தற்போதுள்ள பதட்டம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மே ஜூன் மாதங்களில் மட்டும் ஓமன் வளைகுடா பகுதியில் அமெரிக்காவின்
ஆறு எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத்
தாக்குதல்களுக்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது.
இதுமட்டுமின்றி ஜூன் 20ஆம்
தேதி ஈரானிய படையினர் ஹர்மோஸ் நீரிணை பகுதியில் பறந்த அமெரிக்காவின்
ஆளில்லா விமானத்தையும் சுட்டுவீழ்த்தியது.
அமெரிக்காவோ அந்த ஆளில்லா
விமானம் சர்வதேச கடல்பகுதியில்தான் பறந்துகொண்டிருந்தது என்றும் சத்தியம்
செய்தது.
ஈரானோ ஆளில்லா விமானம் தனது பாதுகாப்புப் பகுதிக்குள் பறந்து
கொண்டிருந்ததாகக் குற்றம்சாட்டியது. இந்நிலையில் செளதியில் நடந்த இந்த
தாக்குதல் போர்ப் பதற்றத்தை உச்சகட்டமாக்கியுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த 65
ஆண்டுகளாகவே பிரச்னை நீடித்துவருகிறது.
1953 ஆம் ஆண்டு ஈரானில் பொதுத்
தேர்தல் நடைபெற்று அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மதச்சார்பற்ற தலைவரான முகமது
மோசாதேக் பிரதமராக பதவியேற்றார்.
அவர் ஈரானின் எண்ணெய் வளத்தை
தேசியமயமாக்கினார்.
இதனால், அமெரிக்காகவும் பிரிட்டனும் ஈரானில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி, முகமது மோசதேக் ஆட்சியை அப்புறப்படுத்தினர்.
இந்த நிகழ்விலிருந்தே இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் பரஸ்பரம் சிக்கல் தொடங்கியது.
இந்நிலையில்
2002 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய
இரு நாடுகளும் தீமைகளின் பிரதேசம் என்று வர்ணித்தார்.
இதற்கு
ஈரானியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தப் பதற்றத்தைத் தணிக்கவும் இரு நாடுகளுக்கிடையிலும் நட்புறவு ஏற்படுத்தவும் 2013
ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா அரசு முற்பட்டது.
30 ஆண்டுகள்
கழித்து அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொலைபேசி உரையாடல் மூலம் ஈரான்
பிரதமருக்கு இதனைத் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக 2015
ஆம் ஆண்டு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஜெர்மனி ஆகிய
நாடுகளுடன் ஈரான் அணு ஒப்பந்தம் செய்துகொண்டது.
இந்த ஒப்பந்தத்தை விட்டு
அமெரிக்கா தற்போது வெளியேறியதுதான் தற்போது மீண்டும் இருநாடுகளுக்கும்
இடையில் போர்ப் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.
செளதி அரேபியாவில் கடந்த 16
ஆம் தேதி குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயல்கள் மற்றும் அப்காய்
பகுதியில் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இது செளதி வரலாற்றில் நடந்த பேரழிவுகரமான தாக்குதல் என வர்ணிக்கப்படுகிறது.
ஏனெனில் கிட்டத்தட்ட பத்து ஆளில்லா விமானங்களின் மூலம் நடத்தப்பட்ட இந்த
தாக்குதலில், நாட்டின் 50 சதவீத கச்சா எண்ணெய் உற்பத்தி
பாதிக்கப்பட்டுள்ளது.
உலகின்
எண்ணெய் வளமிக்க நாடுகளில் மிக முக்கியமான நாடாக அரேபியா திகழ்வதால்
இந்தத் தாக்குதல்கள் உலக பொருளாதாரத்தைத் தாக்க அதிக வாய்ப்புள்ளதாக
அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலையடுத்து அந்நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி
பாதியாகக் குறைந்துள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின்
விலை உயரத் தொடங்கியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஏமன்
நாட்டில் உள்ள ஹவுத்தி பயங்கரவாதிகள் இந்த தாக்குதலைத் தொடுத்ததாகப்
பொறுப்பேற்றனர்.
ஹவுத்தி பயங்கரவாதிகளின் செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ
வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் 12 இடங்களைத் தாக்குதல் நடத்தக்கூடிய
இலக்குகளாக நிர்ணயித்திருக்கிறோம். அதில் அபுதாபி, துபாய் போன்ற பகுதிகளும்
அடங்கும், எப்போது வேண்டுமானாலும் எங்களால் தாக்குதல் நடத்த முடியும்”
என்று எச்சரித்துள்ளார்.
மேலும்
அந்த அறிக்கையில், இந்த தாக்குதல் ஏமனுக்குள்ளிருந்து நடத்தப்படவில்லை
என்றும் அது நாட்டுக்கு வெளியிலிருந்து நடத்தப்பட்டுள்ளதாகவும்,
ஏமன் நாட்டை விட்டுவிடவில்லை என்றால் ஆளில்லா விமானங்கள் செளதியின் மீது
பறப்பதை உங்களால் ஒரு நாளும் தடுக்கமுடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால்,
இந்தத் தாக்குதலை ஹவுத்தி படையினர் நடத்தியிருக்க முடியாது என, செளதி
திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தத் தாக்குதல் செளதி நாட்டுக்கு
வடக்கிலிருந்தே நடத்தப்பட்டிருக்க வேண்டும். இது ஈரானின் கைவரிசை என்றும்
குற்றம்சாட்டியுள்ளது.
நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய செளதி பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்,
"இந்தத் தாக்குதலை ஏமனிலிருந்து நடத்த நிச்சயம் வாய்ப்பில்லை.
18 ஆளில்லா
விமானங்கள், ஏழு ஏவுகணைகளைக் கொண்டு இந்த தாக்குதல்கள்
நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்று ஈரானிய ஆளில்லா விமானம்" என்றும்
தெரிவித்துள்ளார்.
இந்தத்
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை ரேடார் மூலம் தேடிவருவதாகவும் இது நிச்சயமாக
வடக்கிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால் இதில் நிச்சயம் ஈரான்
சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் செளதி அரேபியா
குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில்
அமெரிக்காவும் ஈரானைக் குற்றம்சாட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு
ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்கா தேவையில்லாமல் தங்கள்
மீது பழி சுமத்தினால், பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும்
எச்சரித்துள்ளது.
இந்த
தாக்குதலுக்கு முன்பிருந்தே ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போர்ப்
பதற்றம் அதிகரித்தபடிதான் இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க
அதிபர் டிரம்ப் ஈரானுடன் அமெரிக்கா போட்டுக்கொண்ட அணு ஒப்பந்தத்தைவிட்டு
வெளியேறினார். சில மாதங்களுக்கு முன்னர் ஈரான் எண்ணெய் கிண்றுகள் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா சிறு விமானங்கள் பறந்து வேவு பார்த்தது.அவற்றை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இது இருநாடுகளுக்கான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து
அமெரிக்கா தனது விமான படைப் பிரிவினரை மத்திய கிழக்குப் பகுதிக்கு
‘பாதுகாப்பு நடவடிக்கைக்காக’ அனுப்பி வைத்தது. இதனால் இந்த பகுதியில்
போர்ப் பதற்றம் அதிகரித்தது.
அமெரிக்காவின் தேவையற்ற செயல்கள் உலகத்தில் பதட்டத்தையே உருவாக்கி வருகிறது.
சாதா நாட்களிலேயே நாள்தோறும் பெட்ரோல் விலையை உயர்த்தி வரும் இந்திய அரசு இதைக்காரனாமாகக் கொண்டு இருமடங்காக பெட்ரோல் விலையை உயர்த்திவிடும் என்பதுதான் இந்திய மக்களிடையே தற்போதுள்ள பதட்டம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
இதுவொரு மழைக்காலம்.
செப்.,24, 25 ஆகிய அடுத்து வரும் இரு தினங்களில் குமரிக்கடல்
தென் தமிழக கடற்கரை பகுதி மற்றும், கடலோரப் பகுதிகளில் வலிமையான
சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் கன்னியாகுமரி, ராமநாதபுரம்,
திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் அடுத்த
48 மணிநேரத்துக்கு தொலைதூர மீன்பிடித் தொழிலில் ஈடுபட வேண்டாம் .
தமிழகம்
மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்திற்கு மிதமானது முதல் கனமழை வரை
பெய்ய வாய்ப்புள்ளது .
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி அடுத்த மூன்று நாட்களில் தமிழகம் நோக்கி நகர்வதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது .

மேலும்,
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின்
சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை தேவகோட்டை மற்றும் தர்மபுரி பாலக்கோட்டில் 11 செ.மீ மழையும், குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது .
------------------------------------------------------------------------------------------------------------------------------------

100ரூபாய் இழப்பீடு பெறப்போய் 77ஆயிரம் ரூபாய்கள் இழப்பு.
பீகாரைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவர் கடந்த 10ம் தேதி தனக்கான உணவை
ஸொமேட்டோவில் ஆர்டர் செய்துள்ளார்.
அவருக்கு வந்த உணவு மோசமான நிலையில் இருந்ததால், அதை கொண்டுவந்தவரிடம் திருப்பி அளித்துள்ளார்.
மேலும், அபரிடம் தனது பணம் ரூ 100ஐ திரும்பத்தர வேண்டும் என விஷ்ணு வாதிட்டுள்ளார்.
அதற்கு அவர் தன்னால் பணத்தை திருப்பித்தர இயலாது. ஸொமேட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு குற்றசாட்டைக்கூறினால் ,அவர்கள் உங்கள் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவார்கள் எனக் கூறியுள்ளார்.

அதன்படி
கூகுள் தேடலில் தோன்றிய வாடிக்கையாளர் எண்ணுக்கு விஷ்ணு தொடர்பு
கொண்டுள்ளார்.
சிறிது நேரத்தில், அவருக்கு ஸொமேட்டோவில் இருந்து பேசுவதாக ஒரு அழைப்பு வந்துள்ளது.
மறுமுனையில் பேசிய நபர், 100 ரூபாய் பில் தொகையை திரும்பி வழங்குவதாகவும், ரீஃபண்ட் பெற 10 ரூபாய்யை செயல்பாட்டுக் கட்டணமாக தாங்கள் அனுப்பும் சுட்டி இணைப்பை அழுத்தி அனுப்பி அத்துடன் வங்கிக்கணக்கு எண் விபரங்களை அனுப்பினால் ,110ரூபாயாக திரும்ப அவர்கணக்கில் சேர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அதன்படி அந்த இணைப்பை அழுத்தி 10 ரூபாயை விஷ்ணு செலுத்தியுள்ளார்.
சிறிது நேரத்திற்குள் அவரது வங்கிக்கணக்கில் இருந்து 77,000ரூபாய் எடுக்கப்பட்டதாக அலைபேசியில் செய்தி வந்துள்ளது.
அதிர்ந்து போன விஷ்ணு தற்போது காவல்நிலையம், வங்கி என பல இடங்களுக்கு அலைந்தபோதும் பணம் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
100 ரூபாயைத்திரும்பப்பெற முனைந்து தற்போது 77,110ரூபாய்களை இழந்து நிற்கிறார் விஷ்ணு.