இனி நேரடிதான்.

இந்திய தேர்தல் முறையில்  ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதில் தலைமைத் தேர்தல் ஆணை யத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
ஆனால் மோடி 2014 ல் பிரதமராக பதவியேற்ற பின்னர்   தேர்தல் ஆணையம் பாஜக சார்பு நிலை எடுப்ப தாக பரவலாக புகார்கள் எழுந்தன.
அந்த புகார்கள் ஒவ்வொன்றையும் உறுதிப்படுத்தும் விதமாக தேர்தல் ஆணையத்தின் அடுத்தடுத்த செயல் பாடுகள் இருந்தன.

இந்நிலையிலேயே பாஜகவிற்காக தேர்தல் ஆணையம் தனது விதியையே மாற்றியி ருப்பது  மக்களிடம் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
ஏற்கனவே  தேர்தல் ஆணையம் வாக்கு இயந்திரத்தின் மூலம் பாஜக மோசடி செய்து வெற்றி பெற உதவியிருக்கிறது என்ற புகார் இருந்து வந்தது.
 இதனை தேர்தல் ஆணையம் மறுத்தது.
பிரேம்சிங் தமாங்


அதோடு வாக்கு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு பணிக் காக எந்த ஒரு தனியார் தொழில்நுட்ப நிறுவனமும் ஈடுபடுத்தப்படவில்லை எனக் கூறியது.
ஆனால் டி&எம் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறு வனத்தை தேர்தல் ஆணையம் பயன்படுத்தியி ருப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

2019 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கிற் கும் எண்ணப்பட்ட வாக்கிற்கும் இடையே 373  தொகுதிகளில் வேறுபாடு இருந்தது.
அதற்கு இன்று வரை தீர்வு இல்லை.
  இந்நிலையில் சிக்கிம் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் எடுத்திருக்கும் நிலை தேர்தல் ஆணையத்தின் உண்மை முகத்தை வெளிச்ச மிட்டு காட்டியிருக்கிறது.

 சிக்கிம் மாநிலத்தில் பிரேம்சிங் தமாங் அமைச்சராக இருந்த போது கறவை மாடுகள் வாங்கிய ஊழலில் உச்சநீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார்.
கடந்த  2018 அக்டோபர் 10 அன்று விடுவிக்கப்பட்டார்.
 தேர்தல் விதிமுறைகளின் படி ஊழல் குற்றச்சாட்டில் ஒரு வருடம் தண்டனை பெற்றவர் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

இந்நிலையில் கடந்த மே மாதம் நடைபெற்ற சிக்கிம் சட்டமன்ற தேர்தலில்  பிரேம்சிங் தமாங் கின் கட்சியான சிக்கிம் புரட்சிகர கட்சி மொத்த முள்ள 32 இடங்களில் 17 இடங்களை கைப்பற்றியது.
அப்போது சட்டத்திற்கு புறம்பாக தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிந்தே  அக்கட்சி   பிரேம்சிங் தமாங்கை  முதல்வராக பதவியேற்க செய்தது.
 இதனை ஆட்சேபிக்க வேண்டிய தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்த்தது.
இதுவரை ஒழிவு ,மறைவாக பாஜக ஆதரவாக செயல்பட்டுவந்து தேர்தல் ஆணையம் தற்போது வெளிப்படையாகவே பாஜக கட்சியின் ஓரங்கமாக நேரடியாக செயல்பட ஆரம்பித்து விட்டது.
அடுத்து ஒரே நாடு ஒரே தேர்தல்தான்.
அதன்படி மக்களவை,சட்டமன்றத்தேர்தல்கள் இணைந்தே நடக்கும்.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------- 
போலி என்கவுண்டர் அதிகாரிகளுக்கு மீண்டும் வேலை.
 குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது, போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம் இளம்பெண் இஷ்ரத் ஜஹானுக்கு, இனி யும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று அவரது தாயார் ஷமீமா கௌசர் தெரிவித்துள்ளார்.
 இதுதொடர்பாக சிபிஐ சிறப்பு நீதி மன்ற நீதிபதி ஆர்.கே. சுதாவாலாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் ஷமீமா எழுதியுள்ளார்.
 கடந்த 2004-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது, அவரைக் கொலை செய்ய முயன் றதாக இஷ்ரத் ஜஹான் (19), ஜாவீத் ஷேக் என்ற பிரனேஷ் பிள்ளை, அக்பர் அலி ராணா, இஷன் ஜோஹர் ஆகி யோரை, குஜராத் காவல்துறை என் எவுண்ட்டரில் சுட்டுக் கொன்றது. ஆனால், இந்த என்கவுண்ட்டரை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, இது போலி என்கவுண்ட்டர் என்று அறி க்கை சமர்ப்பித்ததால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணை நடத்தி, என்கவுண்ட்டர் தொடர்பாக, 11 மீது வழக்கு பதிவு செய்தது.
அவர்களில் குஜராத் முன்னாள் காவல் துறைத் துணைத் தலைவர் டி.ஜி. வன்சாரா, காவல்துறை அதிகாரி என்.கே. அமீன் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை யும் தாக்கல் செய்தது.
ஆனால், கடந்த 2019 மே மாதம், ஐபிஎஸ் அதிகாரிகள் டி.ஜி. வன்சரா மற்றும் என்.கே. அமீன் ஆகியோர் மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்ப ளித்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட  மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான பி.பி. பாண்டே 2018 பிப்ரவரியிலேயே விடு தலை செய்யப்பட்டு விட்டார்.
 இவ்வாறு 3 முக்கிய அதிகாரிகள் விடு விக்கப்பட்டு விட்ட நிலையில், சிபிஐ அமைப்பும், குற்றவாளிகளுக்கு சாதக மான முறையில், இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்று கூறிவிட்டது. தற்போது ஏனைய 4 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.கே. சுதாவாலா முன்னிலையில் விசாரணை நடை பெற்று வருகிறது.
  இந்நிலையில்தான், சிபிஐ நீதிபதி ஆர்.கே. சுதாவாலாவுக்கு, போலி என் கவுண்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹானின் தாயார் ஷமீமா கௌசர் கடி தம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:  “முஸ்லிம் பெண் என்ற ஒரே கார ணத்துக்காகவே இஷ்ரத் ஜஹான் மீது போலிக் குற்றச்சாட்டுகள் முன்வைக் கப்பட்டு, பயங்கரவாதி என சித்தரிக் கப்பட்டார்.
கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் துறை அதிகாரிகள் உள்பட அனைவ ருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது.

பணியில் இருக்கும் அரசு அதி காரிகள், செய்யும் தவறுகளுக்கு தண் டிக்கப்படுவதைக் கண்டிருக்கின்றேன். ஆனால் குஜராத்திலோ, என் மகள் கொல்லப்பட்டதை அனைவரும் வர வேற்றார்கள். குற்றம் சாட்டப்பட்ட அனைத்து அதிகாரிகளும் தற்போது பெயிலில் இருக்கின்றார்கள்.
 சிலர் குஜ ராத் அரசால், இழந்த பதவிகளை திரும்ப பெற்றிருக்கிறார்கள். இதனால், நான் முற்றிலும் நொறுங்கிக் கிடக்கிறேன். ஏதோ குற்றத்தை மறைக் கவே என்னுடைய மகள் கொல்லப்பட்டி ருக்கிறாள். ஆனால், குற்றம் செய்த வர்கள் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்வது போன்ற கலாச்சாரத்தைக் கண்டு என்னுடைய மனம் மிகவும் வேதனை அடைகிறது.
தற்போது மேற்கொண்டு போராடும் நம்பிக்கையையும் தைரி யத்தையும் நான் இழந்துவிட்டேன்.
எனவே, இனிவரும் விசாரணைகளின் போது, சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம் என்று என்னுடைய வழக்கறி ஞர் வ்ருந்தா க்ரோவரிடம் கூறிவிட்டேன்; நானும் இனிமேல் நீதிமன்றம் செல்ல மாட்டேன். என்னுடைய மகளுக்கு தேவையான நீதி கிடைக்கப்பட வேண்டும்தான்.
ஆனால் இந்த போராட்டத்தில் என் னால் தனியாக போராட முடியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட 11 பேரைக் கைது செய்து, நீதியை நிலை நாட்ட வேண்டி யது சிபிஐயின் கடமை. அதை அவர் களிடமே விட்டுவிடுகிறேன்."
 இவ்வாறு ஷமீமா கௌசர் கூறி யுள்ளார்.
 ---------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்,
முன்னால்.
உலக வசிப்பிட தினம்

கொஜொசியோன்(கொரியா) நாடு டங்கூன் வாங்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது(கிமு 2333)
செர்பியா,குரொவேசியா,சிலவேனியா இணைந்து யூகோஸ்லாவியா என பெயரிடப்பட்டது(1929)
ஈராக் விடுதலை தினம்(1932)

1929 - செர்பிய, குரோஷிய, ஸ்லோவீனிய முடியரசு, யூகோஸ்லாவியா முடியரசு என்று  அந்நாட்டின் முதலாம் அலெக்சாண்டர் அரசரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஸ்லாவிக் மொழிகளில் ஜுக்(யுக்) என்றால் தெற்கு என்று பொருள். ஸ்லாவேனி என்பது ஸ்லாவிய மக்களைக் குறிக்கும் என்பதால், யூகோஸ்லாவியா என்பதன் பொருள் தென்பகுதி ஸ்லா வியர்களின் நாடு  என்பதாகும்.  முதல் உலகப்போர் முடிந்தவுடன், செர்பியர்கள், குரோஷியர்கள், ஸ்லோவீனியர்கள் ஆகிய மக்களின் ஒன்றிய நாடாக மேற்குறிப்பிடப்பட்ட முடியரசு உருவாகி, 1929இல் பெயர் மாற்றம்பெற்றது.
உண்மையில் முதல் உலகப்போரைத் தொடக்கிவைத்த நிகழ்வான, ஆஸ்திரிய-ஹங்கேரியின் முடிக்குரிய இளவரசர் பெர்டினாண்டைக் கொலை செய்த காவ்ரிலோ பிரின்சிப், யூகோஸ்லாவியாவை ஒருங்கிணைக்கும் நோக்குடன் செயல்பட்ட இளம் போஸ்னியா என்ற புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்தவர். (இளவரசர் என்று குறிப்பிடப்பட்டாலும் அவரது வயது 50, கொலை செய்தவரின் வயது 19!)

போஸ்னியா-ஹெர்ஷகோவினாவில் ஆஸ்திரிய-ஹங்கேரியன் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தக் கொலை நடத்தப்பட்டது.
1877-78இல் நடைபெற்ற ரஷ்ய-துருக்கியப் போரைத் தொடர்ந்து, அன்றைய பெரும் சக்திகளான ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மெனி ஆகியவை கூடிப்பேசிய பெர்லின் காங்கிரசில் எடுக்கப்பட்ட முடிவின்படி, போஸ்னியா-ஹெர்ஷகோவினா ஆஸ்திரிய-ஹங்கேரியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.
இப்பகுதியை 1908இல் ஒட்டோமான் பேரரசு கைப்பற்ற முயன்ற போஸ்னிய நெருக்கடி (அல்லது முதல் பால்க்கன் நெருக்கடி) என்ற நிகழ்வுக்குப்பின், போஸ்னியா-ஹெர்ஷகோவினாவை தன்நாட்டின் ஒரு பகுதியாகவே ஆஸ்திரிய-ஹங்கேரி இணைத்துக்கொண்டது.

தென்பகுதி ஸ்லாவிய நாடுகள் ஒருங்கிணையவேண்டும் என்ற கருத்து 17ஆம் நூற்றாண்டிலேயே உருவாகியிருந்த நிலையில், 1911இல் இந்த இளம் போஸ்னியா அமைப்பு அதே நோக்கத்துடன் உருவானது. 1917இல் ஆஸ்திரிய -ஹங்கேரி என்ற இரட்டை முடியாட்சி நாட்டை, மும்முடியாட்சி நாடாக மாற்றி, யூகோஸ்லாவியாவை ஒரு நாடாக அங்கீகரித்து, தனியே நிர்வகிக்க வேண்டும் என்று எழுப்பப்பட்ட கோரிக்கை ஏற்கப்படாத நிலையிலேயே பெர்டினாண்டின் கொலை  நடைபெற்றது.
முதல் உலகப்போரின் முடிவில்  ஆஸ்திரிய-ஹங்கேரியின் வீழ்ச்சிக்குப்பின், அதன்  ஒரு மாநிலமாக இருந்த ஸ்லோவீனிய, குரோஷிய, செர்பியப் பகுதிகளுடன், செர்பியா, மாண்டி நீக்ரோ  ஆகிய முடியரசுகளும் ஒருங்கிணைந்து விடுதலை பெற்ற நாடாக உருவாகிய யூகோஸ்லாவியா, 1992இல் யூகோஸ்லாவியா, குரோஷியா, ஸ்லோவீனியா, மாசிடோனியா, போஸ்னியா-ஹெர்ஷகோவினா ஆகிய குடியரசுகளாகப் பிளவுற்று முடிவுக்கு வந்தது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

நினைவில் கொள்ளுங்கள்.


 சுரன் 260919
அக்டோபர் 

.12,13,மற்றும் 19, 20 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ.,முதல் நிலைத் தேர்வு


நவம்பர் .

17 - என்.டி.ஏ., தேர்வு

30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு


டிசம்பர் 

.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு

7,8,மற்றும் 14,15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் முதல் நிலைத்தேர்வு

நபார்ட் வங்கியில் வேலை.



 மத்திய அரசின் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி நபார்டு. இங்கு 'டெவலப்மென்ட்' உதவியாளர் (82), 'டெவலப்மென்ட்' உதவியாளர்/இந்தி (9) என 91 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


வயது: 18 - 35. வயது வரம்பு தளர்ச்சி உண்டு.


தகுதி: * ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, 69 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

* இந்தி பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்தி அல்லது ஆங்கில பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ.32,000


கடைசி நாள்: 2.10.2019


விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன்


தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (ஆன் லைன்), நேர்முகத் தேர்வு


விபரங்களுக்கு: https://www.nabard.org.

 --------------------------------------------------------------------------------





 ரிசர்வ் வங்கிப் பனி.













ஆன்லைன் முறை விண்ணப்பம் தொடங்கும் நாள் – செப்டம்பர் 21, 2019
























ஆபிசர்ஸ் கிரேடு பி (டிஆர்)- டிஎஸ்ஐஎம் பதவிக்கு புள்ளியியல்/ கணித புள்ளியியல்/ கணித பொருளாதாரம்/ எகானாமெட்ரிக்ஸ்/ புள்ளியியல் மற்றும் இன்பர்மேட்டிக்ஸ் ஆகிய பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.































ரிசர்வ் வங்கியின் கிரேடு பி அதிகாரிக்கு அடிப்படைச் சம்பளம் 35,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே 35150-1750 (9)-50900-இபி-1750 (2)-54400-2000 (4)-62400 என்ற முறையில் வழங்கப்படும்.



*--------------------------------------------*---------------------------------------*--------------------* 




ஆயுள் காப்பீட்டு கழகம் ( Life Insurance Corportaion LIC) நிறுவனத்தில், காலியாக உள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 







இந்த பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு மட்டுமே போதும் என்பதால், பட்டதாரிகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மொத்தக் காலிப்பணியிடங்கள் : 7,871 பணியிடங்கள்


மண்டல வாரியாக பணியிடங்கள்

வடக்கு மண்டலம் – 1544

மத்திய வடக்கு மண்டலம் – 1242

மத்திய கிழக்கு மண்டலம் – 1497

கிழக்கு மண்டலம் – 980

மத்திய மண்டலம் – 472

மத்திய தெற்கு மண்டலம் – 632

தெற்கு மண்டலம் – 400

மேற்கு மண்டலம் – 1104


சம்பளம் : மாதம் ஒன்றிற்கு ரூ.14,435

கல்வித்தகுதி : பட்டப்படிப்பு


தேர்வு முறை : முதனிலை தேர்வு,

 முதன்மை தேர்வு மற்றும்

நேர்முகக்காணல்  மூலம் தகுதியுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


முக்கிய தேதிகள் :

பணியிட அறிவிக்கை வெளியான நாள் : செப்டம்பர் 17, 2019

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான இறுதிநாள் : அக்டோபர் 01, 2019

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் : அக்டோபர் 22, 2019


விண்ணப்ப கட்டணம் :

எஸ்.சி மற்றும் எஸ்.சி பிரிவினருக்கு ரூ.85 + ஜிஎஸ்டி

மற்ற பிரிவினருக்கு ரூ.510 + ஜிஎஸ்டி

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான நேரடி லிங்க் : //ibpsonline.ibps.in/licastaug19/
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------ 
பாஜக ,காந்தியின் 150 பிறந்தநாளை முன்னிட்டு காந்தி சங்கல்ப் யாத்திரா நடத்துகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?