அரைஞாண் கயிரைக்கூட ...

கழற்றிய தேர்வில் ஆள்மாறாட்டம் எப்படி?

'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில், தேசிய தேர்வு முகமை தான் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், தப்பிக்க முயற்சிக்கின்றனர்.

சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்தவர், வெங்கடேசன். இவர், சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார்.
இவரது மகன், உதித் சூர்யா. இரண்டு ஆண்டுகளாக, நீட் தேர்வு எழுதியும், தேர்ச்சி அடையவில்லை.
இந்த ஆண்டு, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தேர்வு எழுதினார். 385 மதிப்பெண்களுடன், தேனி அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றார்.
இதற்கிடையே, மாணவர் உதித் சூர்யா முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரில், கல்லுாரி நிர்வாகம், போலீசில் புகார் அளித்தது.

புகாரை தொடர்ந்து, மாணவரின் குடும்பம் தலைமறைவானது.போலீஸ் விசாரணையில், உதித் சூர்யாவிற்கு பதிலாக,வேறொரு மாணவர்,'நீட்' தேர்வு எழுதியதும், கலந்தாய்வில் பங்கேற்றதும் தெரிய வந்தது.
அவரை எப்படி அதிகாரிகள் அனுமதித்தனர் என்ற, கேள்வி எழுந்துள்ளது.
இந் நிலையில், இவ்விவகாரத்தில், அத்தேர்வை நடத்தும், மத்திய அரசின், தேசிய தேர்வு முகமை தான் பதில் அளிக்க வேண்டும் என கூறி, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், தப்பிக்க நினைக்கின்றனர்.

நாடு முழுவதும், இந்த ஆண்டு, நீட் தேர்வை, 14 லட்சத்து, 10 ஆயிரத்து, 755 பேர் எழுதினர். இதில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை, தேசிய தேர்வு முகமை கண்காணிக்க தவறியுள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 5,000க்கும் குறைவான, எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., இடங்களே உள்ளன.
இதற்கு, 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே, கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்.

கவுன்சிலிங்கின் போது, இருப்பிட சான்று, பெற்றோரின் பிறப்பு சான்றிதழ் உட்பட, பல சான்றிதழ்கள், மாணவரிடமிருந்து பெறப்பட்டன.
அப்படி இருக்கையில், உதித் சூர்யா சான்றிதழ்களை, கவுன்சிலிங் போதே, ஆய்வு செய்திருந்தால், இந்த முறைகேடு தடுக்கப்பட்டு இருக்கும்.
மேலும், ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் தான், அந்தந்த கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனரா என்பதையும், மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கண்காணிக்க தவறியுள்ளனர்.

இப்படி கோட்டை விட்ட, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், தற்போது, 'தேசிய தேர்வு முகமை தான் பதிலளிக்க வேண்டும்;
 எங்கள் தரப்பில், எந்த தவறும் நடக்கவில்லை' என, பேசி வருவது நியாயமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே, முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் மற்றும் பெற்றோரின் வங்கி கணக்கு மற்றும் பல முக்கிய ஆவணங்களை, போலீசார் சேகரித்துஉள்ளனர்.

இந்த மாணவனை பிடித்தால் தான், உடந்தையாக இருந்தவர்கள், தேர்வு எழுதிய மாணவர் யார் என்பது தெரிய வரும் என்பதால், போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
'நீட்' தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த காலங்களில், சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியம், 'நீட்' தேர்வை நடத்தியது.
அப்போது, அந்தந்த மாநிலத்தில் உள்ள, இயக்குனர்கள், நீட் தேர்வு விவகாரத்தில் பதிலளிக்க கூடிய அதிகாரிகளாக இருந்தனர்.
தற்போது, தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வை நடத்துகிறது.
இதற்கான தலைமை அலுவலகம், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது. ஆனால், மாநிலங்களுக்கான அதிகாரமிக்க அதிகாரிகள் யார் என்பது, தெரியாத நிலை உள்ளது. தற்போது ஆள்மாறாட்டம் செய்த மாணவர்கள் அனைவரும் மும்பையில் உள்ள பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்கள்.அங்கிருந்தே கிட்டத்தட்ட 60 லட்சங்கள் வரை கொடுத்து இப்படி பொய்யாக வெற்றி பெற்றுள்ளனர்.எனவே தேசிய அளவில் இந்த முறைகேடுக்கு பலர் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.
எனவே, அந்தந்த மாநிலங்களும், பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வெழுதவந்தவர்கள் அரைஞாண் கயிரைக்கூட அரித்தெறிந்தார்கள்,துப்பட்டா,கம்மல்களை கூட கழற்றினாள்.
அப்படியிருந்தும் ஆளே மாறிப்போய் தேர்வெழுதினார்கள் என்றால் மேலிட ஆதரவின்றி நடக்க வாய்ய்பில்லை
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இடைத்தேர்தல் தேதிகள் அறிவிப்பு.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தல் ,இடைத்தேர்தல்கள்  உட்பட  நாடு முழுவதும் 64 தொகுதிகளுக்கு தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.
இவற்றில் தமிழ்நாட்டில் நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளும் அடங்கும்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வசந்தகுமார் அதை விட்டு விலகி கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

 விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமனற உறுப்பினராக இருந்த ராதாமணி மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்தத் தொகுதியும் காலியானது.
 எனவே இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
 இடைத்தேர்தல்  அட்டவணை
வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்: செப்டம்பர் 23
வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாள் : செப்டம்பர் 30
வேட்புமனுக்கள் பரிசீலனை : அக்டோபர் 1
வேட்புமனுக்களை திரும்பப் பெற இறுதி நாள் : அக்டோபர் 3
வேட்புமனு பரிசீலனை : அக்டோபர் 5
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அக்டோபர் 5
வாக்குப் பதிவு: அக்டோபர் 21
வாக்கு எண்ணிக்கை: அக்டோபர் 24


"விக்கிரவாண்டி தொகுதியில் தி.முக. போட்டியிடுகிறது.
நாங்குனேரி தொகுதி  காங்கிரஸ் வென்ற தொகுதி என்பதால் அதை திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரசே போட்டியிடும்"
 என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு விண்ணப்பங்களை வழங்கத்தயாராகியுள்ளன .

கர்நாடகா பாஜக ஆட்சிக்கு  இடைதேர்தலால் ஆபத்து.
 கர்நாடகாவில் 15 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அந்த தொகுதிகளில் அக்டோபர், 21ம் தேதி, இடைத்தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 இதையடுத்து எடியூரப்பாவும் , பாஜகவும்  பீதியடைந்துள்ளனர்.
இடைத்தேர்தலில், பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டால், ஆட்சி கவிழ்வது  உறுதி.

இதனால், இடைத்தேர்தலுக்கு, நீதிமன்றத்தில் தடை வாங்க, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் மூலம் பாஜக முயன்று வருகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் 
முன்னால்
தானியங்கி(ஆட்டோமொபைல்)இல்லா தினம்
 அமெரிக்காவில் தானியங்கி  முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது(1893)
மாலி விடுதலை தினம்(1960)
இந்திய-பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது(1965)

 100 நாள் சீர்திருத்தம்
1898 - சீனாவின் குவாங்சு பேரரசரால் தொடங்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கை களை, 104ஆவது நாளில், ஆட்சியைக் கவிழ்த்து, பேர ரசரை வீட்டுச் சிறையில டைத்து, பேரரசி டோவாகர் சிக்சி முடிவுக்குக் கொண்டு வந்தார்.
1839-42, 1856-60இல் நடைபெற்ற அபினிப் போர் களில் அடைந்த தோல்வி யைத் தொடர்ந்து, புதிய சூழ் நிலைகளுக்கு மேம்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையைச் சீனா உணர்ந்தது.

புதியவகை(நவீன) ஆயுதங்கள், கப்பல்கள் ஆகிய வற்றை வாங்கியதுடன், புதியவகை ஆயுதங்களுக் கான தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டாலும், வீரர் களுக்கு மேற்கத்திய முறைப் பயிற்சிகளோ, நிர்வா கத்தில் சீர்திருத்தங்களோ மேற்கொள்ளப்படவில்லை.

டோக்குகாவா ஷோகன்களின் ஆட்சியில் பிற நாடுகளு டனான வணிகம் உள்ளிட்ட உறவுகளைத் துண்டித்துக் கொண்டு 220 ஆண்டுகள் ஒதுங்கியிருந்த ஜப்பான், மெய்ஜி மீட்பு என்று குறிப்பிடப்படும், மெய்ஜி பேரர சரின் புதிய ஆட்சி உருவானதைத் தொடர்ந்து சீர்திருத் தங்களைத் தொடங்கியது.

மேற்கத்திய பெரும் சக்தி களுக்கிணையாக வளரும் நோக்கில், ஜப்பானின் பிரதி நிதிகளும், மாணவர்களும் மேற்கத்திய கலை, அறிவி யலைக் கற்றுவருவதற்காக உலகம் முழுவதும் அனுப் பப்பட்டனர்.

விவசாயம் சார்ந்த நாடாக இருந்த ஜப் பானை, இந்த நடவடிக்கைகள் புதிய தொழில்வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றியிருந்தன.
 இச்சூழலில், கொரியா வின்மீதான ஆதிக்கம்குறித்து 1894-95இல் ஏற்பட்ட (முதல்)சீன-ஜப்பானியப் போரில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தது சீனா.

சீனாவைவிடச் சிறி யதான ஜப்பானை, வெறும் திரை செலுத்தும் நாடாகவே பார்த்துவந்திருந்த சீனாவுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி யை அளித்ததுடன், வரலாறு முழுவதும் சீனா பெற்றி ருந்த இப்பகுதியின் சக்திவாய்ந்த நாடு என்ற இடத்தை ஜப்பான் கைப்பற்றியதும், சிங் அரசமரபின் கவு ரவத்திற்கு இழுக்காகவும் அமைந்தது. இதைத் தொடர்ந்து, இளைஞராகவும், புதியவற்றை ஏற்பவராக வுமிருந்த குவாங்சு பேரரசர், காங் யோவே என்ற அறி ஞரின் ஆலோசனைகளை ஏற்று, ஏராளமான சீர்திருத் தங்களைத் தொடங்கினார்.

 மேற்கத்திய அறிவியலை யும், கணிதத்தையும் பயிற்றுவிக்க பெக்கிங்(பீஜிங்) பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது, ராணுவத்திற்கு மேற்கத்தியமுறைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டது, முழு மையான முடியாட்சி அரசியல் சட்ட முடியாட்சியாக மாற்றப்பட்டது, அரச குடும்பத்தினர் மேற்கத்திய கல்வி கற்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டது முதலான ஏராளமான சீர்திருத்தங்கள், சீனாவை மிகவேகமாக ஒரு தொழில்துறை நாடாக முன்னேற்றத் தொடங்கியிருந்தன.
பழமைவாதிகள் பண்பாடு பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, பழமை வாதியான பேரரசியைக்கொண்டே ஆட்சியைக் கவிழ்த்து பேரரசரையும் எஞ்சியிருந்த வாழ்நாள் முழு வதும் கைதியாக்கினர்.

104 நாட்களில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதால் இது 100 நாள் சீர்திருத்தம் என்று குறிப்பிடப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
நினைவில் கொள்ளுங்கள்.


 செப்டம்பர் .
22 - இரண்டு & மூன்றாம் நிலை அதிகாரி ஒரு கட்ட தேர்வு (ஐ.பி.பி.எஸ்.)
 23 - 27 - எஸ். எஸ். சி., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு
29 - ஐ.பி.பி.எஸ்., ஆபீஸ் அசிஸ்டென்ட் மெயின் தேர்வு 


அக்டோபர் 

.12,13,மற்றும் 19, 20 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ.,முதல் நிலைத் தேர்வு 

நவம்பர் .
17 - என்.டி.ஏ., தேர்வு
30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு 


டிசம்பர் 

.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு 
7,8,மற்றும் 14,15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் முதல் நிலைத்தேர்வு

நபார்ட் வங்கியில் வேலை.


 மத்திய அரசின் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி நபார்டு. இங்கு 'டெவலப்மென்ட்' உதவியாளர் (82), 'டெவலப்மென்ட்' உதவியாளர்/இந்தி (9) என 91 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 18 - 35. வயது வரம்பு தளர்ச்சி உண்டு.

தகுதி: * ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, 69 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
* இந்தி பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்தி அல்லது ஆங்கில பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.32,000

கடைசி நாள்: 2.10.2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (ஆன் லைன்), நேர்முகத் தேர்வு

விபரங்களுக்கு: https://www.nabard.org
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------
 --------------------------------------------------------------------------------------------------------------------------------
மழை வருது..,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க இன்னும் சில நாட்கள்  மட்டுமே உள்ள  நிலையில் தமிழகத்தில் இன்றும்,நாளையும் பல்வேறு இடங்களில் கனத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம், மற்றும் சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.

 சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் கானப்படும்.
 சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளது.
அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும் 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
 காணாமல் போன நான்காயிரம் பேர்கள்.?
ஜம்மு - காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்ட பின்னணியில், அங்கு4 ஆயிரம் பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும், இதுவரை 252 ஆட்கொணர்வு மனுக்கள் (Habeas corpus) தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய பாஜக அரசானது, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி, ஜம்மு - காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தைப் பறித்ததுடன், சட்டப்பிரிவு 370 அடிப்படையிலான சிறப்பு உரிமைகளை ரத்து செய்தது.
முன்னதாக, மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரை இறங்கிய மத்திய அரசு,முன்னாள் முதல்வர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களையும் வீட்டுச்சிறை வைத்தது. தொலைத் தொடர்பு வசதிகளைத் துண்டித்தது.
இதற்கு எதிராக, காஷ்மீரிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களில் சுமார் 4 ஆயிரம் பேரைக் கைது செய்தது. இவர்களைஅடைப்பதற்கு ஜம்மு - காஷ்மீர் சிறைகளில் இடமில்லாத நிலையில், நூற்றுக் கணக்கானவர்களை உத்தரப்பிரதேச மாநிலச் சிறைகளுக்கு கொண்டு சென்றது.
எனினும், கைது செய்யப்பட்டவர்களின் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.


அவர்கள் எந்தச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; கைதானவர்களின் தற்போதைய நிலைமை என்ன?என்பன போன்ற தகவல்கள் உறவினர் களுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜம்மு - காஷ்மீர் மாநிலச் செயலாளர் முகம்மது யூசுப் தாரிகாமி ஆகியோரைப் பற்றிய தகவல்கள் கூட, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்களுக்குப் பிறகே தெரியவந்தது.
இதில் பரூக் அப்துல்லா, எந்த கேள்வியும் இல்லாமல் ஒருவரை 2 ஆண்டுகள் வரை சிறையில் வைத்திருப்பதற்கு வகைசெய்யும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.
இவ்வாறு ஜம்மு - காஷ்மீர் பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 290 பேர்முதல் 4 ஆயிரம் பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஒரு கணக்கு வெளியானது.

இந்நிலையில், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட நாளிலிருந்து செப்டம்பர் 19 வரை, காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருமாறு, ஸ்ரீநகரில் உள்ள ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில், 252 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குப் பிறகு, நாளொன்றுக்கு 6 என்ற மனுக்கள் விகிதம் இந்த மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நூற்றுக்கணக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட் கொணர்வு மனுக்களை விசாரிக்கும் பணியில், ஸ்ரீநகர் நீதிமன்றம் தற்போது தீவிரக் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது.

இதுவரை 85 மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளன.
150 மனுக்கள் சேர்க்கைக் கட்டத்தில் உள்ளன.20 வழக்குகளில் இன்னும் முடிவெடுக் கப்படவில்லை.
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?