகாராஷ்டிரா வாடிக்கையாளர்கள் மட்டும் புகார் தெரிவிக்கலாம்.
மற்ற மாநிலத்தவர்கள் ஐ.எம்.ஈ.ஐ. எண் தொடர்பான விபரங்களை மட்டுமே அறிந்து கொள்ளலாம். விரைவில் நாடுமுழுவதும் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது.
-என்.ராஜேந்திரன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்நாளில்
முன்னால்.
உலக மூங்கில் தினம்
சிலி விடுதலை தினம்(1810)
இந்திய உளவுத்துறை நிறுவனமான ரா அமைப்பு உருவாக்கப்பட்டது(1968)

தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திராவில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மன்னார் வளைகுடாவில், தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழகம், தெற்கு ஆந்திர கரையோரம் கடல் சீற்றத்துடன் காணப்படும்.
இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க, கடலுக்கு செல்ல வேண்டாம் எனக்கூறப்பட்டுள்ளது.

நினைவில் கொள்ளுங்கள்.
செப்டம்பர் .20 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு
22 - இரண்டு & மூன்றாம் நிலை அதிகாரி ஒரு கட்ட தேர்வு (ஐ.பி.பி.எஸ்.)
23 - 27 - எஸ். எஸ். சி., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு
29 - ஐ.பி.பி.எஸ்., ஆபீஸ் அசிஸ்டென்ட் மெயின் தேர்வு
அக்டோபர்
.12,13,மற்றும் 19, 20 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ.,முதல் நிலைத் தேர்வு
நவம்பர் .
17 - என்.டி.ஏ., தேர்வு
30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு
டிசம்பர்
.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு
7,8,மற்றும் 14,15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் முதல் நிலைத்தேர்வு
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
"ஆமா.. வீழ்ச்சிதான்....!"மொபைல் திருட்டு போவது அல்லது அறியாமல் தவறவிடுவதால் பொருள் இழப்பு மட்டுமல்ல தகவல் இழப்பும் மிகப்பெரிய அளவில் நம்மை பாதிக்கிறது.

மத்திய அரசின் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக
மேம்பாட்டு வங்கி நபார்டு.
இங்கு வளர்ச்சி ('டெவலப்மென்ட்' )உதவியாளர் 82+9 (இந்திக்கு ஒதுக்கீடு) என 91 காலியிடங்கள் .