பலநாட்கள் தேவையில்லை..

தவறான நடவைடிக்கை என அறிய..
"வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகை யில் கார்ப்பரேட் வரி, 30 சதவீதத்தி லிருந்து 25.2 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும், அரசிடமிருந்து ஊக்கத்தொகை அல்லது மற்ற சலுகைகளை பெறும் நிறுவனங்களுக்கு ஏற்கனவே கார்ப்ப ரேட் வரி 35 சதவீதம் இருந்த சூழலில் தற்போது அது 25 சதவீதமாக குறைக்கப் படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.
 புதிதாக தயாரிப்பு  தொழிலை துவங்கும் சில நிறுவனங் களுக்கு கார்ப்பரேட் வரி 25 சதவீதத்தி லிருந்து 15% ஆக குறைக்கப்படும் என்றும் அறிவித்திருகிறார்.
ஆண்டு விற்பனை 4 பில்லியன் ரூபாயாக உள்ள நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 30 சதவீதித்தில் இருந்து 25.2 சதவீதமாக குறைத்து
’மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், 2019-20 நிதி  ஆண்டின் வருமான வரி சட்டத்தில் ஒரு புதிய திருத்தம் சேர்க்கப்படுகிறது. அதன்படி அக்டோபர் 1, 2019 அல்லது அதற்கு பிறகு பதிவாகும் புதிய உள்நாட்டு நிறுவனங்களுக்கு , 15 சதவீதத்தில் வருமான வரி செலுத்த ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

‘’2019 ஜூலை 5-ஆம் தேதிக்கு முன்பு, (தாங்கள் வெளியிட்ட பங்கு களை, மீண்டும் தாங்களே வாங்கிக் கொள்ளும் ) பை-பேக் முறையில் பொது அறிவிப்பு வெளியிட்ட பங்குச்சந்தை யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங் களுக்கு ஏற்கனவே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிறுவனங்களுக்கு எந்த வரியும் கிடையாது. என்றும் நிதியமைசசர் நிர்மலா சீதாராமன்  தெரிவித்துள்ளார்.

 உள்நாட்டு நிறுவனங்களுக்கு 30 சதவீதம் கார்ப்பரேட் வரியும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 40 சதவீதம் கார்ப்பரேட் வரியும், வெளி நாடுகளில் விதிக்கப்படுகிறது. மேலும், சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான கூடுதல் வரி 4 சதவீதம் விதிக்கப்படுகிறது.ஆனால் அது இந்தியாவில் இல்லை.

நாடு முழுவதுமுள்ள தொழில்துறைகள் அனைத்தும்  மந்த நிலையை எதிர்கொண்டுள் ளன. வாகன உற்பத்தித் துறையில் மந்தநிலை தோன்றிய பின்னர், அசோக் லேலண்டு, போர்டு, டாடா மோட்டார்ஸ், டிவிஎஸ் போன்ற முன்னணி  மோட்டார் நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம்  அறிவிக்கப்பட்டது.
இதனால்  தொழிலாளர்களுக்கு 15 நாட்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.   மோட்டார் வாகனத்துறையில் மட்டுமல்ல நுகர்வு பொருட்களின் துறையிலும் இப்போது மந்தநிலை உருவாகியுள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்காவிட்டால், இந்த துறையிலும் ஆட்குறைப்பு இருக்கும் என்று அந்த நிறுவனங்களே அறிவித்துள்ளன. இந்தி யாவின் புகழ்பெற்ற பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி இது தொடர்பாக கவலை வெளியிட்டுள் ளது. ஜிஎஸ்டியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த நிறுவனம்  8,000 முதல் 10,000 வரை தொழி லாளர்களைக் குறைக்கப்போகிறது.
ஜிஎஸ்டியில் எல்லா வகையான பிஸ்கட்டு களுக்கும் 18விழுக்காடு வரி விதிக்கப்பட்டதால் எல்லா நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு சற்று விலையேற்றி விற்கத் தொடங்கின. விளைவு, படிப்படியாக விற்பனை குறையத் தொடங்கியது.

இந்தியாவின் மிகப் பெரிய பிஸ்கட் நிறுவனமான பிரிட்டானியாவும் தப்பவில்லை.5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டை வாங்குவதற்கே வாடிக்கையாளர்கள் இரண்டு முறை சிந்திக்கிறார்கள் என்றும் பொருளாதா ரத்திலும் தீவிர பிரச்சனை உள்ளது என்றும்  பிரிட்டானியாவின் நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி கூறுகிறார். கிராமப்புற சந்தைகளில் ஏற்பட்டுள்ள விற்பனை வீழ்ச்சியால், அதிவேக நுகர்வு பொ ருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மிக மோச மாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
விலை குறைவான பொருட்கள் கிராமப்புற சந்தைகளில் அதிகம் விற்பனையாகும். ஆனால், இந்த பொருட்களின் தயாரிப்பும் மந்தநிலையை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில்  உள்நாட்டு மற்றும் புதிய உற் பத்தி நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி  30 சதவீதத்திலிருந்து 25.2 சதவீதமாக குறைக்கப்படு வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கிராமப்புற அளவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வேலைஉறுதித்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல், வேளாண் துறையின் வளர்ச்சிக்கு  ஊக்கமளித்தல், விவசாயிகளின் இடுபொருட்களுக்கு மானியம், குறைந்த விலை யில் உரம், கடனுதவி, பாசன வசதிகளை அதி கரித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து கிரா மப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும்.
 கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குக் கடன் சலுகை, வட்டி மானி யம், உற்பத்தி பொருட்களுக்கான சந்தையை உறுதிப்படுத்துதல் உள்ளிட்டவற்றைச் செய்தால் தான் பொருளாதார தேக்க நிலையிலிருந்து நாடு விடுபடும்.
இவற்றைச் செய்யாமல் பெரு நிறு வனங்களுக்கு வரியைக் குறைப்பதால் எந்த மந்தமும் மறையப்போவதில்லை.
மாறாக பொருளாதார வீழ்ச்சிதான் அதிகரிக்கும்.
ஜிஎஸ்டி,பணமதிப்பிழப்பால் இந்தியா முழுக்க பல குறு,சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.கோவை,திருப்பூரில் மட்டுமே லட்சக்கணக்கான வர்கள் வேலையிழந்துள்ளனர்.
  மூடப்பட்ட தொழிற்சாலைகளைத் திறக்க வழி தேடாமல் ,வழி செய்யாமல் ஏற்கனவே உலக,இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர்கள் நடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரியை குறைப்பது என்னவகையான புத்திசாலித்தனம்.?
கோடிக்கணக்கில் வேலைவாய்ப்பை இழந்தவர்கள்,வேலைதேடுபவர்களுக்கு பணியிடம் வழங்குவதே ஒரு நல்லரசின் கடமை.அதுதான் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும்.அதுதான் நாட்டின் பொருளாதாரத்தை
உயர்த்தும் .
கார்பரேட்களுக்கு வரையை நீக்குவதால் சிலர் மட்டும் சூதாடும் பெண்களின் விலைகள் உயரும்.அதுவும் தற்காலிகமாகத்தான் இருக்கும்.
அதன் மூலம் கார்ப்பரேட் முதலாளிகளின்  மதிப்பு உயரும்.இதானால் நாட்டு மக்களுக்கு என்ன பயன்?
பணக்காரர்கள் மட்டுமே இந்தியாவா?
அப்படித்தான் மோடி அரசு பார்க்கிறது.
அதனால்தான் நிதியமைச்சரின் இந்த அறிவிப்பை வரலாற்று சிறப்பு என்று கைதட்டுகிறார்.ஆனால் இது வரலாற்றுத் தவறு.அதை  தெரிந்த கொள்ள பலநாட்கள் தேவையில்லை.சிலநாட்களிலேயே தெரிந்துவிடும்.இதனால் ஜிடிபி உயராது.மக்கள் சங்கம் சக்தியும் உயராது.அம்பானி,அதானி,டாட்டா போன்ற நிறுவனங்களின்  சொத்து மதிப்பு மட்டுமே உயரும்.பங்குச்ச்சந்தையில் உண்டான ஏற்றம் கூட சிலநாட்களில் தலை கீழாகி விடும்.
பலநாட்கள் தேவையில்லை//
இவை தவறான நடவடிக்கை என அறிய..
ஆனால் அதை ஒப்புக்கொள்ளத்தான் மாட்டார்கள் ஆள்வோர்.
==================================================
காப்பீட்டைக் காக்க வேண்டும்.
மத்திய பாஜக அரசு, எல்ஐசி நிறுவனத்திடமிருந்து, கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 10 லட்சத்து 70 கோடியை நிதியாகப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2014-இல் மத்தியில் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற
திட்டங்களை, தடாலடியாக அறிவித்தார். இதனால்,சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மட்டுமின்றி, பெருந்தொழில்களும் கடும் பாதிப்பைச் சந்தித்தன.
சுமார் ஒன்றே கால் கோடிப் பேர் வேலையிழந்து நடுத்தெருவிற்கு வந்தனர்.
உற்பத்தி முடங்கியது. ஏற்றுமதி குறைந்தது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால், பாதிப்பை சமாளிக்க முடியாமல் திணறிய மோடி அரசு, வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் கடன்களைப் பெறத் தொடங்கியது.
மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஆட்சியை விட்டு இறங்கிய பொழுது, கடந்த 2014 ஜூனில், இந்தியாவின் மொத்தக் கடன் தொகை ரூ. 54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடியாக இருந்தது.
 ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபின், கடந்த 2018 செப்டம்பர் வரையிலான நான்கரை ஆண்டுகளில் மட்டும், இந்த கடன்தொகை ரூ. 82 லட்சத்து 3 ஆயிரத்து 253 கோடியாக அதிகரித்தது.


சுமார்28 லட்சம் கோடி ரூபாயை வெளிநாடுகளி லிருந்து மோடி அரசு கடனாகப் பெற்றது.அது மட்டுமல்லாமல், ரிசர்வ் வங்கியிட மிருந்தும், கொஞ்சம் கொஞ்சமாக கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 4 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாயை, மோடி அரசு பிடுங்கியது.
அதிகபட்சமாக 2019-ஆம் ஆண்டில்  மட்டும் 1 லட்சத்து 76 ஆயிரத்து 51 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருந்து பெற்றது.
தற்போதோ, இந்திய மக்களின் வாழ்நாள் பாதுகாப்புக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் உத்தரவாதம் அளிக்கும் எல்ஐசி நிறுவனத்திடம் இருந்தும்பல லட்சம் கோடி ரூபாய்களை முதலீடு என்ற பெயரில்  பெறத்துவங்கியுள்ளது.
நீண்டகாலமாகவே நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான முதலீட்டை எல்ஐசி நிறுவனம்தான் வழங்கி வரு கிறது.

கடந்த 2013-14 நிதியாண்டு வரை, சுமார் 11லட்சத்து  90  ஆயிரம்கோடி ரூபாயை நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் எல்ஐசி முதலீடு செய்திருந்தது. பாலிசி தாரர்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடாத வகையில், இந்த முதலீடுகளை எல்ஐசி செய்து வந்தது.
ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு எல்ஐசி நிறுவனத்திற்கு நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டது. ஐடிபிஐ வங்கியில் சுமார் 80.96 சதவிகித பங்குகளை மத்திய அரசு வைத்திருந்தது.
எல்ஐசி 10.82 சதவிகித பங்குகளை வைத்திருந்தது. இந்நிலையில் தன்னிடமிருந்து 41 சதவிகித பங்குகளை வாங்கிக் கொள்ளுமாறு எல்ஐசி நிறுவனத்திற்கு நிர்ப்பந்தம் அளித்த மத்திய அரசு அதன்மூலம் ரூ. 13 ஆயிரம் கோடி ரூபாயை கைப்பற்றிக்கொண்டது.

இதேபோல பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில், எல்ஐசி நிறுவனத்தை ரூ. 10 லட்சத்து 70 ஆயிரம் கோடிகள் அளவிற்கு முதலீடு செய்ய வைத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
சமீபத்திய இரண்டரை மாதங்களில் மட்டும் ரூ. 57 ஆயிரம் கோடியை எல்ஐசி-யிடமிருந்து கறந்துள்ளது.
 நிதி நெருக்கடியிலிருந்து, தப்பித்துக் கொள்வதற்காக மோடி அரசு இவ்வாறு செய்துள்ளது.கடந்த 1956-ஆம் ஆண்டு முதல் 2014 வரை எல்ஐசி முதலீடு செய்த தொகை ரூ. 11 லட்சத்து 90 ஆயிரம் என்றால், கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியில் மட்டும் ரூ. 10 லட்சத்து 70 ஆயிரம்கோடி எல்ஐசி-யிடமிருந்து முதலீடு என்ற பெயரில்பெறப்பட்டுள்ளது.
 இதன்மூலம் எல்ஐசி நிறுவனம் பொதுத்துறை நிறுவனங்களில் மேற்கொண்டுள்ள முதலீடு ரூ. 22 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாள் 
முன்னால் 
 உலக அமைதி தினம்
பிரான்சில் குடியரசு நிறுவப்பட்டது(1792)
மோல்ட்டார் விடுதலை தினம்(1964)

பக்ரைன்,பூட்டான், கத்தார் ஆகியன ஐ.நா.,வில் இணைந்தன(1971)
 ஆர்மேனியா விடுதலை தினம்(1991)

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
மாட்டிக்கொண்டால் மட்டும்..?
 உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர்களில் சின்மயானந்தா முக்கியமானவர். 
சாமியாரான இவர், வாஜ்பாய் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். 
இந்நிலையில், சாமியார் சின்மயானந்தா, தனக்குச் சொந்தமான சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவியர் பலரை மிரட்டி பாலியல் வல்லுறவுக் கொடுமைகளுக்கு உள்ளாக்கியதாக அண்மையில் புகார் எழுந்தது. 

பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர், சின்மயானந்தாவுக்கு எதிராக பகிரங்கமாகவே புகார் அளித்தார். 
மாணவியின் தந்தையும், தனது மகளுக்கு நீதிகேட்டு உச்சநீதிமன்றம் வரை சென்றார்.
 அதனடிப்படையில், சிறப்பு புலனாய்வுக்குழு மூலம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

 புகார் அளித்த மாணவியிடம் 11 மணி நேரமும், குற்றம்சாட்டப்பட்ட சின்மயானந்தாவிடம் 7 மணிநேரமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஆதாரங்களைத் திரட்டினர். 

சின்மயானந்தாவின் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 2 முதல்வர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மாணவி தரப்பில், சின்மயானந்தாவுக்கு எதிராக 43 வீடியோ ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.
எனினும், சின்மயானந்தா மீது கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாததால், சம்பந்தப்பட்ட மாணவி அதிர்ச்சியடைந்தார்.

 “மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நான் வாக்குமூலம் கொடுத்து 2 நாட்கள் ஆகியும் இன்னும் சின்மயானந்தை கைது செய்யவில்லை. அரசு நான் சாக வேண்டும் என்று காத்திருக்கிறதா? சின்மயானந்தை உடனடியாக கைது செய்யவில்லை என்றால் நான் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வேன்” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள மத்திய முன்னாள் அமைச்சரும் சாமியாருமான சின்மயானந்த் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரை மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாட்டிக்கொள்ளும்வரை படுக்கையில் ஆடுகிறார்கள்.கைதானால் படுத்து விடுகிறார்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
 நினைவில் கொள்ளுங்கள்.



 செப்டம்பர் .
22 - இரண்டு & மூன்றாம் நிலை அதிகாரி ஒரு கட்ட தேர்வு (ஐ.பி.பி.எஸ்.)
 23 - 27 - எஸ். எஸ். சி., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு
29 - ஐ.பி.பி.எஸ்., ஆபீஸ் அசிஸ்டென்ட் மெயின் தேர்வு 


அக்டோபர் 

.12,13,மற்றும் 19, 20 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ.,முதல் நிலைத் தேர்வு 

நவம்பர் .
17 - என்.டி.ஏ., தேர்வு
30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு 


டிசம்பர் 

.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு 
7,8,மற்றும் 14,15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் முதல் நிலைத்தேர்வு

நபார்ட் வங்கியில் வேலை.


 மத்திய அரசின் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி நபார்டு. இங்கு 'டெவலப்மென்ட்' உதவியாளர் (82), 'டெவலப்மென்ட்' உதவியாளர்/இந்தி (9) என 91 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 18 - 35. வயது வரம்பு தளர்ச்சி உண்டு.

தகுதி: * ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, 69 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
* இந்தி பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்தி அல்லது ஆங்கில பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.32,000

கடைசி நாள்: 2.10.2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (ஆன் லைன்), நேர்முகத் தேர்வு

விபரங்களுக்கு: https://www.nabard.org

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?