மூத்தக் குடி ...


சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் 47 லட்ச ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது.
 ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கிய அகழாய்வில் இதுவரை பழங்காலக் கோட்டைச் சுவர், உறைகிணறு, பானை, பானை ஓடுகள், மூடிகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.


இந்நிலையில், கீழடியில் செய்யபட்டு வரும் ஆய்வு குறித்து தமிழக தொல்லியல்துறை ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
 அதில் வைகை நதிக்கரை நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிடபட்டுள்ளது.
கீழடியில் கிடைத்த பொருட்களை, அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகதில் செய்யபட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
தமிழ்-பிராமி எழுத்து வடிவத்தின் காலம் கிமு.5 ம் நூற்றாண்டு என அழகன் குளம் ,கொடுமணல் , பொருந்தல் அகழாய்வின் படி கருதபட்டு வந்த நிலையில் கீழடி ஆய்வின்படி இன்னும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது என தெரியவந்துள்ளது.

மேலும் கீழடியில் வாழ்ந்த சங்ககால சமூகம், வேளாண்மையயும் கால்நடை வளர்ப்பையும் முதன்மை தொழிலாக கொண்டிருந்ததாக புனே டெக்கான் கல்லூரியில் எழும்புகளை பகுப்பாய்வு செய்த அறிக்கையின் மூலம் தெரியவந்திருக்கிறது.
கீழடியில் உள்ள கட்டுமான பொருட்களை ஆய்வு செய்ததில் செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது.

 இந்த சுண்ணாம்பு சாந்தில் 97% சுண்ணாம்பு காணப்படுவதால் இன்று வரை நீடித்திருப்பதற்கு இதுவே காரணம் என்று சொல்லபட்டு இருக்கிறது.
கீழடியில் உள்ளூர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தண்ணீர் மற்றும் சமையலுக்கான பானைகளை தயாரித்துள்ளனர். நெசவு செய்யும் தொழிற்கூடம் இருந்ததை கட்டுமானங்கள் ,தொல் பொருட்கள் உறுதிசெய்துள்ளது.
தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ’குவிரன்’ ’ஆதன்’ போன்ற பெயர்களும் முழுமை பெறாத சில எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளும் கிடைத்துள்ளன.
தங்கத்திலான பெண்கள் அணியும் ஏழு தங்க துண்டுகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல் மணிகள், கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள் ஆய்வில் கிடைத்துள்ளது.
இந்த ஆய்வில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650க்கும் மேற்பட்ட் விளையாட்டு பொருட்கள், 35 காதணிகள்,அணிகலன்கள்,தங்கம்,செம்பு இரும்பு போன்ற உலோக தொல்பொருட்கள் கிடைதிருந்தாலும் வழிபாடுகள் தொடர்பான தொல்பொருட்கள் எதுவும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கபெறவில்லை என்று அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறது.

இந்த ஆய்வு அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதின் மூலம் தமிழில் சங்ககாலம் இன்னும் பின்நோக்கி செல்லக்கூடும் என்றும் மிகவும் தொன்மையான நாகரீகம் என்று கருதப்படுகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் 
முன்னால்
  துருவா  செயற்கைகோள் ஏவுகணையை இந்தியா ஏவியது(1993)

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
நினைவில் கொள்ளுங்கள்.


 செப்டம்பர் .
22 - இரண்டு & மூன்றாம் நிலை அதிகாரி ஒரு கட்ட தேர்வு (ஐ.பி.பி.எஸ்.)
 23 - 27 - எஸ். எஸ். சி., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு
29 - ஐ.பி.பி.எஸ்., ஆபீஸ் அசிஸ்டென்ட் மெயின் தேர்வு 


அக்டோபர் 

.12,13,மற்றும் 19, 20 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ.,முதல் நிலைத் தேர்வு 

நவம்பர் .
17 - என்.டி.ஏ., தேர்வு
30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு 


டிசம்பர் 

.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு 
7,8,மற்றும் 14,15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் முதல் நிலைத்தேர்வு

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 பல்கலையில் இந்துத்துவா கூட்டமா?
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் சார்பில் இந்துத்துவா குறித்த கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல கருத்தரங்கத்தை கல்லூரியில் நடத்தக்கூடாது என முன்பே மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளனர்.
இந்நிலையில், பல்கலைக் கழக நிர்வாகம்த்தின் அனுமதி வழங்கியதன் அடிப்படையில், நேற்று கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ சென்றிருந்தார்.
அவர் வருவதை அறிந்த மாணவர்கள் பல்கலைக் கழகத்தின் நுழைவு வாயிலில் நின்று அவரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர்.


பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவர் கூட்டமைப்பு மற்றும் கலாச்சார பிரிவு மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் சுப்ரியோவுக்கு கருப்புக்கொடி காட்டினர்கள்.
மேலும் 'go back Supriyo', “பா.ஜ.க-விற்கு அனுமதி கிடையாது” என்றும் முழக்கமிட்டனர். இதனால், ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலிலேயே அமைச்சர் காத்திருந்தார். போலிஸார் வந்து மாணவர்களை தடுத்து, அமைச்சருக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு வெளியே வந்த பிறகு அவருடைய காரை மாணவர்கள் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் நேரடியாக பல்கலைக்கழகத்துக்கு சென்று அமைச்சரை அங்கிருந்து மீட்டு அவரது காரில் அழைத்துச் சென்றார்.
மேலும் அமைச்சரை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அவர் உத்தரவிட்டார் எனத் தெரிகிறது.


இதுகுறித்து மாணவர் கூட்டமைப்பின் நிர்வாகி கூறுகையில்,
“கல்லூரியில் எல்லா மதத்தினரும் படிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமே சிறந்தது என கொண்டாடும் மாணவர்களின் நிகழ்ச்சிக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி கொடுத்ததே தவறு என முன்பே சுட்டிக்காட்டினோம்.
அதுமட்டுமல்லாமல் அந்த மாணவர்களின் அமைப்பு கல்லூரி வளாகத்திற்குள் ஒற்றுமையாக இருக்கும் மாணவர்கள் மத்தியில் பிளாவை ஏற்படுத்தும் முயற்சிகிறது. 
இந்நிலையில், அதன் நிகழ்ச்சிக்கு பா.ஜ.க சார்பில் ஒருவர் வந்தால் நுழைய அனுமதிக்கமட்டோம். எதிர்ப்பு தெரிவிப்போம்.
திறமையான பேராசிரியர்கள் இருக்கும் போது பா.ஜ.க அமைச்சர் எதற்கு? 
அவர் கருத்தரங்கில் கலந்துக்கொண்டு என்ன பேசுவார் என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. வளாகத்திற்குள் மாணவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவிடமாட்டோம்
என  தெரிவித்தார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 சந்திரயான் லேண்டர்
நிலவைப் பற்றி ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பியது.
 பல்வேறு வட்டப்பாதை நிலைகள் மாற்றப்பட்டு, ஆர்பிட்டரில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றபோது, விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோவுக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
பின்னர், ஆர்பிட்டர் மூலமாக லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டது.
இருப்பினும் லேண்டருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. இருப்பினும், விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பைப் பெறும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு, பகல் பாராமல் இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர். லேண்டருடன் இணைப்பை உருவாக்கும் முயற்சியில் இந்தியாவுக்குத் துணையாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் இறங்கியது.


இதன் ஒரு பகுதியாக, ரேடியோ அதிர்வெண்கள் மூலம் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சியில் நாசா ஈடுபட்டது.
 நாசா கடந்த 2009ம் ஆண்டு அனுப்பிய ஆர்பிட்டர் நாளை விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை கடக்க உள்ளதாகவும், அப்போது அதை புகைப்படம் எடுக்கும் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

“இஸ்ரோவால் அனுப்பி வைக்கப்பட்ட சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய தளத்தை சுற்றியுள்ள பகுதிகளை நாசா பகிர்ந்து கொள்ளும்” என்று LRO திட்ட விஞ்ஞானி நோவா பெட்ரோ கூறியிருந்தார்.
இந்நிலையில், விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது.

 மேலும், ரேடியோ அதிர்வெண்கள் மூலம் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் நாசா கூறியுள்ளது.
 இதுகுறித்து நாசா அனுப்பிய மின்னஞ்சலில், செப்டம்பர் 17ம் தேதி விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தின் மீது எல்.ஆர்.ஓ ஆர்பிட்டர் சுற்றி படங்களை எடுத்தது, இருப்பினும் லேண்டரின் இடம் சரியாக தெரியவில்லை.

ஆர்பிட்டர் அப்பகுதியை கடந்த போது அப்பகுதியில் பெருமளவில் இருள் சூழ்ந்திருந்ததே இதற்கு காரணம் என்கிறது நாசா.
அக்டோபர் 14ம் தேதி எல்.ஆர்.ஓ அப்பகுதியின் மீது மீண்டும் பறக்கும், அப்போது வெளிச்சம் மிகவும் சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
  பறவைகள் எண்ணிக்கை கடும்  வீழ்ச்சி!
ஆசியா மற்றும் அமெரிக்காவில் பறவைகளின் இனதொகையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இரண்டு முக்கிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா மற்றும் கனடாவில் 1970 காலகட்டத்தை ஒப்பிடும்போது தற்போது வட அமெரிக்க வகை பறவைகளின் எண்ணிக்கையில் 3 பில்லியன் அதாவது ஏறக்குறைய 29 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக முதலாவது ஆய்வு தெரிவித்துள்ளது.


ஜாவா மற்றும் இந்தோனீசியாவில் ஆசிய பாடும்பறவைகள் எண்ணிக்கை குறைபாடு தொடர்பான பிரச்சனையை அழுத்தமாக சுட்டிக்காட்டிய இரண்டாவது ஆய்வு, தற்போது அதிக அளவில் பறவைகள் அதன் இயல்பான சூழலில் வாழவிடாமல் கூண்டில் அடைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் ஓர் முக்கிய எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
உயிரியல் பாதுகாப்பு மற்றும் ஜர்னல்ஸ் சயின்ஸ் ஆகிய முக்கிய அறிவியல் சார்ந்த பத்திரிகைகளில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

விளைநிலங்கள், சமவெளிகள், பாலைவனங்கள் என வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்துவந்த பறவைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அனைத்து பகுதிகளும் பறவைகளின் இயலப்பான சூழலை குலைக்கும் வண்ணம் மனிதர்களால் வாழ இயலாத இடங்களாக மாற்றப்பட்டு வருவதாகவும், அதனால் இந்த இடங்களை அந்நிய பகுதிகளாக, கிரகங்களாக இந்தப் பறவைகள் கருதும் நிலை ஏற்பட்டுள்ளதகாவும் இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இயற்கையின் கூக்குரல் .
 "2017-ம் ஆண்டு மத்திய CAG அறிக்கைப் படி, யானைகளின் வாழ்விடத்தை ஆக்கிரமித்து பள்ளியையும் ஆசிரமத்தையும் கட்டியுள்ள ஜக்கி அடுத்தகட்டமாக
காவிரி கூக்குரல் மூலம் கிடைக் கும்
25லட்ச ரூபாய் பைக்

10000 கோடிகள் பணத்தை வைத்து ஒரு ஆயுர்வேத கல்லூரி கட்டுகிறார்.

அதற்கு தமிழக அரசு வனத்துறை நிலத்தை தரத் தயாராக உள்ளது.


அதை பழங்குடி மக்கள் காட்டில் வீடு கட்டினாலே எதிர்க்கும் WWF அமைப்பு ஆதரிக்கப் போகிறது.


இதற்காகத்தான் காவேரியை கையில் எடுத்த ஏமாற்றி காவேரியின் கூக்குரல் என்கிற ஒரே கல்லில் கொத்துக் கொத்தாக மாங்காய் அடிக்கிறார் ஜக்கி'' என்கிறார்கள் கோவை நகர மக்கள்.

காவேரியின் கூக்குரல் மூலம் தனது மோசடி சித்து விளையாட்டை துவக்கியிருக்கிறார் ஜக்கி.

ஆனால் இயற்கையின் கூக்குரல் வெள்ளியங்கிரி மலையில் இருந்து கேட்பது அதிகமாகிப்போகிறது.அதை உணரத்தான் ஆட்சியாளர்களுக்கு உணர்ச்சி இல்லை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
  

 “திமுக போராட்டத்தைக் கண்டு மத்திய அரசு பயந்துவிட்டது. அதனால்தான் ஸ்டாலினை அழைத்து இந்தித் திணிப்பு இருக்காது என்று உறுதியளித்துள்ளது. அமித் ஷாவே ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்” என்று திமுக ஆதரவாளர்கள் கவுண்ட்டர் கொடுக்கிறார்கள்.

“கவர்னர் கூப்பிட்டு மிரட்டிய மிரட்டலுக்கு திமுக பயந்துருச்சு. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அதான் ஒத்தி வச்சுருச்சு” திமுக எதிர்ப்பாளர்கள் பரப்புகிறார்கள். 

கடைசியாக 1986ல் இந்தி திணிப்பு முயற்சி நடைபெற்றது. அப்போது எம்ஜியார் உயிரோடு இருந்தார். திமுக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியது. 
அந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட கலைஞரையும் திமுகவினரையும் எம்ஜியார் கடுமையாக அலைக்கழித்தார்.
மத்திய அரசு இந்தித் திணிப்பு முயற்சியை கைவிட்டாலும், எம்ஜியார் கலைஞரை பழிவாங்கும் நோக்கில் வழக்கை நடத்தி, அவரைத் தண்டனைக் கைதியாக்கினார். 
தண்டனை அறிவிக்கப்பட்ட மறுநாளே அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.


அதன்பிறகு இந்தித் திணிப்பு முயற்சி இல்லாமல் இருந்தது. 
அதேசமயம் இந்திக்காரர்களை தமிழகத்தில் திணிக்கும் முயற்சி அதிதீவிரமாக தொடர்ந்து வருகிறது என்பது கண்கூடான உண்மை. 
இந்நிலையில்தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தி நாளை முன்னிட்டு, இந்தியாவின் பொது அடையாளமாக இந்தி இருந்தால் நல்லது என்று ட்விட்டரில் கருத்துத் தெரிவித்தார்.
 அவருடைய இந்தக் கருத்து, தமிழகத்தில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது.

தமிழகத்தில் ஸ்டாலின் திமுக சார்பாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து அறிவித்தது.
இந்தி பேசா மாநிலங்ககளில் மொழி உணர்வைத்தூண்டியது மட்டுமல்ல இந்தி திணிப்பால் சதாய் மொழியை பறி கொடுத்த ராஜஸ்தான்,போஜ்புரி,மைதிலி,பீகாரி மொழி மக்களும் இந்திக்கு உணர்ச்சி வயப்பட்டனர். 
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 35 மாநிலங்களில் 26 மாநிலங்கள் இந்தியை எதிர்க்கும் உண்மையான நிலை வெளிப்படத் தொடங்கியது. 
இந்தியால் சொந்த மொழியை இழந்த மாநிலங்களின் கதியும் தெரிய வந்தது. 
ராஜஸ்தான் மாநில அரசு, தங்களுக்கு சொந்தமான ராஜஸ்தானி மொழியை மத்திய அலுவல் மொழியாக சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் நிலை உருவானது.
இவையெல்லாம்  மத்திய உளவுத்துறை மூலம் பாஜக அரசுக்கு சென்றது.குழவிக்கூட்டில் கைவைத்தநிலையாகிவிடும் ஏற்கனவே பொருளாதாரம் தரை மட்டமான நிலையில் தவிக்கும் மக்கள் மொழி போராட்டம் மூலம் பாஜக அரசுக்கு எதிராக ஒன்றுபட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.இதில் பாஜகவினரும் இணையும் ஆபத்து உள்ளது என அரசுக்கு எச்சரிக்கை விட்டபப்ட்டது.
 
 முதல் எதிர்ப்பை தமிழகத்தில் வழக்கம்போல திமுகவே  பதிவுசெய்தது.
 மராத்தி, வங்காளி, ஒரியா, பிகாரி, கன்னடா என்று வரிசையாக இந்தி எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியது.
 இந்தி குறித்த தனது கருத்தை அமித் ஷா திரும்பப்பெற வேண்டும். 
இல்லையென்றால் செப்டம்பர் 20 ஆம் தேதி திமுக சார்பில் கடுமையான போராட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மாநில ஆளுங்கட்சியான அதிமுகவும் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என்று அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் திமுகவின் போராட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பது உறுதியாகிவிட்டது.

ஆனால், அதிமுகவுக்கு இருதலைக் கொள்ளி எறும்பான நிலை. ஆம், திமுக போராட்டத்தை தடுக்க முடியாது. திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது அதிமுகவுக்கு எதிராகவே திரும்பும் அபாயம் இருக்கிறது. திமுக போராட்டம் வெற்றிபெற்றால் பாஜகவின் வெறுப்பை சம்பாதிக்க நேரும். 
செய்வதறியாது திணறியது அதிமுக.

இதையடுத்தே ஆளுநர் மாளிகையிலிருந்த மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
 இந்தச் சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்று வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும், இந்தியை திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று திமுக தலைவரிடம் கவர்னர் உறுதியளித்ததாகவும், அதனால் இந்திக்கு எதிரான திமுகவின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் ஸ்டாலின் அறிவித்தார்.
 
அதன்பிறகு ஒரு மணி நேரம் கழித்து அமித் ஷா தனது இந்தி குறித்த பேச்சுக்கு விளக்கம் அளித்தார். 
“நானே ஒரு குஜராத்திதான். இந்தியை திணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இரண்டாவது மொழியாகவேனும் இந்தியை கற்றால் நல்லது என்ற அர்த்தத்தில்தான் பேசினேன். எனது கூற்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டது” என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால், எல்லா வகையிலும் திமுக போராட்ட அறிவிப்பால்தான் அமித் ஷா விளக்கம் அளிக்க நேர்ந்தது என்ற பிம்பத்தை உடைக்க திமுக எதிர்ப்பாளர்களுக்கு பல நிகழ்வுகள் ஒரே நாளில் உருவாக்கப்பட்டது. 
இந்தியை திணிக்க முடியாது என்றும் ஆனால் இந்தியாவுக்கு பொது மொழி இருந்தால் வளர்ச்சிக்கு நல்லது என்றும் ரஜினி பேசினார். 
திமுக தலைவர் ஸ்டாலினை கவர்னர் மாளிகை அழைத்து போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
 இதையெல்லாம் ஆளாளுக்கு தங்களுக்குத் தோன்றியபடி மீம்ஸ்களையும், கற்பனை செய்திகளையும் உருவாக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டனர்.

உண்மையில் இன்றைய காலகட்டத்தில் திமுக இந்திக்கு எதிராக போராட்டம் நடத்தினால், வழக்கொழிந்த இந்திய மொழிகளுக்கு சொந்தக்காரர்கள் தாய்மொழி உணர்வைப் பெற்றுவிடுவார்கள். 
இந்தியா முழுமையும் இந்தப் போராட்டம் கவனத்தை பெற்றுவிடும். 
இந்தியா மட்டுமின்றி உலக அளவில் திமுகவின் போராட்ட உணர்வு பேசு பொருளாக மாறிவிடும் என்ற அச்சம் மத்திய அரசுக்கு உருவாகிவிட்டது.
 இதைத் தவிர்க்கவே பாஜக இந்த ஏற்பாடுகளை செய்தது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
 
கவர்னர் மாளிகையின் அச்சுறுத்தலுக்கு அஞ்சியே போராட்டத்தை திமுக வாபஸ் பெற்றதாக கூறுகிறவர்கள் ஒரு விஷயத்தை மறைத்துவிடுகிறார்கள். 
ஆளுநரைச் சந்தித்து வெளியே வந்த ஸ்டாலின் போராட்டத்தைக் ஒத்திவைப்பதாக அறிவிக்கிறார். 
அதன்பிறகு ஒரு மணிநேரம் கழித்து ஏன் அமித் ஷா தனது விளக்கத்தை வெளியிட வேண்டும்?
 என்பதற்கு உங்களிடம் என்ன பதில் உள்ளது?.
  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?