தேர்தலில் டிரம்புக்கு வாக்கு கேட்ட இவரா சாதனையாளர் ?



இரண்டு நாட்களாக பெரும்பாலான நடுநிலை (?)ஊடகங்களில் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி புகழ் பாடும் செய்திகளும், படங்க ளும் அவரது சுட்டுரைகளுமாக அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.
அவை யாவும் மோடி ஏதோ மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி விட்டதாக தூக்கிப் பிடித்து செய்திகளை வெளியிட்டுள்ளன.
 ஹூஸ்டன் நகரில் அவரது நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும் கலந்து கொண்டு தன் பங்குக்கு மோடி புகழ் பாடியுள்ளார்.
அப்போது அவர் கடந்த பத்தாண்டு களில் 30 கோடி மக்களை வறுமையிலிருந்து இந்தியா மீட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
டிரம்ப் கூறியுள்ள பத்து ஆண்டுகள் என்பது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் சுமார் ஐந்து ஆண்டு கால ஆட்சியையும் சேர்த்து குறிப்பிடுவதாகத்தானே உள்ளது.
ஆனால், ஒரே ஒரு பொருத்தம் இரண்டு ஆட்சிகளுமே உலகமயம், தனியார்மயம்- தாராள மயக் கொள்கைகளை விடாப்பிடியாக அமல் படுத்தியவை.
ஆனால் மோடி மிக வேகம். வறுமையை ஒழிப்பதில் மோடி தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அப்படி ஒன்றும் சாதனை எதுவும் நிகழ்த்திடவில்லை.
ஏனெனில் அவர் 15 ஆண்டு காலம் முதல்வராக இருந்த குஜராத் மாநிலத்திலேயே வறுமையை ஒழிப்பது நடைபெறவில்லை. 2013 செப்டம்பர் 16 தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை யின்படி குஜராத் மாநிலத்தில் வறுமைக்கோட்டு க்கு கீழே உள்ளவர்கள் 16.63 சதவீதமாகும்.

மோடி ஹூஸ்டன் நிகழ்ச்சியில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் அனை வரும் சுகமா? என நலம் விசாரித்திருக்கிறார் என்று பெருமை பாடின ஊடகங்கள்.
அது மட்டுமின்றி, ஹூஸ்டன் விமான நிலையத்தில் மோடியை வரவேற்க அமெரிக்க பிரதிநிதி ஒருவர் கொடுத்த பூங்கொத்திலிருந்து கீழே விழுந்த பூவை அவரே தான் எவ்வளவு பெரிய மனிதர் என்பதை யோசிக்காமல் குனிந்து எடுத்தார்.
மிகவும் எளிமையானவர்.
தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் தூதுவர் என மோடியின்  புகழ் பாடின.

கீழே விழுந்த பூவை எடுத்ததற்கே இத்தனை புகழ் பாடுகிறார்கள்.ரஜினி தனது கால் சட்டை மீது விழுந்த தூசியை தானே தட்டி விட்டார்.மிக எளிமையான என்று எழுதியவை இதே நடுநிலை நக்கிகள்தான்.
 ஒரு வன்முறை யின் போதோ, விபத்தின் போதோ அடிபட்ட ஓர் உயிரைக் காப்பாற்றியிருந்தால் எவ்வாறெல்லாம் புகழ்ந்திருப்பார்கள்?

ஆனால்  பூவை நசுக்கி விடாத,பட்டம் பூச்சிகளை பறக்கவிட்ட மென்மையான உள்ளத்துக்கு சொந் தக்காரர் என்று கூறப்படும் மோடி 2002ஆம்ஆண்டு அவரது ஆட்சியில் நடந்த வன்முறை தாக்குத லின்போது நடவடிக்கை எடுக்காததால் எத்தனை ஆயிரம் சிறுபான்மை இன மக்களின் உயிரை பறிப்பதற்கு காரணமாக இருந்தார் என்பது உலகறியும்.

 அதனால்தான்,  அந்தக் காலத்தில் பிரதம ராக இருந்த அவரது கட்சிக்காரரான வாஜ்பாய், நான் எந்த முகத்தோடு வெளிநாடு செல்வேன் என்று மோடியை விமர்சனம் செய்தார்.

அதையடுத்தே அமெரிக்கா செல்ல மோடிக்கு அந்நாடு விசா வழங்க மறுத்துவிட்டது.

அதை தற்போது இந்த நடுநிலைகளுக்கு நினைவு கூற வேண்டியுள்ளது.

2002 வன்முறை பற்றி  மோடியிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, ஒரு நாய் காரில் அடிபட்டால் என்ன செய்வோ மோ அப்படித்தான் நடந்து கொண்டதாக கூறிய அப்படிப்பட்ட மென்மையான உள்ளம் கொண்டவர்தான் பட்டாம் பூச்சி,கீழே விழுந்த மலரை தானே குனிந்து எடுத்த தியாகி,மனிதப்புனிதர் திருவாளர் சங்கி மோடி.


 மோடி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள, ஹூஸ்டன் நகரில், 50 ஆயிரம் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கலந்துகொண்ட ‘ஹவுதி மோடி’ நிகழ்ச்சியிலும் மோடி பங்கேற்றார்.
 சுமார் 55 நிமிடங்கள் இந்தியில் உரையாற்றினார்.
இதன்மூலம், மோடி வரலாற்றுச் சாதனை புரிந்துவிட்டார் என்று இந்திய ஊடகங்கள் இப்போது வரை ஊதி வருகின்றன.
ஆனால், ‘ஹவுதி மோடி’ என்ற ‘மோடி நலமா?’ நிகழ்ச்சிக்கு எதிராக ‘அடியோஸ் மோடி’என்ற இயக்கம், அதே அமெரிக்காவாழ் இந்தியர்கள் மத்தியில் எழுந்ததை சாமர்த்தியமாக மறைத்து விட்டன.
மோடி வரும்போதெல்லாம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ‘கோ பேக் மோடி-Go Back Modi’ என்ற முழக்கம் எழுப்பப்படும்.

 அதைப் போல, அமெரிக்காவில் எழுப்பப் பட்ட ‘போய்வாருங்கள் மோடி’தான், ‘அடியோஸ் மோடி ’(#adios_modi) என்பதாகும். மோடி, அமெரிக்காவுக்கு வருவதற்கு முன்னதாகவே, ‘போய் வாருங்கள் மோடி’ என்ற முழக்கம் அமெரிக்க வாழ் இந்தியர்களால் டிவிட்டரில் டிரெண்ட் ஆக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, ‘ஹவுதி மோடி’ நிகழ்ச்சி நடைபெற்ற ஏஆர்ஜி கால் பந்தாட்ட மைதான அரங்கிற்கு வெளியே திரண்ட, நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள், ‘அடியோஸ் மோடி’ என்று முழங்கியுள்ளனர். ‘இந்தியாவின் பயங்கரவாத முகம் மோடி’ என்று அட்டைகளையும் ஏந்தியுள்ளனர்.

‘இந்துத்துவம்’ என்ற கொள்கையால், பல்வேறு வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்திய இந்தியர்தான் மோடி என்றும், ‘உண்மையான இந்து இந்துத்துவவாதியாக இருக்க மாட்டார்’ என்றும் ‘அடியோஸ் மோடி’ போராட்டக்குழுவினர் முழக்கங்களை எழுப்பியுள்ளர்.
 தற்போதும் இந்த முழக்கங்களை அமெரிக்காவில் ஒலித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதை இங்குள்ள ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து விட்டன.

பல்வேறு இடங்களில் இருந்து அதிமுக பாணியில் அழித்து வரப்பட்டு குவிக்கப்பட்டவர்கள் கூட்டத்தை பற்றியே சிலாகித்து செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஊடகப்பெண்களை அசிங்கமாக்கிய நடிகர்  சேகர் "நான்குநாட்களில் பல நிகழ்சிகளை சிறப்பாக்கிய மோடிதான் சிறந்த தலைவர்.அவரை கேலி பேசியவர்களுக்கு என்ன தகுதி என "சுட்டியுள்ளார்,

நமது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூடத்தான் பத்துநாட்கள் அமேரிக்கா,லண்டன்,துபாய்னு சுற்றுலா சென்று தமிழ்நாட்டுக்கு அந்நிய முதலீடுகளை அள்ளிக்கொண்டு வந்துள்ளார்.அவரை விட மோடியை சிறந்த தலைவர்னு சேகர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் பிரதமர் நாற்காலியில் இருப்பவர் நாம்.அமெரிக்காவுக்கு இந்திய மக்கள் சார்பில் அவர்கள் வரிப்பணத்தில் அமேரிக்கா வந்துள்ளோம் என்பதையெல்லாம் மறந்து
"டிரம்ப் நல்லவர்,வல்லவர் அவருக்கே வாக்களித்து தேர்தெடுங்கள்"
 என்று அமெரிக்காவில் அங்குள்ள இந்தியர்களிடம் தேர்தல் பரப்புரை செய்துள்ளார்.

இது எவ்வளவு பெரிய தவறு.
  ஒரு நாட்டின் பிரதமர் அடுத்தநாட்டிற்கு அரசுப்பயணம் வந்துள்ள நிலையில் செய்கிற வேலையா இது.
அரசியல் நாகரிகம் வேண்டாமா?
அல்லது டிரம்பை எதிர்த்து நிற்கிறவர் இந்தியர் என்பதை கவனத்தில் கொள்ளாமலா , இப்படி தேவையற்ற பரப்புரை செய்துள்ளார் மோடி?
இல்லை.
தெரிந்த பின்னர்தான் இப்படி தேர்தலில் டிரம்புக்கு வாக்கு கேட்டுள்ளார்.
எதிர்த்து நிற்பவர் இந்தியர்தான்.ஆனால் தமிழ்நாட்டை பிறப்பிடமாகக்கொண்டவர்.மோடியை பொறுத்தவரை இந்தியாவும் தமிழ்நாடும் எதிரி நாடுகள்  என்ற நினைப்புதான் போலும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் 
முன்னால்
பாஸ்கோ நூனியெத் தே பால்போவா பசிபிக் பெருங்கடலை வலம்வந்த முதல் ஐரோப்பியர் (1513)
தமிழ் நாடக எழுத்தாளர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம்(1899)
அல்ஜீரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது(1962)

கீழடி சொல்லும் சேதி
தமிழன் எந்த மதங்களையும் கடவுள்களையும் தூக்கி சுமக்கவில்லை..
 2600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரீக வாழ்வியலுக்கு சொந்தகாரன் கட்டிடக்கலையிலும் சிறந்து விளங்கியதும் தெரிகிறது .. தமிழன் வரலாறு மிக தொன்மைவாய்ந்தது அவன் பேசிய மொழியே முதல்மொழியாக இருக்ககூடும் மொழி வழக்கம் வருவதற்கு முன்பு சைகை ஒலியெழுப்பல் சில நூற்றாண்டு பின்னோட்டு இருந்திக்கவேண்டும்
கீழடியில் வெளிவரும் உண்மை இந்திய கலாச்சாரம் இந்து கலாச்சாரமென்பதென்லாம் பொய் என்பதை உணர்த்தியிருக்கிறது .. தமிழனின் வரலாறு என்பது
"புராணங்களை" போல கட்டிசமைத்ததல்ல என்பது தெளிவாகிறது ..


கீழடி மற்றொரு விடயத்தை நமக்கு சொல்கிறது இந்திய துணைகண்டத்தில் முதல் நாகரீக வாழ்வை வாழ்ந்தவன் என்பதும் ஆரிய வரவிற்கு முன்பே
செமையா வாழ்ந்தவன் என்பது சாதி பேதம் வர்ணகோட்பாடு மதம் என எதுவுமில்லாத இயற்கையை போற்றி வாழ்ந்ததும் தெளிவாகிறது ..
கீழடி சொல்லும் மற்றொரு சேதி திராவிட சித்தாந்தம் சொல்லும் சாதி மதம் எல்லாம் கட்டுகதைகள் மனிதனை பிரித்து தங்களை முன்னிலை படுத்த ஆரியர்கள் செய்த சதி என்பதும் புலனாகும் ..

எலும்புகளால் செய்யப்பட்ட எழுத்தாணி, தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, அரவைக் கல், பானை ஓடுகள் சதுரங்கக் காய்கள், பகடைக் காய், மண் குடுவை, சூதாட்டத்தில் பயன்படுத்தப்படும் பவள மணிகள், சுடு மண் வார்ப்பு, காளையின் தலை, மனித உடல் பாகம், மனித தலை உருவம் போன்றவைகளும் கண்டறியப்பட்டுள்ளன.. மண் பானை, கறுப்பு சிவப்பு நிறப் பானை, கூர்முனைக் கொண்ட எலும்பு கருவிகள், நூல் நூற்கும் தக்களிகள் (ஆபரண மணிகளைக் கோர்க்கும் கருவி) , தங்க அணிகலன்கள், மணிகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன..

மதம் சார்ந்து கடவுள் சிலைகளோ குறியீடுகளோ கிடைக்கவில்லை .. 

இதிலிருந்தே தமிழ்குடியின் தொன்மை விளங்கும் மதம் சார்ந்தில்லை என்பதும் புரியும்..
..
இந்த மாதம் 30ந்தேதி
ஐந்தாம் அகழாய்வு நிறைவு பெறுகிறது.. 

இன்னும் நிறைய தகவல்கள் வெளிவரலாம் வேகவேகமாக ஆய்வுபணிகளை முடிக்க நினைக்கிறது அரசு தமிழனின் பெருமையை யாராலும் அழித்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது..
 தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத்
ஒருவிடயத்தை சொல்கிறார் நாம் 10% விழுக்காடு தான் ஆய்வு செய்திருக்கிறேன் .110 ஏக்கரில் 10 ஏக்கர்தான் அதுவும் 10 அடி தான் ஆய்வு செய்திருக்கும் இன்னும் ஆழபடுத்தினால் இன்னும் நிறைய கிடைக்கலாம் என்கிறார்.

 ஆம் இன்னும் தமிழர்களின் நாகரீக வரலாற்றைப்பற்றிய தரவுகள் கிடைக்கும் அரசு தொடர்ந்து ஆய்வு செய்யவேண்டும் ..
                                                                                                                           -முகநூலில் ஆலஞ்சியார்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
  கனமழை
உள்தமிழகத்தில்  இன்று கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளது.
மிதமானது முதல் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும் அதிகபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு கனமழையில் இருந்து மிக கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் திங்கள் நள்ளிரவு பெய்த மழைக்குப் பிறகு இன்று காலையில் இருந்து பல்வேறு இடங்களில் கனத்த மழை பெய்து வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்ட்ராய்ட் 10 சிறப்பம்சங்கள்

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு ஆரம்பம் முதலேஆங்கில அகர வரிசையில், புகழ் பெற்ற இனிப்புவகைகளின் பெயர்களை சூட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது.
 கடைசியாக வெளிவந்த 9வது பதிப்பு பை (Pie) என்று பெயரிடப்பட்டிருந்தது.
அடுத்து வரும் இயங்குதளம் Q என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், முந்தைய வழக்கத்தை மாற்றி ஆண்ட்ராய்டு 10 என எண் வரிசையில் பெயரிட்டு கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகும் இப்பதிப்பு பெயரில் மட்டுமல்லாமல், செயல்பாட்டிலும் பல புதிய அம்சங்களைக் கொண்டுவந்துள்ளது.

இதுவரை வெளியிடப்பட்ட பதிப்புகள் அனைத்தும் முதல் வெளியீட்டின்போது கூகுள் தயாரிப்பு பிக்சல் போன்களிலும், ஒரு சில உயர்தரபிரீமியம் போன்களிலும் மட்டுமே அறிமுகமாகும். பிறகு படிப்படியாக மற்ற போன்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.
இந்த வழக்கத்தில் ஒரு முன்னேற்றமாக கூகுள் பிக்சலுக்குப் பிறகு சாம்சங்,நோக்கியா, சியோமி ரெட்மீ, ரியல்மீ, அசூஸ்,மோட்டோரோலா, ஒன்பிளஸ் ஒன், ஓப்போ ஆகியநிறுவனங்களின் முன்னணி மாடல்களுக்கும் விரைவில்  வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டார்க் மோட்  வசதி
ஒரு சில வாரங்களுக்கு முன்பே ஆண்ட்ராய்ட் 10 பதிப்பில் டார்க்மோட் அம்சம் வருகிறது என்பதை தெரிவித்திருந்தோம். அது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கண்களுக்கு இதம் தரும் கருமையான பின்புலத்தைக் கொண்ட இந்த அம்சத்தை செயல்படுத்தும் வசதி, செட்டிங்ஸ் பகுதியில் உள்ள பேட்டரி டேப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
 திரைஅதிக ஒளி உமிழ்வதைக்  குறைப்பதால்  பேட்டரி சக்தி வீணாவது தவிர்க்கப்படுகிறது.

இருப்பிடத்தை அறிந்து கொள்வதை தடுக்கும் வசதி:
பயனரின் இருப்பிடத்தை (லோக்கேஷன்) அறிந்து கொள்வது தனியுரிமையை பாதிக்கும் என்பதால், ஆப்ஸ்கள் உங்கள் இருப்பிடம் சார்ந்த விவரங்களை சேகரிப்பதை நீங்கள் முழுமையாககட்டுப்படுத்தும் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது.
லோக்கேஷன் சேவையை இயக்குவது, நிறுத்துவதுபோன்ற வழக்கமான வசதியுடன், குறிப்பிட்ட ஆப்உதாரணமாக ஆன்லைன் டேக்ஸி புக் செய்யும்ஆப்கள் பயன்படுத்தும்போது, அந்த ஆப் இருப்பிடத்தை அறிந்து கொள்ள அனுமதிக்கும்போது, எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் அல்லது ஆப் பயன்பாட்டில் இருக்கும்போது மட்டும் பயன்படுத்தலாம் அல்லது வேண்டாம் என்பதைத் தேர்வு செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.


பிரைவஸியில் கவனம்
அனைத்துவிதமான தனிநபர் உரிமைகளுக்கான அமைப்புகளையும் ஒருங்கே பிரைவஸிஅமைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது.
இணையத்திலும், ஆப் செயல்பாட்டிலும் பதிவாகும் டேட்டாக் களில் எவை பதிவாகலாம், எவ்வளவு காலம் இருக்கலாம் என்பதை தீர்மானிக்கும் வசதி உள்ளது.
அத்துடன் உங்கள் சுயவிபரங்கள், இணையப் பயன்பாடுகளை அறிந்து அதற்கேற்ப விளம்பரங்கள் காட்டப்படுவதையும் கட்டுப்படுத்தலாம்.

வைஃபை பகிர பாஸ்வேர்டுக்கு பதிலாக கியூஆர் கோடு
வைஃபை பயன்பாட்டை பெறுவதற்கு கடவுச் சொல்லை கேட்டுப் பெற்று உள்ளிடுவதற்கு பதிலாக,QR குறியீட்டை பயன்படுத்தி ஒரு Wi-Fi நெட்வொர்க்குடன் எளிதாக இணைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஃபோகஸ் மோட்
மின்னஞ்சல், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது மற்ற ஆப்களின் நோட்டிபிகேஸன்கள் நம் கவனத்தை சிதறடிக்கும்.
இதை தற்காலிகமாக நிறுத்த உதவும் ஃபோகஸ் மோட் என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது.
கருத்துக்களை உடனுக்குடன் பகிர்தல்வீடியோ தளங்களில் ரசிக்கும் பகுதிகளில் உங்களது கமெண்ட்களை  பதிவிடும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை செயல்படுத்த வீடியோ இயங்கிக் கொண்டிருக்கும் போது ஒலி (Volume)பட்டனைக் கிளிக் செய்தால் தோன்றும் ஸ்லைடரில் கருத்து பகிர்வதற்கான (caption button) காட்டப்படும். அதனைக் கிளிக் செய்து உங்கள் கருத்தை பகிரலாம்.

ஸ்மார்ட் ரிப்ளை
குறுஞ்செய்திகளுக்கு ஸ்டிக்கர் மற்றும் இமோஜி படங்கள் கொண்டு எளிதாக பதிலளிக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற வசதி  சிக்னல் போன்ற ஆப்களில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஒன்றுதான்.
தெளிவான ஒலியைப் பெறும் வசதி சவுண்ட் ஆம்பிளிஃபயர் (Sound Amplifier) என்ற இந்த வசதியில் குறைந்த ஒலியில் பதிவு செய்யப்பட்ட கோப்புகளையோ, தெளிவற்ற இரைச்சலான ஒலியுடன் ஒலிபரப்பாகும் டிவி நிகழ்ச்சிகள் அல்லது ஒலிக் கோப்புகளையோ இரைச்சலைக்குறைத்து சரிசெய்து கேட்கும் வசதி வழங்கப் பட்டுள்ளது.


பேட்டரி இண்டிகேட்டர்
பேட்டரி மின் சேமிப்பு அளவு காட்டும் முறையில்மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
 இதில்  பேட்டரியின் சதவீதத்திற்கு பதிலாக எப்போது வரை தாக்குப்பிடிக்கும் என்பதை கால அளவை காட்டும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது காலையில் உங்களின் பேட்டரியை நிலையப் பார்க்கும் போது சுமார் இரவு 10 மணி வரை பேட்டரி தாக்குப்பிடிக்கும் என்ற செய்தி காட்டப்படும்.
இது உங்களின்சராசரிப் பயன்பாட்டை ஒட்டியே கணக்கிடப்படும். கூடுதல் ஆப்கள் பயன்படுத்தும்போது இந்த நேரஅளவு குறைந்து 9 மணி, 8 மணி என்று படிப்படியாக மாறிக் காட்சியளிக்கும்.
  ஐபோன் வசதி ஆண்ட்ராய்டில்
ஆப்பிள் ஐபோன்களில் திரையை தொட்டுஒவ்வொரு திசையில் விரலை நகர்த்தும்போது ஒவ்வொரு அம்சம் தென்படும். Gesture Navigationஎன்ற இந்த வசதி ஐபோனுக்கு இணையாக ஆண்ட்ராய்ட் 10லும் மேம்படுத்தப்பட்டுள்ளது.புதிய ஆடியோ மற்றும் வீடியோ ஃபார்மெட்கள் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் கூடுதலாக புதிய வீடியோ Codecs-களை ஆதரிக்கவுள்ளது.
எனவே பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் பல வகையான வீடியோ ஃபார்மெட்களை இயக்கிப்பார்ப்பது சாத்தியமாகியுள்ளது.

மடக்கும் டிஸ்பிளே போன்களுக்கு ஏற்ற வடிவமைப்பு
மடக்கி வைத்துக் கொள்ளும் வகையிலான ஃபோன்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில் அதற்கேற்பவும் இந்த இயங்குதளத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது கூகுள்.
5ஜி இணைய சேவை பயன்பாட்டிற்கும்,மடக்கும் டிஸ்ப்ளே என்று அனைத்துக்கும் உதவும்வகையிலான UI வடிவமைப்பை இது கொண்டுள்ளது.
கூடுதலாக கண்ணைக்க வரும் பேக்கிரவுண்ட் மற்றும் தீம்களும் வழங்கப்பட்டுள்ளன.

                                                                                                                                                           -என்.ராஜேந்திரன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
நினைவில் கொள்ளுங்கள்.





 செப்டம்பர் .
 23 - 27 - எஸ். எஸ். சி., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு
29 - ஐ.பி.பி.எஸ்., ஆபீஸ் அசிஸ்டென்ட் மெயின் தேர்வு

அக்டோபர் 
.12,13,மற்றும் 19, 20 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ.,முதல் நிலைத் தேர்வு

நவம்பர் .
17 - என்.டி.ஏ., தேர்வு
30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு

டிசம்பர் 
.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு
7,8,மற்றும் 14,15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் முதல் நிலைத்தேர்வு
நபார்ட் வங்கியில் வேலை.


 மத்திய அரசின் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி நபார்டு. இங்கு 'டெவலப்மென்ட்' உதவியாளர் (82), 'டெவலப்மென்ட்' உதவியாளர்/இந்தி (9) என 91 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 18 - 35. வயது வரம்பு தளர்ச்சி உண்டு.

தகுதி: * ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, 69 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
* இந்தி பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்தி அல்லது ஆங்கில பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.32,000

கடைசி நாள்: 2.10.2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (ஆன் லைன்), நேர்முகத் தேர்வு

விபரங்களுக்கு: https://www.nabard.org.
 --------------------------------------------------------------------------------


 ரிசர்வ் வங்கிப் பனி.



 -----------------------------------------------------------------------------------------------------------------------------------
"ரங்கராஜ் பான்டே, மாரிதாஸ் நேர்மையே வடிவானவர்கள்"


                                                                           -ரஞ்சிதா புகழ் நித்யானந்தா.
 



ஒரு  A1 சான்றிதழ் கொடுக்கிறான் என்றால் இருவர் லட்சணமும் இப்போது புரிந்திருக்குமே.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------









இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?