பொறுப்பைக் கைகழுவும் அரசுகள்.

ஒரே தேசம், ஒரே நாடு, ஒரே மொழி என்பது பாசிசத்தின் தொடக்கம் என் பதைப் புரிந்து கொண்டு இதை எதிர்த்துப்போராட ஆசிரியர்களும், மக்க ளும் தயாராக வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு கூறினார்.

அகில இந்தியப் பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்ட மைப்பும், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பும் இணைந்து தேசியக் கல்விக்கொள்கை-2019-ஐ முன் வைத்து மதுரையில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரில் கருத்தரங்கம் ஒன்றை ஞாயிறன்று நடத்தின.

 இதில் கலந்து கொண்டு முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேசியதாவது:-


தேசிய கல்விக்கொள்கையால் குழந்தைகள், மாணவர்கள், பெற் றோர்கள், ஆசிரியர்களுக்கு என் னென்ன பாதிப்புகள் ஏற்படும் எனப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், காஷ்மீர் மாநிலத்தில் கல்வி இருளில் மூழ்கியுள்ளது. அங்கு பள்ளிகள், கல்லூரிகள் நடைபெறவில்லை.
வலை தளம், தொலைபேசி சேவை முடக்கப்பட் டுள்ளது.
 ஒட்டுமொத்த காஷ்மீரும் இரு ளில் உள்ளது.
1975-ஆம் ஆண்டுகளில் மாநில அரசின் பொதுப்பபட்டியலில் இருந்த கல்வி மத்திய அரசின் ஒத்திசைவுப் பட்டி யலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
பெரும்பான்மையான மாநில அரசுகள் தனியார்மயக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதால் இது தொடர்கிறது. கல்வியில் மாணவர்களை மேம்படுத்தும், ஊக்கப்படுத்தும் ‘சாவி’ ஆசிரியர்களிடமே உள்ளது.
அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
  கல்வியை அரசு முழுமையாக இல வசமாகக் கொடுக்க இயலாது. 
இதில் தனியார் தேவை. அவர்களது முத லீட்டிற்கு நியாயமான முறையில் லாபம் சம்பாதிக்க உரிமையுண்டு என நீதி மன்றம் 1994-ஆம் ஆண்டு தீர்ப்பளித் துள்ளது.
 தனியார்மயத்தை இதன் மூலம் நியாயப்படுத்தியுள்ளது.
கல்வியில் தனது பொறுப்பை கை கழுவ மத்திய அரசு நினைக்கிறது. 

 ஒரே தேசம், ஒரே நாடு, ஒரே மொழி என்ற பாசிசத்தின் அடையாளத்தின் தொடக் கமே இந்த வரைவுக்கல்விக்கொள்கை என்பதைப் புரிந்துகொண்டு இதற்கெதி ராகப் போராட வேண்டும் .

மாநில உரிமை
பறிபோகும் மாநில உரிமைகள் என்ற தலைப்பில் திமுக அமைப்புச் செய லாளரும் மாநிலங்களவை உறுப்பின ருமான டி.கே.எஸ்.இளங்கோவன் பேசி யதாவது:
தேர்வு என்ற பெயரில் பள்ளிகளிலி ருந்து ஏராளமானோரை வெளியேற்றும் முயற்சி தான் தேசிய வரைவு கல்விக் கொள்கையின் நோக்கம். 1976-ஆம் ஆண்டு வரை கல்வி மாநிலங்களின் பொதுப்பட்டியலில் இருந்தது.

மத்தியஅர சின் பட்டியலுக்குச் சென்ற பின் அது வணிகமயமாகிவிட்டது.
மற்ற மாநிலங்களைவிட தமிழக கல்வித் துறையில் மத்திய அரசின் தலையீடு அதி கரித்துள்ளது.
மதிப்பெண் பெறும் இயந்தி ரமாக மாணவர்கள் மாற்றப்பட்டுள்ள னர். கல்வி அறிவை வளர்ப்பதற்காகத் தானே தவிர அது விற்பனைக்கான பொருளல்ல. அடிப்படைக்கல்வி தர மானதாக, அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும். கல்வியை முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஒப்ப டைக்க வேண்டும்.
தேசிய வரைவுக் கொள்கை அமலானால் காமராஜர் பெயரில் கொண்டாடப்படும் கல்வி வளர்ச்சி நாளே இல்லாமல் போகும்.
எல்லோரும் படிக்க வேண்டும் என்பதை மாற்றி எல்லோரும் படித்து விடக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளதுதான் தேசியவரைவுக் கொள்கை இதை நிராகரிக்க வேண்டும். இதை எதிர்த்துப் போராட வேண்டும் என்றார்.

சமூக நீதி புறக்கணிப்பு

மூகநீதி புறக்கணிக்கப்பட்டுவிட்டது என முன்னாள் துணைவேந்தர் வி. வசந்திதேவி பேசினார். கருத்தரங்கில் அவர் பேசியதாவது:-
ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்விகற்று மேல்நிலைக்கு வந்துவிடக் கூடாது என ஆதிக்க சக்தி கள் விரும்பின.
 இதை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் தொடர்ந்து நடத்தப் பட்டதன் விளைவாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி கிடைத்தது.

தற்போது தேசிய வரைவுக் கல்விக் கொள்கை என்றபெயரில் ஆதிக்க சக்திகள் மீண்டும் தலை தூக்கத் திட்ட மிடுகின்றன.
இந்தக் கொள்கையில் வார்த்தை ஜாலங்கள் ஏராளம் உள்ளது. இதில் மறைமுகமாக திணிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் எண்ணங்களை, கொள்கைகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டங்கள், கலந்து ரையாடல்கள் நடத்தியதாகக் கூறு கிறார்கள். பெங்களூர், மும்பை, தில்லி ஆகிய இடங்களில் கூட்டங்கள் நடத்தி யுள்ளார்கள். ஆனால், ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்படவில்லை.

 ஏபிவிபி என்ற மாணவர் அமைப்பிடம் மட்டும் கருத்துக்கேட்டுள்ளனர்.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகப் போராடிவரும் இந்திய மாணவர் சங்கம் போன்ற அமைப்பிடம் கருத்து கேட்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர் புதிய கல்விக்கொள்கை யை சுருக்கமாக ‘சிசிசி’ என வர்ணித் துள்ளார், அதாவது ‘Centralization, Commercialisation. Communilisation’. இது தான் யதார்த்தம்.
மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தமி ழகத்திலும் நடைமுறையில் உள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் அவ்வளவு எளிதில் வெற்றிபெற்றுவிட முடியாது.
தற்போது 24 சதவீதமாக உள்ள உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை (GER) 2025-ஆம் ஆண்டுக்குள் 50 சத வீதமாக உயர்த்த இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. 850 பல்கலைக்கழ கங்கள், 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகள் 1,500 உயர் கல்வி நிறு வனங்களாக குறைக்கப்படும். தனியார் உயர் கல்வி நிறுவனங்க ளில் இட ஒதுக்கீடு கிடையாது.
 அதே போல் அரசு கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வலியுறுத்தப்படவில்லை. 200 அந்நியப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவிற்குள் வரவுள்ளது. உள்ளூர் கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கும் அனைத்து சலுகைகளும் அவர் களுக்கு உண்டு. புதிய கல்விக் கொள்கையில் ‘உரிமை’ என்ற சொல்லே இல்லை. இத னால் பேராசிரியர்களுக்கு அபாயம் உள்ளது.
கல்வி க்கான பட முடிவு மயக்கும் வார்த்தை ஜாலங் கள், கார்ப்பரேட்டுகளிடம் கல்வியை ஒப்படைப்பது, கல்வியை வணிகமய மாக்குவது, சனாதன கொள்ளைகளை புகுத்துவது, வேதகால கல்வி, புராணக் கதைகளை புகுத்துவது, சமஸ்கிரு தத்தை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகள் தொடரும்.

குழந்தைகளை  கைகழுவிய அரசு
குழந்தைகளைக் கை கழுவிவிடும் கிரிமினல் குற்றத்தை மத்திய அரசு தேசிய வரைவுக்கொள்கையின் மூலம் செய்துள்ளது என கல்வியாளர் ஆயிஷா நடராஜன் கூறினார். கருத்தரங்கில் அவர் பேசியதாவது:-
தேசிய வரைவுக் கல்விக் கொள்கை என்ற பெயரில் ‘காவி கார்ப்பரேட்’ மய மாக்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விளையாடிக் கொண்டி ருக்கிறார்கள். தமிழகத்தில் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளையாடிக் கொண்டிருக்கிறார்.
மேல்நிலைக்கல்வி முதலா மாண்டில் பொதுத்தேர்வு முறையை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் விளைவு என்னவென்றால் மேல்நிலைக் கல்வி இரண்டாமாண்டில் சுமார் ஒரு லட்சத்து 47 ஆயிரம் மாண வர்களைக் காணவில்லை. கேட்டால் பாலிடெக்னிக் போன்ற தொழில் சார் படிப்புகளுக்கு சென்றுவிட்டதாகக் கூறு கின்றனர்.
 அவர்களோ தொழில்சார் படிப்புகளில் சேருவோர் எண்ணிக்கை வருடாவருடம் 25 பேர் வரை குறைகிறது என்கின்றனர்.
 பாடச்சுமையால் பல மாணவர்கள் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு வேலைக்குச் சென்றுவிட்டனர் என்றார்.

கார்ப்பரேட் மயம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மதுக்கூர் இராம லிங்கம் பேசும்போது :-
, தேசிய வரைவுக் கல்விக்கொள்கை குறித்து, மாண வர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் கருத்தை கேட்கவில்லை. நாடாளு மன்றத்தில் விவாதிக்கவில்லை. கஸ்தூரி ரங்கன் அறிக்கை ஏற்கக் கூடியதா?
ஏற்கக் கூடாததா?
என்பது பற்றியும் சிந்திக்கவில்லை.
ஆனால் நடை முறைப்படுத்துகிறார்கள்.

பள்ளிகளிலி ருந்து ஏழை-எளிய மாணவர்களை எப்படி வெளியேற்றுவது என்பது குறித்தே யோசிக்கிறார்கள். மத்திய அரசின் கொள்கையை

அப்படியே பின்பற்றும் தமிழக அரசும் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் என கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைப்ப தாக அறிவித்துள்ளார்.
மூன்று ஆண்டு கள் கழித்து அவர்களது அரசு இருக்குமா என்பது சந்தேகமே?
புதிய கல்விக் கொள்கையால் மாண வர்களுக்கு மட்டும் ஆபத்து அல்ல. ஆசிரியர்களுக்கும் உள்ளது. அவர்கள் முறைசாராத் தொழிலாளர்களாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
திறமை, தரம் குறித்து மாணவர்களிடம் பேசுவது வன்முறைக்குச் சமமானது. சாதியின் பெயரால் மறுக்கப்பட்டு வந்த கல்வி இனி, பணத்தால் மறுக்கப்படும். 2,300 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் எழுத்தறிவில் திறமையான வர்களாக இருந்தார்கள் என்பதற்கு கீழடி அகழாய்வே சாட்சி. அங்கு கண்டெ டுக்கப்பட்ட ஓடுகளில் கோதை என்பன உள்ளிட்ட பெண்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் பத்து பல்க லைக்கழகங்கள் உருவாகப்போவதாக வும் அதில் ஒன்று ஜியோ எனவும் அரசு கூறியுள்ளது. இதற்கு 10 ஆயிரம் கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.
 இனி மேல் வரப்போவதாகக் கூறப்படும் பல்க லை.க்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள் ளது.
புதிய கல்விக்கொள்கையால் பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பயிற்சி நிலையங்களில் என்ன நடக்கும் என்பதற்கு நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்த மாணவரே சாட்சி.
கல்வியை கார்ப்பரேட் மயமாக்கும் இந்தக் கொள்கை கல்விக்கு எதிரானது என்றார்.

 தேவையில்லாத் தேர்வு நீட் .
மருத்துவக் கல்வியில் தரத்தை மேம்படுத்தவே அகில இந்திய அளவிலான நீட் தேர்வு நடத்தப் படுவதாக மத்திய ஆட்சியாளர்கள் அளந்து விட்ட பொய்கள் ஒவ்வொன்றாக நிறமிழந்து வருகின்றன.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து வெற்றிபெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் சேர்ந்து படித்து வந்த விவகாரம் இந்த தேர்வு முறையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது.  தமிழகத்தில் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி வெற்றிபெறாத நிலையில் மும்பையில் ஆள்மாறாட்டம் செய்து அதன்மூலம் வெற்றி பெற்று தேனி கல்லூரியில் உதிர்சூர்யா  சேர்ந்துள் ளார்.

இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போது இந்த விவகாரம் அம்பலமாகி உள்ளது.

வடமாநிலங்களில் நீட் தேர்வுக்கான கேள்வித்தாளை முன்னதேயே பெற்று மாணவர் களிடம் வழங்குவது, தேர்வு மதிப்பெண்களை திருத்துவது என்று பல்வேறு மோசடிகளை நடத்து வதற்கென்றே தனியார் பயிற்சி நிலையங்கள் உள்ளன என்ற தகவல் ஏற்கெனவே வெளியானது.
இது தற்போது உறுதியாகியுள்ளது.
 இதனிடையே மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வே எழுதாத ஆந்திரா மற்றும் பீகாரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர முயன்ற விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
 இவ்வாறு இன்னும் எத்தனைபேர் போலிச் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார்களோ தெரியவில்லை.
தில்லியைச் சேர்ந்த ஒரு கும்பல்தான் இவ்வாறு போலிச் சான்றிதழ் தயாரித்துக் கொடுத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நீட் தேர்வு எழுதச் செல்லும் சாதாரண மாணவ, மாணவிகளை இவர்கள் என்னப் பாடுபடுத்தினார்கள் என்பதை நாடறியும். ஆடைகளை கிழிப்பது, ஆபரணங்களை அகற்றுவது என கெடுபிடி காட்டினார்கள்.
ஆனால் ஆள்மாறாட்டம், போலிச் சான்றிதழ் என ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கிறது.
அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனியாகிவிட்டது.
ஆனால் நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் நீட் தேர்வுக்கென்று தனிப் பயிற்சி நடத்தி லட்சக்கணக்கில் சுருட்டி வருகின்றன.
இவ்வாறு உருவாக்கப்படும் மாணவர்களிலிருந்துதான் நீட் தேர்வு மூலம் தரமான மருத்துவர்களை உருவாக்கப்போகிறார்களாம்.
 இந்த லட்சணத்தில் புதிய கல்விக் கொள்கையின்படி மருத்துவப் படிப்பில் நுழைய நீட் தேர்வு அதன்பிறகு படித்து முடிந்தவுடன் நெக்ஸ்ட்  தேர்வு என அடுக்கடுக்காக தேர்வுகளை அறிவித்துள்ளனர். இதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுகள் அனைத்தும் எப்படியிருக்கும் என்பதற்கான முன்னோட்டம்தான் நீட் தேர்வில் நடந்துள்ள ஆள் மாறாட்டம்.
நீட் தேர்வு தேவையில்லை என்பதையே இத்தகைய சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றன.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
இங்கே தமிழை புறக்கணிக்க,உலகளவில்  தமிழ் வளர்கிறது.
இந்தியாவில் இந்தியை திணிக்க பா.ஜ.க அரசு முயற்சிகள் மேற்கொண்டு வரும் வேளையில், ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியை பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னியில் 39 சதவிகிதத்துக்கும் மேல் வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பான்மையோர் தமிழர்கள்.குறிப்பாக இலங்கைத்தமிழர்கள்.

ஆகையால் பன்மொழி கொண்ட நாடாக ஆஸ்திரேலியா அமையவேண்டும் என்ற நோக்கில் உலகளவில் அதிகமாகப் பேசக்கூடிய மொழியாக உள்ள தமிழை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனையொட்டி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு, அடுத்த கல்வி ஆண்டு முதல் தமிழ் மொழி இரண்டாவது மொழியாக கற்றுத்தரப்படும் என அறிவித்துள்ளது.

இதுகுறித்த புதிய பாடத்திட்டத்தையும் அம்மாகாண அரசு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ்,பெர்சியன், மெக்டோனியன்,பஞ்சாபி,இந்தி ஆகிய 5 மொழிப்பாடங்களை சேர்க்க ஆஸ்திரேலிய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து  1 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் மொழி இரண்டாவது பாடமாகப் பயிற்றுவிக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு உத்திரவிட்டுள்ளது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் 
முன்னால்
 நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டது(1846)
ஹேர்மன் ஹொலரித், கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்(1884)

சவுதி அரேபியா தேசிய தினம்(1932)
மொசிலா பயர் பாக்ஸ், இணைய உலாவி பயன்பாட்டுக்கு வெளியானது(2002)
 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------
நினைவில் கொள்ளுங்கள்.



 செப்டம்பர் .
 23 - 27 - எஸ். எஸ். சி., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு
29 - ஐ.பி.பி.எஸ்., ஆபீஸ் அசிஸ்டென்ட் மெயின் தேர்வு 


அக்டோபர் 

.12,13,மற்றும் 19, 20 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ.,முதல் நிலைத் தேர்வு 

நவம்பர் .
17 - என்.டி.ஏ., தேர்வு
30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு 


டிசம்பர் 

.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு 
7,8,மற்றும் 14,15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் முதல் நிலைத்தேர்வு

நபார்ட் வங்கியில் வேலை.


 மத்திய அரசின் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி நபார்டு. இங்கு 'டெவலப்மென்ட்' உதவியாளர் (82), 'டெவலப்மென்ட்' உதவியாளர்/இந்தி (9) என 91 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 18 - 35. வயது வரம்பு தளர்ச்சி உண்டு.

தகுதி: * ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, 69 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
* இந்தி பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்தி அல்லது ஆங்கில பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.32,000

கடைசி நாள்: 2.10.2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (ஆன் லைன்), நேர்முகத் தேர்வு

விபரங்களுக்கு: https://www.nabard.org

 --------------------------------------------------------------------------------

 ரிசர்வ் வங்கிப் பனி.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
  சுங்கச் சாவடிகளில் 'பிரீ பெய்டு' முறை கட்டணம்
நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில், மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும், 'பாஸ் டேக்' முறையை, டிசம்பர், 1 முதல் கட்டாயமாக்க, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.
 தற்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு, சுங்கச்சாவடிகளில், ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனால், நெரிசல் மிகுந்த நேரங்களில், வாகனங்கள், சுங்கச் சாவடிகளில், பல மணி நேரம் காத்திருக்கின்றன. 10 வினாடிகள்இதனால், குறிப்பிட்ட நேரத்தில், சரக்கு போக்குவரத்தை நிறைவு செய்ய முடியாமலும், டீசல் பயன்பாடு அதிகரிப்பதாலும், லாரி உரிமையாளர்கள், தொழில் செய்ய முடியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல, டாக்சி உள்ளிட்ட வாடகை வாகனங்களுக்கும், வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் வகையில், நாடு முழுவதும், மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும், பாஸ் டேக் முறையை, டிசம்பர், 1 முதல், கட்டாயமாக்க, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்து உள்ளது.
இந்த முறையில், வாகன உரிமையாளர்கள், வாகனத் தின், ஆர்.சி., புத்தகம், தங்களின் புகைப்படம், முகவரி சான்று உள்ளிட்ட விபரங்களை கொடுத்து, பாஸ் டேக் கார்டுகளை பெற வேண்டும்.

இந்த, பாஸ் டேக் கார்டு களை பயன்படுத்தி, 'பிரீ பெய்டு' முறையில், கட்டணத்தை செலுத்த வழி வகை செய்யப்படுகிறது.

அதாவது, பாஸ் டேக் கார்டில், 'ரேடியோ பிரீகொய்ன்சி ஐடென்டிபிகேஷன்' எனப்படும், ஆர்.எப்.ஐ.டி., தொழில்நுட்பத்துடன் இணைந்த கார்டுகள், வாகனத்தின் முன் பகுதியில் ஒட்டப்படும்.
 வாகனம் சுங்கச் சாவடியை கடக்கும் போது, சுங்கச்சாவடியில் உள்ள, சென்சார்கள், கட்டணத்தை கழித்து விடும்.

இதனால், தடையின்றி, சுங்கச் சாவடி களை, 10 வினாடிகளில் கடந்து விடலாம். கட்டண சலுகைசோதனை ரீதியாக, சில சுங்கச்சாவடிகளில், இந்த நடைமுறை உள்ளது.
அங்கு, பாஸ் டேக் வாகனங்களுக்கு மட்டும், தனி வழித்தடம் உள்ளது.
பாஸ் டேக் கட்டண முறையை அமல்படுத்த, தனியார் நிறுவனங்களுடன், நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது.
துவக்கத்தில், 10 சதவீத கட்டண சலுகை கிடைக்கும்.
இதனால், வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டியதில்லை.போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் குறையும்.
தமிழகத்தில் உள்ள 46 சுங்கச்சாவடிகளிலும் இந்த நடைமுறை டிசம்பர் முதல் நடைமுறைக்கு வரும்.அதற்கான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
 எதற்கு இது போன்ற தேவையற்ற செயல்கள்?
இந்திய குடிமையியல் பணிகளுக்கு யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது.
அதன்படி இந்தஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வின் முதல்நிலை தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு கடந்த 20ம் தேதி முதன்மைத்தேர்வு நடைபெற்றது.
“மதச்சார்பின்மையால் இந்திய கலாச்சாரம் சந்தித்த சவால்?” - யு.பி.எஸ்.சி தேர்வு கேள்வியால் சர்ச்சை!
இந்தத் தேர்வில் மதச்சார்பின்மை குறித்து கேட்கப்பட்ட கேள்வி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், “மதச்சார்பின்மையினால் நமது கலாச்சார நடைமுறைகளுக்கு என்னென்ன சவால்கள் ஏற்பட்டுள்ளது'' என கேட்கப்பட்டுள்ளது.
இந்தக் கேள்வி மதச்சார்பின்மைக்கு எதிராகப் பேசும் விதமாக உள்ளது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அவ்வாறு இருக்கையில், மதச்சார்பின்மை எப்படி சவாலாக இருக்கும்?

முன்னதாக சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் தலித்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஏன் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இப்படி தேவையற்ற சாதி,மதம் சார்ந்த கேள்விகளை எல்லோருக்கும் பொதுவான கல்வித்துறையில் எழுப்பி வருகிறார்கள்.அவர்களின் காவி மய நோக்கம் மக்களுக்கு தெரியாமல் இல்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?