உளவுத்துறையின் குளறுபடியே காரணம்

 புல்வாமா தாக்குதலுக்கு!
- சி.ஆர்.பி.எஃப் அறிக்கை!
கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணித்த பேருந்து மீது, வெடிமருந்துடன் தீவிரவாதி ஒருவன் மோதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினான்.
இதில் 44 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ- முகமது தீவீரவாத அமைப்பு பொறுப்பேற்றது.


இதுகுறித்து சி.ஆர்.பி.எப் மேற்கொண்ட விசரணையை அறிக்கையாக தயாரித்து சி.ஆர்.பி.எஃப் படையின் இயக்குநர் ஜெனரலிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 அந்த அறிக்கையில், ''புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் பலியானதற்கு உளவுத்துறையின் குறைபாடுகளே காரணம். வழக்கமாக விடப்படும் எச்சரிக்கை மட்டுமே விடப்பட்டது.

 ஆனால், கார் மூலம் தற்கொலைப் படை தாக்குதல் சம்பவம் தொடர்பான எவ்வித எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எந்தவொரு உளவுத்துறை அமைப்புகளும் தாக்குதல் தொடர்பான எந்தவித எச்சரிக்கையும் கொடுக்கவில்லை.
 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் கான்வாய் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் ஒரே நேரத்தில் சென்றது தீவிரவாதிகளுக்கு சாதகமாக அமைந்தது'' இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும், பணியில் இருந்த பாதுகாப்பு வீரர் ஒருவர் தற்கொலைப்படை வாகனத்தை நிறுத்த முயற்சித்து அது தோல்வியில் முடிந்ததும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் கான்வாயில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

முன்னதாக புல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி காரணமல்ல என்று உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், அதற்கு நேர்மாறாக தற்போது சி.ஆர்.பி.எஃப்.பின் அறிக்கை வந்துள்ளது.

 மசூத் அசார், ஹபீஸ் சையத், தாவூத் இப்ராஹிம், ஷகி உர் ரஹ்மான் லக்வி ஆகிய 4 பேரை சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றம், ஜம்மு காஷ்மீர் பேரவை, பதான்கோட் உள்ளிட்ட தாக்குதல்களை நடத்திய மசூத் அசாரை மத்திய அரசு பயங்கரவாதி என அறிவித்துள்ளது.


அதேபோல 2000ம் ஆண்டில் டெல்லி செங்கோட்டை தாக்குதல்,
2008ல் ராம்பூர் மற்றும் மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஷகி-உர்-ரஹ்மான் லக்வி-யையும் மத்திய அரசு பயங்கரவாதி என அறிவித்துள்ளது.


மேலும், பல்வேறு பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய ஹபீஸ் சையத், தாவூத் இப்ராஹிம் ஆகியோரும் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐடிபிஐ வங்கி கடந்த செப்டம்பர் 8 2018 அன்று அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கப்பல் கட்டும் நிறுவனத்தின் மீது 1250கோடி வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத குற்றத்திற்காக வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கு விசாரணையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பாக சாட்சி சொன்ன அதிகாரிகள் எங்களது நிறுவனம் திவாலாகி விட்டது எனவே கடனை திருப்பி செலுத்த முடியாது என்று சொன்னார்கள் இதனை ஐடிபிஐ வங்கி ஏற்க மறுத்துவிட்டது ஒருவேளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் .

ஆனால் எங்கள் வங்கி மிகப்பெரிய நிதிச்சுமை மாட்டிக் கொள்ளும் எனவே நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது எங்கள் கடமை என்ற நிறுவனம் கண்டிப்பாக கட்டிய ஆக வேண்டும் என்று உறுதியாகச் சொல்லி விட்டது.
இந்த வழக்கு அப்படியே ஒரு வருடம் சென்று கொண்டிருந்தது.
இன்று திடீரென்று நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் அறிவிக்கும் திவால் நடவடிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று ஐடிபிஐ வங்கி தெரிவித்துவிட்டது.
 ஏன் திடீரென்று திவால் நடவடிக்கையை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் மோடி அரசிடம் இருந்து அந்த அறிவிப்பு வெளியானது.
 அதாவது கடும் நிதிச் சுமையில் இருக்கும் ஐடிபிஐ வங்கிக்கு 9 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அரசு வழங்கும் என்கிற அறிவிப்பு தான் அது.

ஆக ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ஏற்பட்டப்போகும் நிதிச்சுமையை நம் வரிப் பணத்தை கொண்டு தற்போது மோடி அரசு நேர் செய்திருக்கிறது என்பது தான் இதில் உள்ள செய்தி.

இதேபோல ரிலையன்ஸ் நிறுவனத்தின் 4 துணை நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய திரும்ப கட்டாத கடன் மட்டும் 93,900கோடி.

( படத்தை பார்க்கவும்) ஆக இதையும் நம் வரிப் பணத்தைக் கொண்டு நேர் செய்யத்தான் வங்கிகள் இணைப்பு என்ற நாடகம் நடத்தப்படுகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
"லைக் "இல்லாமல் கவலையா ?


சமூக வலைதளங்களில் லைக்ஸ் பெறுவதற்காகவே பலர் அதிக நேரத்தை அதில் செலவிட்டு வருகிறார்கள். லைக்ஸ் பெறுவதற்காக, தவறான பதிவுகளையும், புகைப்படங்களையும் பதிவிடுவதும் நடந்தேறி வருகிறது.
சில பயனாளர்கள், சமூக வலைதளங்களில் பகிரும் பதிவுகளுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிப்பதைக் கூட கவனிக்காமல் வெறும் லைக்குகள் கிடைக்கும் என்ற மனநிலையிலேயே இருக்கின்றனர்.


இதுபோன்ற செயல்களால் போட்டி மனப்பான்மை வளர்ந்து, பிறர் மத்தியில் பொறாமை குணம் போன்ற விரும்பத்தகாத உணர்வுகள் ஏற்படுவதாகவும், தங்கள் பதிவுகளுக்கு லைக்ஸ் வராவிட்டால் மனச்சோர்வு ஏற்படுவதாகவும் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால், மனச்சோர்வுகளை போக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் போஸ்ட்களுக்கு கிடைக்கும் லைக்ஸ்களின் எண்ணிக்கையை மற்றவர்கள் பார்க்க முடியாதபடி மறைக்கும் வசதியை (Hide) இன்ஸ்டாகிராம் கொண்டு வந்துள்ளது.

இது ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து போன்ற நாடுகளில் சோதனை முயற்சியாக கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து ஃபேஸ்புக்கிலும் லைக்குகளின் எண்ணிக்கையை மறைக்கும் புதிய அமைப்பைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
 
இது தொடர்பாகப் பேசியுள்ள ஆப் ஆய்வாளர் ஜேன் மன்சூன், ஒரு பதிவைப் பதிவேற்றிய நபரை தவிர்த்து மற்ற எவருக்கும் அந்த போஸ்ட்டுக்கான லைக்குகளின் எண்ணிக்கை காட்டாத வகையில் குறியீட்டை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், லைக் எண்ணிக்கையை மறைப்பது தொடர்பான சோதனையைப் பரிசீலிக்க உள்ளதாகவும், இதற்கான புதிய அப்டேட் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. இந்தச் சோதனை இன்னும் தொடங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக்கில் லைக்ஸ் வராததால் கவலைப்படுகிறீர்களா? : பயனாளர்களுக்காக வருகிறது புதிய அப்டேட்! பிழைகளின் குவியல் ?
 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!
செப்டம்பர் 1ம் தேதி நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், எண்ணற்ற பிழைகள் மற்றும் தவறுகள் இருப்பதாக தேர்வு பயிற்சியாளர்களும், மாணவர்களும் தெரிவித்துள்ளனர். இதனால், தேர்வர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், டைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட 6,491 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் 1ம் தேதி குரூப் 4 தேர்வை நடத்தியது.
இந்த தேர்வு வினாத்தாளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சில தவறுகள் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

01. தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. தேர்வு வினாத்தாளில் அது குறித்த கேள்விக்கு அக்டோபர் 12, 20,21 மற்றும் அக்டோபர் 25 என்ற 4 விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 12 ல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

02. 1951ம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் பங்கேற்ற கட்சிகள் என்ற கேள்விக்கு 54,64,74 மற்றும் 84 என்ற 4 விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், சரியான விடை 53 ஆகும்.

03. ஜீரோ டிகிரி லாங்கிடியுட் மற்றும் ஜீரோ டிகிரி லாட்டியுட் கொண்ட இடம் என்ற கேள்விக்கு தெற்கு அட்லாண்டிக் மற்றும் ஆப்ரிக்காவின் மேற்கு பகுதி விடைகளாக கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், மேற்கு ஆப்ரிக்கா என்பதே சரியான விடை ஆகும்.

04. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவு உரிமைகள் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. ஆனால், வினாத்தாளில் கடமைகள் என்று குறிக்கப்பட்டிருந்தது.

05. சரியான விடையை பொருத்துக பிரிவில் ஆங்கிலத்தில் முதலாம் லோக்சபா கலைப்பு என்ற இடத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாக குடியரசு தினம் என்று இருந்தது.

 டிஎன்பிஎஸ்சி இந்தாண்டு துவக்கத்தில் இருந்து தற்போது வரை 25 தேர்வுகளை நடத்தியுள்ளது.
இந்த ஒவ்வொரு தேர்வுகளிலும் சுமார் 5 முதல் 15 சதவீதம் வரையிலான பிழைகள் மற்றும் தவறுகள் தவறாது இடம்பிடித்துவிடுகிறது.
குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகளில் அண்மைக்காலமாக கேள்விகள் தவறுதலாக கேட்கப்படும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
அரசு  இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

“விண்டோஸ் கணினியை பயன்படுத்துகிறீர்களா?”

இந்தியாவில் அதிகரித்துவரும் இணைய சேவை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் தாக்கம் இந்தியாவில் உள்ள கிராமங்களிலும் பரவி வருகின்றன.
எளிதாக கைக்குக் கிடைக்கக்கூடிய இணைய சேவைகள் சில நேரங்களில் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் ஆன்லைன் மூலம் நிகழும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இணையப் பாதுகாப்பு பற்றி அரசுக்குப் போதிய அக்கறை இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக பெரிய அளவில் இந்தியாவில் இணையதளக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இணைய பாதுகாப்பு நிறுவனமே தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மென்பொருள் நிறுவனமான குயிக் ஹீல் ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள இணையதள பாதுகாப்பு மற்றும் எதிர்கொள்ள வேண்டிய முடிவு குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.

 அதன் தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டுக்கான அறிக்கையை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 1,852 இணையதளக் குற்றங்கள் நடப்பதாகவும், அந்த குற்றங்கள் பெரும்பாலும் மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு நகரங்களில் அதிகமாக நடப்பதாகவும் கூறப்படுகிறது.

அதனையடுத்து மஹாராஷ்ட்ரா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் அதிகளவில் இணையதள குற்றங்கள் அரங்கேறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் குற்றங்கள் அனைத்தும் கடந்த ஒரு வருடத்தில் மட்டுமே நடைபெற்றவையாகும்.
மேலும், விண்டோஸில் இயங்கும் கணினிகளைக் குறிவைத்து நடப்பதாகவும், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 97.3 கோடி குற்றங்கள் விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படும் கனிணிகளில் மட்டும் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹேக் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு மிக முக்கிய காரணம் தேவையில்லாத ஆப் மற்றும் மென்பொருட்களைப் பயன்படுத்துவது தான் என்று குயிக் ஹீல் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் கூட ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்தனர்.
அதேபோல இந்தியாவில் பல பிரபலங்களின் வங்கிக் கணக்குகளும் கூட ஹேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சைபர் குற்றங்களைத் தடுக்க அரசுகள் போதிய அளவில் செயலாற்றவில்லை என்பதே உண்மை.

------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?