என்னமோ நடக்குது,கேவலமா இருக்குது.!

ஐந்து ட்ரில்லியன் டாலர் மெய்ப்படுமா?

  இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் சிகாகோவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியுள்ளார்.
அப்போது, “5 ட்ரில்லியன் டாலர்பொருளாதார இலக்கை நோக்கி,இந்தியா எவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கிறது?” என்றுகிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போதுதான், “ஐந்து ஆண்டுகளில் ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவதற்கு முதலீடுகள் முக்கியத் தேவை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்

"2008 ஆம் ஆண்டு, இந்தியாவின்  ஜிடிபி-யில் 40 சதவிகிதப் பங்குமுதலீடுகளாக இருந்தது. ஆனால்,இதுவே 2018ஆம் ஆண்டில், முதலீடுகளின் பங்கு 29 சதவிகிதமாகச் சரிந்துள்ளது” என்றும் கிருஷ்ணமூர்த்திசுப்பிரமணியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சூழலில், முதலீட்டை ஊக்குவிப்பதற்கான மூன்று வழிகள் இருப்பதாகவும், “முதலாவது, நிலம் கையகப்படுத்துவது தொடர் பான சட்டங்களில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்; இரண்டாவது, தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சட்டத் சீர்திருத்தங்கள் அவசியம்: மூன்றாவது நாடு முழுவதும் சமமான விலைவாசியை உறுதிப்படுத்த வேண்டும்”- இவைதான்  அந்த வழிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  ஆனால் மோடி,  அமித்ஷா,  நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர், 2024-க்குள் இந்தியா, 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறிவிடும் என்று சத்தியம் செய்யாத குறையாக கூறிக் கொண்டிருக்கின்ற னர்.

மத்திய அரசின் கடன், 88 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகமே புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2018-19 நிதியாண்டின் இறுதிக் காலாண்டின் (ஜனவரி முதல்மார்ச்) போது, மத்திய அரசுக்கு இருந்த கடன், 84 லட்சத்து 68 ஆயிரம்கோடியாகும். ஆனால், 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டிற்குள் (ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள்)- அதாவது மூன்றே மாதங்களுக்குள் இந்தக் கடன் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
நடப்பு 2019-20 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு அறிக்கையை மத்தியநிதியமைச்சகம் வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ளது.
அதிலேயே இந்த விவரங்கள் இடம்பெற் றுள்ளன.மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஆட்சியை விட்டு இறங்கிய பொழுது, கடந்த 2014 ஜூனில்,இந்தியாவின் மொத்தக் கடன் தொகை ரூ. 54 லட்சத்து 90 ஆயிரத்து763 கோடி என்ற அளவில் இருந்தது.

ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபின், கடந்த 2018 செப்டம்பர் வரையிலான நான்கரை ஆண்டுகளில், இந்த கடன்தொகை ரூ. 82 லட்சத்து3 ஆயிரத்து 253 கோடியாக அதிகரித்தது.
இதுதான் தற்போது 2019 ஜூன் வரையிலான காலத்திற்குள் ரூ. 88 லட்சத்து 18 ஆயிரம் கோடியாகஉயர்ந்துள்ளது.நாடு விடுதலை அடைந்ததில் இருந்து, சுமார் 67 ஆண்டுகளில் இந்தியா பெற்ற மொத்தக் கடன் ரூ. 54 லட்சம் கோடி என்றால், மோடி ஐந்தே கால் ஆண்டுகளில் மட்டும் 34 லட்சம் கோடி ரூபாய்களை கடனாகவாங்கி, இந்திய அரசின் கடன் சுமையை உயர்த்தியுள்ளார்.
நடப்பு நிதியாண்டின் ஜூன் வரையிலான காலாண்டில், பண மேலாண்மை ரசீது (Cash Management Product - CMP) மூலம்குறுகிய கால கடன் எதையும் மத்திய அரசு பெறவில்லை. எனினும், இந்தகாலக்கட்டத்தில், 2 லட்சத்து 21 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, அதன்மூலமாக கடன் களை வாங்கியுள்ளது.
 கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 1.44 லட்சம் கோடி அளவிற்கே கடன்பத்திரங்கள் வெளியிடப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நாணயம் மற்றும் தங்க சொத்துக்களின் சரிவு காரணமாக செப்டம்பர் 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 42 ஆயிரத்து 857 கோடி டாலராக குறைத் துள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை மூலம், மேலும் தெரியவந்துள்ள தகவல்கள் வருமாறு:2019 ஆகஸ்டில்தான் ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறுகாணாத அளவுக்கு உச்சத்தை அடைந்தது.
அப்போது, 43 ஆயிரத்து 057 கோடி டாலர்வரை அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்ந்தது.

ஆனால், ஒரு மாதத்திற்குள் செப்டம்பர் 20-ஆம் தேதியுடன் முடிவடைந்தவாரத்தில் 42 ஆயிரத்து 857 கோடி டாலராககையிருப்பு குறைந்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த அந்நிய செலாவணி கையிருப்பு 64 கோடி டாலர் குறைந்து, 42 ஆயிரத்து 896 கோடி டாலராக நிலைபெற்றிருந்த நிலையில், தற்போது அதைக்காட்டிலும் 38 கோடிடாலர் குறைவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க டாலர் அடிப்படையில் அந்நிய செலாவணி மதிப்பு கணக்கிடப் பட்டாலும், அந்நிய செலாவணி சொத்துக்களில் யூரோ, பவுண்ட் மற்றும் யென் போன்ற அமெரிக்கா அல்லாத நாணயஅலகுகளின் மதிப்புகளும் அடங்கும் என் பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில், மொத்த நாணயங்களின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துக்கள் சுமார் 12 கோடிடாலர் குறைந்து, 39 ஆயிரத்து 667 கோடிடாலர்கள் ஆகியுள்ளது.
 தங்க இருப்புக் களின் மதிப்பு 20 கோடியே 59 லட்சம் டாலர் குறைந்து 2 ஆயிரத்து 784 கோடி டாலர்களாக குறைந்துள்ளது.
இதன்மூலம் இந்தியா வைத்திருக்கும் விலைமதிப்பற்ற உலோ(தங்)கத்தின் மதிப்பு தொடர்ந்து இரண்டாவது முறையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------

 என்னமோ நடக்குது,கேவலமா இருக்குது.!

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி என சுமார் 750 பி.எட். கல்லூரிகளை உள்ளடக்கி சென்னையில் இயங்கி வருவது தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகம்.
இந்தியாவிலையேஆசிரியர் பயிற்சி ( பி.எட்.) கல்லூரிகளுக்கென்று தொடங்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம் என்ற பெருமை இதற்கு உண்டு.
 ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ(ஆசிரிய)ர்கள் ஆண்டு தோறும் இப்பல்கலைக் கழகத்தில் பி.எட். கல்விப் பெற்று வருகின்றனர்.

 கடந்த ஆண்டு படித்த சுமார் ஒரு லட்சத்தி 16 ஆயிரம் மாணவ ஆசிரியர்களுக்கு, கடந்த மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் இறுதிவரைப் பல்கலைக் கழகத் தேர்வுகள் நடந்தன.
அந்தத் தேர்வு முடிவுகள் மூன்று மாதங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் செப்.24 ஆம் தேதி இரவு இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.

அந்த முடிவுதான் தேர்வெழுதியவர்கள் நடுவில் சுனாமியை உண்டாக்கியுள்ளது.
 அந்த முடிவைப் பார்த்த பி.எட். மாணவ ஆசிரியர்களும் அவர்களைப் பயிற்றுவிக்கும் பேராசிரியர்களும், பெற்றோர்களும் மீள முடியாத அதிர்ச்சிக்குள்ளாயினர்.

காரணம்?
தேர்வு எழுதி விட்டு பல்கலைக் கழக ரேங்க் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கையோடு  காத்திருந்த பலருக்கு
அதிரடி பதில் அவர்கள் தேர்வெழுத வரவேயில்லை, எழுதவில்லை என்பதுதான்.
தேர்வெழுதியவர்கள் பட்டியலில் அவர்கள் பெயரே இடம் பெறவில்லை.

அதனைப் பார்த்ததும் தேர்வை மிக்க கடினமாக்கப்படுத்துவேற்றி உறுதி என்றிருந்த மாணவ ஆசிரியர்களும் அவர்களின் பெற்றோரும் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர்.

இது ஒருபக்கம் இருக்க, இன்னொருப் பக்கம் தேர்வு எழுதுவதற்கு இம்முறை தேர்வுக் கட்டணம் செலுத்தாமலும் கல்லூரிக்குப் போகாமலும் இருந்து, கல்லூரிப் பேராசிரியர்களால் இன்டேனல் மார்க்கூட அனுப்பாத மாணவ ஆசிரியர்களுக்கு, இன்டேனல் மதிப்பெண்களுடன்  தேர்வுவானவர்கள் பட்டியலில் எண்கள் வெளியாகியுள்ளது.

 அதனைப் பார்த்த கல்லூரி முதல்வர்களும் பேராசிரியர்களும் அதிற்சியில் உறைந்து போயுள்ளனர்.

பல மாணவ ஆசிரியர்களுக்குத் தேர்வு எழுதியும், அனைத்துப் பாடங்களும் ஆப்சென்ட் என வந்துள்ளன. அதோடு சில கல்லூரிகளில் தேர்வு எழுதிய மாணவ ஆசிரியர்களுக்கு சில பாடங்களுக்குத் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன பிறப்பாடங்களுக்கு ஆப்சென்று என வந்துள்ளது.
5 வகுப்பு பொதுத்தேர்வு.

மேலும் ஏராளமான மணவ ஆசிரியர்களுக்கு சிங்கிள் டிஜிட் (ஒற்றை இலக்கு மதிப்பெண்) மார்க்குடன் ரிசல்ட் வந்துள்ளது. இப்படி குளறுபடி மேல் குளறுபடியாக வெளியாயிருக்கும் தேர்வு முடிவினால் பாதிக்கப்பட்ட பயிற்சியாசிரியர்களும் பெற்றோரும் மனக்குழப்பத்தின் உச்சக்கட்டத்தில் உள்ளனர்.

இவை இளையோரின் வாழ்க்கை உடன் தொடர்புள்ளதாயிற்றே?
எவ்வித தவறோ அல்லது குளறுபடிகளோ இல்லாமல் மிகவும் கவனமாக,தெளிவாக வெளியிட வேண்டிய தேர்வு முடிவை இவ்வளவு கேவலமாக ,அலட்சியமாக வெளியிட்டிருக்கும் பல்கலைக் கழகத்தின் மேதாவிகள் மீது யார் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?
தேர்வு எழுதியும், எழுதவில்லை என முடிவு வந்திருக்கும் மாணவ ஆசிரியர்களுக்கு யார் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
  இதற்கெல்லாம் பல்கலைக்கழக் நிர்வாகம் தகுந்த விடையும்,அரசின்  நடவடிக்கையும் உண்டா?
பொறியியல் படிப்பவர்களுக்கு பகவத் கீதையை பாடமாக்கும் அளவு திறமை மிக்கவர்களை துணைவேந்தர்களாக்கினால் கல்வியும்,நிர்வாகமும் இப்படித்தான் கேலிக்  கூத்தாகும்.
மூக்குத்தி,கூந்தல் கோர்க்கும் வளைகால்,வளையல்கள்,துப்பட்டா,கையில் கட்டிய கயிறு வரை கழற்றி தலைவிரிக்கோலமாக சோதனை நடத்தி தேர்வெழுத வைத்த நீட் என்ன கேவலம் பட்டுள்ளது.?

எறும்பு செல்வதை கவனமுடன் தடுத்தவர் கண்கள் யானை செல்வதை கவனிக்கவில்லையே.தமிழகத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்டவர்கள் ஆள்மாறாட்டத்தில் தேர்வெழுதி வெற்றிபெற்றதுடன்  அதே அளிப்பு  படிவத்தை (கால் டிக்கட் )வைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்து பயில்கிறார்கள் என்பதும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை கட்டாயமாக்கும் கண்டிப்பான இந்த மத்திய ,மாநில அரசுகளை என்ன சொல்லிப் பாராட்டுவது?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் 
முன்னால்
உலக இதய தினம்
சர்வதேச காபி தினம்
அர்ஜெண்டீனா கண்டுபிடிப்பு  தினம்
ஓமன், அரபுக் கூட்டமைப்பில் இணைந்தது(1971)

1940 - நடுவானில் இரு விமானங்கள் மோதி, ஒன்றுடன் ஒன்று சிக்கிக்கொண்டு, பாது காப்பாகத் தரையிறங்கிய வினோத நிகழ்வு, ஆஸ்திரேலி யாவின் ப்ராக்கெல்ஸ்பி என்ற இடத்தில் இதே நாளில் நிகழ்ந்தது. 
 இரண்டாம் உலகப்போரின்போது, பேரரசு வான் பயிற்சித் திட்டம் அல்லது பிரிட்டிஷ் காமன்வெல்த் வான் பயிற்சித் திட்டம்  என்ற பெயரில் இங்கிலாந்து, கனடா, ஆஸ்தி ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில், விமானிகளுக்குப் பயிற்சியளிக்கும் பள்ளிகள் அமைக்கப்பட்டிருந்தன.
அவ்வாறு ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்சிலுள்ள ஃபாரஸ்ட் ஹில் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பயிற்சிப் பள்ளியிலிருந்து, இரண்டு ஆவ்ரோ ஆன்சன் வகை விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. ஓரிடத்தில் சாய்வாகத் திரும்பியபோது, தனக்குக் கீழே மற்றொரு விமானம் இருப்பது, மேலே இருந்த விமானிக்குத் தெரியாத தால், இரண்டும் மோதிக்கொண்டன.
 இதில், மேலே இருந்த விமானத்தின் சுழல் விசிறிகள்(ப்ரெப்பெல்லர்) சேதமுற்று, அதன் இரு என்ஜின்களும் செயலிழந்துவிட்டன.
சுழல் விசிறிகள் கீழ் விமானத்தின் உடற்பகுதிக்குள் சென்றதில், அதன் விமானிக்கு முதுகுப் பகுதியில் அடிபட்டுவிட்டது.

 கீழ் விமானத்தின் சில பாகங்கள் மேல் விமானத்தில் செருகிக் கொள்ள, உப்புமூட்டை ஏறியதுபோல இரண்டும் மாட்டிக் கொண்டன.

ஆனால், மேல் விமானத்தின்  திருப்புதல் உள் ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகள் செயல்பட்டன. இதைத் தொடர்ந்து, இரு விமானங்களிலுமிருந்த மற்ற மூவரையும் பாராசூட் மூலம் குதித்துத் தப்பிக்கச்செய்த மேல் விமா னத்து விமானி ஃபுல்லர், வட்டமடித்தவாறே தரையிறக்கு வதற்கான இடத்தைத்தேடி, 8 கி.மீ. தொலைவில் ஒரு குதிரை லாயத் திடலைக் கண்டுபிடித்து, தரையிறங்கும் சக்கரங்கள் இயங்காதபோது கடைப்பிடிக்கும் அவசர கால முறையைப் பயன்படுத்திப் பாதுகாப்பாகத் தரை யிறங்கினார்.
இரு விமானங்களும் சரிசெய்யப்பட்டு, மேல் விமானம் மீண்டும் பறக்கும் பணிக்கும், கீழ் விமானம் மாண வர்களுக்குக் காட்சி விமானமாகவும் மாற்றப்பட்டன.
 காய முற்றிருந்த கீழ் விமானத்தின் விமானி, குணமாகி மீண்டும் பணியில் சேர்ந்து, இரண்டாண்டுகளுக்குப்பின் மற்றொரு விமான விபத்தில் பலியானார்.
சிறப்பாகத் தரையிறங்கி யதற்காக, பாராட்டுகளையும், பதவி உயர்வையும் பெற்ற மேல் விமானத்தின் விமானி ஃபுல்லர், உரிய அனுமதி பெறா மல் ஊடகங்களிடம் இந்நிகழ்வு குறித்து விவரித்ததற்காக தண்டனையும் பெற்றார்.
அடுத்தடுத்து பதவி உயர்வுகள் பெற்று விமானப்படையில் உயர் பதவிக்கும் வந்த ஃபுல்லர், 1944இல் மிதிவண்டியில் செல்லும்போது, பேருந்து மோதி உயிரிழந்தார்!
                                                                                                                                  - அறிவுக்கடல்

------------------------------------------------------------------------------------------------------------------------------------

 நினைத்தது ஒன்று.

அமெரிக்காவில் ஹூவுஸ்ட னில் 50 ஆயிரம் இந்திய அமெரிக்கர்கள் கூடி யிருந்த கூட்டத்தில் நரேந்திரமோடி நடந்தகொண்டவிதம், இந்திய - அமெ ரிக்க உறவுகளில் இந்தியா எந்த அள விற்கு அமெரிக்காவின் அடிவருடி யாக மாறியிருக்கிறது என்பதைத் தெளி வாகக் காட்டக்கூடிய விதத்தில் அமைந்திருந்ததை மீண்டும் ஒரு முறைக் காணமுடிந்தது.

அரங்க மேடை யில் மோடியும் டிரம்பும் கூட்டாகக் காட்சியளித்த விதம், அமெரிக்காவில் விரைவில் நடைபெறவிருக்கும்  தேர்த லில் இந்திய அமெரிக்க வாக்காளர்க ளைக் கவர்வதற்கான ஒரு முயற்சியே தவிர வேறெதுவும் கிடையாது.

முதலாவதாக, இந்தியப் பிரதமர் மோடி, “இந்தத் தடவை டிரம்ப் சர்க்கார்” (‘Abki baar Trump Sarkar’) என்கிற கோ ஷத்தை திரும்பத் திரும்பக் கூறியதன் மூலம், அடுத்த ஜனாதிபதியாக டிரம்ப்தான் வரவேண்டும் என்பதை மோடி ஏற்றுக்கொண்டுவிட்டதைக் காட்டுகிறது.
ஆனால் இதே கோஷம் சென்ற தேர்தலின்போது டிரம்ப் பயன் படுத்தியதுதான்.

நரேந்திர மோடியைக் குஷிப் படுத்தும் விதத்தில் டிரம்ப்பும், அவரை வானளாவப் புகழ்ந்து தள்ளினார்.
இதற்கு முக்கியக் காரணம், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூவுஸ்டன் பாரம்பரியமாக குடியரசு கட்சிக்கு செல்வாக்கு உள்ள இடமாகும். ஆனால் இப்போது இங்கே ஜனநாயக கட்சிக்கு செல்வாக்கு வளர்ந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

எனவே, எந்த அளவிற்கு சாத்தியமோ அந்த அளவிற்குத் தங்கள் கட்சிக்கு வாக்குகளைத்திரட்டிட வேண்டும் என்பதில் டிரம்ப் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்.
மோடியும் அயல்துறை அமைச்சர் ஜெய்சங்கர் போன்ற அவரது ஆலோச கர்களும் டிரம்ப்பைக் குஷிப்படுத்து வதன் மூலம், காஷ்மீர் பிரச்சனையில் தங்களுக்கு எதிராக எதுவும் கூறாது டிரம்பின் வாயை அடைத்துவிடலாம் என்றும், இம்ரான்கானின் கெஞ்சுதல்க ளுக்கு இரையாகாமல் செய்துவிட லாம் என்றும் நம்பினார்கள். கூடுதலாக டிரம்ப்புடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை யும் ஏற்படுத்திக் கொள்ளலாம் எனவும் நம்பினார்கள்.


எனினும், டிரம்ப்பின் பக்கம் சாய்வ தும், டிரம்ப்பை முகஸ்துதி செய்வதும் அபாயகரமான ஒன்றாகும்.  டெல்லுரி யான் என்னும் அமெரிக்க இயற்கை வாயு நிறுவனத்துடன், இந்திய நிறு வனமான  பெட்ரோநெட் சுமார் 2.5 பில்லியன் (250 கோடி) டாலர் முத லீட்டுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
இதற்கான ஒரு மேம்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெ ழுத்தாகி இருக்கிறது. எனினும் இது தொடர்பான வர்த்தகப் பேரம் மிகவும் சுமுகமானதாக இருந்திட வேண்டும் என்று இந்தியா விரும்பியபோதிலும், இதுதொடர்பாக எவ்விதமான வர்த்தக ஒப்பந்தமும் நியூயார்க்கில் மோடியும் டிரம்ப்பும் சந்தித்துக்கொண்டு, அதி காரப்பூர்வமாக பேச்சுவார்த்தை களை நடத்தியபோது அறிவிக்கப்பட வில்லை.

இவர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உடனி ருந்த போதிலும்கூட, பல்வேறு அம்சங் களில் அமெரிக்கா தன் நிலைப்பாடு களைத் தளர்த்திக் கொள்ளவில்லை. இதன்காரணமாக இந்தியா, பல்வேறு வடிவங்களில் அமெரிக்கா கூடுதலாகக் கோரும் வரிகளைக் கட்டியாக வேண்டும்.
வர்த்தகப் பேரங்களில் அமெரிக்கா அதிகமான அளவிற்கு நம்மிடமிருந்து சலுகைகளை எதிர் பார்க்கிறது, மேலும் மிகப்பெரிய அள வில் இந்தியச் சந்தையைத் தங்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்றும் கோரி யிருக்கிறது.
இவை அனைத்துக் கும் எவ்வித ஆட்சேபணையுமின்றி இந்தியா ஒப்புக்கொண்டிருக்கிறது.
மோடி அரசாங்கம், ஆசியாவில் அமெரிக்காவின் போர்த்தந்திர நடவ டிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துப் போகக்கூடிய விதத்தில், தன் விருப்பத்தினைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

நியூயார்க்கில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்தி ரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடு களின் அமைப்பு சார்பாக நடைபெற்ற இணைச் செயலாளர்கள் மட்டத்தி லான கூட்டத்தின்போது, இந்நாடுக ளின் மேம்படுத்தப்பட்ட அயல்துறைச் செயலாளர்கள் அளவிலான கூட்டத் தில் பங்கேற்கவும் இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது.   இப்படியெல்லாம் அமெரிக்காவுக்கு அடிபணிந்து  செல்வதன்மூலமாக அமெரிக்கா, பாகிஸ்தானுடன் வைத்திருக்கும் உறவுகளிலிருந்து அதனை வெட்டி விடலாம் என்ற இந்தியாவின் நினைப்பு, பொய்த்துப் போய்விட்டது.

ஏனெனில், ஜனாதிபதி டிரம்ப்,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்து, மீண்டும் ஒருமுறை காஷ்மீர் பிரச்ச னையில் இரு நாட்டின் தலைவர்களும் விரும்பினால் சமரசம் செய்து வைக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்கிற டிரம்ப்பின் குறிக் கோள் நிறைவேறும்வரை, பாகிஸ் தான் அமெரிக்காவிற்கு ஒரு தவிர்க்க முடியாத கூட்டாளியாக இருப்பது தொடரும்.
நரேந்திர மோடி, ஹூவுஸ்டனில் நடைபெற்ற கூட்டத்தில் டிரம்ப்பிற்கு மிகவும் ஆடம்பரமான முறையில் ஆதர வினைத் தெரிவித்ததற்கு மற்றுமொரு காரணமும் உண்டு.
இஸ்ரேலைச் சேர்ந்த பெஞ்சமின் நேதன்யாகு போன்று, நரேந்திர மோடியும் டொனால்டு டிரம்ப்பின் ஒரு சித்தாந்த ரீதியான ஆத்மார்த்த நண்பர்தான்.
 இவர்கள் அனைவருமே  வலதுசாரி, தேசிய இனவெறிப் பண்பினைப் பெற்றி ருப்பவர்கள்தான்.

 ஓர் அடிமை, தன் ஆண்டைக்குக் காட்டும் விசுவாசத்தைப் போல மோடி, டிரம்பிற்குக் காட்டியி ருப்பதிலிருந்து, நரேந்திர மோடி தன்னுடைய சொந்த படுபிற்போக்குத் தனமான உலகக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
                                                                                                      -ச.வீரமணி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நினைவில் கொள்ளுங்கள்.

 சுரன் 260919
 செப்டம்பர் .
29 - ஐ.பி.பி.எஸ்., ஆபீஸ் அசிஸ்டென்ட் மெயின் தேர்வு

அக்டோபர் 
.12,13,மற்றும் 19, 20 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ.,முதல் நிலைத் தேர்வு

நவம்பர் .
17 - என்.டி.ஏ., தேர்வு
30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு

டிசம்பர் 
.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு
7,8,மற்றும் 14,15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் முதல் நிலைத்தேர்வு
நபார்ட் வங்கியில் வேலை.


 மத்திய அரசின் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி நபார்டு. இங்கு 'டெவலப்மென்ட்' உதவியாளர் (82), 'டெவலப்மென்ட்' உதவியாளர்/இந்தி (9) என 91 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 18 - 35. வயது வரம்பு தளர்ச்சி உண்டு.

தகுதி: * ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, 69 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
* இந்தி பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்தி அல்லது ஆங்கில பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.32,000

கடைசி நாள்: 2.10.2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (ஆன் லைன்), நேர்முகத் தேர்வு

விபரங்களுக்கு: https://www.nabard.org.
 --------------------------------------------------------------------------------



 ரிசர்வ் வங்கிப் பனி.











ஆன்லைன் முறை விண்ணப்பம் தொடங்கும் நாள் – செப்டம்பர் 21, 2019

















ஆபிசர்ஸ் கிரேடு பி (டிஆர்)- டிஎஸ்ஐஎம் பதவிக்கு புள்ளியியல்/ கணித புள்ளியியல்/ கணித பொருளாதாரம்/ எகானாமெட்ரிக்ஸ்/ புள்ளியியல் மற்றும் இன்பர்மேட்டிக்ஸ் ஆகிய பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.






















ரிசர்வ் வங்கியின் கிரேடு பி அதிகாரிக்கு அடிப்படைச் சம்பளம் 35,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே 35150-1750 (9)-50900-இபி-1750 (2)-54400-2000 (4)-62400 என்ற முறையில் வழங்கப்படும்.


*--------------------------------------------*---------------------------------------*--------------------* 


ஆயுள் காப்பீட்டு கழகம் ( Life Insurance Corportaion LIC) நிறுவனத்தில், காலியாக உள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 






இந்த பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு மட்டுமே போதும் என்பதால், பட்டதாரிகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மொத்தக் காலிப்பணியிடங்கள் : 7,871 பணியிடங்கள்

மண்டல வாரியாக பணியிடங்கள்
வடக்கு மண்டலம் – 1544
மத்திய வடக்கு மண்டலம் – 1242
மத்திய கிழக்கு மண்டலம் – 1497
கிழக்கு மண்டலம் – 980
மத்திய மண்டலம் – 472
மத்திய தெற்கு மண்டலம் – 632
தெற்கு மண்டலம் – 400
மேற்கு மண்டலம் – 1104

சம்பளம் : மாதம் ஒன்றிற்கு ரூ.14,435
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு

தேர்வு முறை : முதனிலை தேர்வு,
 முதன்மை தேர்வு மற்றும்
நேர்முகக்காணல்  மூலம் தகுதியுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள் :
பணியிட அறிவிக்கை வெளியான நாள் : செப்டம்பர் 17, 2019
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான இறுதிநாள் : அக்டோபர் 01, 2019
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் : அக்டோபர் 22, 2019

விண்ணப்ப கட்டணம் :
எஸ்.சி மற்றும் எஸ்.சி பிரிவினருக்கு ரூ.85 + ஜிஎஸ்டி
மற்ற பிரிவினருக்கு ரூ.510 + ஜிஎஸ்டி
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான நேரடி லிங்க் : //ibpsonline.ibps.in/licastaug19/
--------------------------------------------------------------------------------------------------------------------------------- 

 தமிழ்நாடு,கேரளாவில் 

ஏன் மோடி வித்தை செல்லுபடியாகவில்லை.

நாடு முழுவதும் வடமாநிலங்களில் பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது பா.ஜ.க. தென்மாநிலங்களில் தமிழகம் மற்றும் கேரளாவில் பா.ஜ.க-வால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாமல் போனது.
 இதற்கு இந்த இருமாநிலங்களிலும் உள்ள திமுக,கம்யூனிஸ்ட் போன்ற எதிர்க்கட்சிகளே காரணம் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரும்,கேரளாவைச்சேர்ந்தவருமான ஜான் ஆபிரகாம் மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.


அவரிடம் ஊடகத்தினர் “உங்கள் சொந்த மாநிலமான கேரளாவில், பிரதமர் மோடிக்கு ஏன் செல்வாக்கு இல்லை?” என்று கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்துப் பேசிய நடிகர் ஜான் ஆபிரகாம், “கேரளத்தில், மோடியால் ஏன் இன்னும் ஜெயிக்க முடியவில்லை எனக் கேட்கிறீர்கள்.
சொல்லப்போனால் அதுதான் கேரளத்தின் அழகு. கேரளாவில் ஒவ்வொரு 10 அடி இடைவெளியிலும் ஒரு இந்து கோயில், மசூதி, தேவாலயம் இருக்கும். அவை மூன்றையும் அங்கு பார்க்க முடியும். அங்கு எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியாக வழிபாடு நடக்கும்.
உலகமே இன்று முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு கேரளம் தான். எல்லா மதங்களும், இனங்களும் ஒரே இடத்தில் அமைதியாக வாழமுடியும் என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம் கேரளம்தான்.
அதுமட்டுமல்ல, கேரளா ஒரு கம்யூனிச மாநிலம். ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தபோது கேரளத்தில் அவருடைய பதாகைகளை ஏந்தி பலர் இரங்கல் செலுத்தியது என் நினைவில் இருக்கிறது. எனது சிறுவயதில் கார்ல் மார்க்ஸ் பற்றிய புத்தகத்தை கொடுத்து எனது தந்தை படிக்கச் சொன்னார்.
கேரளத்தில் ஒவ்வொரு மலையாளிக்குள்ளும் ஒரு கம்யூனிஸ்ட் இருக்கிறான். சமத்துவமான வாழ்க்கை, சமமான பொருளாதார பங்கீடு ஆகியவை தான் எங்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் ஜொலிக்கும் கோயில் தான் கேரளா” என அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு ஜான் ஆபிரகாம், அரசியல் பேசியதே  இல்லை.
 தற்போதுதான்  ஒரு கேள்வியின் மூலம் ஜான் ஆபிரகாம் அரசியல் பார்வை வெளிப்படையாகியுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
             "என்ன கொடுமையா இது?"

இப்படியெல்லாமாவா மனு கொடுப்பாங்க?

தாங்க முடியல............,
 சிரிப்பைத்தான்.!
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?