"மேலிட ஆணைப்படி நடந்தாலும் ஆபத்துதானா?"
பரவி வரும் ஆபத்து.!
கணினியில் கோப்புகளை முடக்கி வைத்து கொண்டு, பணம் கேட்டு மிரட்டும் 'ரான்சம்வேர்' வைரஸிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.அந்த அளவிற்கு இந்த 'ரான்சம்வேர்'அச்சம் தரும்படி வைரஸ் பரவி வருகிறது.
'ரான்சம்வேர் வைரஸ்' நாம் கணினி மற்றும் இணைய சேவையை பயன்படுத்தும் போது சில ஆங்கில எழுத்துக்கள் கலந்த அர்த்தமற்ற மொழியில் கட்டளைகளை பிறப்பிக்கும்.
எதிர்பாராமல் அதை கிளிக் செய்தால் நம் கணினியில் உள்ள கோப்புகள் உடனே முடக்கப்படும்.
முடங்கிய கோப்புகளை மீட்க, உங்களுக்கு தொடர்புடைய மற்றொரு இணைய முகவரியை கொடு என அந்த வைரஸ் கட்டளையிடும்.
இதனால் இணைய முகவரி மற்றும் அது தொடர்பான பயன்பாடுகள் அனைத்தும் முடங்கும்.
பணம் கேட்டு மிரட்டல்முடக்கப்பட்ட கோப்புகளை மீட்க 'பிட்காயின்' எனப்படும் டிஜிட்டல் கட்டண என்ற முறையில் 300 அமெரிக்க டாலர்களை செலுத்த வேண்டும்.
உடனே செலுத்த தவறினால் அபராதமாக 600 டாலர்கள் செலுத்த வேண்டும் என, பணம் கேட்டு அந்த வைரஸ் நம்மை மிரட்டும்.
மிரட்டலுக்கு அடிபணிந்து நாம் கட்டணம் செலுத்தினால் மட்டுமே நம்முடைய கோப்புகளை மீட்க முடியம் .
இந்த வைரஸை யார், எங்கிருந்து இயக்குகிறார்கள் என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை.இதனால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
'பிட்காயின்' மூலம் செலுத்தும் பணம் யாருக்கு செல்கிறது என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
வெளிநாடுகளை தொடர்ந்து இந்த வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்து தகவல் தொழில் நுட்பம் மிகுந்த தமிழகத்திலும் தற்போது தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வீட்டு உபயோக கணினி உட்பட இந்த வைரஸ் தாக்குதல் பரவி வருகிறது.
கணினி பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும்.
இத்தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு வரும் அனுப்பியவர் யாரென தெரியாத,நமக்குத் தேவையில்லாத இணைப்பு சுட்டிகளை ('லிங்க்') ஓபன் செய்வது, பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கணினி, ஸ்மார்ட் போன்களில் 'ஆன்டி வைரஸ்' செயலியை புதுப்பித்து கொள்ள வேண்டும்.
உங்களது முக்கிய கோப்புகளை வேறொரு சேமிக்கும் கருவி (ஹார்டு டிஸ்க்) மூலம் நகல் எடுத்து சேமித்து வைத்துக் கொள்வது தற்போது நல்லது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
"மேலிட ஆணைப்படி நடந்தாலும் ஆபத்துதானா?"
சென்னையில், சட்ட விரோதமாக வைக்கப்பட்ட, 'பேனர்' சரிந்து விழுந்து, பெண் மென்பொறியாளர் இறந்த விவகாரத்தில்,சம்பந்தப்பட்ட அதிமுக கட்சிக்காரரை காப்பாற்ற, எடப்பாடி அ.தி.மு.க, அரசு அப்பாவி காவல் ஆய்வாளர்அழகு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. காவல் ஆய்வாளர்அழகு மேலிடத்தில் இருந்து வந்த ஆணையின்படியேதான் நடந்து கொண்டு பேனர் வைத்த அதிமுக கட்சிக்காரரை கைது செய்யாமல் ,வழக்கில் சேர்க்காமல் இருந்ததாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.
தற்போது மேலிடம் அவர் மீதே நடவடிக்கை எடுப்பது அநியாயம் என காவல்துறையினர் கொந்தளிக்கின்றனர்.
நீதிமன்றத்தின் கண்களை மறைக்க நடவடிக்கை எடுத்தது போல் காட்ட இந்த அராஜகத்தை அதிமுக அரசு செயதல்லாத என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை, குரோம்பேட்டை, பவானி நகரைச் சேர்ந்தவர் ரவி என்பவரின் மகள், சுபஸ்ரீ . இவர், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த, 12ம் தேதி மாலை, பணி முடிந்து, பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக, இரு சக்கர வாகனத்தில், வீடு திரும்பினார்.பள்ளிக்கரணை அருகே சென்றபோது, ரேடியல் சாலையின் மையப் பகுதியில், சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று, சுபஸ்ரீ மீது சரிந்து விழுந்தது.
இதனால் நிலை தடுமாறி விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
பள்ளிக்கரணையைச் சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர், ஜெயகோபால் என்பவர் தன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் படத்துடன் வைத்திருந்த பேனர் தான் சுபஸ்ரீயின் உயிரை பறித்தது.
இந்த விபத்து குறித்து விசாரித்து வரும் பரங்கிமலை போக்குவரத்து போலீசார் உடனடியாக, தண்ணீர் லாரி ஓட்டுனர், மனோஜ், என்பவரை கைது செய்தனர்.
ஆனால், சுபஸ்ரீயின் இறப்புக்கு காரணமான, சட்ட விரோத பேனர் வைத்தவரான, ஜெயகோபால் மீது, வழக்குப் பதிவு செய்யவில்லை.
அதற்குப்பதிலாக பேனரை அச்சிட்ட அச்சக உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இது போத மக்கள் நற்றவில் பலத்த எதிர்ப்பக்கிளப்பியது.
உயர் நீதிமன்றமும் தனது எதிர்ப்பை காட்டியது.அதன் பின்னரே ஜெயகோபால் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
மேலும், 'கொலை நோக்கமற்ற மரணம்' என்ற, சட்டப் பிரிவின் கீழ், ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர், மேகநாதன் மீது, வழக்கு பதிந்தனர்.
அதேபோல, பள்ளிக்கரணை போலீசாரும், ஜெயகோபால் மீது, ஜாமினில் வெளிவரக்கூடிய, சாதாரண பிரிவின் கீழ் தான் வழக்கு பதிந்துஉள்ளனர்.
ஆனால், விபத்து நடந்து, ஒரு உயிர் பறி போய், 15 நாட்களாகியும், ஜெயகோபாலும், அவரது மைத்துனரும் கைது செய்யப்படவில்லை.
இவர்கள் குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளதாகவும், ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாகவும், போலீசார் 'கதை' சொல்லி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, '20ம் தேதி, விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என பள்ளிக்கரணை போலீசார் ஜெயகோபாலின் வீட்டில் அவர் வீட்டில் இருக்கையிலேயே அவர் கையில் கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டது போல் 'நோட்டீஸ்' ஒட்டினர். ஆனால் இது எதையும், ஜெயகோபால் கண்டுகொள்ளவேயில்லை.
கொலையான சுபஸ்ரீ அதிமுக ஜெய்கோபால் |
சுபஸ்ரீ பலியான விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றமும், கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.'இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் சிந்த வேண்டும் என, எதிர்பார்க்கிறீர்கள்; மனித உயிர்களுக்கு, இது தான் மரியாதையா' எனவும், போலீசை கண்டித்து உள்ளது.
'குற்றம் சாட்டப்பட்டவர்களை, எப்போது கைது செய்வீர்கள்; அவர்களை துண்டு விரித்து, வலை வீசி தேடி வருகிறீர்களா?'
என, சென்னை உயர் நீதிமன்றம், நேற்று முன்தினம் கூட, சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.
தற்போது அதி.மு.க கட்சிக்காரர் ஜெயகோபாலை காப்பாற்றும் நோக்கில், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பணிபுரியும், அப்பாவி காவல் ஆய்வாளர் அழகு மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவருக்கு '3பி' எனும் 'மெமோ' கொடுக்கப்பட்டு இருப்பதால் அழகுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு எதுவும் விசாரணை முடியும் வரை கிடைக்காது.
குற்றம் (?)உறுதி செய்யபப்ட்டால் அவர் நிரந்தர பணி நீக்கமும் செய்யப்படலாம் .
நீதிமன்றத்திற்கு கடமையான நடவடிக்கை எடுத்ததாக கட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதிமுக காரரை காப்பாற்றும் விதமாக காவல்துறையை கையில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு காவல் ஆய்வாளர் அழகு மீது நடவடிக்கை எடுத்து நாடகம் ஒன்றை அரங்கேற்றி இருப்பதாக காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நாளில்
முன்னால்
உலக சுற்றுலா தினம்மெக்சிகோ,ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது(1821)
உலகின் முதலாவது பயணிகள் ரயில் இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது(1825)
நாகேஷ் பிறந்த தினம் (1933)
கூகுள் சர்ச் என்ஜின் ஆரம்பிக்கப்பட்டது(1998)
நாகேஷ்
நடிகர்கள் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் மனதில் பதிவது என்பது அவ்வளவு பெரிய விஷயமல்ல. ஹீரோக்களுக்கு இது சரி, எத்தனை நகைச்சுவை நடிகர்களின் பாத்திரப்பெயர் நமக்கு நினைவில் இருக்கின்றது. அவ்வளவாக நினைவில் இருக்காது.ஏனென்றால நாம் அங்கு பார்ப்பது நகைச்சுவை நடிகர்களைத்தான், பாத்திரங்களை அல்ல. அதற்கு பெயர் அவ்வளவாக அவசியமில்லாதது.
விதிவிலக்கு வெகு சிலர் நாகேஷ், வடிவேலு.
நாகேஷ் என்றவுடன் நினைவில் வருவது படங்களல்ல, தருமியும், வைத்தியும், ஓஹோ ப்ரொடெக்ஷன் செல்லப்பாவும்தான்.
குண்டுராவ் நாகேஷ் தாராபுரத்தில் பிறந்து வளர்ந்த வர்.
அப்பா ரயில்வே உத்தியோகஸ்தர், நாகேஷும் ரயில்வே க்ளார்க். அலுவலக நாடகத்தில் சிறு வேடத்தில் நடிக்க ஆரம்பித்து, சினிமாவில் நுழைந்து தனி இடத்தை பிடித்தவர்.
நகைச்சுவையுணர்ச்சி இயல்பாக இருக்க வேண்டும், பயிற்சியினால் எல்லாம் வராது. நாகேஷின் இயல்பான குறும்புதான் அவருக்கு அப்படிப்பட்ட ஸ்கீரின் ப்ரெசென்ஸை தந்திருக்கின்றது.
விடுமுறை தர மறுத்தவரை கடுப்படிக்க உள்ளாடைகளுடன் அலுவலகத்திற்கு செல்வது, தாலுகா ஆபிசில் அமர்ந்து கொண்டு, செய்யாத வேலைக்கு ராஜினாமா தருவது என்று குசும்பு கொப்பளிக்கும் ஆசாமியாகவே இருந்திருக்கின்றார்.
நாம் பார்த்த நாகேஷின் முகத்திற்கு பின்னால் இருப்பது மூன்று முறை அடுத்தடுத்து தாக்கிய அம்மையின் திருவிளையாடல். அந்த தாழ்வுணர்ச்சி அவரிடம் பல காலம் இருந்திருக்கின்றது.
அதை மீறி வென்றது அவருக்குள் இருக்கும் கவலையில்லாத மனிதன்.
நாகேஷை உருவாக்கியது பாலச்சந்தர் என்ற ஒரு பிம்பம் உண்டு, ஆனால் கே.பிக்கு முன்னரே அவர் பல நாடகங்களில் நடித்துள்ளார் என்பதும், திரைப்படத்தில் முக்கிய வேஷத்தை தந்து ஒரு புதிய பாதையை அமைத்தவர் ஶ்ரீதர் என்பதும் புதிய தகவல்கள்.
நாகேஷ் என்ன செய்தார்,
இயக்குனர் சொன்னதை செய்தார், நடித்தார் என்று கூறலாம்.
ஆனால் இயக்குனரையும் மீறி பல இடங்களில் அவரது சொந்த சரக்கும் உள்ளது.
தருமியின் பல வசனங்கள் அவரது சொந்த வசனங்கள். "அவனில்லை அவன் வரமாட்டான்", வைத்தி பேசும் "மெயினே சும்மா இருக்கு, சைடு நீ ஏம்பா துள்ற" இது எல்லாம் அவரது சொந்த சரக்கு.
சிவாஜியுடனான அவரது உரையாடல் அப்படியே சர்வர் சுந்தரத்திலும் இருக்கும், சிவாஜிக்கு பதில் மனோரமா.
நடுவே மதுவால் துவண்டு மீண்டு வந்தும் கலக்கியுள்ளார்.
அதைப் பற்றி அவர் கூறுவது, அவருக்கும் ஒரு பெண்ணிற்குமான உரையாடல்
"நாகேஷா நீங்கதான் போய்ட்டீங்களாமே"
"உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில இருந்தேன், இப்போ எல்லாம் சரியாடுச்சி"
"அதான் நீங்க போய்ட்டீங்கனு பேப்பர்க்காரனே போட்டுட்டானே"
நிஜ வாழ்க்கையில் கற்பனையை விட சுவாரஸ்யமான நகைச்சுவை கிட்டும்.
நாகேஷ் தமிழ்த்திரை உலகில் 50 ஆண்டுகள் கோலோச்சியவர். அவருடைய முதல் படம் “மனமுள்ள மறுதாரம்” வெளிவந்த ஆண்டு 19-09-1958. இப்படத்தில், மற்றுமொரு நகைச்சுவை நடிகர் “டணால்” தங்கவேலுவின் தங்கையைப் பெண் பார்ப்பதற்காக மாப்பிள்ளைப் பையனை தங்கவேலு வீட்டுக்குக் கூட்டிவரும் கல்யாணத் தரகராக புரோகிதர் வேஷத்தில் நடித்திருப்பார்.
நாகேஷ் நடித்த கடைசிப்படம் கமலின் தசாவதாரம். வெளிவந்த ஆண்டு 13-06-2008.
நாகேஷின் தந்தை பெயர் கிருஷ்ணராவ் – தாய் பெயர் ருக்மணி, நாகேஷுக்கு பெற்றோர் வைத்த பெயர் நாகேஷ்வரன். செல்லப்பெயர் – குண்டப்பா.
ரயில்வே சார்பாக நடைபெற்ற நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். நாடகத்தைப் பார்க்க மற்றும் தலைமை விருந்தினராக வந்த எம்.ஜி.ஆர், நாடகத்தின் முடிவில், நாகேஷின் நடிப்புபைப் பார்த்துவிட்டு முதல் பரிசை வழங்கினார்.
நாகேஷின் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருந்தவர்கள் நடிகர் பாலாஜி, ஸ்ரீகாந்த் மற்றும் கவிஞர் வாலி
இந்தியத் திரை உலகில் பிணமாக நடித்த ஒரே நடிகர் நாகேஷாகத்தான் இருக்கமுடியும், நடித்த படம் – கமலஹாசன் தயாரித்த “மகளிர் மட்டும்”.
எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் ஒருவர்தான்., 44 படங்கள்.

"கூகுள்" க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
தேடல் என்றால் கூகுள் என்றாகிவிட்டது.
இணையத்தில் தேடுங்கள் என்பதை தற்போது கூகுள் செய்து பாருங்கள் என்கிற அளவுக்கு அது முன்னணி
தேடியந்திரமாக மாறி விட்டது.
கூகுள் இல்லையென்றால் இப்போது யாரும் எதையும்
பார்க்க முடியாது என்ற நிலை தான் பெரும்பாலான பயனர்களுக்கு.
அவர்கள், சிலர்
தங்கள் இன்ஷியல் என்ன என்பதைக் கூட கூகுள்-ஐ பயன்படுத்திதான், அறிந்துக்
கொள்ள வேண்டும் என்று கிண்டலடிக்கும் போக்கே நிலவுகிறது.
மக்கள் வாழ்வில் ஒன்றாகவே இணைத்து விட்ட கூகுள் இணைய தேடுபொறிக்கு இன்று 17வது பிறந்தநாள்.
வழக்கமாக பிரபலங்களின் பிறந்த நாளை நமக்கு நினைவூட்டும் கூகுள் பொறி,
மக்கள் வாழ்வில் ஒன்றாகவே இணைத்து விட்ட கூகுள் இணைய தேடுபொறிக்கு இன்று 17வது பிறந்தநாள்.
வழக்கமாக பிரபலங்களின் பிறந்த நாளை நமக்கு நினைவூட்டும் கூகுள் பொறி,
இன்று தனது பிறந்த நாளையே டூடுலாக வைத்துள்ளது.
பழைய கணினி திரையில்,
தொடக்க காலத்தில் இருந்த கூகுள் லோகோ உடன் கூடிய முகப்பு பக்கத்தை
காண்பிக்கும் டூடுல் பயனர்களை பழைய நினைவுக்கு அழைத்து செல்கிறது
கூகுள்...!
"தலைமறைவான நித்தி"
நாம் செல்லமாக நித்தி என அழைக்கும் நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன்.திருவண்ணாமலையில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
தன் பன்னிரண்டாம் வயதில், ‘உடல் தாண்டிய அனுபவம்’ என்கிற பேரானந்தத்தை அடைந்ததாகக் கூறி, தன்னை ஆன்மிகவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டார்.
அரசுப் பள்ளியில் பயின்று, பிறகு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்த ராஜசேகரனை, ஆன்மிகத் தேடல் உந்தித்தள்ளியது. ராமகிருஷ்ண பரமஹம்சரையும், விவேகானந்தரையும் மானசீக குருக்களாக ஏற்றுக்கொண்டு, மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
மடத்தில் சேர்ந்த சில நாள்களிலேயே ‘ப்ரீமியம் தட்கல்’ முறையில் தனக்கு உடனே ‘தீட்சை’ வழங்குமாறு ராஜசேகரன் கோரிக்கைவைக்க, மடம் மறுத்துவிட்டது.
அங்கேயிருந்து வெளியேறி நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்கள், மடங்களைச் சுற்றிப்பார்த்தவர் இறுதியாகச் சென்றடைந்த இடம், இமயமலை.
திடீரென 2000, ஜனவரி 1 அன்று, ‘ஞான அனுபூதி முக்தி’ என்னும் ஞானநிலையை அடைந்ததாகக் கூறிய ராஜசேகரன், தன் பெயரில் தியானபீடம் ஒன்றையும் தொடங்கி சுவாமி பரமஹம்ச நித்தியானந்தாவாக மாறினார்.
அப்போது அவருக்கு வயது வெறும் 22தான். இன்று 41 வயதாகும் நித்தியானந்தா, 21 நாடுகளில் 800 கிளைகளுக்கும்மேல் தன் ஆசிரமங்களை நிறுவியுள்ளார்.
பெங்களூருக்கு அருகே உள்ள பிடதியில் 23 ஏக்கரில் அவரது ஆசிரமம் விரிந்து பரந்திருக்கிறது.
தொடக்கத்திலிருந்தே
நித்தியானந்தாவின் கருத்துகளும் செயல்பாடுகளும் அதிரடியாகத்தான்
இருக்கும். திடீரென ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சார்புக் கோட்பாடே தவறு என்பார்.
`சூரியன் உதிப்பதை, 40 நிமிடங்கள் நிறுத்தினேன்’ என்பார். ‘அடுத்த 200 வருடங்களுக்கு நான் வாழ்வேன். 201-வது வருடத்தில் முக்திக்காக யார் வந்து நின்றாலும் என்னால் அளிக்க முடியாது. இப்போதே வந்துவிடுங்கள்’ என ஆசிரமத்துக்கு ஆள் சேர்ப்பார்.
இப்போது, உலகத்திலேயே தன்னால் மட்டும்தான் சாகா வரம் அளிக்க முடியும். தன்னை சரணாகதி அடைவதைத் தவிர மனிதகுலத்துக்கு வேறு வழியே இல்லை என்கிறார்.
அவருடைய பரவசப் பேச்சில் மயங்கும் பக்தர் கூட்டம் ஊருக்கு ஊர் இருக்கிறது.
ஆனால், அவர் உலகப்புகழ் பெற்றது ஒரேயொரு வீடியோவில்தான். நடிகை ரஞ்சிதாவோடு அவர் நெருக்கமாக இருக்கும் வீடியோ, மீடியாவில் ‘லீக்’ ஆகி பரபரப்பைப் பற்றவைத்தது.
நித்தியானந்தாவோடு பல வருடங்கள் ஒன்றாகப் பயணித்த லெனின் கருப்பன் என்பவர், நித்தி மீதே சென்னை காவல்துறையில் மோசடிப் புகார் அளித்தார்.
தன்னை பல வருடங்கள் பலவந்தப்படுத்தி நித்தியானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவரின் சிஷ்யை ஒருவரும் புகார் அளிக்க, இரண்டு முறை கைதுசெய்யப்பட்டு சிறைக்கும் அனுப்பப்பட்டார் நித்தி. இந்த வழக்குகள் இப்போதும் கர்நாடகாவின் ராம்நகர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.

பேட்டி,
பிரசங்கம், பெருநகரங்களில் பக்தர்களுக்குத் தரிசனம் என ஏதாவது ஒரு வகையில்
‘லைம்லைட்’டில் இருந்துகொண்டிருந்த நித்தியானந்தாவை, கடந்த ஓராண்டாக
பக்தர்கள் எங்கேயுமே பார்க்க முடியவில்லை. பிடதியில் உள்ள தனது ஆசிரமத்தில்
பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த நித்தியானந்தா, கடந்த பல மாதங்களாக யூ
டியூப், ஃபேஸ்புக் மூலமாக மட்டுமே பக்தர்களைச் சந்திக்கிறார்.
நேரில் சந்திப்பதேயில்லை.
நித்தியானந்தா வெளிநாடுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பே தகவல் பரவியது. ஆனால், எதையும் உறுதி செய்ய முடியவில்லை. இதுதொடர்பாக ஜூனியர் விகடன் இதழில் கழுகார் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பே எழுதியிருந்தோம்.
இப்போது வரும் தகவல்கள், அதை உறுதிப்படுத்துவதைப்போல் இருப்பதோடு, மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்களும் பகிரப்படுகின்றன.
ஆசிரம உள்விவகாரங்களை அறிந்த சிலரிடம் பேசினோம்...
‘‘நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் 2018, அக்டோபர் 31-ம் தேதியே காலாவதியாகிவிட்டது. பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க நித்தியானந்தா விண்ணப்பித்தபோது, அவர்மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பதால், போலீஸார் தடையில்லாச் சான்று அளிக்கவில்லை.
அதுவரையில், கம்போடியா, திபெத் என புனித யாத்திரை மேற்கொண்டிருந்தவர், பாஸ்போர்ட் காலாவதியானதால் வெளிநாடு செல்ல முடியாமல் இருந்தார்.
அந்தச் சூழலில்தான் அவர்மீதான பாலியல் புகார், மோசடி வழக்குகள் இறுகத் தொடங்கின.
அவர் கைதுசெய்யப்படும் அபாயமும் நெருங்கியது.

2018-ம்
ஆண்டு இறுதியில் வடமாநிலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டிருந்தவர், சில
ஏஜெண்டுகள் மூலம் வெனிசுலா நாட்டுப் போலி பாஸ்போர்ட்டைப் பெற்றார்.
இதற்கு கோடிக்கணக்கான ரூபாய், ஹவாலா முறையில் அளிக்கப்பட்டுள்ளது.
தரைவழி மார்க்கமாக நேபாளம் சென்ற நித்தியானந்தா, வெனிசுலா பாஸ்போர்ட் மூலம் கரீபியத் தீவுகளுள் ஒன்றான ‘டொமினியன் குடியரசு’ நாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.
தற்போது அங்கேயிருந்துதான், ‘கிரீன்டெக்’ என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேரலையாக தன் பக்தர்களுக்கு காட்சித்தருகிறார்.
வாரத்துக்கு ஒருமுறை காலையும் மாலையும் ஃபேஸ்புக்கில் நேரலையாக உரையாடுவதும் அங்கே உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்துதான். கடந்த ஒரு வருடமாக அவர் இந்தியாவிலேயே இல்லை.
இந்தத் தகவலை மிகவும் தாமதமாகத் தெரிந்துகொண்ட கர்நாடக போலீஸார், அவரை எப்படியாவது இந்தியாவுக்குக் கொண்டுவர சில மறைமுக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்’’ என்றனர்.

அதிர்ச்சிகரமான
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நாம் கேள்வி எழுப்பியதும், முதலில்
பரபரப்பான நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள், பிறகு சுதாரித்துக்கொண்டு,
‘‘அவர் சமீபகாலமாக பிடதி ஆசிரமத்தில் பக்தர்களைச் சந்திக்காமல் இருப்பது
உண்மைதான்.
வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாகத்தான் சந்தித்துவருகிறார். இதற்காக, அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றுவிட்டார் என்பதும், சட்டத்தின் முன் நிற்க அவர் அஞ்சுகிறார் என்பதும் சுத்தப்பொய்” என்றனர்.
பிடதி ஆசிரமத்தில் இப்போது பெரிய அளவில் பக்தர்கள் கூடுவதில்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இதனால் ஆசிரமத்தில் உள்ள பொருள்களை சிலர் அப்புறப்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விளக்கமறிய, நித்தியானந்தாவின் ஆசிரமத்தைத் தொடர்புகொண்டோம்.
தொலைபேசி எண்கள் பயன்பாட்டில் இல்லை என்ற அறிவிப்பே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
அவரது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்துக்கும், அவருடைய இணைய பக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள webmaster@nithyananda.org இ-மெயில் முகவரிக்கும் தகவல் அனுப்பிவிட்டு, பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.
நித்தியின் தீவிர சிஷ்யைகளான மா நித்தியானந்த மாயி சாமி (நம்ம ரஞ்சிதாதாங்க), மா நித்தியானந்திதா, மா நித்ய ப்ரியமாயனந்தா ஆகியோருக்கும் தகவல் அனுப்பினோம். யாரிடமிருந்தும் பதில் இல்லை.
ரஞ்சிதாவின் தந்தை அசோக்குமாரிடம் பேசியபோது, ‘‘ரஞ்சிதா கடந்த மூன்று மாதங்களாக அமெரிக்காவில் இருக்கிறார்’’ என்று தகவல் கூறினார்.
மற்றவர்கள் யார் தரப்பிலும் பதில் பெற முடியவில்லை.
பதில் வரும்பட்சத்தில் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

- யோகநிலை பெற்ற மனிதர்களுடன் பேசுவதற்காக வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வரவிருப்பதாகவும், அவர்களின் விமானங்கள் தரை இறங்க ‘காஸ்மிக் ஏர்போர்ட்’ ஒன்றை பிடதி ஆசிரமத்தில் நித்தியானந்தா கட்டிவருவதாகவும் அவருடைய வெளிநாட்டு சீடர் ஒருவர் சமீபத்தில் யூ டியூப்பில் வீடியோ வெளியிட்டார்.
- இந்தியாவில் விமானநிலையங்களை அமைப்பதற்கே மத்திய அரசின் அனுமதி, இந்திய விமானநிலைய ஆணையத்தின் அனுமதி அவசியம்.
- அப்படியிருக்க, விண்வெளி ஓடங்கள் இறங்கும் வகையிலான ‘காஸ்மிக் ஏர்போர்ட்’ கட்டுவதற்கு யாரிடம் அனுமதி வாங்கினரோ தெரியவில்லை. ஒருவேளை, ஈசனிடமே வாங்கிவிட்டாரோ என்னவோ?!
- தன்னிடம் வரும் பக்தர்களின் நோய்களை விரட்டி, 200 வருடங்கள் வாழவைப்பேன் என நித்தியானந்தா பலமுறை உறுதியளித்துள்ளார்.
- சிகிச்சை அளிப்பதற்கு, இந்திய
மெடிக்கல் கவுன்சில், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் போன்ற அமைப்புகளில்
பதிவுசெய்திருப்பது அவசியம். அதேபோல, சுகாதாரத் துறையின் விதிகளின்படி
இப்படியெல்லாம் உறுதிகொடுக்கவே கூடாது. அப்படியிருக்க, நித்தியானந்தா
இப்படிப் பேசிவருவதற்கு எதிராக அரசுத் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படாதது ஏன்?
ஒருவரின் நோய் பாதித்த இடங்களைத் தொட்டு காந்த சக்தியை வெளியேற்றும்போது நோயின் தாக்கம் குறையும்.
இந்த முறையில் அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் எல்லோருமே அவருடைய சக்தியை உணர்ந்து உறைந்துவிடுவர்.
மதுரை ஆதீனம் மடங்கியதும் இப்படித்தான் என்கிறார்கள்.
நித்யானந்தாவை இளைய ஆதீனமாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நியமித்ததாக அறிவித்ததை எதிர்த்து, மதுரையைச் சேர்ந்த ஜெகதலப்பிரதாபன் உட்பட மூன்று பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல் தமிழக இந்து அறநிலையத் துறையும், 2012-ல் நித்தியானந்தாவை சட்டபூர்வமாக ஆதீனப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்குகள் அனைத்தும் தற்போது நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் ‘நித்யானந்தாவை இளைய ஆதீனப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டேன்’ என்று மதுரை ஆதீனம் அறிவித்ததை எதிர்த்து நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்த வழக்கில், ‘சாதாரண பக்தராக மடத்துக்குள் செல்லலாம். இளைய ஆதீனமாக நுழையக் கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.
அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே நித்யானந்தாவால் தனக்கு கொலை மிரட்டல் உள்ளது என்று, 2015-ல் மதுரை ஆதீனம் தாக்கல் செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
‘நித்யானந்தா ஆதீன மடத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது’ என்று மீனாட்சிப் பிள்ளைகள் என்ற அமைப்பின் தலைவர் ஜெகதலப்பிரதாபன் தாக்கல் செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
நித்தியின் உறவினர் சிலர் சென்னையில் வசித்துவருகிறார்கள். அவர்கள் தரப்பில் விசாரித்தபோது ‘‘அவர் பயணம் செய்வதற்காக ‘கேரவன்’ போன்று சகலவசதிகளுடன் ஒரு வாகனம் தயார்செய்யப்பட்டுள்ளது. அதில்தான் அவர் இந்தியா முழுவதும் ஆன்மிகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவ்வப்போது எங்களிடமும் பேசுகிறார்.
ஆனால், என்ன காரணத்தால் பக்தர்களை நேரடியாகச் சந்திக்காமல் இருக்கிறார் என்பது தெரியவில்லை. சமீபத்தில்கூட சென்னையில் உள்ள அவரின் அத்தை ஒருவரைச் சந்திக்க வந்து சென்றார்” என்று அதிரவைத்தனர்.
-விகடன் தளத்தில் இருந்து,
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி கணவதி இயற்கையடைந்தார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------