அடித்துக்கொள்ளும் நிலைதான் வரும்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனை
வருக்குமான பொது விநியோகத் திட்டம் நடை முறையில் இருக்கிறது.
யாருக்கெல்லாம் குடும்ப அட்டை இருக்கிறதோ, அவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
இந்தியாவில் உள்ள வேறு பல மாநிலங்கள் இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தார்கள்.
யாருக்குக் கொடுக்க வேண்டுமென்பதை முடிவு செய்து, அவர்களுக்கு மட்டும் பொருட்களைக் கொடுப்பார்கள்.
இதுதான் தமிழகத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பல மாநிலங்களில் பொது விநியோகத் திட்டமே செயல்படவில்லை என்பதுதான்.
2013 உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கிராமப்புறங்களில் உள்ள 50 சதவீதம் பேருக்கும் நகர்ப்புறங்களில் உள்ள 75 சதவீதம் பேருக்கும் ஒரு நபருக்கு ஐந்து கிலோ உணவு தானியம், மானிய விலை யில் வழங்கப்படும்.
ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கும் ஒரு கிலோ கோதுமை இரண்டு ரூபாய்க்கும் வழங்கப்படும். அரசியும் கோதுமை யும் மத்திய அரசு தன் உணவுத் தொகுப்பிலி ருந்து கொடுத்துவிடும்.
யார் யார் பயனாளிகள் எனக் கண்டறிந்து இதனை மக்களுக்கு விநியோ கிக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு.
ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கனவே எல்லோ ருக்கும் ரேஷன் பொருட்களை வழங்கிவந்த நிலையில், 50 - 75 சதவீதம் பேருக்கே உணவு தானி யத்தை வழங்கும் இந்தத் திட்டம் முரண்பாடாக அமைகிறது. தமிழக அரசு எல்லோருக்கும் உணவு தானி யங்களைக் கொடுப்பதால், மத்தியத் தொகுப்பிலி ருந்து வரும் அரிசி போதுமானதாக இருப்ப தில்லை.
ஆகவே வெளிச் சந்தையிலிருந்து வாங்கி, அதனை மக்களுக்கு விநியோகிக்கிறார்கள். இதில் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுக்கு ஐயாயிரம் முதல் ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்குச் செலவாகிறது.
ஆனால், இப்போது எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்ற ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தில் இணையும்போது பல சிக்கல்கள் வரும்.
அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. அதற்கான எந்த திட்டத்தையும் தமிழக அரசு வெளியிடாமலே, மோடியின் திட்டம் நல்லது என்கிறது.
இதில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசுகிற நிபுணர்கள், கடுமையான பிரச்சனைகளை முன்வைக்கிகிறார்கள். உணவுப் பொருட்க ளைக் கொடுக்கும்போது யாருக்கு அவற்றைக் கொடுப்பது என அடையாளம் காண்பது சிக்க லான வேலை.
வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள வர்களுக்குக் கொடுக்கலாம் என்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு வறுமைக் கோட்டை எப்படி கணக்கிடுவது என்பதே தெரியாது.
அதேபோல வெளி மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கும் ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டத்தில் உணவுப்பொருள் வழங்க முடியுமே என்றும் மோடி ஆதரவாளர்கள் வாதிடு கிறார்கள்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுப்பாதுகாப்பு அளிப்பது என்பது மிக முக்கியமான விஷயம்.
அதேவேளையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்தை பாதுகாக்க அதிமுக ஆட்சியாளர்கள் என்ன செய்யப்போகி றார்கள் என்பதுதான் கேள்வி.
வட மாநிலத்தவர்கள் குவிந்து குறைவான கூலிக்கு வேலைபார்க்கும் தமிழ்நாட்டில்.ரேஷன் அரிசிக்கு அவர்களும் நம்மவர்களும் அடித்துக்கொள்ளும் நிலைதான் வரும்.அதை இந்த பாஜக அடிமை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

சந்திராயன்-2.பற்றி...

நீதிபதிகளும் பதவி விலகல் ஆரம்பம்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமாணியின் பதவி விலகல் தான் தற்போது முக்கிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
தஹில் ரமாணி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்றுக் கொண்டார்.
இன்னும் ஓராண்டு காலம் மீதமிருக்கும் நிலையில் மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து கொலிஜியம் (உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்த முடிவை பரிசீலனை செய்யக்கோரி தஹில் ரமாணி அனுப்பிய கடிதம் நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து தஹில் ரமாணி தனது பதவியை ராஜினாம செய்து அதன் கடிதத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், கொலிஜியத்திற்கும் அனுப்பி வைத்ததாகக்கூறப்படுகிறது.
நீதிபதியின் இந்த ராஜினாமா முடிவு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு
உறுப்பினர் பிருந்தா காரத் கூறியிருப்பதாவது, “சென்னை நீதிபதி தஹில்
ரமானியை இடமாற்றம் செய்ததும், அதை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்ததும்
பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நாட்டில் ஒரு சிலர்தான் பெண் நீதிபதிகளாக உள்ளனர்.
இந்நிலையில், அவர்களும் இந்த மாதிரி நெருக்கடியை அளிப்பது, நீதிபதி தஹில் ரமானியை மட்டுமின்றி, ஒட்டு மொத்த பெண்களையும் அவமதிப்பது போன்று உள்ளது.
அதுமட்டுமின்றி, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் அவரும் ஒருவர்.
அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் ஏன் இடமாற்றம் என்ற கேள்வி எழுகிறது. 75 நீதிபதிகள் உள்ள சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து, 2 நீதிபதிகள் மட்டும் இருக்கும் மேகாலாயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியை மாற்றுவதை வழக்கமான செயலாக கருத முடியாது.
இது பதவியிறக்கம் என்றேத் தெரிகிறது. இந்த ஒட்டு மொத்த சம்பவங்களை பார்க்கும்போது, நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் திருப்தி அளிக்காத நிலையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது”
என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இ.ஆ.ப அதிகாரிகள் விலகிவருகின்றனர்.நேற்று நிதி ஆயோக் துணைத்தலைவர் காஷிஷ் மிட்டல்இ.ஆ.ப.,அரசபதவியை விட்டு விளக்கியுள்ளார்.
நேர்மையாக மக்களுக்கு பணியாற்ற எண்ணியவர் மோடி ஆட்சியில் தொடர்ந்து பதவி விலகி வருகையில் தற்போது நீதிபதிகளும் பதவி விலகலை ஆரம்பித்துள்ளனர்.

விண்வெளி
ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை
நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது.
அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை.
எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.
அமெரிக்கா மட்டும்தானா?
விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.
அதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்?
நமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.
சந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா? அந்த கணத்தில் இருந்து அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து என உலக நாடுகள், விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட அத்தனை நாடுகளின் பார்வையும் சந்திரயான்-2 மீது பதிந்து விட்டது.
அதன் ஒவ்வொரு அசைவையும் அந்த நாடுகள் எல்லாம் கண்காணிக்கத்தொடங்கின.
விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதே ஒரு சாதனை.
பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியதும் சாதனை.
நிலவை நோக்கிய சந்திரயான்-2 விண்கலத்தின் பயணத்தை ஆகஸ்டு 14-ந்தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கி வைத்தது சாதனை.
நிலவின் சுற்றுவட்டப்பாதையில் ஆகஸ்டு 20-ந்தேதி சந்திரயான்-2 நுழைந்தது சாதனை.
இந்த சாதனைகளைத் தொடர்ந்து புரிந்த மகத்தான சாதனைதான், சந்திரயான்-2 ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் கடந்த 2-ந்தேதி பிரிந்த செயல்.
சந்திரயான்-2 என பேசி வந்தவர்கள் திடீரென ஆர்பிட்டர் என்கிறார்கள், லேண்டர் என்கிறார்கள், ரோவர் என்கிறார்கள் ஒன்றுமே புரியவில்லையே என்று சாமானியர்கள் நினைக்கக்கூடும். இப்படி நினைத்தால் அதில் தப்பே இல்லை.
எப்படி மனிதர்களான நாம் கண், காது, மூக்கு, வாய், கை, கால் என உறுப்புகளுடன் பிறந்திருக்கிறோமோ அதே போன்றுதான் இந்த சந்திரயான்-2 விண்கலமும் 3 முக்கிய கலன்களை கொண்டிருக்கிறது.
அதில் ஒன்று, ஆர்பிட்டர். இதுதான் சுற்றுவட்டக்கலன். இதுதான் நிலவை ஓராண்டு காலம் சுற்றக்கூடிய கலன். ஆங்கிலத்தில் இது ஆர்பிட்டர். இதன் எடை 2,379 கிலோ. இதுதான் பெங்களூரு அருகே பைலாலுவில் அமைந்துள்ள இஸ்ரோ மையத்துடன் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடியது.
இரண்டாவது கலன்தான் லேண்டர். இதன் எடை 1,471 கிலோ. இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களின் தந்தை என்று அழைக்கப்படுகிற விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் பெயரைத்தான் இந்த லேண்டருக்கு விக்ரம் என சூட்டி இருக்கிறார்கள். இது ஒரு சந்திர நாள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஒரு சந்திர நாள் என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமம். இதுவும் இஸ்ரோ மையத்துடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.
மூன்றாவது கலன்தான் ரோவர். இதன் எடை 27 கிலோ. இதற்கு பிரக்யான் என பெயர் சூட்டப்பட்டது. பிரக்யான் என்றால் சமஸ்கிருதத்தில் ஞானம் அல்லது அறிவு என பொருள். இது 6 சக்கரங்களைக் கொண்ட ரோபோ வாகனம். ரோவரைப் பொறுத்தமட்டில் அது விக்ரம் லேண்டருடன் மட்டுமே தகவல் தொடர்பு பரிமாற முடியும்.
தென் துருவப்பகுதியில் விக்ரம் லேண்டரின் ‘சாப்ட் லேண்டிங்’ தான் மிகப்பெரும் சவாலான பணி ஆகும்.
அப்படி என்ன பெரிய சவால் என மனித மனங்கள் கேட்பது இயல்பு.
பூமியைப் போன்று நிலவில் காற்று மண்டலம் கிடையாது. இதனால் லேண்டரை தரை இறக்க பாராசூட்டைப் பயன்படுத்த முடியாது. எரிபொருளைப் பயன்படுத்தி, சம நிலையில் மெல்ல மெல்ல தரை இறங்கச்செய்வதுதான் ஒரே வழி.
லேண்டர்தான் தனது சொந்த ராக்கெட் என்ஜினைக் கொண்டு, அதன் வேகத்தை சீராக குறைத்துக்கொள்ளும்.
நிலவின் தென் துருவத்தின் மேற்பகுதியை நெருங்க நெருங்க லேண்டரும் நகர்வது இயல்பான நிகழ்வு.
நிலவின் தென் துருவப்பகுதியில் லேண்டர் தரை இறங்கும் தருணத்தில், அதன் ராக்கெட் என்ஜின் தனது நகர்வை நிறுத்துவதும், இறக்கத்தின் வேகத்தையும் கட்டுப்படுத்துவதும்தான் சவாலோ சவால். இதைத்தான் விண்வெளி விஞ்ஞானிகள் ‘சாப்ட் லேண்டிங்’ என்று சொல்கிறார்கள்.
இந்த லேண்டருக்குள்தான் பிரக்யான் என்னும் ரோவர் ரோபோவும் அடக்கம். ரோபோவால் நிலவின் மேற்பரப்பில் அரை கி.மீ. தொலைவுக்கு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்ல முடியும்.
மொத்தத்தில் சந்திரயான்-2 விண்கலத்தில் 14 கருவிகள் உள்ளடக்கம். அவற்றில் 13, இந்தியாவினுடையது. எஞ்சிய ஒன்று, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு உரியது.
உலகின் பார்வையை சந்திரயான்-2 எப்படியெல்லாம் ஈர்த்திருக்கிறது என்பதற்கு, “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பார்களே, அப்படித்தான் நாசா விஞ்ஞானி ஜெர்ரி லினெங்கர் சொல்வதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அவர், “இந்த சந்திரயான்-2 திட்டம் ஒரு அருமையான பணி. அனைவரையும் உற்சாகத்தில் வைத்த திட்டம். என்னை இருக்கையின் விளிம்பில் தள்ளிய திட்டம்” என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்.
“இது உண்மையிலேயே இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அறிவியல், தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து விண்வெளி பயண நாடுகளும் முன்னேறுவதற்கு உதவக்கூடியதாகும். நிலவுக்கான எங்கள் ஆய்வு மற்றும் நிலவில் மனிதனின் நிரந்தர இருப்பை ஏற்படுத்த இன்னும் சொல்வதானால் நிலவின் மனிதனை இருக்கச்செய்வதற்கும்கூட உதவும்”.
வெறும் ரூ.978 கோடியில், ஹாலிவுட் வெற்றிப்படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்-ஐ விட குறைந்த பட்ஜெட்டில், சந்திரயான்-2 திட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் தீட்டி செயல்படுத்தியதைக் கண்டு நாசா விஞ்ஞானி ஜெர்ரி லினெங்கர்
“இதில் இருந்து உலகம் கற்றுக்கொள்ள முடியும். மலிவான செலவில் விண்வெளி திட்டங்களை தீட்ட இயலும். இன்னும் அதிகமான திட்டங்களை செயல்படுத்தி கற்றுக்கொள்ள முடியும். இது மனித குலத்தின் அறிவு முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்” என்கிறார்.
மயில்சாமி அண்ணாத்துரை.
சந்திரயான் - 2 திட்டத்தில் கடைசி கட்டத்தில்தான் பின்னடைவு ஏற்பட்டது. அதுவரை கிடைத்த முன்னேற்றம், அதிலிருந்து கிடைத்த தகவல்கள் ஆகியவை எந்த அளவுக்கு பயனுள்ளவை?
நம்மால் கடைசிவரை செல்ல முடிந்திருக்கிறது.
நிலவுக்கு 2 கி.மீ.வரை எல்லாம் ஒழுங்காகச் சென்றிருக்கிறது. அந்த இடத்தில் என்ன நடந்தது என்பதை டெலிமெட்ரி வைத்து கண்டுபிடிக்க முடியுமென நினைக்கிறேன். அதுவொரு சிறிய பிழையாக இருக்கலாம். அதைச் சரிசெய்தால் திட்டத்தில் முன்னோக்கி நகர முடியும்.நம்மிடம் கிடைக்கும் டெலிமெட்ரி தகவல்களை வைத்து ஓரிரு வாரங்களில் தவறு எங்கே நேர்ந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.
இஸ்ரோவில் உள்ள ‘ஃபெய்லியர் அனாலிசிஸ் கமிட்டி’ இதனை ஆராயும். அதற்குப் பிறகு புதிய திட்டத்தில் அந்தக் குறை சரிசெய்யப்படும்.இதற்கு முன்பும் இதுபோன்ற தோல்விகள் ஏற்பட்டுள்ளன. சந்திரயான் 1 திட்டத்தில் செய்தித் தொடர்பு ஒரு கட்டத்தில் துண்டிக்கப்பட்டது.
ஆனால், இன்னும் சந்திரயான் 1 நிலவைச் சுற்றிவருகிறது. சந்திரயானிலிருந்து செய்தித் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பாகவே, அப்படி நடக்கப் போகிறது என்பது தெரிந்துவிட்டது.அதனால், அது செயலிழப்பதற்கு முன்பாக எவ்வளவு தகவல்களை எடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு தகவல்களை அதிலிருந்து பெற்றோம்.
இந்தக் குறைபாட்டை மீறித்தான் நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்தோம்.
அதிலிருந்து கிடைத்த பாடம்தான் மங்கள்யான் சிறப்பாகச் செல்வதற்கான பாடத்தைத் தந்தது. ஆறு மாதம்தான் அதன் ஆயுள் எனத் திட்டமிட்டோம்.
இருந்தாலும் ஐந்து வருடங்கள் தாண்டியும் அது இயங்கிக் கொண்டிருக்கிறது.அதேபோல இப்போதும் சந்திரயான் 2 ஆர்பிட்டர் இன்னும் இயங்குகிறது.
இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனையில் இருந்து கற்ற பாடத்தை எடுத்துக்கொண்டு, முன் நகரும்போது நாம் இனி தயாரிக்கும் லேண்டர்கள் சிறப்பாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி
, கடந்த சில வாரங்களாக மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி, கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இவரை பிரபல வழக்கறிஞரும், ராம் ஜெத்மலானியின் மகனுமான மகேஷ் ஜெத்மலானி கவனித்து வந்துள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இவரை பிரபல வழக்கறிஞரும், ராம் ஜெத்மலானியின் மகனுமான மகேஷ் ஜெத்மலானி கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
அவருக்கு வயது 95.
இவர் 1923ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி, சிந்து மாகாணத்தின் சிகர்பூரில் பிறந்தார். முழுப் பெயர் ராம் பூல்சந்த் ஜெத்மலானி ஆகும்.
பல்வேறு உயர்நீதிமன்றங்கள், விசாரணை நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஏராளமான வழக்குகளில் திறமையாக வாதாடியவர். இவர் வாதாடிய பிரபலமான முதல் வழக்கு 1959ல் நடைபெற்றது.
அதில் கே.எம்.நானாவதி தரப்பு வழக்கறிஞராக, மகாராஷ்டிர மாநில வழக்கு ஒன்றில் வாதாடினார். மேலும் பங்குச் சந்தை ஊழல் தொடர்பாக ஹர்ஷத் மேத்தா, கேதன் பரேக் ஆகியோருக்கு ஆதரவாக வாதாடியுள்ளார்.
அப்சல் குருவின் மரண தண்டனைக்கு எதிராகவும், ஜெஸ்ஸிகா லால் கொலை வழக்கில் மனு ஷர்மா தரப்பிலும் வாதாடி இருக்கிறார். சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக வாதாடி இருக்கிறார்.கோடிகளில் பணத்தை வாங்கிக்கொண்டு குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடுபவர் என்ற பெயர் இவருக்குண்டு.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ஆகியவற்றிலும் வாதாடி உள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அதே ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
6வது மற்றும் 7வது மக்களவைக்கு, பாஜக சார்பில் மும்பையில் இருந்து போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வாஜ்பாய் தலைமையில் மத்திய சட்டத்துறை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக பணியாற்றி உள்ளார்.
அதேசமயம் 2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், லக்னோ தொகுதியில் வாஜ்பாய்க்கு எதிராக போட்டியிட்டுள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
"மாட்டு மூத்திரத்தை விடமாட்டார்கள்."
மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினிகுமார் சௌபே
''நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகள் துவங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மருத்துவ சீட்டுகள் கிடைக்கும்.
மேலும், பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா, சித்தா போன்றவற்றை ஊக்குவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோமியம் விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்படும். அதற்கான
ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன''
எனத் தெரிவித்துள்ளார்.-----------------------------------------------------------------------------------------------------------------------------------