அரசும் தனியார் மயம்
அந்த இடங்களில் நிலேஷ் ஷா மற்றும் நீலகாந்த மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிதி மேலாண்மைகல்வி நிறுவனத் தலைவர் அனந்தநாகேஸ்வரனும் குழுவில் இணைக் கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது மோடியின் பொருளாதார ஆலோசகர்களாக பிரபலதனியார் நிதி நிறுவனஅதிகாரிகளான
நிலேஷ் ஷா மற்றும்நீலகாந்த் மிஸ்ரா ஆகியோர்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார விவகாரங்களில் பிரதமருக்கு ஆலோசனைகள்
வழங்குவதற்கான குழு (Economic AdvisoryCouncil to the Prime Minister -
EAC-PM) ‘நிதி ஆயோக்’கைச் சேர்ந்த பிபேக் தேப்ராய் தலைமையில் உள் ளது.
அதே,
நிதி ஆயோக்கைச் சேர்ந்த ரத்தன் வாட்டல், ஜே.பி. மார்கன் நிறுவனத்தைச்
சேர்ந்த சாஜித் செனாய், இந்திராகாந்தி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி
நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிமா கோயல் ஆகியோர் குழுவில் உறுப்பினர்களாக
உள்ளனர்.
இந்நிலையில், ‘கோடாக் மகேந்திரா’ தனியார் கார்ப்பரேட்
நிதிநிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிலேஷ் ஷா மற்றும் ‘இந்தியா
ஸ்டிராடஜிஸ்ட்’ தனியார் கார்ப்பரேட் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்
நீல்காந்த மிஸ்ரா ஆகியோர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் புதிதாக
நியமிக்கப்பட் டுள்ளனர்.
ஆக மொத்தத்தில் அரசும் தனியார் மயம் ஆகிறது ?
------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்நாளில் ,
முன்னால் .
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்த தினம்(1469)
கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் பிறந்த தினம்(1923)
சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது(1973)
இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது(1982)
1720 - இங்கிலாந்துக் கடற்படையிடம், கரீபியக்
கடற்கொள்ளைக்காரர் காலிக்கோ ஜேக், ஜமைக்காவிலுள்ள டிஸ்கவரி துறைமுக
(அல்லது உலர் துறைமுக) குடாவில், சிறிய யுத்தத்திற்குப்பின் பிடிபட்டார்.
தன் கப்பலுக்கென்று தனிக்கொடி வைத்திருந்த இவர்தான், தற்போது கடற்கொள்ளையர்களை அடையாளப்படுத்த பொதுவாகப் பயன்படுத்தப்படும் மண்டையோட்டு கருப்புக்கொடியை முதலில் பயன்படுத்தியவர்.
இவருக்கு முந்தைய கடற்கொள்ளையர்களின் கொடிகளில் முழு எலும்புக்கூடே இடம்பெற்றிருந்த நிலையில், மண்டையோடும், எக்ஸ் வடிவத்தில் இரண்டு வாள்களும் கொண்ட கொடியை இவர் உருவாக்கிப் பயன்படுத்தினார்.
பின்னாளில், அந்த வாள்களுக்குப் பதிலாக, எலும்புகள் இடம்பெற்ற இந்தக் கொடியின் பெயர் ஜாலி ரோஜர்ஸ் என்று குறிப்பிடப்படுகிறது. இப்பெயரைக் கடற்கொள்ளையர்கள் பயன்படுத்தினர் என்பதைத் தவிர, வேறு பெயர்க்காரணம் தெரியவில்லை.
ஜேக் என்ற செல்லப்பெயர் கொண்ட காலிக்கோ ஜேக்கின் இயற்பெயர் ஜான் ரக்கம். இவர் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் காலிக்கோ துணியாலான உடைகளையே அணிந்ததால், காலிக்கோ ஜேக் என்பதே பெயராகிவிட்டது. காலிக்கோ என்பது, கேரளத்தில் உருவான துணி வகையாகும்.
காலிக்கட் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட கோழிக்கோட்டிலிருந்து வந்ததால், 1505இல், ஆங்கிலேயர்கள் இத்துணிக்கு காலிக்கோ என்று பெயரிட்டனர்.
கடற்கொள்ளையர்களின் நாடு என்றழைக்கப்பட்ட, நியூ ப்ராவிடன்ஸ் தீவிலிருந்து(பகாமாஸ் தீவுகளைச் சேர்ந்தது) இயங்கிய சார்லஸ் வேன் என்ற கடற்கொள்ளைக்காரரின் கப்பலில் ஜேக் பணிபுரிந்தார்.
ஒருமுறை நியூயார்க் அருகில் இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு பெரிய பிரெஞ்ச்சுப் போர்க்கப்பலிடம் பிடிபடும் நிலையேற்பட்டது. சரணடைவது என்று வேன் முடிவெடுத்தபோது, போரிடலாம் என்று முடிவெடுத்த ஜேக் வெற்றியும் பெற, கப்பலிலிருந்த பிற கொள்ளையர்கள் இவரைத் தளபதியாக்கியதுடன், வெல்லப்பட்ட பெரிய போர்க்கப்பலும் ஜேக்குக் கிடைத்தது.
1650களிலிருந்து 1730கள் வரையான காலம் கடற்கொள்ளையின் பொற்காலம் என்று குறிப்பிடப்படுகிறது. இக்காலத்தில் பெரும் வளர்ச்சியடைந்த கடல் வணிகம், போர்களுக்குப்பின் குறைந்த ஐரோப்பிய கடற்படைகள், கடற்படையில் அனுபவம்பெற்று, போர்களுக்குப்பின் வேலையிழந்த மாலுமிகள் உள்ளிட்டவை இக்காலத்தில் கடற்கொள்ளையின் வளர்ச்சிக்குக் காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன.
இக்காலத்தில், குடியேற்றவாத நாடுகளின் கடற்படைகளுக்கும், கடற்கொள்ளையர்களுக்குமிடையே, குறிப்பிடத்தக்க பல போர்களும் நடைபெற்றுள்ளன.
கடற்கொள்ளையின் பொற்காலத்தின் இறுதிப்பகுதியில் கோலோச்சியவர்களில் ஒருவரான ஜேக், பிடிபட்டபின் மரணதண்டனை விதிக்கப்பட்டு, 1720 நவம்பர் 18இல் 37 வயதில் கொல்லப்பட்டார்.
தன் கப்பலுக்கென்று தனிக்கொடி வைத்திருந்த இவர்தான், தற்போது கடற்கொள்ளையர்களை அடையாளப்படுத்த பொதுவாகப் பயன்படுத்தப்படும் மண்டையோட்டு கருப்புக்கொடியை முதலில் பயன்படுத்தியவர்.
இவருக்கு முந்தைய கடற்கொள்ளையர்களின் கொடிகளில் முழு எலும்புக்கூடே இடம்பெற்றிருந்த நிலையில், மண்டையோடும், எக்ஸ் வடிவத்தில் இரண்டு வாள்களும் கொண்ட கொடியை இவர் உருவாக்கிப் பயன்படுத்தினார்.
பின்னாளில், அந்த வாள்களுக்குப் பதிலாக, எலும்புகள் இடம்பெற்ற இந்தக் கொடியின் பெயர் ஜாலி ரோஜர்ஸ் என்று குறிப்பிடப்படுகிறது. இப்பெயரைக் கடற்கொள்ளையர்கள் பயன்படுத்தினர் என்பதைத் தவிர, வேறு பெயர்க்காரணம் தெரியவில்லை.
ஜேக் என்ற செல்லப்பெயர் கொண்ட காலிக்கோ ஜேக்கின் இயற்பெயர் ஜான் ரக்கம். இவர் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் காலிக்கோ துணியாலான உடைகளையே அணிந்ததால், காலிக்கோ ஜேக் என்பதே பெயராகிவிட்டது. காலிக்கோ என்பது, கேரளத்தில் உருவான துணி வகையாகும்.
காலிக்கட் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட கோழிக்கோட்டிலிருந்து வந்ததால், 1505இல், ஆங்கிலேயர்கள் இத்துணிக்கு காலிக்கோ என்று பெயரிட்டனர்.
கடற்கொள்ளையர்களின் நாடு என்றழைக்கப்பட்ட, நியூ ப்ராவிடன்ஸ் தீவிலிருந்து(பகாமாஸ் தீவுகளைச் சேர்ந்தது) இயங்கிய சார்லஸ் வேன் என்ற கடற்கொள்ளைக்காரரின் கப்பலில் ஜேக் பணிபுரிந்தார்.
ஒருமுறை நியூயார்க் அருகில் இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு பெரிய பிரெஞ்ச்சுப் போர்க்கப்பலிடம் பிடிபடும் நிலையேற்பட்டது. சரணடைவது என்று வேன் முடிவெடுத்தபோது, போரிடலாம் என்று முடிவெடுத்த ஜேக் வெற்றியும் பெற, கப்பலிலிருந்த பிற கொள்ளையர்கள் இவரைத் தளபதியாக்கியதுடன், வெல்லப்பட்ட பெரிய போர்க்கப்பலும் ஜேக்குக் கிடைத்தது.
1650களிலிருந்து 1730கள் வரையான காலம் கடற்கொள்ளையின் பொற்காலம் என்று குறிப்பிடப்படுகிறது. இக்காலத்தில் பெரும் வளர்ச்சியடைந்த கடல் வணிகம், போர்களுக்குப்பின் குறைந்த ஐரோப்பிய கடற்படைகள், கடற்படையில் அனுபவம்பெற்று, போர்களுக்குப்பின் வேலையிழந்த மாலுமிகள் உள்ளிட்டவை இக்காலத்தில் கடற்கொள்ளையின் வளர்ச்சிக்குக் காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன.
இக்காலத்தில், குடியேற்றவாத நாடுகளின் கடற்படைகளுக்கும், கடற்கொள்ளையர்களுக்குமிடையே, குறிப்பிடத்தக்க பல போர்களும் நடைபெற்றுள்ளன.
கடற்கொள்ளையின் பொற்காலத்தின் இறுதிப்பகுதியில் கோலோச்சியவர்களில் ஒருவரான ஜேக், பிடிபட்டபின் மரணதண்டனை விதிக்கப்பட்டு, 1720 நவம்பர் 18இல் 37 வயதில் கொல்லப்பட்டார்.
“நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தை மிகப் பெரிய ராஜதந்திர வெற்றி”யாகப் புகழ்ந்து தலையங்கம் தீட்டியிருக்கிறது, தினமணி. நடுநிலை நாளேடு என வேடம் போட்டுக் கொண்டிருக்கும் தினமணியே இந்த ஊது ஊதியிருக்கிறதென்றால், சங்கிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை.
“ஹூஸ்டன் நிகழ்ச்சி, ஐ.நா. உரை, பாகிஸ்தானை ஓரங்கட்டியிருப்பது” ஆகிய முப்பெரும் சாதனைகளை நரேந்திர மோடி அமெரிக்க மண்ணில் நிகழ்த்தியிருப்பதாகப் பீற்றிக் கொண்டிருக்கிறது, துக்ளக்.
மைய அமைச்சர் ஜிதேந்திர சிங்கோ, “அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இந்தியாவின் தந்தை எனப் புகழ்ந்ததை ஏற்காதவர்களை இந்தியர்களாகக் கருத வேண்டாம்” என ஒரே போடாகப் போட்டிருக்கிறார்.
சுய தம்பட்டம் அடித்துக் கொள்வதிலும், விளம்பரம் தேடிக் கொள்வதிலும் நரேந்திர மோடிக்கு இணையாக வேறொரு அரசியல் தலைவர் சமீபகால அரசியல் வரலாற்றில் கிடையாது. அவரின் இந்த அற்பத்தனத்திற்கு இன்னொரு சான்று, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஹூஸ்டன் நகரில் நடந்த “மோடி நலமா!” நிகழ்ச்சி.
இந்தியப் பொருளாதாரம் குப்புறக் கவிழ்ந்து, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வரும் சூழலில் மோடி நலமா என்ற தலைப்பே வக்கிரமானது, அருவெருக்கத்தக்கது. அந்நிகழ்ச்சியோ ஆடல், பாடல், செல்ஃபி, ஒருவருக்கொருவர் முதுகு சொறிவது என மூன்றாந்தர நட்சத்திர கலைநிகழ்ச்சி போல நடந்து முடிந்தது.
திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் நடத்தியிருக்கும் இத்தகைய கூத்துக்களை வரிந்துகட்டிக்கொண்டு விமர்சித்திருக்கும் அவாள் பத்திரிகைகள் மோடி நலமா நிகழ்ச்சியை விமர்சித்து ஒருவரி கூட எழுதவில்லை. மாறாக, அமெரிக்க அதிபர் டிரம்பை மேடையில் ஏற்றியதை மோடியின் வெற்றியாகக் குறிப்பிடுகின்றன.
“தேர்தல் பிரச்சாரக் காலத்தில் இந்தியாவில் கட்சித் தலைவர்களுக்கு முன்னால் அவர்களது வேட்பாளர்கள் கைகூப்பி நிற்பது போல, அமெரிக்க அதிபரை நரேந்திர மோடி நிற்க வைத்ததைப் பார்த்து உலகமே வியந்தது, அதிர்ந்தது” எனக் கூச்சமின்றிப் புகழ்ந்து தள்ளியிருக்கிறது, தினமணி. கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்ற ரேஞ்சில் நரேந்திர மோடிக்குப் புதிய பட்டம் எதனையும் சூட்டாததுதான் கொஞ்சம் ஆறுதல் தரும் செய்தி.
மோடி நலமா நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொண்டது, தினமணி குறிப்பிடுவது போல இந்தியாவிற்கோ, மோடிக்கோ தனி மரியாதை கொடுக்கும் நல்லெண்ணம் கொண்டதல்ல. மாறாக, அது டிரம்பின் தேர்தல் உத்தி. அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாம் முறையாகப் போட்டியிடவுள்ள டிரம்பிற்கு, அமெரிக்க இந்தியர்களின் வாக்குகள் தேவை. கடந்த அதிபர் தேர்தலில் அமெரிக்க இந்தியர்களில் வெறும் 16 சதவீதத்தினர்தான் டிரம்பிற்கு வாக்களித்திருந்தனர். இம்முறை அதனை அதிகரித்துக் கொள்வதற்கு இந்தியப் பிரதமர் மோடியைப் பயன்படுத்திக் கொண்டார், அவர். மோடியோ வாங்கிய காசுக்கு மேல் கூவிய கதையாக, “இந்த முறையும் டிரம்ப் சர்க்கார்தான்” (அப் கி பார், டிரம்ப் சர்க்கார்) என முழக்கமிட்டதன் மூலம், தான் டிரம்பின் நட்சத்திர பிரச்சாரக் எனக் காட்டிக்கொண்டார். ஒரு நாட்டின் பிரதமர், தனது தகுதியைக் கடாசிவிட்டு இப்படி இறங்கிப்போய் தேர்தல் பிரச்சாரம் செய்த கேவலத்தைக் கண்டுதான் உலகம் அதிர்ந்து போனது.
ஐ.நா. சபையின் பொதுக்குழுவில் உரையாற்றுவதற்காகத்தான் மோடி அமெரிக்கா சென்றதாகக் கூறப்பட்டாலும், இந்தப் பயணம் வேறு நோக்கங்களையும் கொண்டிருந்தது. ஒன்று, காஷ்மீர் பிரச்சினை; மற்றொன்று, அமெரிக்காவுடனான வர்த்தகப் பிரச்சினை.
நரேந்திர மோடியும் டிரம்பும் பாய்-பாய் என்றபடி ஒருவரையொருவர் ஆரத்தழுவி போஸ் கொடுத்தாலும், பெரிய அமெரிக்க முதலீடுகள் எதுவும் இந்தியாவிற்குக் கிடைக்கவில்லை. மாறாக, இந்தியப் பொதுத்துறை நிறுவனமான பெட்ரோநெட், அமெரிக்காவின் எல்.என்.ஜி. நிறுவனத்தில் 17,688 கோடி ரூபாய் முதலீடு செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. அமெரிக்காவைத் திருப்திப்படுத்த மோடி எழுதியிருக்கும் மொய்ப்பணம் இது!
இவ்வர்த்தகப் பேச்சுவார்த்தையினூடாக அமெரிக்காவின் சலுகை பெற்ற வர்த்தகக் கூட்டாளி என்ற தகுதியை மீண்டும் பெற்றுவிட வேண்டுமென்பதும், அமெரிக்காவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைப் பேசி முடித்துவிட வேண்டுமென்பதும் மோடி அரசின் முக்கிய விருப்பங்களாக இருந்தன. இந்தியா இறங்கிவந்து விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தாலும், முழுத் திருப்தி கிடைக்கும் வகையில் ஒப்புக்கொண்டால்தான் உடன்பாடு என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்ததால், நரேந்திர மோடி வெறுங்கையோடுதான் இந்தியாவிற்குத் திரும்பினார்.
எனினும், ஐ.நா. பொதுக்குழுவில் அமெரிக்கா காஷ்மீர் பிரச்சினை குறித்துக் கருத்துக் கூறாததைக் காட்டி, மோடியின் பயணத்தை வெற்றியாகக் காட்ட முயலுகிறார்கள், அவரது ஆதரவாளர்கள். ஆனால், காஷ்மீர் பிரச்சினையிலோ முதுகுக்குப் பின்னிருந்துகொண்டு பெப்பே காட்டும் தந்திரத்தோடு நடந்துகொண்டு, மோடியைக் கோமாளியாக்கவிட்டார், டிரம்ப்.
ஹூஸ்டன் நிகழ்ச்சியிலும் ஐ.நா.வின் பொதுக்குழுவிலும் காணக் கிடைக்காத அமெரிக்காவின் உண்மை முகம் இம்ரான் கானும் டிரம்பும் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பின்போது வெளிச்சத்திற்கு வந்தது. ஹூஸ்டன் நிகழ்ச்சியில் பாக். தீவிரவாதத்தைக் கண்டித்து மோடி ஆற்றிய உரையை, “முரட்டுத்தனமான பேச்சு” என அப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் விமர்சித்ததோடு, “இரண்டு நாடுகளும் விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையில் நான் மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக”வும் அறிவித்தார், டிரம்ப்.
“நான் பாகிஸ்தானை நம்புகிறேன். ஆனால், எனக்கு முன்பு இருந்தவர்கள் நம்பவில்லை. பாகிஸ்தானியர்கள் என்ன செய்தார்கள் என அவர்களுக்குத் தெரியாது” எனக் கூறி, பாகிஸ்தானை ஆசிர்வதித்தார். இவை அனைத்தும் டிரம்ப் மோடிக்கு வைத்த ஆப்புகள். பாகிஸ்தானுக்குக் கிடைத்த வெற்றிகள்.
“டிரம்பின் இந்தக் கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவிப்பீர்களா?” எனப் பத்திரிகையாளர்கள் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதற்கு, மோடி-டிரம்ப் சந்திப்பின்போது ஆட்சேபணை தெரிவிக்கப்படும் என வீராப்பாக அறிவித்தார்கள். அச்சந்திப்பு நடந்ததேயொழிய, டிரம்பின் கருத்துக்களுக்கோ, மத்தியஸ்த விருப்பத்திற்கோ மோடி மறுப்பு தெரிவித்ததாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.
ஐ.நா.வின் பொதுக்குழுவில் பாக். பிரதமர் இம்ரான் கான் ஆற்றிய உரைக்குப் பதில் அளித்துப் பேசிய வெளியுறவுத் துறை அதிகாரி விதிஷா மைத்ராவும்கூட, அந்த எல்லைக்கு அப்பால் சென்று வினயமாகக்கூட டிரம்பின் விமர்சனங்களுக்கும் விருப்பங்களுக்கும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
அதேசமயம், ஐ.நா.வில் வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கான் பிரச்சினையில் அமெரிக்கா சுயநலத்தோடு பாகிஸ்தானைப் பயன்படுத்திக்கொண்டதைக் குறிப்பிட்டதோடு, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் நாங்கள் அமெரிக்காவுடன் சேர்ந்துதான் தவறு என்றும், டிரம்ப் தாலிபான்களோடு மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டுமென்றும், 19 ஆண்டுகளாக உங்களால் வெல்ல முடியாதபோது இன்னும் 19 ஆண்டுகளானாலும் உங்களால் வெல்ல முடியாது என்றும் விமர்சித்து, அமெரிக்காவைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார்.
ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தானையும் சீனாவையும் தவிர்த்து ஏனைய உலக நாடுகள் காஷ்மீர் பிரச்சினையில் கருத்துச் சொல்லவில்லை என்பது உண்மைதான். இதன் பொருள் அந்நாடுகள், குறிப்பாக மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் இந்தியாவின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறார்கள் என்பது அல்ல.
“அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இனி, பாகிஸ்தான் வசமுள்ள ஆசாத் காஷ்மீரை மீட்பதுதான் இந்திய அரசின் அடுத்த இலக்கு” என்றவாறு மோடி அரசு உதார்விட்டு வருகிறது. ஆனால், இதற்கு மாறாக, மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் காஷ்மீர் பிரச்சினையை இன்னும் இரு தரப்புப் பிரச்சினையாகவே கருதி வருகின்றன. டிரம்போ தனது தலைமையில் மத்தியஸ்தம் என அதற்கு அப்பால் செல்லுகிறார். மோடி அரசோ வாய் கொள்ளாத பெரிய எலும்புத் துண்டை முழுங்கிவிட்டு, அதனை மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவித்துப் போய் நிற்கிறது.
– குப்பன்
நன்றி :வினவு
இவனுக்குலாம் பாரத ரத்னா விருதாம்.
Arumugam Sundaresan
facebook
ஆற்காடு வீராசாமி
2007 ல் வெளியிட்ட அறிக்கை.
பதில் எங்கே மரூ.ராமதாஸ்?
’முரசொலி’ கட்டிடம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையும், அது தொடர்பாக திமுக தலைவர் விடுத்த சவாலும்தான் தமிழக அரசியல் அரங்கில் இப்போது ‘டாக் ஆப் த டவுண்’.
’அசுரன்’ படத்தை அண்மையில் கண்டுகளித்த ஸ்டாலின், பஞ்சமி நில மீட்பு பிரச்சனையைக் கையிலெடுத்ததற்காக பாராட்டு தெரிவித்ததுடன், நடிகர் தனுஷுக்கும், இயக்குநர் வெற்றிமாறனுக்கும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.
இந்த இடத்தில் சம்மன் இல்லாமலேயே வந்து ஆஜரானார் ராமதாஸ்.
‘’அசுரனை பாராட்டுவது இருக்கட்டும். முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில்தான் இருக்குது. அதுக்கு என்ன சொல்றீங்க!’’என எகிறினார்.
கொஞ்சமும் தாமதிக்காத ஸ்டாலின் ‘’ முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில்தான் இருக்கிறது என ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன். அப்படி நிரூபிக்கத் தவறினால் ராமதாஸ் அரசியலை விட்டுப் போகத் தயாரா” என நெத்தியடியாக சவால் விட, தைலாபுரம் பக்கம் மூன்று நாட்களாக மயான அமைதி.
இன்றைக்கு திடுதிப்பென பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொல்கிறேன் என்பது போல, சம்மந்தா சம்மந்தமே இல்லாமல் தமது ட்விட்டர் பக்கத்தில் மேலும் சில அர்த்தமற்ற கேள்விகளை அள்ளி இறைத்திருக்கிறார்.
சரி போகட்டும். விஷயத்திற்கு வருவோம்.
அடிப்படையான இந்த விஷயத்தைப் புரிந்துகொண்டால் ராமதாசின் குற்றச்சாட்டு, 100% அபத்தமானது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
அடுத்தவர் மீது அவதூறு பரப்பிய ராமதாஸ் மீது இப்போது அதே மாதிரியான குற்றச்சாட்டு பூமரங்காகத் திருப்பித் தாக்கத் தொடங்கியிருப்பதுதான் அவரே எதிர்பார்க்காத ஆன்டி கிளைமாக்ஸ்.
பல ஆண்டுகளுக்கு கோனேரிக்குப்பத்தில் டாக்டர் ராமதாஸ் கட்டிய கல்லூரியின் இடம் குறித்து அப்போது எழுந்த சர்ச்சையை மீண்டும் கிளறத் தொடங்கி உள்ளனர் திமுகவினர்.
அது என்ன சர்ச்சை என்கிறீர்களா..?
விளை நிலங்களில் கட்டிடம் கட்டக்கூடாது என்ற விதிமுறைகளை மீறி ராமதாஸ் இந்த கட்டிடங்களைக் கட்டியதாக விமர்சனங்கள் எழுந்தன.
உடனே டாக்டருக்கு பி.பி எகிறியது.
’’விளை நிலங்களில் கட்டிடம் கட்டப்பட்டதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்” என கொந்தளித்தார் ராமதாஸ்.
(“நானோ எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அரசு பதவிக்கு வந்தால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்” என்றெல்லாம் சபதம் செய்தவர்தானே..)
அப்போது அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி ஒரு அறிக்கை வெளியிட்டார்.
ராமதாஸ் கல்லூரி கட்டிய இடம் விளைநிலம்தான் என்பதை பட்டா எண் விவரங்களோடு அதில் அவர் தெரிவித்திருந்தார்.
விளை நிலங்களிலதான் டாக்டர் ராமதாஸ் கல்லூரிகளை கட்டிவருகிறார்'
என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இது தொடர்பாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
'டாக்டர் ராமதாஸ் உருவாக்கியுள்ள அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்டு வரும்
கல்லூரி அமைந்துள்ள இடம் நூறாண்டு காலத்திற்கும் மேலாக பயன்படுத்தப்படாமல்
கரம்பாக கிடந்த களர் நிலம் என்றும் அங்கே விளைநிலங்கள் அமைந்திருந்தது
என்று நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார், நிரூபிக்க தவறினால்,
பாவம் அந்த அமைச்சர் அரசியலில் நீடித்து போகட்டும், குறைந்த பட்சம்
மக்களிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும்.
இதற்கு அமைச்சர்
தயாரா?
என்றும் டாக்டர் ராமதாஸ் சவால் விட்டிருக்கிறார்.
ஆத்திரம் அறிவுக்கு சத்துரு என அவர் கூறியுள்ளார். நான்
ஆத்திரப்படவில்லை, அமைதியாகத்தான் அறிக்கை விட்டேன். அவர் தான்
ஆத்திரப்பட்டு அறிக்கை விட்டுள்ளார்.
அவரது சவாலுக்கு எதிர் சவால் விட எனது
கழகத் தலைமை அனுமதிக்காது என்பதால் விளக்கம் மட்டும் அளிக்க
விரும்புகிறேன்.
டாக்டர் ராமதாஸ் கல்லூரி நடத்துவதை பற்றியோ, அதில் வன்னிய மாணவர்களுக்கு
உணவுக் கட்டணம் கூட வசூலிக்காமல் தரமான கல்வியை கொடுத்து கொண்டிருப்பதாலோ
எனக்கு எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. உண்மையில் மிகவும்
பின்தங்கிய மக்களாகிய வன்னிய மக்களுக்காவது இலவசக் கல்வியும், இலவச உணவும்
கொடுத்து வருவதற்கு எனது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து
கொள்கிறேன்.
ஆனால் நாட்டு மக்களை ஏமாற்றக்கூடிய அளவிற்கு, நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அந்த
கல்லூரி அமைந்துள்ள இடம் 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல்
கரம்பாக கிடந்த களர் நிலம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது முழுக்க
முழுக்க தவறான தகவல் ஆகும்.
ஒலக்கூர் கீழ்ப்பாடி கிராமத்தில் வாய்க்கால் அமைந்திருப்பதும், அந்த
பகுதியிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் 1991ம் ஆண்டு இந்த இடங்கள்
கல்லூரி கட்டுவதற்காக வாங்கப்படும் வரை யார் யார் அங்கே என்ன என்ன பயிர்
செய்து வந்தார்கள் என்பதற்கான விவரங்களையும், அதற்கான சர்வே எண்களையும்,
அவர்கள் அரசாங்கத்திற்கு செலுத்திய வரி விவரங்களையும் பின்வருமாறு
தெரிவித்து கொள்கிறேன்.
வன்னியர் கல்வி அறக்கட்டளையால் கிரயம் பெறப்பட்ட நிலங்கள் சாகுபடிக்கு உரிய
நிலங்களா என்பது குறித்து ஐந்தாண்டுகளுக்கு முந்தைய அடங்கல் விவரங்களை
பார்வையிட்டால், அந்த நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வந்த உண்மையையும்,
அந்த பட்டா நிலங்கள் ஏற்கனவே விளை நிலங்களாக இருந்ததையும் அறியலாம்
1. ஒலக்கூர் கீழ்பாதி கிராமம்-(புல.எண்) 229/2- (விஸ்தீரணம்
ஹெக்டேரில்) 4.00-சவுக்கு (1411ம் பசலி ஆண்டு (2001-2002) பயிர்
செய்யப்பட்டது
2.ஒலக்கூர் கீழ்பாதி- 230/1- 0.10-பூஞ்செடி பயிர் செய்யப்பட்டது
3.ஒலக்கூர் கீழ்பாதி- 230/1 - 0.90- நெல் பயிர் செய்யப்பட்டது
4.ஒலக்கூர் கீழ்பாதி- 230/3 - 4.62- சவுக்கு பயிர் செய்யப்பட்டது
5.நல்லாத்தூர்- 54/1 முதல் 12 வரை- 3.93- சவுக்கு பயிர் செய்யப்பட்டது
6.நல்லாத்தூர்- 52/1 - 0.34- சவுக்கு பயிர் செய்யப்பட்டது
7.நல்லாத்தூர் -52/2- 0.15- சவுக்கு பயிர் செய்யப்பட்டது
8.நல்லாத்தூர் -52/3 -0.15- சவுக்கு பயிர் செய்யப்பட்டது .
இது தவிர வன்னியர் கல்வி அறக்கட்டளையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் தொடர்பான ஆதாரம்: திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் கிராமத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமாக பட்டா எண் 300ல் 41.18.5 ஹெக்டேர் புஞ்செய் நிலம் உள்ளது.
2.ஒலக்கூர் கீழ்பாதி- 230/1- 0.10-பூஞ்செடி பயிர் செய்யப்பட்டது
3.ஒலக்கூர் கீழ்பாதி- 230/1 - 0.90- நெல் பயிர் செய்யப்பட்டது
4.ஒலக்கூர் கீழ்பாதி- 230/3 - 4.62- சவுக்கு பயிர் செய்யப்பட்டது
5.நல்லாத்தூர்- 54/1 முதல் 12 வரை- 3.93- சவுக்கு பயிர் செய்யப்பட்டது
6.நல்லாத்தூர்- 52/1 - 0.34- சவுக்கு பயிர் செய்யப்பட்டது
7.நல்லாத்தூர் -52/2- 0.15- சவுக்கு பயிர் செய்யப்பட்டது
8.நல்லாத்தூர் -52/3 -0.15- சவுக்கு பயிர் செய்யப்பட்டது .
இது தவிர வன்னியர் கல்வி அறக்கட்டளையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் தொடர்பான ஆதாரம்: திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் கிராமத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமாக பட்டா எண் 300ல் 41.18.5 ஹெக்டேர் புஞ்செய் நிலம் உள்ளது.
மற்றும்
நல்லாத்தூர் கிராமத்தில் பட்டா எண் 16ல் 3.93 ஹெக்டேர் புஞ்செய் நிலம்
வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமாக உள்ளது.
மேற்படி இடம் முழுவதும் வன்னியர்
கல்வி அறக்கட்டளையால் வேலியிடப்பட்டுள்ளது.
இந்த வேலி வளைக்கு உட்பட்ட பகுதியில் ஒலக்கூர் கீழ்பாதி கிராம எல்லைக்கு உட்பட்ட பின்வரும் அரசு புறம்போக்கு நிலங்கள் வன்னியர் கல்வி அறக்கட்டளையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
இந்த வேலி வளைக்கு உட்பட்ட பகுதியில் ஒலக்கூர் கீழ்பாதி கிராம எல்லைக்கு உட்பட்ட பின்வரும் அரசு புறம்போக்கு நிலங்கள் வன்னியர் கல்வி அறக்கட்டளையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
210 (புல.எண்)-4.28.0 (மொத்த விஸ்தீரணம்) - 1.20.0 (ஆக்கிரமிப்பு
விஸ்தீரணம்)-மேய்ச்சல் தரை
236/2 (புல.எண்) - 0.06.5 (மொத்த விஸ்தீரணம்) - 0.06.5 (ஆக்கிரமிப்பு
விஸ்தீரணம்)-அணைக்கட்டு
232/2 (புல.எண்) - 0.20.0 (மொத்த விஸ்தீரணம்) - .20 (ஆக்கிரமிப்பு
விஸ்தீரணம்) - அணைக்கட்டு
இது போன்று நல்லாத்தூர் கிராம எல்லைக்கு உட்பட்ட புல.எண் 52/4ல் 1.96
ஹெக்டேர் நிலம் வன்னியர் கல்வி அறக்கட்டளையால் ஆக்கிரமிப்பு
செய்யப்பட்டுள்ளது.
இது அரசு புறம்போக்கு பகுதியாகும்.
இந்த இடம் முழுவதிலும் வேலி வளைப்பு செய்யப்பட்டு புல்
வளர்க்கப்பட்டுள்ளது.
புல.எண் 54/13ல் 0.06.5 விஸ்தீரணம் கொண்ட மயான
புறம்போக்குக்கு பதிலாக வேறு இடம் தருவதாக இந்த வன்னியர் அறக்கட்டளையினர்
கேட்டபோது நல்லாத்தூர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்த
காரணத்தினால் ஆக்கிரமிப்பு செய்யாமல், அந்த இடம் தப்பியது.
இந்த ஆதாரங்களில் இருந்து பல பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்த விளை
நிலங்களும், அரசு புறம்போக்கு நிலங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுத்தான்
அங்கே கல்லூரி உருவாகி இருக்கிறது.
நான் அதனை தவறு என்பதற்காக இந்த
ஆதாரங்களை எல்லாம் தெரிவிக்கவில்லை.
ஆனால் இது போன்ற நல்ல
காரியங்களுக்காகவே பல இடங்களில் நிலங்கள் வாங்கும்போது, ஒட்டுமொத்தமாக அதனை
எதிர்ப்பதால் அரசின் பல்வேறு நல்ல திட்டங்களின் பலன் மக்களுக்கு
கிடைக்காமல் போக நேரிடுகிறது.
விளை நிலங்களில்தான் டாக்டர் ராமதாஸ் கல்லூரி கட்டி வருகிறார் என்பதற்கான
ஆதாரங்களை தர முடியுமா? என்று கேட்டார்.
நான் இப்போது ஆதாரங்கள்
தந்துள்ளேன்.
தேவைப்பட்டால், இன்னமும் ஏராளமான ஆதாரங்களை கொடுக்க தயாராக இருக்கிறேன்.
தேவைப்பட்டால், இன்னமும் ஏராளமான ஆதாரங்களை கொடுக்க தயாராக இருக்கிறேன்.
இது குறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பை டாக்டர் ராமதாசுக்கே விட்டு
விடுகிறேன்'
என தனது அறிக்கையில் ஆற்காடு வீராசாமிகூறியுள்ளார்.
என தனது அறிக்கையில் ஆற்காடு வீராசாமிகூறியுள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------