காப்பீட்டைக் காப்பது யார்?

 வலுவான கோட்டையையும்
 நலிவுற வைத்த மோடி.
இந்திய ஆயுள் காப்பிட்டுக் கழகம் எல்.ஐ.சி நிறுவனம் நாட்டில் அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள காப்பீடு நிறுவனம்.
 1956ம் தொடங்கப்பட்ட இந்த நிறுவனந்தின் தற்போதைய (மோடி ஆட்சிக்கு வரும் முன்னர் )மொத்த மதிப்பு 31 லட்சம் கோடியாகும்.

ஆனால் பாஜக மோடி ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் பங்குகள் வீழ்ச்சி அடையும்போது

அதைச் சரி செய்ய மத்திய அரசின் அழுத்தம் காரணமாக அந்த நிறுவனங்களில் பங்குகளை எல்‌ஐ‌சி வாங்க மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து விருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக ஐ‌டி‌பி‌ஐ வங்கியில் பெரும்பான்மை பங்குகளை (21,624 கோடி) 2018 ஜூன் மாதம் வாங்குவதாக எல்‌ஐ‌சி அறிவித்தது.

 2017 அக்டோபர் மாதம் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் 5,641 கோடியும், 2018 மார்ச் மாதம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் 2,843 கோடியும் முதலீடு செய்தது.

தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷனில் 2017ம் ஆண்டு 4,275 கோடியை முதலீடு செய்திருந்தது.
 ஆனால் முதலீடு செய்யப்பட்ட நிறுவனங்களின் மதிப்பு தற்போதைய காலகட்டத்தில் மிகக் குறைந்து இருக்கிறது.
ஐ‌டி‌பி‌ஐ வங்கியில் 21,624 கோடி முதலீடு செய்த நிலையில் அதன் தற்போதைய மதிப்பு 10,967 கோடியாக குறைந்து இருக்கிறது.

ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 5,641 கோடி முதலீடு செய்யப்பட்ட நிலையில் தற்போதைய மதிப்பு 2,979 கோடியாக குறைந்து இருக்கிறது.
 இவற்றின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் எல்‌ஐ‌சி நிறுவனத்திற்கு 20,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
மேலும் நடத்தை சந்திக்கும் தனிநபர் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளையும் தற்போது வாங்கக்கூறி அழுத்தம் கொடுத்து வருகிறது  மோடியின் பாஜக அரசு.

இதுகுறித்து காப்பிட்டுக் கழக ஊழியர்கள் சங்கத்தின் ஆனந்திடம் கேட்டபோது

"மத்திய பா.ஜ.க அரசு ரிசர்வ் வங்கியை மிரட்டி எப்படி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி பெற்றதோ அதேபோல தான் எல்‌ஐ‌சியிடம் இருக்கக்கூடிய பணத்தை வைத்து நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடையும்போது அந்தப் பங்குகளை வாங்கும்படி மிரட்டப்பட்டது.

அந்த பங்குகள் எல்ஐசி-யால் வாங்கப்படும்போது வீழ்ச்சி அடைந்த பங்குகளின் விலை அதிகாரிக்கும்; அதன் காரணமாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காக எல்‌,ஐ‌.சியின் பணம் வெளியில் சென்றது.
அனால் மோடி அரசின் தவறான மற்ற பொருளாதாரக் கொள்கைகளின்  காரணமாக இந்தியாவில் பொருளாதாரமே சரிவிற்கு ஆளாகி வருகிறதால்  எல்‌,ஐ‌.சியின் பணம் திரும்ப கால்வாசி கூட வருமா என்பது கேள்விக்குறியாகி விட்டது.

மத்திய பா.ஜ.க அரசின் இந்த வற்புறுத்தல் காரணமாக இரண்டு ஆண்டுகளில் இத்தகைய கடும் இழப்பை எல்‌ஐ‌சி சந்தித்து இருக்கிறது.” எனத் தெரிவித்தார்.
 --------------------------------------------------------------------------------------------------------------------------------------
 வாய்மையே வெல்லும்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டமும், அதன் நூறாவது நாள் ஊர்வல களேபரத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் நிகழ்ந்து ஓராண்டுக்கு மேலாகிறது.

 தேசம் தாண்டியும் தமிழக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிப்புகள் உருவாகின இந்த விவகாரத்தில். இந்த சம்பவத்தை விசாரிக்க தனி நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் விசாரித்துக்கொண்டிருக்கையிலேயே சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் சட்டமன்றத்திலேயே "ஸ்டெர்லை துப்பாக்கி சூடு ஒரு நாடகம்" என கிணடலடித்தார்.
13 பேர்கள் சும்மாவா இடத்திலேயே சுடப்பட்டும்,அதன் பின்னர் தேடுதல் வேட்டையில் காவலர்களால் சுட்டுக்கொல்லப் பட்டவர்கள் 3.
இவ்வளவு கொடுமையும் தூத்துக்குடி மக்கள் மனதில் மட்டுமல்ல,உலகமுழுக்க உள்ள தமிழர்களை கோபம் கொள்ளச்செய்தது.
பதவியை பெரிதாகக்கொண்ட அதிமுகவினர் அதிகாரத்தையும்,காவல்துறையையும் கையில் வைத்துக்கொண்டு ஸ்டெர்லைட் க்கு ஆதரவாக மோடியின் பேச்சுப்படி ஆடினார்.

காவல்துறை அமைச்சரான பழனிச்சாமியோ தூத்துக்குடி மக்கள் துப்பாக்கிசூட்டை தொலைக்காட்சியைப்பார்த்துதான் தெரிந்து கொண்டதாக கொஞ்சமும் வெட்கமின்றி,கூச்சமின்றி கூறினார்.அப்படி பட்டவர் இந்த சூட்டை நாடகம் அதைவைத்து திமுக அரசியல் செய்வதாக கூறுகிறார்.
நாடகம் என்றால் பறி போன படுகொலை செய்யப்பட்டவர்கள் உயிர்கள் நடக்க முடிவில் திரும்பி வந்துவிட்டதா என்ன?
இந்த அருணா என்பரால் உருவாக்கப்பட்ட ஆணையம் தனது விசாரணை அறிக்கையை சில நாட்களுக்கு முன் அரசிடம் தாக்கல் செய்தது.
 அந்த அறிக்கையில் தரப்பட்டுள்ள  தகவல்கள் ஆளும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ. வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன என கூறப்படுகிறது.
அப்படி அந்த அறிக்கையில் என்ன இருக்கிறதாம்?....

“துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்கள் என்று பதினெட்டு வயதில் இருந்து முப்பது வயதுக்குட்பட்ட பலரை போலீஸ் கைது செய்துள்ளது. பலர் நடுராத்திரியில் விசாரணை ஏதுமின்றி கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு வழக்குகள் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களைக் கைது செய்ய விவகாரத்டில் காவல்துறையினர் சட்ட நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை.
 இதனால் பல இளைஞர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆகவே நானூற்று இருபத்து எட்டு பேர் மீது பதிவு செய்யப்பட்ட இருநூற்று நாற்பத்து நான்கு வழக்குகளை அரசாங்கம் வாபஸ் வாங்க வேண்டும்.
வழக்கில் சிக்கிய இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் குற்றமற்றவர்கள் என்று மாவட்ட நிர்வாகம் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும்.
துப்பாக்கிச்சூடு நிகழ்வுக்குப்பின்னரும் காவல்துறை ஒருமாதம் தூத்துக்குடி மக்கள் மீது நடத்திய தாக்குதலால் உடலளவில் பாதிக்கப்பட்டவர்கள் ,விசாரணை என்ற பெயரில் அத்து மீறியதால் மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்க வேண்டும்.”
 என்றெல்லாம் பரிந்துரைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த பரிந்துரையை  தூத்துக்குடி மக்களும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தரப்பினரும் உண்மை வென்றதாக கூறி கொண்டாடி வருகிறார்கள்.
 ஆனால் அதிமுகவினரும்,காவல்துறையினரும்
‘அறிக்கையில் இப்படி இருக்குது, அப்படியிருக்குதுன்னு யாரோ வதந்தி கிளப்பிவிட்டிருக்காங்க. இந்த அறிக்கை ஒன்றும் தீர்ப்பு இல்லை.’ என்று  மறுத்துப் பேசுகிறார்கள்.

ஒருவேளை விசாரணை அலுவலர் நடுநிலையுடன் உண்மையை கூறி அந்த அறிக்கையில் உள்ளதாக கூறப்படும் தகவல்களே உண்மையில் அந்த அறிக்கையில் இருந்தால்,
இந்த அணில் அகர்வாலுக்கு ஆதரவாக மத்திய,மணிலா அரசுகள் அப்பாவி மக்களை படுகொலை செய்த துப்பாக்கி சூடு சம்பவமானது தமிழக அரசுக்கும், அதை ஆட்டுவிக்கும் மோடி அரசுக்கும் எதிரான மிகப்பெரிய சம்மட்டி அடிதான் !
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 உண்மையை சொல்லக் கூடாது?
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான ஷமிகா ரவி, இந்தியா பெரும் பொருளாதார தேக்கநிலையைச் சந்தித்து வருவதாக ஒத்துக்கொண்டு அதை வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் ட்விட்டரில் பொருளாதார தேக்க நிலை குறித்த ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள ஷமிகா ரவி, “இந்தியா தற்போது பெரும் பொருளாதார தேக்கநிலையைச் சந்தித்து வருகிறது.
இதனைச் சமாளிக்க அனைத்து துறைகளுக்கும் இலக்கு நிர்ணயித்து, தேசிய வளரச்சித் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும்.

பொருளாதாரத்தை சீர்படுத்த பெரிய சீர்திருத்தங்கள் தேவைப்படும்; வெறும் ஒட்டுவேலைகள் பயன்தராது. பொருளாதார வீழ்ச்சியை நிதியமைச்கத்திடம் மட்டும் விட்டுவிடுவது, நிறுவனத்தின் மொத்த வளர்ச்சியையும் கணக்குகள் துறையிடம் ஒப்படைப்பது போன்றதாகும்” என அவர் தெரிவித்திருந்தார்.

அதேப்போல இ-சிகரெட் தடை செய்யப்பட்டபோது கடும் எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தார்.

அதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில்,“ அதிக வரிகள் இருக்கும் போது தடைகள் எதற்கு.?, இதேப்போல மற்ற சிகரெட் மற்றும் புகையிலைப்பொருட்கள் இருக்கும் போது இ-சிகரெட்டுக்கு மட்டும் தடைவிதிப்பது விசித்திரமாக உள்ளது.

சுகாதாரம் அல்லது நிதி இது இரண்டில் எந்த அடிப்படையில் தடை முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் என்ன அடிப்படை  இருக்கிறது ?” என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து ஷமிகா ரவி நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதில் சஜ்ஜீத் சீனாய் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷமிகா ரவி போன்றே தொடர்ந்து பொருளாதார மந்த நிலையை பேசிவரும் ரத்தின் ராய் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோடி அரசின் தவறான கொள்கையால் விளைந்த பொருளாதார மந்த நிலையை சுட்டிக்காட்டும் அதிகாரிகள், உறுப்பினர்களை தொடர்ந்து இதுபோன்று பதவியில் இருந்து நீக்குவது சரியல்ல, இதன்முலம் அரசு சிறப்பாக செயல்படமுடியாது என பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?