உங்கள் வீடுகளில் நுழைகிறது

தேசிய பொருளாதார நெருக்கடி
உலக  அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததன் காரணமாக  விமான எரிபொருளின் விலை ஒரு சதவீதம் குறைந்தும், அதன் பலன் மக்களுக்குப் போய் சேரவிடாமல் செய்கிறது மோடி அரசு.

மானியமில்லா வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ரூ.15.50 பைசா உயர்த்தியும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 விமானங்களுக்குப் பயன்படும் எரிபொருள் விலை லிட்டருக்கு ஒரு  சதவீதம் அதாவது ரூ.596.62 பைசா  குறைக்கப்பட்டு, கிலோ லிட்டர் ரூ.62,698.86 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து 3-வது மாதமாக  விமான எரிபொருள் விலை குறைக்கப் பட்டுள்ளது.

 சந்தையில் விற்பனை செய்யப்படும் மானியமில்லாத 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு விலை  ஒன்றுக்கு ரூ.15.50 பைசா உயர்த்தப் பட்டுள்ளது.
இதனால், சந்தையில் ரூ.574.50 பைசாவுக்கு விற்பனையான சிலிண்டர் இனி ரூ.590 ஆக விலை உயர்த்தப்படுகிறது.
 மேலும், கிராமங்களில் மானிய விலையில், ரேசன் கடைகளில் சாமானிய மக்களுக்கு விற்பனை செய்யப்படும் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 25 காசுகள் விலை உயர்த்தப்பட்டுள் ளது.
கடந்த ஜூலை மாதம் முதல்  மாதந்தோறும் 25 பைசா உயர்த்தப்பட்டு வருகிறது.
மானியம் மூலம் ஏற்படும் ‘இழப்பை’ ஈடுகட்டும்வரை தொடர்ந்து 25 பைசா உயர்த்தப்பட்டு வருகிறது. சந்தையில் மானியமில்லாத மண்ணெண்ணெய் விலை லிட்டர் ரூ.66.58 ஆக இருக்கிறது.



தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
 திண்டுக்கல் - மதுரை செல்லும் சாலையில் கொடை ரோடு உள்ளிட்ட என்.எச். 7 சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாக னங்களுக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கொடைரோடு சுங்கச்சாவடியில் கார், வேன், ஜீப்புகளுக்கு ஒருமுறை  செல்ல கட்டண உயர்வு இல்லை. அதே கட்டணமாக ரூ.60 வசூலிக்கப்படுகிறது.
பலமுறை செல்வதற்கு ரூ.85 வசூ லிக்கப்பட்டது. தற்போது ரூ.5  உயர்த்தப்பட்டு ரூ.90 வசூலிக்கப்படு கிறது.  சரக்கு ஏற்றி வரும் இலகு ரக  வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல  ரூ.100 வசூலிக்கப்பட்டது.
 தற்போது ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.105 வசூலிக்கப் படுகிறது.

பலமுறை செல்ல ரூ.150 வசூலிக்கப் பட்டு வந்தது. தற்போது ரூ.5  உயர்த்தப்பட்டு ரூ.155 ஆக வசூ லிக்கப்படுகிறது.
 4 சக்கர வாகனங் களாக லாரி, பேருந்துகளுக்கு ஒரு முறை செல்ல ரூ.200 வசூலிக்கப் பட்டு வந்தது.
ரூ.10 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.210 ஆக வசூலிக்கப் படுகிறது.
பலமுறை செல்ல ரூ.305 வசூ லிக்கப்பட்டது.
தற்போது ரூ.5 உயர்த்தப் பட்டு ரூ.310 வசூலிக்கப்படுகிறது.
  கனரக வாகனங்கள் ஒருமுறை செல்ல ரூ.325 வசூலிக்கப்பட்டது. ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.335 வசூலிக்கப் படுகிறது.  பலமுறை செல்ல ரூ.485 வசூலிக்கப்பட்டு வந்தது.
 தற்போது ரூ.15 உயர்த்தி ரூ.500 ஆக வசூலிக்கப்  படுகிறது.
மேலும் கார் வேன் ஜீப்பு களுக்கு மாத கட்டணமாக ரூ.1785-ம், இலகு ரக வாகனங்களுக்கு ரூ.3125-ம், லாரி பேருந்களுக்கு ரூ.6250-ம், கனரக வாகனங்களுக்கு ரூ.10,045-ம், வசூலிக்கப்படுகிறது.
 பொதுவாக செப்டம்பர் மாதத்தில் இந்த கட்டண உயர்வை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் அமலாக்கி வருகின்றனர்.
ஒருபுறம் உயர்ந்து கொண்டே வரும் பெட்ரோல் விலை,சுங்க சாவடி கட்டண உயர்வு ஒவ்வொரு 40 கி.மீ ,யிலும். அதனால் உண்டாகும் விலைவாசி உயர்வு.
மறுபுறம் லடசக்கணக்கில்  வேலைவாய்ய்பு இழப்புகள்&கோடிகளில் வேலைவாய்ப்பின்மை என தாக்குதல்  மக்கள் விழி பிதுங்காமல் என்ன செய்யும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆபத்தான தனியார் மயம்.
இதுவும் தேசப் பாதுகாப்போடு இணைந்த முக்கியமான விஷயம்தான்;
ஆனால், பொதுவெளியில் அதற்கு உரிய கவனம் அளிக்கப்படுவ தாகத் தெரியவில்லை.
பொருளாதார அடிப்படை உணர்வின்றி சென்ற ஐந்தாண்டு ஆட்சியில் மோடி எடுத்த நடவடிக்கைகள்தான் இன்று இந்தியா பொருளாதாரத்தையே படுகுழியில் தள்ளியுள்ளது.

இன்று காங்கிரஸ் ஆட்சியிருந்தாலும் கூட இந்த சரிவு இருந்திருக்கும்.காரணம் மோடி சென்ற ஐந்தாண்டுகளில் எடுத்த பணமதிப்பிழப்பு,ஜி.எஸ்.டி என்ற பெயரில் கொண்டுவந்த குளறுபடியான வரிகள்தான் இன்றைய நிலைக்கு கரணம்.
காங்கிரஸ் இன்று ஆட்சியில் இருந்தால் கூட நிலையை சரி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
ஆனால் மீண்டும் மோடி வந்தது பெரும் சாபம்.
நடவடிக்கை என்ற பெயரில் மீண்டும் அழிவு வேலையைத்தான் செய்கின்றனர்.
வங்கிகள் இணைப்பு நிர்மலா சீதாராமன் கனவுக்கு எதிர்மாறான செய்தியைத்தான் தரும்.காரணம் ஆறுமாதமாகும் வங்கிகள் இணைப்புக்கான நடவடிக்கைகள் வங்கிகளின் கடன் வழங்கல்,பிரித்தல்  போன்ற நடவடிக்கையை நிறுத்திவிடும்.
நட்டமான வங்கி கடன் சுமை நன்றாக நடந்தவங்கியை நாசமாக்கும்.
பொருளாதாரத்தை நாசமாக்கிய மோடிக்கும்பல் தற்போது நாட்டின் பாதுகாப்பையே நாசம் செய்ய முயற்சிக்கிறது.
காரணம் பாதுகாப்புத்துறையில் உள்ள இதுவரை கடும் பாதுகாப்பில் இருந்த தயாரிப்பு றுவனங்களையெல்லாம்
தனது லாபம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்ட கர்ப்பரேட்களிடம் விட மோடி முயற்சிக்கிறார்.அம்பாணிகள் ,காதணிகள்,அகர்வால்கள் முறைகேடுகள் உலகறிந்த உண்மை.அவர்கள்தானே மோடியின் அன்புக்குரியவர்களும் கூட .
 பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் 41 ராணுவத் தளவாடத் தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிந்துவரும் 80 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்களும், 50 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் சமீபத்தில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.


 “பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கிவரும் இந்நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களாக்குவதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை” என்று பாதுகாப்புத் துறைச் செயலர் அளித்த உறுதிமொழியின் பெயரில் இந்தப் போராட்டத்தைப் பிறகு அவர்கள் தள்ளிவைப்பதாக அறிவித்திருந்தாலும், இன்னும் இது தொடர்பாக அரசு என்ன முடிவு எடுக்கும் என்ற கவலை அவர்களை விட்டுச்சென்ற பாடில்லை.

இந்தக் கவலை அவர்களுக்கு மட்டும் சொந்த மானது அல்ல; நம் ஒவ்வொருவரோடும் சம்பந்தப்பட்டது.

ராணுவத் தளவாட உற்பத்தி, நாட்டுப் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமானது என்பதோடு, ராணுவ ரகசியங்கள் தொடர்புடையதும்கூட. அந்நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பது தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிடுகிறார் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானியான டில்லிபாபு.
 பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் 41 ராணுவத் தளவாடத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் 17 நிறுவனங்கள், பிரிட்டிஷ் காலனியாட்சிக் காலத்திலேயே உருவாக்கப்பட்டவை.

முதல் உலகப் போரிலும், இரண்டாவது உலகப் போரிலும் இந்தியாவில் உற்பத்திசெய்யப்பட்ட தளவாடங்களைத்தான் பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசு பயன்படுத்தியிருக்கிறது. உதாரணமாக, தமிழகத்தில் நீலகிரி அரவங்காட்டில் செயல்பட்டுவரும் வெடிமருந்துத் தொழிற்சாலை 1902-ல் தொடங்கப்பட்டது. ஆங்கிலேய அரசு காப்பீட்டுத் துறையில், வங்கித் துறையில், போக்குவரத்துத் துறையில் தனியாரை அனுமதித்தது.
 ஆனால், பாதுகாப்புத் தளவாட உற்பத்தியைத் தன்னிடமே வைத்துக்கொண்டது.
அந்த அளவுக்குப் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை மிக முக்கியமான துறையாக அவர்கள் பார்த்தார்கள். ஆவடி டாங்கி நிறுவனமும், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையும் விடுதலைக்குப் பின் தொடங்கப்பட்டவை.
சமீபத்தில் ‘சந்திரயான் 2’ விண்கலம் நிலவை நோக்கி ஏவப்பட்டது.
அதற்கான வெடிமருந்து எரிபொருள் நாக்பூரில் பந்த்ராவில் செயல்பட்டுவரும் ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனத்திலிருந்து பெறப்பட்டதாகும். இதற்காக ஜூலை 30, 2019 அன்று இஸ்ரோ இயக்குநர்  மோகன், பந்த்ராவில் உள்ள நிறுவனத்தைப் பாராட்டி,  அந்நிறுவனத்தின் பொது மேலாளருக்குக் கடிதம் அனுப்பி யுள்ளார்.
 தமிழகத்தில், நெல்லை மாவட்டம், மகேந்திரகிரி யில் உள்ள இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனமும் எரிபொருள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்பு டைய மிக முக்கியமான பணிகளை மேற்கொள்கிறவை.

இந்த நிறுவனங்களை படிப்படியாகத் தனியார்மயத்தை நோக்கி நகர்த்தவே அரசு முயன்றுவருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் பாதுகாப்பு தொடர்புடைய 250 ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பில் தனியாரை அனு மதித்துள்ளதும் இதே அரசுதான்.
இந்தியப் பெருநிறு வனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் பாதுகாப்புத் துறையில் 100% முதலீட்டில் உற்பத்தியில் ஈடுபடலாம் என்ற முடிவை அரசு ஏற்கெனவே எடுத்துள்ளது. இந்த முதலீட்டு வரம்பு முன்பு 26% ஆக இருந்தது.
மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் 49% பங்குகள் மட்டுமே அரசிடம் இருந்தால் போதும் என்றும் 51% பொதுத் துறை பங்குகளைத் தனியாருக்கு விற்பதென்றும் மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.

பெரும்பான்மை பங்குகள் தனியாரிடம் சென்றால், நிர்வாக அதிகாரமும் தனியாரிடம் செல்லும். உதாரணமாக, மிகப் பெரிய மின் உற்பத்திப் பொதுத் துறை நிறுவனமான என்டிபிசியில் தற்போது 56% பங்குகள் அரசிடம் உள்ளன.
 இதில் மேலும் 10% பங்குகளை விற்பதென்று மத்திய அரசு முடிவெடுத்து விட்டது. 46% பங்குகள் மட்டுமே அரசிடம் இருக்கும் என்றால், நிர்வாகத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள்தானே இது?
அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கும் அரசு, இப்போது பாதுகாப்புத் துறையின் ராணுவத் தளவாடத் தயாரிப்பு நிறுவனங்களையும்கூடத் தனியாருக்குக் கைமாற்றிவிட முயல்கிறது.
பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கிவரும் இந்த நிறுவனங்களைப் பொதுத் துறை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றினால் என்ன தவறு என்ற கேள்வி எழுவது இயல்பானது. ஒரு வேளை, தொழில்நிறுவனச் சட்டத்தின் கீழ் அந்த நிறு வனங்களைக் கொண்டுவந்தால், அவற்றைத் தனியார்மயப் படுத்துவது எளிதானது. அரசின் நோக்கம் அதுதான் என்றா லும், அதை வெளிப்படையாக ஒருபோதும் சொல்லாது.

தனியார்மயத்தை நோக்கி இந்த ஆலைகளை அரசு நகர்த்துவதன் பின்னணியில் பல பின்னோக்கங்கள் இருக்கலாம் என்று ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அவற்றில் பிரதானமான ஒன்று, பாதுகாப்பு அமைச்சக த்தின் கீழ் இயங்கிவரும் 41 ராணுவத் தளவாடத் தயாரிப்பு  நிறுவனங்கள் மற்றும் தொழிற்கூடங்களுக்குச் சொந்தமாக 17.3 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.
ந்நிலங்களின் இன்றைய மதிப்பு கணக்கில் அடங்காதது. இவற்றையும் சேர்த்து குறிவைத்துதான் இந்த முடிவு என்ற ஊழியர் களின் சந்தேகத்தைப் புறந்தள்ளிவிட முடியாது. இத்தகைய நகர்வுகளுக்கு ஏற்கெனவே நிறைய முன்னுதாரணங்கள் உண்டு. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் நேரடியாக இருந்த தொலைபேசி துறை விஎஸ்என்எல், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகிய மூன்று கார்ப்பரேட் நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டது.
அவற்றில் விஎஸ்என்எல், டாடா குழுமத்திடம் விற்கப்பட்டது. தற்போது பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலையில் பிஎஸ்என்எல் தள்ளாடுகிறது. இத்தகைய பாதிப்புகள் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் 41 நிறுவனங் களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் சேர்த்து தான் அந்நிறுவனங்களின் ஊழியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தினார்கள்.

கடந்த 70 ஆண்டுகளில் காணாத அளவுக்குத் தற்போது மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவருகிறோம் என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
அரசின் தவறான கொள்கை முடிவுகள், அது செல்லும் பாதை சரியில்லை என்பதன் வெளிப்பாடுதான் இன்றைக்கு இந்தியா எதிர்கொண்டுவரும் அந்த நெருக்கடி.  பொதுத் துறை நிறுவனங்கள் என்பவை அரசுக்கு அதன் கைப்பிடியில் பொருளாதாரம்சார் சில வல்லமைகளை வழங்கக் கூடியதும்; முன்னுதாரண நிர்வாகத்துக்கான வாய்ப்பும் ஆகும்.
 அதிலும் பாதுகாப்புத் துறைசார் பொதுத் துறை நிறுவனங்கள் கூடுதல் முக்கியத்துவம் மிக்கவை.
கடந்த காலத் தவறுகளுக்கு அரசு முகங்கொடுக்க வேண்டிய நாட்கள் இவை.
மறுபரிசீலனையின்றி தன் போக்கை அரசு தொடர்வது பேரபாயத்தில் கொண்டுபோய்விடும்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 
ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது.
கடந்த 2019 ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சத்து 2 ஆயிரத்து 83 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2019 ஆகஸ்டில் 98 ஆயிரத்து 202 கோடி ரூபாயாக குறைந்து விட்டது.

2018 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் வருவாய் 4.51 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. இருப்பினும், 2019 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, 3 ஆயிரத்து 881 கோடி ரூபாய் சரிவு ஏற்பட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில்- அதாவது ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 865 கோடி, மே மாதத்தில் ரூ. 1 லட்சத்து 289 கோடி, ஜூனில் ரூ. 99 ஆயிரத்து 939 கோடி, ஜூலையில் ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 83 கோடி என்ற அளவிற்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் மாத வருவாயில், சிஜிஎஸ்டி (CGST) ரூ. 17 ஆயிரத்து 733 கோடி, எஸ்ஜிஎஸ்டி (SGST) ரூ. 24 ஆயிரத்து 239 கோடி, ஐஜிஎஸ்டி (IGST) ரூ. 48 ஆயிரத்து 958 கோடி என வசூலாகியுள்ளது. மத்திய அரசின் பங்கு ரூ. 40 ஆயிரத்து 898 கோடியாகவும், மாநிலங்களின் வருவாய் ரூ. 40 ஆயிரத்து 862 கோடியாகவும் உள்ளது.

குறைவுக்கு காரணம் பல தொழில் நிறுவங்கள் நட்டத்தில் மூடபப்ட்டது என்பதுதான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?